Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூஜையறை எங்கே அமைக்க வேண்டும்...?

  •    நான் வெகுநாளாக கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் புதிய வீடு கட்டுகிறேன் அந்த புதிய வீட்டில் தனியாக பூஜையறை வைத்து வழிப்பாடு மற்றும் தியானம் செய்ய விரும்புகிறேன் வாஸ்துப்படி பூஜையறையை வீட்டின் எந்த பகுதியில் வைக்க வேண்டும் எளிமையாக பல விஷயங்களை விளக்கும் நீங்கள் இதற்கும் அப்படியே விளக்கம் தர வேண்டுகிறேன்


கிருஷ்ணசாமி, துபாய்


   முதலில் சேமித்த பணத்தில் வீடுகட்ட போகும் உங்களை வாழ்த்துகிறேன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கே சொந்த வீட்டின் அருமை தெரியும் உங்கள் கனவு இல்லத்தில் மங்களமும் செளபாக்கியமும் நிறைந்திருக்க இறைவனை பிராத்திக்கிறேன் 

மேலும் உங்கள் வீட்டு தலைவாசல் எந்த திசையை பார்த்துகொண்டிருந்தாலும் பூஜையறை என்பது வடகிழக்கு பகுதியில் அமைப்பது மிக சிறப்பானது 

அது முடியாத போது கிழக்கு வடக்கு ஆகிய திசைகளிலும் அமைத்து கொள்ளலாம் எக்காரணத்தை கொண்டும் பூஜையறை வீட்டின் தெற்கு மூலையில் இருக்க கூடாது

அதை போல பூஜையறைக்கு நேர் மேல் தளத்திலோ கிழ்பகுதியிலோ கழிவறை கண்டிப்பாக இருக்க கூடாது பூஜை அறைக்கென்று தனியறை ஒதுக்க முடியாதவர்கள் இன்று பலர் உள்ளனர் அவர்களில் சிலர் படுக்கையறையில் ஒரு மாடத்தில் தெய்வ திருவுருவங்களை வைத்து வணங்குகிறார்கள் அவர்களின் பக்தி பாராட்டுக்குரியது என்றாலும் வாஸ்து முறைப்படி அப்படி செய்யக்கூடாது 

அதே போல் பூஜையறைக்கு இரட்டை கதவுகள் தான் போட வேண்டும் அந்த கதவும் மரக்கதவாக இருக்கவேண்டுமே தவிர பிளாஷ்டிக் இரும்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி போடக்கூடாது

பூஜை அறையில் ஜன்னல்கள் வென்டிலேட்டர் போன்றவைகளும் அமைக்க கூடாது 

இவைகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.



Contact Form

Name

Email *

Message *