Store
  Store
  Store
  Store
  Store
  Store

தலையை தேடி வரும் பாதம்


  •   விஷ்ணு ஆலயங்களில் சடாரி வைக்கப்படுவது ஏன்?
பிரபா டெல்லி

     திருமாலின் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எல்லா சன்னதிகளிலும் கடவுளை சேவித்த பிறகு தீர்த்தம், திருதூளாய், மஞ்சள் காப்பு போன்றவைகளை பிரசாதமாக பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீ சடாரியை சிரசில் தாங்கி கொள்வதினால் வழிபாடு பூர்த்தியானதாக கருதுகிறார்கள். 

  சடாரி என்பது பகவானின் திருபாதத்தை குறிக்கும் தத்துவமாகவும். 

  சடாரிக்கு இத்தகைய தத்துவம் மட்டுமல்லாது இறைவனின் தொண்டரான ஆழ்வார்.  சடகோபன் என்றுயெல்லாம் வேறு பெயர்கள் உள்ளன.  

  ஒரு பக்தனின் உண்மையான பக்தியின் நோக்கம் பகவானின் திருவடியில் பரிபூரணமாக சரண் அடைவது தான்.  சரணாகதி மட்டுமே பக்தனின் துயரம் நீங்க ஒரே வழி. 

 நாம் தேடி போய் கடவுளின் காலடியில் விழுவது ஒரு புறம் இருந்தாலும் கடவுளே தேடி வந்து தனது திருவடி தாமரைகளில் நமக்கு அடைக்கலம் கொடுப்பது கிடைப்பதற்கரிய பெரும் பேரருள் அல்லவா?

   அந்த பெரும் பேரின் வெளிபுற சின்னம் தான் ஸ்ரீ சடாரியை சிரசில் சாதித்து கொள்வது.


Contact Form

Name

Email *

Message *