( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!


கசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்?-மக்கள் கொதிப்பு
  • ர வர நமது மக்களுக்கு இரத்த கொதிப்பு நோய் அதிகமாகி விட்டது எதற்கெடுத்தாலும் கோபப் படுகிறார்கள் நமது பிரதம மந்திரி மாதிரி உலகமே இடிந்து தலை மீது விழுந்தாலும் அமைதியாக இருக்க கற்று கொள்ள வேண்டும் அலைக்கற்றை ஊழல் சுனாமியாக அடிக்கிறது ராம்தேவ் அன்னா ஹசாரே போன்றோர்கள் ஊழல் செய்யாதே என்று குடைச்சல் கொடுக்கிறார்கள் நாடு முழுவதும் குண்டுகள் வேறு வெடித்து தொலைக்கிறது இதில் எதாவது ஒரு விஷயத்திற்காவது அவர் பதற்ற பாடுகிறாரா கண்ணை மூடி கொண்டு சோனியா நாமம் சங்கீர்த்தனம் என அமைதியாக பஜனையில் ஈடு படுகிறாரே நம் நாட்டு தலைவர் அவர் அவரை பார்த்து இதை கூட கற்று கொள்ளவில்லை என்றால் வேறு எதை தான் இந்த மக்கள் கற்பார்கள் அசடுகள்! அசடுகள்!! சுத்த அபிஷ்டுகள்!!!
சகவாசத்தால் தோற்றோம், தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்
  • இலோங்க்கோவன் சாருக்கு இப்படி எதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஜோக் அடிப்பதே வழக்கமாக போய் விட்டது இப்போது வந்து சொல்லுவதை மே மாதம் 13 ஆம் தேதிக்கு முன்பு சொல்லியிருந்தால் எதாவது தேறியிருக்கும் இடுப்பு கோவணம் அவிழ்ந்து போன பிறகு மேல் சட்டை இருந்தால் என்ன? போனால் என்ன? பஞ்சாயத்து தேர்தலில் தனித்து நின்று எங்கள் ஊர் ரெட்டியார் தன் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றால் காங்கிரஸால் தான் வென்றார் என தம்பட்டம் அடிக்கலாம் அல்லவா அதற்கு தான் தனித்து போட்டியோ
பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுகவுக்கு குட்பை?
  • சுட்டுப்போட்டாலும் சுய புத்தி போகாது
ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை போடலாமா?' வைக்கோ
  •     வைகோ அவர்கள் எப்போதுமே இல்லாததை பற்றி தான் பேசுகிறார் என நினைக்கிறேன் நமது மக்களுக்கு தலை எங்கே ஐயா இருக்கிறது? நம் தமிழன் தான் எப்போதோ தலையையும் அதன் உள்ளே இருப்பதையும் எப்போதோ இழந்து விட்டானே! பிறகு எப்படி பாறாங்கல்லை தூக்கி போட முடியும்
தலாய்லாமாவுடன் ஒபாமா பேச்சு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
  • இந்த அமெரிக்காவுக்கு எப்போதுமே தலாய்லாமாவை பிடிப்பது இல்லை நல்ல மனுஷன் கையில் எப்படியாவது துப்பாக்கியை கொடுத்து விட வேண்டும் என துடியாய் துடிக்கிறது மனித நேயம் ஜனநாயகம் இவைகளை வாழ வைப்பதற்காகவே சீனா அவதாரம் எடுத்திருக்கிறது அதற்கு இப்படி அடிக்கடி சத்திய சோதனை கொடுப்பதே அமெரிக்காவின் வேலையாய் போய் விட்டது சீன ஜனநாயகத்தை தழைக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது 

 பயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது: பிரணாப்
  • இந்தியாவை அழித்த நல்ல பெயரை பயங்கர வாதிகள் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறார்கள் அதை பார்த்து கொண்டு சோனியாவின் பூசாரியால் சும்மா இருக்க முடியுமா? தான் செய்ய வேண்டியதை பிறர செய்தால் எப்படி பொறுக்க முடியும்! கவலை படாதீர்கள் முகர்ஜி சார் நீங்கள் தான் முதலில் அந்த காரியத்தை செய்ய போகிறிர்கள்
ரத்தன் டாடா போன்றோர் நிறைய வந்தால் தான் இந்தியா வல்லரசாகும்": தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி
  • நூற்றுக்கு நூறு சரியான கருத்து தேவையான நேரத்தில் தேவையான ஆலோசனை டாடா போல ஒரு ஆயிரம் பேரை இந்தியாவில் உருவாக்கி விட்டு மற்ற பாடு பரதேசி இந்தியர்களை நாடு கடத்தி விட்டால் நம் நாடு ஜாம் ஜாம் என வல்லரசாகி விடும்
 தி.மு.க., பெண் கவுன்சிலர் ரூ.1.25 கோடி மோசடி : போலீஸ் தீவிர விசாரணை
  • இந்த பெண் கவுன்சிலரை திமுக காரர் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது குற்றாலத்திற்கு போய் குழாய் அடியில் குளிப்பது போல திமுக வில் இருந்து விட்டு வெறும் ரூ.1.25 கோடி மட்டுமா மோசடி செய்வது கட்சிக்கு அவமானம் ஏற்படுத்தும் இந்த மாதிரி ஆட்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் குறைந்த பட்சம் ஐநூறு கோடியாவது மோசடி செய்தால் தானே கட்சிக்கு பெருமை!

+ comments + 13 comments

krishnaamma
15:52

வினோதமான கற்பனை புன்னகை ரசித்து படித்தேன்

17:38

அரசியல் நையாண்டி... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், மருந்துக்கு கூட பாஜக-வை தொட மாட்டேன் என்கிறீர்களே! எல்லாம் ஒருவித பாசம்தான் காரணமா?? பாஜக பத்தரை மாத்து தங்கம் என்று கூற வருகிறீர்களா? இடையூறு செய்து கொண்டிருக்கும் எடியூரப்பாவின் ஊழல் பற்றியும் சற்று எழுதுங்களேன்!!

-----

நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட வேண்டுகோளை மீண்டும் இங்கே வைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு "என் பெண்ணை முட்டாளாக வளர்க்கவில்லை" என்ற ஒரு அருமையான கதை இந்த தலத்தில் படித்தேன். அந்தக் கதையை இங்கு, எங்கே எப்படி தேடுவது? மேலும், அதேபோல வேறு ஏதாவது கதைகள் / கட்டுரைகள் உண்டா?

கதைகள் / கட்டுரைகள் என்று தனியாக ஒரு தொகுப்பு வைத்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

நன்றி!

Arumaiyaan pathivu. Nandri

kalakkunga... kalakkureenga

Anonymous
20:15

என் குறை பற்றி நான் எப்படி சொல்லமுடியும்? மற்றவர்கள் குறை காணவே எனக்கு நேரம் இல்லை. என்னை பற்றி சிந்திக்க எங்கே நேரம் இருக்கு ஒஹ்ஹ்ஹ அஹஹஹாஹ்

இந்தியர்களை எந்த நாட்டுக்கு நாடு கடத்துவீர்கள். இந்தியாதானே இந்துக்களின் நாடு. இந்துக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட மதங்களையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களோ நம்மை ஏமாளிகளாக நினைத்து மதம் மாற்றம் செய்கிறார்கள். இந்துக்கள் பெரும்வாரியாக இருக்கும் வரைதான் இந்திய மத சார்பற்ற நாடாக இருக்கும். பெருவாரியான இந்துக்களுக்கு துரோகம் செய்து மதம் மற்றும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளையும் ஒரே கடவுள் தான் படைத்தார். ஏன் வேறுபாடுகளுடன் படைத்தார்? அவரவர் முற்பிறவியில் செய்த செயல் தான் காரணம். எதற்கெடுத்தாலும் பிராமணர்களை வெறியுடன் பார்க்கும் இவர்கள் அந்த பிராமணர்களையும் அவர்கள் சொல்லும் கடவுள் தான் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏன் அப்படி படைத்தார் என்று அந்த கடவுளைத்தான் கேட்கவேண்டும். இது அந்த கடவுளின் தவறுதான். பிராமணர்கள் அறிவுடன் கடவுள் பக்தியுடன் இருக்கிறார்கள் என்றல் அந்த கடவுள்தான் காரணம். இல்லாவிட்டால் கடவுளைக்கட்டிலும் பிராமிணர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அப்படி என்றல் கடவுள் பலவீனவராகிரார். இந்துக்களை விமர்த்ர்சிப்பதற்கு இந்தியாவில் "குடியேறியுள்ள" எந்த மதக்காரகளுக்கும் உரிமையில்லை. விருப்பப்பட்டால் இந்தியாவைவிட்டு வெளியேறி அவர்கள் மத சார்ந்த நாட்டில் குடியேறலாம்.

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தவுடன் கசாப்பு கடைக்கு அனுப்பத்தான்;கசாப்புக்கு சோறு போட்டு வளக்கிறார்கள்

என்னால் நம்பவேமுடியவில்லை.உஜிலாதேவியிலா அரசியல் பற்றிய கிண்டல்கள் வந்திருக்கின்றன.ஆனால் எல்லா அரசியல் துணுக்குகளும்,அதைபற்றிய நையாண்டிகளும், சிந்திக்கவைப்பனவாக இருக்கின்றன.சூடான டிகிரி காப்பி சாப்பிட்டதுபோல் இருக்கிறது.தொடரட்டும்.,

//இந்தியர்களை எந்த நாட்டுக்கு நாடு கடத்துவீர்கள். இந்தியாதானே இந்துக்களின் நாடு.//
//இந்துக்களை விமர்த்ர்சிப்பதற்கு இந்தியாவில் "குடியேறியுள்ள" எந்த மதக்காரகளுக்கும் உரிமையில்லை. விருப்பப்பட்டால் இந்தியாவைவிட்டு வெளியேறி அவர்கள் மத சார்ந்த நாட்டில் குடியேறலாம்//
அருமை ...அருமை ...

Anonymous
16:31

Natrayan.M சார்,
நம் நாட்டில் தோன்றிய மதங்கள் புத்தமதம், சீக்கிய மதம். மற்ற மதங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவை. நம்முடைய இந்து மதம் ஆரியர்களின் படையெடுப்பால் முதல்முதலில் வந்தது. பிறகு இஸ்லாமியர்களின் ஆட்சி, அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி. மொத்தமான மதக்குவியல் தான் இந்தியா. உலகளவில் இத்தனை மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், இனங்கள் என அனைத்தையும் வைத்துக்கொண்டு தான் ஒற்றுமையாக இருக்கிறோம். முழுமையான இந்துதேசம் ஒன்று உள்ளது. நேபாளம்! பேதம் பேச அங்கே சென்று விடுங்கள்.

BJP IS THE BEST CHOICE FOR INDIA MODI IS BEST LEADER OF THE FUTURE INDIA HE ONLY DO ALL THINGS WITH BOLD LIKE TERRORISM, RELIGIOUS CONVERSION SO AND SO

IF HE COMES AS A PM ALL THINGS ARE DONE AUTOMATICALLY


Next Post Next Post Home
 
Back to Top