( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காதல் திருமணம் செய்யலாமா...?வணக்கம் ஐயா

      னது பெயர் முருகானந்தன். நான் உங்களோடு ஏற்கனவே கதைத்துள்ளேன். நான் இப்போது பெரிய மனகுழப்பதில் உள்ளேன் ஐயா. எனக்கு எனது அம்மா பெண் பார்க்கிறார்கள். ஆனால் என்னை ஒரு பெண் விரும்புகிறார். எனக்கு எனது குடுமப பிரச்சனை காரணமாக தயக்கமாக உள்ளது. வீட்டிலும் இதை பற்றி கதைக்க முடியாதுள்ளது. அம்மா குடும்ப பிரச்சனை தன்னோடு போகட்டும் தனது பிள்ளைகளாவது நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். அம்மா பார்க்கும் பெண்ணை செய்வதா அல்லது என்னை விரும்பும் பெண்னை செய்வதா என குழப்பதில் உள்ளேன். தயவு செய்து எனக்கு ஒரு தீர்வு ஒன்று சொல்லவும். எனது குறிப்பை இணைத்துள்ளேன். 
மிக்க நன்றி        
முருகானந்தன்      காதல் என்பது ஒரு இயற்கையான உணர்வு என்றாலும் அது அதீதமான அன்பின் முதிர்ச்சியால் உருவாவதால் தெய்வீக நிலையில் வைத்து பார்க்கப் படுகிறது நாடு இனம் மொழி பண்பாடு ஆகிய அனைத்தையும் கடந்து பிறப்பெடுக்கும் காதல் சில சமயம் மனித வாழ்வில் உயர்வையும் பல நேரங்களில் தாழ்வையும் தந்துவிடுகிறது ஆனாலும் காதலின் அழகை போற்றிப் பாடும் இலக்கியம் ஏனோ காதலால் ஏற்படும் அலங்கோலங்களை பற்றி அதிகமாக பேசுவதில்லை இதனாலையே காதல் மயக்கம் என்பது இன்னும் மதிப்பு மிக்கதாகவே இருக்கிறது 

நான் காதலை வெறுப்பவன் அல்ல அது மனிதனுக்கு வேண்டாம் என்று சொல்பவனும் அல்ல இறைவன் கொடுத்த ஆயிரக்கணக்கான உணர்வுகளில் காதலும் ஒன்று என்பதனால் அதை குறைத்து மதிப்பிட நான் தயாராக இல்லை அதே நேரம் காதலில் உள்ள சில எதார்த்தங்களை சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது காதல் அறிவோடும் கலந்திருந்தால் அது வியாபாரம் வெறும் உணர்வு மட்டுமே இருந்தால் அது பைத்தியக்காரத்தனம் அறிவும் உணர்வும் கலந்ததே உண்மையான காதலாகும் துரதிஷ்டவசமாக காதலிக்கும் பலருக்கு அறிவு வேலை செய்வதில்லை உணர்வுகள் காட்டிய கொந்தளிப்பான பாதையில் சென்று தன்னையும் தனது குடும்பத்தையும் முற்றிலுமாக அழித்துக்கொள்ள தயாராகி விடுகிறார்கள் 

எனக்கு தெரிந்த ஒரு பையன் நன்றாக படிப்பான் படித்து முடித்தவுடன் இந்திய விமானப்படையில் நல்ல வேலையும் அவனுக்கு கிடைத்தது கொல்கத்தாவில் பணியாற்றிய அவன் வேலை கிடைத்த ஒரு வருடத்திலேயே அதை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்துவிட்டான் அதற்கு என்ன காரணம் என்று யார் கேட்டும் சொல்லவில்லை கடேசியில் ஒருநாள் என்னிடம் மனமிட்டு சொன்னான் தான் காதலிக்கும் பெண் தன்னை பார்க்காமல் இருக்க முடியாது ஊருக்கு வந்துவிடு என்று அடிக்கடி சொல்லியதால் அவள் அன்பை தட்டமுடியாமல் வேலையை விட்டு விட்டு வந்துவிட்டதாக சொன்னான் அவனுக்கு நான் எந்த பதிலும் கூறவில்லை காரணம் எது சொன்னாலும் அதை அனுபவத்தில் உணராதவரை அது உரைக்காது 

கடேசியில் நிலைமை என்ன ஆனது என்று தெரியுமா அவன் காதலித்த பெண் வீட்டில் இவன் வேலைவெட்டி இல்லாமல் ஊரை சுற்றுவதனால் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்கள் அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து முடிவும் செய்து விட்டார்கள் இவனை வேலையை விட்டு வரசொன்ன காதல் தேவதை பெறோர்கள் சொற்படி தான் திருமணம் செய்து கொண்டு இவனை பைத்தியக்காரன் போல் விட்டு போய்விட்டாள் இது கதையல்ல நிஜம் இந்த நிஜம் உங்களை சுற்றி நேற்றும் நடந்திருக்கலாம இன்றும் நடந்து கொண்டிருக்கலாம் எனவே தான் காதலிக்கும் ஆண் பெண் இருவருக்கும் நான் சொல்வது காதலை உணர்வு மயமாக பார்க்காதீர்கள் அறிவு மயமாக பாருங்கள் என்று 

இன்று இந்த கேள்வியை இங்கு கேட்டிருக்கும் தம்பி மிகவும் மனக்குழப்பத்தில் இருக்கிறார் அவர் வயது காதல் பக்கம் இழுக்கிறது அறிவு குடும்பம் பக்கம் இழுக்கிறது இது பலருக்கும் ஏற்பட கூடிய அனுபவம் இந்த நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட இவர்களை போன்ற மனிதர்களுக்கு சரியான ஆலோசனை கிடைத்துவிட்டால் அதை இவர்கள் சிக்கென பிடித்து கொண்டால் வாழ்வில் வெற்றி வீரராக பவனி வரலாம் இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் தோல்வியை சுமந்து கொண்டு அலைய வேண்டிவரும் 

இவர் ஜாதகம் காதல் என்பது இவர் மனதை மட்டுமல்ல படிப்பையும் கூட பாதித்திருப்பதாக காட்டுகிறது மனம் சொல்கிறப்படி காதலியை கரம்பிடிக்க துணிவாரானால் சொந்தபந்தங்களின் எதிர்ப்பையும் தனிப்பட்ட வாழ்கையில் சோதனைகளையும் சந்திக்கும் சூழல் வரும் எனவே அவசரப்பட்டு முடிவெடுத்து நிதானமாக கஷ்டப்படுவதை விட நிதானமாக முடிவெடுத்து நீண்ட அமைதியை பெறுவது சாலச்சிறந்தது ஆகும் அதாவது தாய் சொல்லை தட்டாதே என்பதே ஜாதகம் காட்டும் உண்மை நிலை.


+ comments + 2 comments

Anonymous
12:07

ஐயா, எந்த இங்கே வாழ்க்கை நல்லது 'காதல்' அல்லது திருமணம் பொருத்தம் பார்த்து திருமணம் எவ்வாறு செய்ய வேண்டும்?


Next Post Next Post Home
 
Back to Top