Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருமணம் ஆனவர்கள் பாவிகள் ?

   ணக்கம் குருஜி. நான் சில நாட்களாக தங்கள் வலைப்பதிவை படித்து வருகிறேன். தங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றது. நான் தங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மனிதனின் பாவ கணக்கு எப்பொழுது தொடங்குகிறது? திருமணத்திற்கு முன்பா அல்லது திருமணத்திற்கு பின்பா? திருமணத்திற்கு பின்புதான் தொடங்கும் என்பது என் வாதம், தாங்கள் சற்று விளக்கம் தர வேண்டுகிறேன். நன்றி.
ரவி சங்கர், சிவகாசி.



    ங்களது வாதம் மிகவும் விசித்திரமாக எனக்கு படுகிறது உங்கள் கூற்றுப்படி திருமணத்திற்கு பிறகே பாவ கணக்கு ஆரம்பிக்கிறது என்றால் திருமணம் என்பது அவ்வளவு கொடிய செயலா?

அது கொடியது என்றால் அதை இல்லறதர்மம் என்று நமது பெரியவர்கள் சிறப்பித்து கூறுவதன் தாத்பரியம் என்ன?

உங்கள் கூற்றை ஒருவாதத்திற்கு ஒத்துக் கொண்டால் திருமணம் ஆகாத பிரம்மசாரிகள் அனைவரும் மகா உத்தமர்களாக இருக்க வேண்டும் உலகத்தில் அப்படி ஒரு சிலரை தவிர மற்றவர்களை காணமுடியவில்லை

உத்தமர்களாக திருமணம் ஆன இல்லறவாசிகள் சிலரும் இருக்கிறார்கள் எனவே உங்கள் வாதம் முற்றிலும் தவருதலானது விபரீதமானது என்பதே என் கருத்து

வேண்டுமென்றால் ஒரு நகைச்சுவையாக இதை எடுத்துக்கொள்ளலாம்

நமது இந்து தர்மம் ஒரு மனிதன் செயல் பாவ கணக்கில் சேருவது அவனது பதினாறு வயதிற்கு மேல் என்று தான் சொல்கிறதே தவிர வேறு எப்படியும் கூறவில்லை

காரணம் ஓரளவு நல்லது கெட்டது செயல்களின் பின்விளைவுகள் தெரியவருவது இந்த வயது முதற்கொண்டு தான்

எனவே திருமணம் ஆனவர்கள் பாவிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.



Contact Form

Name

Email *

Message *