( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நகை வாங்குவதா? வீடு கட்டுவதா?


  • யா நான் மளிகை கடை நடத்தி வருகிறேன் கடை இருப்பது ஒரு கிராமத்தில் என்பதனால் சுமாரான வியாபாரம் தான் நடந்துவருகிறது ஆனாலும் ஆண்டவன் கொடுப்பது எதுவாக இருந்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன் எனக்கு மூன்று குழந்தைகள் இதுவரை கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேமித்து ரூபாய் மூன்று லட்சம் வைத்து இருக்கிறேன் இந்த பணத்திற்கு என் மனைவி நகைவாங்கி தரசொல்கிறாள் நான் வீடு கட்டிக்கொள்ள ஆசைபடுகிறேன் வீடு கட்ட வேண்டுமென்றால் இந்த பணம் போதாது கடன் வாங்கவேண்டிய சூழல் வரும் எனக்கு கடன்வாங்குவதும் பிடிப்பதில்லை அதனால் நகை வாங்குவதா வீடு கட்டுவதா என்று குழப்பமாக இருக்கிறது தயவு செய்து சரியான வழியை காட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்

ராஜகோபாலன்,ஊத்துக்குளி


     ங்கள் கடிதத்தை படித்தவுடன் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும் கடவுள் கொடுத்தது போதும் என்ற வார்த்தையும் கடன் வாங்குவது பிடிப்பதில்லை என்ற வார்த்தையும் இன்று கேட்கவே முடியாத அரிதான விசயங்கள் என்று பலர் நினைக்கிறார்கள் ஆனால் எனக்கு இது ஆச்சரியமாக இல்லை உங்களை போன்று நிறைய நல்ல மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இனியும் இருப்பார்கள் வள்ளுவர் உங்களை போன்றோர்களை மனதில் வைத்து தான் நல்லவர் ஒருவருக்காக மழை பெய்யும் என்று சொல்கிறார்

கையில் உள்ள பணத்தில் அன்பு மனைவிக்கு நகை வாங்க வேண்டும் என்பது நல்ல ஆசை அதை குறை சொல்ல முடியாது ஆனால் நகையை விட வாழும் வீடு மிகவும் முக்கியமானது சொந்த வீடு இல்லாமல் வாழுகின்ற கொடுமை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் அழகான ஓவியம் வாங்கி சுவற்றில் மாட்ட கூட அனுமதி தராத வீட்டு முதலாளிகள் எத்தனையோ பேருண்டு அத்தகைய அரக்கமனம் படைத்த கொடியவர்களிடம் இருந்து விடுதலை பெற சொந்த வீடு என்பது மிகவும் அவசியம்

ஆனால் இன்றைய சூழலில் சிமின்ட் செங்கல் மணல் கூலி போன்றவைகள் வானத்தைவிட உயரமான இடத்தில் இருக்கிறது ஒரு மிகசிறிய வீடுகட்டுவதாக இருந்தால் கூட குறைந்தது ஐந்து லட்ச ரூபாய் இல்லாமல் முடியாது இதனாலேயே சொந்த வீடு என்பது கற்பனை கனவில் மட்டுமே காணக்கூடியதாக பலருக்கு இருக்கிறது கடன் வாங்கியாவது வீடு கட்ட வேண்டுமென்று பலரும் துடிக்கிறார்கள் கட்டிய வீட்டில் கடனை அடைக்க முடியாமல் துடியாய் துடிப்பவர்களும் நிறையப்பேர் உண்டு கடன் வாங்கி வீடுகட்டுவதை விட வாடகை வீடே சொர்க்கமென்று நான் சொல்லுவேன்

உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் வீடுகாட்டும் யோகம் இன்னும் இரண்டு வருடத்திற்கு உங்களுக்கு இல்லை ஆனால் பூமிகாரகன் நல்ல நிலையில் இருப்பதனால் நிலம் வாங்க கூடிய யோகம் இப்போது உண்டு அதனால் உங்களிடம் உள்ள பணத்தில் இரண்டு லட்சத்திற்கு நல்லவிதமான காலி மனையை வாங்கி போடுங்கள் மீதமுள்ள பணத்தில் மனைவிக்கு நகைவாங்கி கொடுங்கள் இன்னும் இரண்டு வருடம் கழித்து நீங்கள் வாங்கிய காலிமனையின் ஒரு பகுதியை விற்பனை செய்து வீடுகட்ட துவங்கலாம் அதற்குள் உங்கள் வியாபாரமும் சற்று மேம்படும் கையில் இன்னும் கூடுதலான பண புழக்கம் வரும் நீங்கள் விரும்புவது போலவே கடன் இல்லாமல் வீடு கட்டி ஆனந்தமாக வாழலாம் கேட்டதை அருளும் திருவேங்கடத்தானை வழிபடுங்கள் பொன்னும் பொருளும் நல்ல ஆரோக்கியமும் மன நிம்மதியும் உங்களுக்கு கிடைக்கும்.


+ comments + 6 comments

Anonymous
11:37

goood idea samege,

pls fallo this idea.

Thanks by,
Ravi dubai.

நல்ல யோசனை குருஜி

நன்று

நல்ல பதிவு ! நன்றி சார் !

miga arumaiyaana vilakkam. anaivarum pin patra vendiya unnathamaana thagaval,nanri

shameem
14:27

Very good idea


Next Post Next Post Home
 
Back to Top