Store
  Store
  Store
  Store
  Store
  Store

இது பேய் தொல்லை அல்ல...!


ணக்கம்,
எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தேவை.
எனக்கு அமாவாசை தினங்களில், மற்ற தினங்களில் இருப்பது போல் இயல்பாக இருக்க முடிய வில்லை.

1.கோபம் அதிகமாக வரும்.
2.அழுகையாக வரும்.
3.கோவிலுக்கு செல்ல பிடிக்காது.இவை எதனால்?

பில்லி,சூனியம்,பேய்பிடித்தல் அல்லது ஜாதகம்,காரணமாக இருக்குமா?
தயவு செய்து பதில் கூறவும்.

 rajammal mahendiran  M.Sc.,B.Ed.,M.A.,Mphil 



  ங்களின் இந்த சுருக்கமான விவரங்களை வைத்துக்கொண்டு உங்களுக்கான பிரச்சனையின் மூலகாரணம் இதுவென அறுதியிட்டு சொல்ல இயலாது இருந்தாலும் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை மட்டும் அடிப்படையாக கொண்டு சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

 அமாவாசை தினத்தில் கோபம் வருதல் அழுகை வருதல் என்பதெல்லாம் பில்லி சூனியம் மற்றும் பேய்  பிடித்ததனால் வருவது இல்லை அன்றைய தினம் புவியை நோக்கி சந்திர ஈர்ப்பு அதிகமாக இருக்கும் மூளை நரம்புகள் வலு இல்லாதவர்களுக்கு அந்த ஈர்ப்பை தாங்கி கொள்ள முடியாமல் இத்தகைய உணர்வுகள் வரும் இதை மிக சரியான யோகாசன பயிற்சிகள் மூலம் சரிபடுத்திக் கொள்ளலாம் அச்சப்பட தேவையில்லை 

மேலும் உங்கள் அறுகில் உள்ள நல்ல ஜோதிடர் யாரிடமாவது சென்று உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலுபெற்று இருக்கிறதா இல்லையா என்பதை பாருங்கள் இல்லை என்றால் நல்ல உயர்ந்த ஜாதி முத்து பதித்த மோதிரம் அணியுங்கள் ஆறுமாதத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். 



Contact Form

Name

Email *

Message *