( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

புத்த மதத்தை வெறுப்பார் புத்தர் !


      ன்று வெள்ளிக்கிழமை நமது ஆஷ்ரமத்தில் பூஜைகள் முடிந்து சற்று ஓய்வாக இருந்தேன் அப்போது தேனியில் இருந்து பேராசிரியர் ஒருவர் என்னை காண வந்திருப்பதாக சொன்னார்கள் அவரை வரச்சொன்னேன் அவரும் நானும் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம் வேதங்கள் உபநிஷதங்கள் என்று பரவலாக சென்ற பேச்சு கடேசியில் கெளதம புத்தரை பற்றியதாக வந்து நின்றது அந்த பேராசிரியர் நண்பர் இந்துமதம் என்பது ஒரு பெரிய சுறா மீனை போன்றது சுறா தானிருக்கும் இடத்தில் வலுவான உயிர்கள் எதையும் வாழவிடாதது போல் இந்து மதமும் வளமான அறிவு படைத்த புத்த மதத்தை உண்டு முடித்து விட்டது தின்று ஜீரணித்து விட்டது என்றார் எதை வைத்து இந்து மதத்தின் மேல் இந்த குற்ற சாட்டை வைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன் 

அதற்கு அவர் ஒரு காலத்தில் நமது தமிழகத்திலேயே பெளத்தமும் ஜைனமும் மக்கள் மத்தியில் செல்வாக்குவுடன் பரவியிருந்தது இந்து சமய குரவர்கள் என்ற இறையடியார்கள் மன்னர்களின் மனதை மாற்றி அந்த மதங்களையே ஒழித்துக்கட்டி விட்டார்கள் அதை போலத்தான் இந்தியா முழுவதும் செல்வாக்கோடு இருந்த பெளத்தமதம் இந்து துறவிகளாலும் இந்து மன்னர்களாலும் அழிக்கப்பட்டு விட்டது என்று சொன்னார் 


நீங்கள் சொல்வது மேலோட்டமாக பார்க்கும் போது சரியானதாக தோன்றுகிறது ஆனால் சற்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் உங்கள் கூற்றில் தவறு இருப்பது தெரியவரும் நமது நாட்டை சற்றேறக்குறைய எட்நூறு வருடங்கள் இஸ்லாமியர்களும் ஐரோப்பியர்களும் அரசாண்டார்கள் கத்தி முனையிலும் புத்தி முனையிலும் மத மாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள் ஆனாலும் கூட ஒரு கூட்டத்தாரை தவிர வேறு யாரையும் அவர்களால் மதமாற்ற முடியவில்லை ஆயிரம் இடுக்கண் வந்தாலும் அபாயம் வந்தாலும் இந்தியர்கள் தான் உண்மை என்று கருதுகின்ற மதத்தில் இருந்து மாறி போக மாட்டார்கள் என்பதற்கு இதுவே சரியான உதாரணம் 

நீங்கள் சொல்வதை போல் புத்த மதம் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதாக இருந்திருந்தால் மக்கள் அனைவரும் புத்தமத கருத்துக்களை ஆழமாக நம்பியிருந்தால் அந்த கருத்துக்களை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து இருந்தால் இந்து மதத்தில் எத்தனை மன்னர்கள் வந்தாலும் துறைவிகள் ஞானத்தை வாரி வழங்கினாலும் மக்கள் மாறியிருக்க மாட்டார்கள் குறைந்த பச்சமாக ஜைனமதத்தவர்களை போல் புத்தமதத்திலும் சிறிய பகுதினராவது மிஞ்சியிருக்க வேண்டும் ஆனால் இந்தியாவில் அப்படி எதுவும் நடக்க வில்லை தான் பிறந்த மண்ணிலேயே சுவடு கூட இல்லாமல் புத்தமதம் அழிந்து போய்விட்டது 


அது ஏன்? எப்படி அது நிகழ்ந்தது? இந்த கேள்விகளுக்கு நிஜமான பதில் தெரியவேண்டுமென்றால் வரலாற்றை பக்க சார்பற்ற முறையில் அணுகவேண்டும் ஆராய வேண்டும் அப்படி செய்தால் நிச்சயமான உண்மைகள் தெரியவரும் என்று அவருக்கு பதில் சொன்னேன் அந்த பேராசிரியர் மட்டும் அல்ல நம்மில் பலரும் கூட பெளத்தமதம் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக மறைந்து போனதற்கு இந்து மதமும் அதன் குருமார்களும் அதிகாரமிக்க மன்னர்களும் காரணமாக இருக்க கூடுமோ என்று யோசிக்கிறோம் ஐயப்படுகிறோம் 

சில அரசியல்வாதிகளும் சமய பேச்சாளர்களும் புத்தமதத்தை பற்றி பேசுகின்ற போது இதே மாதிரியான கருத்துக்களையே வெளியிடுகிறார்கள் இந்து மதத்தை தாக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்று நினைக்கின்ற சில இந்தியர்களும் இந்து மதம் என்பது நாட்டில் பெரும்பான்மையினரின் மதமாக இருக்கும் வரை ஜாதி மற்றும் சமூக கொடுமைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும் எனவே இந்து மதத்தை சிறுபான்மையாக ஆக்க மக்களில் பலர் புத்தமதத்தில் சேரவேண்டும் என்றும் சொல்கிறார்கள் இது சரியா? 

நம் நாட்டில் இறைவனாக வணங்கத்தக்க எத்தனையோ ஞானிகளும் யோகிகளும் அவதாரம் செய்திருக்கிறார்கள் அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் வர்த்தமான மாகவீரரும் கெளதம புத்தரும் ஆவார் கெளதம புத்தர் இந்து மதத்தில் ஆச்சாரம் அனுஷ்டானம் என்ற பெயரில் அளவுக்கதிகமான கொடுமைகளும் சடங்குகளின் பெயரால் உயிர்பலிகளும் நிறைந்த கால கட்டத்தில் தோன்றினார் கொலைவாளை எடுத்து சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்கலாம் கோடி பணம் பெற்று பெறுகின்ற மன சாந்தியை ஆசையை துறப்பதனால் பெறாலாம் என்று போதித்தார் 


வேதங்களில் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற யாக முறைகளை தவறான பாதையில் புரோதிகர்கள் நடைமுறை படுத்தியதையும் ஒழுக்க நெறியில் வாழவேண்டிய மக்கள் சமய ஆடம்பரங்களால் நெறிகெட்டு போவதையும் தடுக்க வந்த கெளதம புத்தர் அன்பு மொழியை கேட்டு லட்சகணக்கான மக்கள் அவர்காலத்திலேயே அவர் பின்னால் வந்துவிட்டார்கள் மக்கள் அனைவரும் செல்லுகின்ற பாதை அறிந்தே அக்காலத்தில் அசோகர் போன்ற மன்னர்களும் பெளத்த மதத்தை தழுவினார்கள் எல்லா திசையிலும் புத்த தத்துவத்தை பரப்பினார்கள் 

மேலும் கெளதம ப்துத்தர் உலகத்தில் எந்த சமயத்தலைவரும் செய்யாத அறிவுபூர்வமான நுணுக்கமான செயல்பாட்டுமுறைகளை கையாண்டார் மத கருத்துக்கள் என்பது மக்களுக்கு புரியாத பாஷையில் இருக்க கூடாது என்பதற்காக அப்போது வடஇந்தியாவில் பெருவாரியான மக்களால் பேசப்பட்ட பாலி மொழியில் சமய கருத்தை உருவாக்கினார் சமயத்தை போதிக்கும் குருமார்கள் கடுமையான ஒழுக்கங்களை விதிமுறைகளை கடைபிடிக்கும் மாகவிரதர்களாக இருக்க வேண்டுமென்று சங்கம் நிறுவி அதில் பல சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்தினார் 


அந்த சங்கத்தில் இணைந்த துறவிமார்கள் பிரம்மச்சரியம் எளிமை தொண்டு போன்றவற்றை தங்களது உயிர் மூச்சாக கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார் அக்கால புத்த பிக்குகள் தங்கள் சங்க தர்மத்தில் இருந்து கொஞ்சம் கூட வழுவாத முறையில் வாழ்ந்தனர் சமயம் என்பது பரோலக ராஜ்யத்திற்கு அழைத்து செல்லும் வாகனம் என்ற நிலையில் இருந்து மாறி வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொண்டுசெய்யும் சமூக எந்திரமே என்ற நிலை புத்தரால் அறிமுகபடுத்தபட்டபோது மக்கள் அனைவரும் அவர் வெளிச்சத்தை நோக்கி மொய்க்க ஆரம்பித்தனர் 

புத்த பிக்குகளின் தன்னலமற்ற தொண்டால் மனம் இறங்கிய மனம் மாறிய மனம் கசிந்த பல மக்களும் தனவான்களும் மன்னர்களும் புத்த சங்கத்திற்கு சமூக பணியாற்ற ஏராளமான சொத்துக்களையும் பொருட்களையும் தங்க கட்டிகளையும் தானமாக வழங்கினர் அருள் கூடமாக இருந்த புத்த விகாரங்கள் நாளடைவில் பொருள் கூடமாக மாறியது சதா நேரமும் தங்கத்தையே பார்த்து கொண்டிருக்கும் கண்கள் அதன் அழகில் மயங்கி தொண்டை மறக்கும் கொள்கையை துறக்கும் இதே நிலை தான் புத்த பிக்குகளுக்கும் ஏற்பட்டது அதன் விளைவே கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் இருந்து புத்த மதம் முற்றிலுமாக அழிய துவங்கிவிட்டது 


புத்தர் போதித்த அறக்கொள்கைகளை காற்றில் விட்ட புத்த பிக்குகள் செல்வ செழிப்பில் மிதக்க ஆரம்பித்தனர் தொண்டுகளை மறந்தனர் ஒழுக்கத்தை ரகசியமாக மீறினார்கள் எத்தனை நாட்கள் நெருப்பை துணிபோட்டு மறைக்க முடியும் புத்த விகாரங்களுக்குள் நடக்கும் விவகாரங்களும் விகாரங்களும் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தன இத்தனை காலம் தங்களுக்கு இளைப்பாறுதல் தரும் அறிய பொக்கிஷம் என்று கருதிய புத்த மதத்தில் புழுக்கள் நெளிய ஆரம்பித்தத்தை கண்ட மக்கள் அதை முற்றிலுமாக கைவிட துவங்கினர் 

உபநிஷதங்களில் சொல்லப்படும் ஆத்மா பிரம்மா என்பவைகள் பெளத்த பாஷையில் சூன்யம் மாக நிர்வாணம் என்று பேசப்பட்டு அறிவு துறையினர்களை ஈர்த்து வந்தது அந்த நிலையை மாற்ற சங்கரர் போன்ற ஞானிகள் உபநிஷத பிரம்ம வாதத்தை நாடெங்கும் பரப்ப துவங்கியதால் இளைப்பாறுதலை வேண்டிய மக்கள் மீண்டும் சனாதன தர்மத்தை நாடி வந்தனர் அதற்கு புஷ்யமித்திரன் கங்கன் போன்ற மன்னர்களும் சிறிது துணை போனார்கள் 

இதனால் தான் புத்த தர்மம் இந்தியாவில் மறைய துவங்கியதே தவிர எந்த மன்னரும் திட்டமிட்டு வன்முறையை பிரயோகம் செய்து பெளத்த மதத்தை அழிக்க வில்லை ஒரு மத கருத்துக்களை பல்லாயிர கணக்கான மக்கள் நம்பும் போது வாழ்க்கையில் கடைபிடிக்கும் போது எந்த ஆதிக்க சக்தியும் அதை நிரந்தரமாக அழித்து விட முடியாது இது தான் புத்தமதம் இந்தியாவை விட்டு போனதன் ரகசியம் இதை அறியாமல் இந்து மதத்தின் மீது பழி போடுவதும் அறிந்தும் வரலாற்றை திரித்து பேசுவதும் நாகரிக பண்பாடாக இருக்காது 


அந்த காலத்தில் பல மன்னர்கள் புத்த மதத்தை தழுவியதாக அறிகிறோம் அந்த மன்னர்களின் துணை கொண்டு பல புத்த பிக்குகள் முறைகேடான வழியில் நடந்ததாகவும் அறிய முடிகிறது ஒரு காலத்திலும் புத்த பிக்குகள் அத்தகைய தவறுகளை செய்ய மாட்டார்கள் என்று கருதுபவர்கள் இலங்கையில் இப்போது நடக்கும் கொடுமைகளுக்கான மூல காரணத்தை எண்ணி பார்க்க வேண்டும் ஒரு நேரத்தில் அப்பாவி சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக கொம்பு சீவி விட்டதும் சிங்கள அரசியல் வாதிகளை  கையில் போட்டுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒதுக்கலை தூண்டிவிட்டதும் புத்த பிக்குகள் தான் என்பதை உணர வேண்டும் இன்னும் ஒருபடி சொல்லுவதாக இருந்தால் இலங்கையில் நடைபெறுகின்ற படுகொலைகள் அனைத்தையும் புத்த தீவிரவாதம் என்றே சொல்லலாம் 

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்திலேயே தங்கள் மதத்திற்கு எதிராக வேறொரு மதம் இருக்க கூடாது என்று அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இனப்படுகொலைகளுக்கு சாமரம் வீசுகின்ற புத்த பிக்குகள் இருக்கும் போது அக்காலத்தில் இல்லாமலா இருந்திருப்பார்கள் அதனாலும் மக்கள் வெறுப்படைந்து புத்த மதத்தை கைகழுவி இருக்கலாம் அல்லவா? சிந்தித்தால் உண்மை தெரியும் 

+ comments + 17 comments

நல்ல விளக்க கருத்து,இவைகள் இந்து மத துவேசிகளுக்கு மண்டையில் ஏறவேண்டுமே...

Anonymous
10:06

Absolute wrong opinion of you, that Bhikkus are the cause of destruction of Budhism in India. Indians needs poojas, Gurus, all giving powerful Gods for their solace. Without these, and without a serious Guru like Buddha subsequently the Buddhist knowledge faded, the luring Hindu aspects engulfed everything of the innocent, ignorant people.
You can't pose you as if you can comment on anything and everything, always. Pl. speak with facts rather than airing false opinions.
Bala.

Anonymous
10:23

இது உங்களது சொந்த கருத்து. புத்த மதம் எல்லாம் கொடுக்கும் ஒரு கடவுளையும் அதை பெட்டு தரும் ஒரு சாமியாரையும், சடங்குகளையும் கொண்டதல்ல. தனி மனிதனின் விழிப்புணர்வில் இருக்கும் ஒரு அமைப்பு.. எனவே தான் சீனர்களும், ஜபானியார்களும் போற்றி கொண்டாடுகிறார்கள். இந்தியர்களுக்கு, சுயபுத்தி எளிதில் வழைக்கபடும். புத்தர் போன்ற வலுவான தலைவல் இல்லாதபோது, பிற காலத்தில் மக்கள் ஈசியாக இந்து மதத்திற்கு கவரப்பட்டனர் , எல்லாம் கோடுக்கும் கடவுள், உடனடி ஆசுவாசம் கொடுக்கும் சாமியார்கள்...

பாலா.

//நடைபெறுகின்ற படுகொலைகள் அனைத்தையும் புத்த தீவிரவாதம் என்றே சொல்லலாம்//
புத்த மதத்தை தோற்றுவித்த புத்த பெருமான் இன்று வந்தால் அவரே வெறுப்பார் அந்த மதத் துறவிகள் செய்யும் செயல் அவ்வளவு கொடுமை நடப்பது புலப்படும் குறிப்பு இலங்கையில் புத்த பிக்குகளின் உடலில் காவியும் உள்ளத்திலும் கையில் கருப்பு நிற கொடியும் சிந்தனையும் இருப்பதே ..

இது தான் என்றல்ல இன்று சில மதத்தவர்கள் மதப்பற்று, இறைவன் அருளியது, இறைவனின் வழியில் இதனை செய்கிறோம், என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பல வன்செயல் செய்வதும், மனித நேயம் அற்றும் மனிதாபிமானத்திருக்கு எதிராவும், சிந்தித்து பார்த்தால் மனித குலத்திற்கே எதிராக செயல்படுவது புலப்படும் இன்று நடக்கும் கொடுமைகளை இந்த மதங்களை தோற்றுவித்தவர்கள் திரும்பினால் கண்டிப்பாக வெறுப்பார் இவர்களுக்கு எதிராக செயல் படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
நாமும் நம்மில் உள்ள தவறுகளை சிலர் செய்யும் குற்ற செயல்களை களைந்தெடுக்க வேண்டும் என்பது ஏற்க வேண்டும்

Anonymous
14:00

hello sir,actually i want to know about thravider and tamilians what's the deferense

Anonymous
15:26

@Anonymous


Mr.Bala, U should not forget that hindhuism was there before buddhism. As per your comment then dirverting people from hindhuism to buddhism is also wrong.

Anonymous
10:58

You are correct Swamiji. Hindustan was ruled by Islam and Christianity for thousand years.that being the reality, Islam must be the cause of disappearance of Buddistic Institutions.
Hindu society accepted the lofty teachings of Gauthamar. So there is no need for the Buddhistic Institution. Buddha is living in the mind of all Hindus in India.. So to say Buddhism is dead / are destroyed is highly idiotic

அத்துடன் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும் . அசோகர் காலத்தில் பௌத்தர்கள் செய்தது கொடூரமான "அஹிம்சை". அதைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்கள் செய்தது கொடூரமான ஹிம்சை; இதை தாங்க முடியாமல் தான் வங்காளம் முழுக்க முஸ்லிம் மயமானது .இல்லாவிட்டால் நமது நாட்டின் மேற்கு பக்கத்தில் இருந்து லாகூர் வரை வந்த இஸ்லாம் எப்படி கிழக்கு பக்கத்தில் ஒரு நாட்டையே உருவாக்க முடிந்தது ? பீகார் என்பதே விகார் (புத்த விஹாரங்கள் நிறைய இருந்ததால்) என்பதன் மருவல் தான். ஆக மொத்தத்தில் ஹிந்து சமயம் எதோ கொடுமைகள் செய்து புத்த சமயத்தை அழித்துவிட்டதை போன்ற வாதங்கள் தவறானவை!

Anonymous
16:57

புத்தர் போதித்த அறக்கொள்கைகளை காற்றில் விட்ட புத்த பிக்குகள் செல்வ செழிப்பில் மிதக்க ஆரம்பித்தனர் தொண்டுகளை மறந்தனர் ஒழுக்கத்தை ரகசியமாக மீறினார்கள் எத்தனை நாட்கள் நெருப்பை துணிபோட்டு மறைக்க முடியும் புத்த விகாரங்களுக்குள் நடக்கும் விவகாரங்களும் விகாரங்களும் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தன இத்தனை காலம் தங்களுக்கு இளைப்பாறுதல் தரும் அறிய பொக்கிஷம் என்று கருதிய புத்த மதத்தில் புழுக்கள் நெளிய ஆரம்பித்தத்தை கண்ட மக்கள் அதை முற்றிலுமாக கைவிட துவங்கினர்//இதுக்கெல்லாம் ஆதாரம் என்ன்ங்கோ?அப்புறம் சமனர்களை கழுவேத்தியது வரலாற்று உண்மை அதை எப்படி நியாயபடுத்தபோகிறீர்கள்?அந்த துறவிகள் மாதிரி இந்து மதத்துறவிகள் எந்த தவறையும் செய்யவே இல்லையா? ஏன் இந்து மதத்தைவிட்டு எல்லோரும் வெளிய்யெற வில்லை?

Anonymous
18:46

@Anonymous

NO BODY DID ANY HARM TO SAMANARS. THEY LOST IN ANAL VAATHAM, PUNAL VAATHAM ETC. AND ELECTED FOR KAZHUVERUTHAL BY THEMSELVES AS PER PRIOR AGREEMENT AS THEY ABIDE TO TRUTH 100% PERCENT.

Anonymous
01:36

@ Anonymous 16:57
///// சமனர்களை கழுவேத்தியது வரலாற்று உண்மை////

அது என்ன வரலாற்று உண்மை.. அந்த வரலாற்று உண்மையை கொஞ்சம் சொல்றீங்களா?...அந்த வரலாற்று உண்மைக்கு ஆதாரம் என்னங்கோ???

சரியானதை சரியாக சரியான நேரத்தில் ஆய்வு செய்துள்ளீர்கள் பஞ்சசீலம் என்றோ ஒருநாள் அதன் பணியைச் செய்யத் தவறாது. உண்மை ஒருபோதும் அழியாது அதை அழிக்கவும் முடியாது. இருளின் கொடுமை ஒளியில் விடிவு பெறும்.

அய்யா தங்கள் வாதம் முற்றிலும் சரியே....பவுத்த மதம் அதன் நெறி மீறல்களாலும்,அதீத அஹிம்சையாலும் தான் அடுத்து வந்த ஆக்கிரமிப்பு வெறிபிடித்த கூட்டத்தின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. எந்த இந்துவும் பிற மத (ஜைன,பவுத்த) மக்களை எவ்வித தீங்கும் இழைக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் இவற்றை எல்லாம் பிற மதமாக பார்க்கவில்லை. மற்றும் இந்த மதங்களெல்லாம் சராசரி சாமான்யனுக்கு அந்நியமாகவே இருந்தன. அதனாலே அவற்றின் செல்வாக்கு குறைந்து ஒழிந்தது. கடவுள் உருவத்தையும், சிலை வழிபாடையும் கண்டித்த இவர்கள் செய்தது உலகம் அறியும் .
சமணர்களை கழுவிலேற்றினர் என்று ஒரு பிதற்றல். வாதத்தில் ஜெயித்து வெற்றிபெற்றது மட்டுமே உண்மை. கழு கதைக்கு சான்றே இல்லை. அவ்வாறு கழுவில் ஏற்றி இருந்தால் (மத பற்று,வெறி காரணமாக) உலகில் வேறு மதங்களே இருந்திருக்காது. எங்கெங்கோ பரவி செழித்திருந்த இந்து மத மட்டுமே பிறரால் நசுக்கப்பட்டு இந்தியா வுடன் மட்டும் சுருங்கி இருக்கிறது, இப்படி கழு" வெறி" ஊட்டி அதை மேலும் சுருக்கி விடாதீர்கள். யாரோ காசுக்கு கூவுபவன் பேச்சை கேட்டு உன் பாட்டன் , பூட்டன் அறத்தையும் நம்பிக்கையையும் கொச்சை படுத்திவிடாதீர்.

Anonymous
03:02

இந்து மதத்தின் மீது கூறப்படும் குற்றசாட்டுகள் அனைத்துமே இந்து விரோதிகளால் திரித்து கூற படுபவை....இந்து மதத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை இந்து விரோதிகள் பரப்பி விட்டுள்ளானுங்க....ஒரு இந்து விரோதி இந்து மதத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை புத்தகமாக எழுதி வெளியிட்டால் மற்ற இந்துகளின் விரோதிகள் அந்த புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசுவானுங்க...இதை தான் போலி நாத்திக போலி பகுத்தறிவு வியாதிகள் பண்ணி கொண்டிருகிரானுங்க...புத்த மதம்,சமண மதத்திற்கு எதிராக இந்துகள் கொடுமை செய்தார்கள் என்று இவனுங்க பொய் சொல்லி திரிவதும் அப்படிதான்....சமிபத்தில் முஸ்லிம் மற்றும் கம்யூனிஸ்ட்களின் கைகூலியான போலி சாமியார் அக்னிவேஷ் அமர்நாத் யாத்திரை பற்றி தவறாக கூறியும் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பத்தர்களை குறை கூறினான்...அந்த போலி சாமியார் அக்னிவேஷ் அமர்நாத் யாத்திரையை குறை கூறி தவறான தகவல்களை புத்தகமாக எழுதி வெளியிட்டால் சில பல ஆண்டுகள் கழித்து அமர்நாத் யாத்திரையை குறை சொல்ல நினைக்கும் இந்து விரோதிகள் அந்த போலி சாமியாரின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தவறான தகவல்களை மேற்கோள் காட்டி பேசுவானுங்க..இதே போன்று தான் இந்து மதத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகிரானுங்க...

tarish
16:33

உண்மையில் பௌத்த மதத்தை போற்றுபவர்கள் புத்தர் காட்டிய போதனைகளின் வாழ வேண்டும்..அதை விடுத்து புத்தரை மட்டும் போற்றினால் ஒரு உண்மையான பௌதனாகி விடமுடியாது..புத்தர் எந்த சந்தர்பத்திலும் தன்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கூறவில்லை..
பௌத்தத்தை ஏற்றுக் கொள்பவன் புத்தரின் போதனைகளையும் பின்பற்ற வேண்டும் ,புத்தரை மட்டும் அல்ல...
நல்ல பதிவு...வாழ்த்துக்கள்

Anonymous
19:41

என்ன குருஜி இந்து விரோதிகள் எவ்வாறு இந்து மதத்திற்கு விரோதமாக பொய் பிரசாரங்களை செய்கிறார்கள் என்பதை பற்றியும் இந்து மதத்திற்கு எதிராக செயல் படும் போலி சாமியார் அக்னிவேஷ் சமிபத்தில் அமர்நாத் புனித யாத்திரை பற்றி தவறாக கூறியதையும் அந்த போலி சாமியார் அக்னிவேஷ் அமர்நாத் புனித யாத்திரை மேற்கோளும் பக்தர்களை அந்த போலி சாமியார் குறை கூறியதை பற்றியும் பின்னுட்டமிட்டேன் ஆனால் அதை நீங்கள் வெளியிடவில்லை...ஒரு வேளை அந்த போலி சாமியார் அக்னிவேஷ் இந்துக்களின் புனித யாத்திரையான அமர்நாத் யாத்திரை பற்றி தவறாக கூறியதை நான் கண்டித்து எழுதியதால்தான் என்னுடைய பின்னூடத்தை தாங்கள் வெளியிடவில்லையோ????

Anonymous
02:19

மிக்க நன்றி குருஜி....


Next Post Next Post Home
 
Back to Top