Store
  Store
  Store
  Store
  Store
  Store

முகவரி இல்லாத மனிதர்கள் !


  • முகவரி இல்லாத மனிதர்கள் என்றால் யார்?

  ஞ்சாயத்து தேர்தல் பாராளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல் ஏன் இடைதேர்தல் என்று வந்து விட்டால் சில கட்சிகள் புதியதாக பிறக்கும் அதற்கென்று சில தலைவர்களும் தோன்றுவார்கள் மேடைகளில் ஏறி தொண்டை தண்ணீர் வற்றும் வரை பேசுவார்கள் மாநாடு ஊர்வலம் பேரணி என்று நடத்துவார்கள் சில நேரங்களில் அவர்களுக்கு பொது சேவை ஜுரம் பிடித்துக்கொள்ளும் வெள்ளபாதிப்பு நெருப்பு பாதிப்பு போன்றவைகள் நடைபெற்ற இடங்களில் வேட்டி சேலை மற்றும் சாப்பாடு பொட்டலத்துடன் காணப்படுவார்கள் எங்களுக்கு இத்தனை இடம் வேண்டும் இத்தனை இடத்தில் வெற்றி பெறுவோம் எங்களது பலம் அளவிட முடியாதது என்று கூவுவார்கள் தேர்தல் முடிந்து விட்டால் ஒரு சத்தமும் இருக்காது மனிதரை வலை போட்டு தேடினாலும் கூட கிடைக்க மாட்டார்கள் இப்படி எல்லாம் ஒருவர் பேசினாரே அவர் எங்கே எப்போது வருவார் என்று நாம் தேடிக்கொண்டு அலைய வேண்டியது தான் அவர்களுக்கான நிரந்தர பெயர் தான் முகவரி இல்லாத மனிதர்கள் என்பதாகும்


  • கெட்டவன் என்பவன் யார்?

   கெட்டவைகள் என்று பார்க்கும் போது அவற்றில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெட்ட எண்ணம் இன்னொன்று கெட்ட செயல் இதில் அபாயம் எது என்றால் கெட்ட செயலை செய்தவனை கூட நம்பிவிடலாம் அவன் எதோ ஒரு சந்தர்ப்ப சூலால் தான் கெட்டு போயிருப்பான் என்று சொல்லலாம் ஆனால் கெட்ட எண்ணம் உடையவர்களை எக்காலத்திலும் நம்பவே முடியாது அவன் எதை எப்போது செய்வான் என்று கணிக்கவும் முடியாது ஆகவே கெட்டது கெட்டவன் என்றால் அது எண்ணத்தால் கெடுவதையே குறிக்கும்


  • செயல் படுத்த முடியாத முடிவுகள் என்று எதாவது இருக்கிறதா?

   ப்படி பட்ட முடிவுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை மனம் வைத்தால் எத்தகைய கடினமான முடிவுகளையும் செயல்படுத்தி விடலாம் ஆனால் செயல் படுத்த விரும்பாத முடிவுகள் என்று சில இருக்கிறது சின்ன வயது முதல் கூட படித்த நண்பன் ஒரு விபத்தில் செத்து போகிறான் அவனது உடலை மயானத்தில் இறுதி காரியங்களுக்காக கொடுத்து விட்டு திரும்புகிறோம் என்ன இது வாழ்க்கை ஒரு நீர் குமிழி போல நிலை இல்லாமல் இருக்கிறது கண்முடி திறப்பதற்குள் அழிந்து போகக்கூடிய வாழ்க்கையில் பேராசை போட்டி பொறாமை சண்டை சச்சரவுகள் எத்தனை செய்கிறோம் இன்று முதல் இப்படி எதுவுமே தவறான காரியங்கள் செய்ய கூடாது என்று முடிவு செய்கிறோம் அந்த முடிவு எதுவரை நீடிக்கிறது குளித்து முடித்தவுடன் சோப்பு நுரை கூடவே முடிவுகளும் கரைந்து விடுகிறது பிரசவ வலியால் துடி துடி துடிக்கும் பெண்ணும் இந்த பாழாய் போன புருஷன் பயலை இனி பக்கத்திலே அண்டவே விடக்கூடாது என்று முடிவு எடுப்பாள் குழந்தை பிறந்து குவா குவா என்று கத்தியவுடன் வருகிற சந்தோசத்தில் எடுத்த முடிவு பரிதாபமாக மூச்சி விட்டு விடும் இப்படி எத்தனையோ முடிவுகளை தினசரி எடுத்து தினசரி விட்டு விடுவது மனித சுபாவம் .

Contact Form

Name

Email *

Message *