Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் பணியை நிறுத்த மாட்டேன் !


   குன சாஸ்திரங்களை பற்றி நான் எழுதிய பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி எனக்கு ஒரு மடல் எழுதியிருந்தார் அதில்

அன்புள்ள அய்யா,

      ங்கள் 'சகுனம் ' பற்றிய பதிவு என்னை மிகவும் பாதித்தது. நானும் ஒரு விதவைதான்.எனக்கும் ராகு ,கேது பாதிப்பு இருக்கிறது. ஆனால், எனக்கு மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. நானும் என் கணவரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தோம்.ஆனால், அவர் இல்லை என்று ஆகி , நான் விதவையானாலும், இன்றும் நான் தொட்ட எல்லா செயலும் நன்றாக நடைபெறுகிறது. நான் எந்த வீட்டிற்கு சென்றாலும், அதுவரை அந்த வீட்டில் இருந்த குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ,அந்த குடும்பம் மென்மேலும் முன்னேறிக் கொண்டேயிருக்கும். நானே இதக் கண்டு ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.ஏன் ராகு, கேது தோஷம் என் பார்வையில் எந்த விஷத்தையும் வீசவில்லை.இது வரை நான் உங்கள் மேல் வைத்த அபிமானத்தை ஒரு நொடியில் நிலைகுலைத்து விட்டீர்கள்.
வருத்தத்துடன்,
கார்த்திக் அம்மா

என்று குறிப்பிட்டு இருந்தார்



      தே போன்ற சில கடிதங்கள் எனக்கு வந்தவண்ணம் உள்ளது அவைகளை படிக்கும் போது சகுனத்தின் மீதும் ஜோதிட சாஸ்திரத்தின் மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகப்படுகிறதே தவிர குறைய வில்லை அதற்கு காரணம் அப்படி வருகின்ற கடிதங்களில் பெரும்பான்மையானவை எனக்கு ராகு கேது சரியாக இல்லை என்ற குறிப்பு வருகிறது இதை வைத்து பார்க்கும் போது கெளசிக நாடி அகஸ்தியர் நாடி போன்ற சுவடிகளில் சொல்லப்பட்டுள்ள விஷயம் எவ்வளவு ஆணித்தரமான உண்மைகள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

இனி இந்த சகோதரியின் விசயத்திற்கு வருகிறேன் அவர் என் மீது வைத்திருந்த அன்பும் மரியாதையும் இந்த பதிவின் மூலம் குறைந்து விட்டதாக எழுதியிருக்கிறார் அதை கண்டு என் மனது மிகவும் வேதனை படுகிறது அதே நேரம் சாஸ்திரம் என்பது தனி ஒரு மனிதனுக்கான விஷயம் அல்ல அது எல்லோருக்கும் பொதுவானது என்பதை அந்த சகோதரி உணர வேண்டும் என்று அறிவுறுத்தவும் கடமை பட்டிருக்கிறேன்

அந்த பதிவில் கணவன் இல்லாத மாதர்களுக்கு ராகு கேது போன்ற கிரகங்களின் ஆகர்சன சக்தி அதிகம் இருக்கும் அதனால் அவர்கள் எதிரே வரும் போது அதன் தாக்கம் மற்றவர்களை தமாசா குணத்திற்கு தள்ளும் என்று தான் எழுதியிருக்கிறேன் இதில் கவனிக்க வேண்டியது தாமச குணம் என்பது அந்த நேரத்தில் தற்காலிகமாக ஏற்படும் என்பது என் கருத்தே தவிர நிரந்தரமாக அது நீடிக்கும் என்று நான் சொல்ல வில்லை மேலும் கணவனை இழந்த பெண்கள் எதை தொட்டாலும் யார்வீட்டுக்கு போனாலும் எதுவும் உருப்படாது என்பது என் சிந்தனையே அல்ல அப்படி நான் நினைத்து பார்க்கவே மாட்டேன்

இந்த பதிவில் நான் சொல்லுகின்ற விஷயம் பெருவாரியான கணக்கை அடிப்படையாக வைத்தே ஆகும் ஒரு சிலருக்கு அல்லது ஒன்றிரண்டு பேருக்கு அது மாறி இருந்தால் அதன் பெயர் விதிவிலக்காகும் பொதுவான கருத்தை பேசும் போது விதி விலக்கை பற்றி பேசுவது அறிவுடைமை ஆகாது தேள் கடித்தால் எல்லோருக்கும் வலிக்கும் ஆனால் தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தாயை தேள் கடித்தால் பிறந்த பிறகு அந்த குழந்தையை எத்தகைய கொடிய தேள் கடித்தாலும் வலிக்கவே வலிக்காது இது விதி விளக்கு இந்த விதி விலக்கை வைத்து கொண்டு தேள் கடித்தால் வலிக்கும் என்பதெல்லாம் பொய் என்று வாதிட முடியுமா?

அதே போல இந்த சகோதரிக்கும் இவரை போன்ற மற்றவர்களுக்கும் கண்ணுக்கு தெரியாத விவரிக்க முடியாத எதோ ஒரு சக்தி இருக்கலாம் அல்லது அந்த விஷயத்தில் கடவுளின் அனுக்கிரகம் முழுமையாக இருக்கலாம் அதற்காக பொதுவான விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியாது நான் சுட்டிக்காட்டி இருந்த விளக்கங்கள் அந்த சகோதரியின் மனதை வலிக்கும் படி செய்திருந்தால் தனிப்பட்ட ரீதியில் வருத்தம் தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் அதற்காக பொதுவான உண்மைகளை சொல்லும் எனது பணியை எப்போதுமே நிறுத்தி விட நான் விரும்ப வில்லை .


Contact Form

Name

Email *

Message *