( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மந்திரத்தால் இறங்கிய விஷம்...! அத்யாயம் 1

    ந்த முதியவரை பார்பதற்கு விநோதமாக இருந்தது ஒல்லியான உடம்பு அதை மிகைபடுத்தி காட்டும் உயரம் குடைமிளகாய் போன்ற மூக்கு மார்பையும் தாண்டி அசைதாடும் தாடி நெற்றி நிறைய திருமண் தனது பெயர் ராகவாட்சாரி என்று அறிமுகபடுத்தி கொண்டார் என் முன்னால் வந்து அமர்ந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி நீர் வைஷ்ணவரா? என்பது தான் அதற்கு நான் திருமாலை இஷ்டதெய்வமாக வழிபடுபவன் எவனாக இருந்தாலும் அவன் வைஷ்ணவன் என்று நீங்கள் நம்பினால் நான் வைஷ்ணவனே அப்படியெல்லாம் கிடையாது வைஷ்ணவ சம்பிரதாய குடும்பத்தில் பிறந்தவன் மட்டுமே வைஷ்ணவனாக ஆகமுடியும் என்று நீங்கள் கருதினால் நான் வைஷ்ணவன் அல்ல என்று பதில் சொன்னேன்.

என் பதிலில் இருந்த அர்த்தத்தை உள்வாங்கி கொண்ட அவர் வாய்விட்டு சிரித்தார் பிறகு தான் கையில் வைத்திருந்த மஞ்சள் நிற துணிப்பையை எடுத்து பிரித்து அதன் உள்ளே இருந்து மிக பழையகால ஏட்டு சுவடி ஒன்றை எடுத்து என் முன்னால் வைத்தார் அந்த சுவடி ஈரத்தில் நைந்து போயிருக்க வேண்டும் மிகவும் கீலகமான நிலையில் இருந்தது தொட்டால் கொட்டிவிடும் என்பார்களே அதே போல இதை கொஞ்சம் படித்து பாருங்கள் என்று சொன்னார் சுவடி கட்டிலிருந்து மிக கவனமாக ஒரே ஒரு ஓலையை எடுத்து படித்து பார்த்தேன் பல எழுத்துக்கள் எனக்கு புரியவில்லை சில எழுத்துக்கள் மங்கி போய் இருந்தது அவற்றையும் மீறி வைப்பு, ஏவல், இடு மந்திரம் என்று சில வார்த்தைகளை படிக்க முடிந்தது இது மாந்திரீகம் சம்மந்தமாக ஓலையாக இருக்கும் என்று அவரிடம் சொன்னேன் 


 அதற்கு அவர் இது மாந்திரீக சம்மந்தமான ஓலைதான் அதில் சந்தேகமில்லை அந்த காலத்தில் எனது பாட்டனார் மிகபெரிய மாந்தீரிக நிபுணராக இருந்தார் அவர் தான் கற்ற மந்திரத்தால் சாதிக்காதது எதுவுமே இல்லை என்று சொல்லலாம் ஜமிந்தார்கள், வெள்ளைகாரர்கள் கூட என் தாத்தாவை காண வீட்டுக்கு வருவார்களாம். அவர் பயன்படுத்திய சுவடி இது இதன் மகத்துவம் இக்கால பிள்ளைகளுக்கு தெரியாது தக்கவரை தேடி கொடுக்க வேண்டும். என்று விரும்பினேன் இதோ உங்களிடம் கொடுத்துவிட்டேன். என்று கூறிய அவர் அடுத்ததாக ஒரு கேள்வியை என் முன்னால் வைத்தார்.

நான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள் மந்திரம் மாந்தீரிகம் என்பவைகள் எல்லாம் உண்மைகள் தானா? அல்லது உண்மையை போல வெளியில் காட்டிகொள்ளும் தந்திரங்களா? எனக்கு ஏனோ என் தாத்தா சிறந்த மந்திரவாதி என்றாலும் எனக்கு மந்திரத்தின் மீது நம்பிக்கை வரவில்லை ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு ஜெபிக்கும் மந்திரத்தால் இன்னொருவரை வாழவைத்து விட முடியுமா? அல்லது அழித்து விடத்தான் முடியுமா? மந்திரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியுமென்றால் கடவுள் எதற்கு அவனை அடைய பக்தி எதற்கு உயிர்களை வருத்தும் கர்மா தான் எதற்கு இதற்கு நீங்கள் விளக்கம் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.


இப்படி கேட்டவர் ஒரு சாதரணமான மனிதரோ விஷயஞானம் இல்லாத தற்குறியோ அல்ல வேதங்களை நன்றாக கற்றறிந்து விளக்கம் தரக்கூடிய விற்பன்னர் பிரம்ம சூத்திரம் பகவத் கீதை போன்றவற்றை தரவாரியாக படித்தறிந்தவர் கடவுள், ஆத்மா, உலகம் என்று எதை கேட்டாலும் தத்துவ ரீதியில் விளக்கம் சொல்ல கூடிய மாகாமேதாவி அப்படிப்பட்ட ஒருவரே மந்திரம் உண்டா? மந்திரத்தால் நல்லது கெட்டதை செய்ய முடியுமா? என்று கேக்கும் போது அவைகளை பற்றி அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் என்னென்ன கேட்பார்கள் எப்படி நம்புவார்கள் அதிகம் சொல்வானேன் நான் கூட சில காலங்களுக்கு முன்பு வரையில் மாந்திரகம் என்பது மோசடி மந்திரம் என்பது மெளடிகம் என்று தான் நம்பி இருந்தேன் அதன் பிறகு தான் நான் அனுபவத்தில் கண்ட பல விஷயங்களை வரிசை படுத்தி பார்த்து அவைகளிலும் எதோ ஒரு உண்மை மறைந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன்.

நான் ஐந்தாறு வயது பையனாக இருந்த போது என் பெரியப்பா மகன் ராமராஜை தேள் கடித்து விட்டது ஒரு மனிதனுக்கு தேள் கடித்தால் எப்படி வலிக்கும் அவன் எப்படி துடிப்பான் என்பதை அப்போது தான் முதல் முறையாக பார்த்தேன் அவன் என்னை விட மிகவும் சிறியவன் தேள் விஷம் சரசரவென்று உடம்பு முழுவதும் பரவி கொண்டிருந்தது அவன் அழுது அழுது மயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்தான் மருத்துவ மனைக்கு தூக்கி போகலாம் என்றால் அப்போது போக்குவரத்து வசதி அதிகமில்லை ஒரு நாளையில் இரண்டு முறை தான் எங்கள் கிராமத்திற்குள் பேருந்து வந்து போகும் அது நின்றால் உண்டு இல்லை என்றால் இல்லை மக்கள் மாட்டு வண்டியையும் நடைபயணத்தையும் நம்ப தகுந்த போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தினர்.


 வண்டிகட்டி போவதென்றாலும் நடந்து போவதென்றாலும் சில மணி நேரம் பயணம் செய்தால் தான் மருத்துவ மனையை அடைய முடியும் ஆனால் பையனின் நிலை நிமிடத்திற்கு நிமிடம் விபரீதமாகி கொண்டிருந்தது. பெண்கள் எல்லோரும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்போது தான் தோப்பையாநாடார் தாத்தா வந்தார் இதற்கு போய் ஏன் எல்லோரும் ஒப்பாரி வைக்கிறீர்கள் நம்ம பூங்கோவில் பிள்ளையிடம் தூக்கி போங்கள் மந்திரித்தால் எல்லாம் சரியாக போகும் சீக்கிரம் கிளம்புங்கள் என்று சொன்னார் அவனை தூக்கி கொண்டு தெருவின் கடேசியில் இருந்த பூங்கோவில் பிள்ளை தாத்தா வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக எல்லோரும் போனார்கள் பூங்கோவில் பிள்ளை பையனை கட்டிலில் கிடைத்த சொன்னார் அவன் உடம்பு முழுவதும் கைகளால் தடவி விட்டார் அதற்குள் யாரோ வேப்பிலையை ஒடித்து அவரிடம் கொடுத்தார்கள் கத்தை வேப்பிலையை கையில் பிடித்த அவர் முனுமுனுவென்று எதோ மந்திரம் சொல்லி மந்திரிக்க ஆரம்பித்தார்.

சுமார் அரைமணி நேரம் அவர் கையில் இருந்த வேப்பிலை கொத்து சுதர்சன சக்கரம் போல் சுற்றிகொண்டே இருந்தது நேரம் ஏற ஏற அவர் இலையை வீசும் வேகமும் அதிகரித்தது கடேசியில் அந்த இலையால் அவன் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை தடவி விட்டார் பிறகு தண்ணீர் எடுத்துவர சொன்னார் யாரோ எடுத்து வந்து கொடுத்தார்கள் சலீர் சலீரென்று தண்ணீரை அவன் முகத்தில் அடித்தார் என்ன ஆச்சரியம் தூக்கத்தில் இருந்து விளித்தவனை போல ராமராஜ் எழுந்து உட்கார்ந்தான் பிறகு அவனுக்கு வலியே இல்லை ஊசி போட்டால் கூட சில மணி நேரம் தேள் கடித்த வலி போகாது ஆனால் சின்ன பையனுக்கு அபாயகரமாக ஏறிய விஷம் இறங்கியதுடன் வலியும் இல்லாது போனது பெரிய அதிசயமாக எனக்கு இருந்தது.


 இதே போன்ற அதிசய சிகிச்சை முறையை பாப்கான் பாய் என்ற இஸ்லாமிய பெரியவர் அரகண்டநல்லூரில் செய்ததையும் நான் பார்த்திருக்கிறேன். கத்தியால் கிழிக்காமலே மந்திரம் சொன்ன சில வினாடிகளில் கடிவாயில் இருந்து நீலம் கலந்த குருதி கொட்டுவதை கண்கள் விரிய விரிய பார்த்த அனுபவம் பொய்யல்ல சதையும் ரத்தமும் கலந்த நிஜமான உண்மை மந்திரம் போட்டால் நோய்  விலகி விடும். என்று நோயாளி நம்புகிறான் அவ்வளவு மட்டுமே மற்றப்படி மந்திரத்திற்கு வேறு எந்த சக்தியும் கிடையாது என்று பலர் சொல்கிறார்கள். அது உண்மை என்றால் மருந்தே இல்லாமல் தேள் விஷம் இறங்கியது எப்படி கடிவாயில் இருந்து ரத்தம் கொட்டியது எப்படி உடனடியாக இதற்கு பதில் கூற முடியாவிட்டாலும் நம்மையும் மீறிய நமக்கு புரியாத எதோ ஒரு சக்தி மறைபொருளாக இருக்கிறது அதை இயக்க தெரிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பது தானே உண்மை.

பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு அம்மையார் சொல்கிறார் எனக்கு மந்திர மாயங்களில் முன்பு நம்பிக்கை கிடையாது என் அண்ணா ரொம்ப நல்லவர் குடும்பத்தை நடத்துவதற்கு அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் கடின உழைப்பாளி சிறந்த அறிவாளி யாரையும் நோகும்படி ஒரு சொல் பேசமாட்டார் அண்ணனுக்கு ஏற்ற அண்ணி அவரும் மிகவும் நல்லவர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் சீரும் சிறப்புமாகவே குடும்பம் நடத்தினார்கள் ஒரு முறை அண்ணா வியாபாரம் விஷயமாக கேரளாவுக்கு போனார் அங்கே சில நாள் தங்கி இருந்தார். திரும்பி வந்த நாள் முதல் அவர் நடவடிக்கை முழுவதுமே மாறி விட்டது எல்லோர் மேலும் கோப பட்டார் சுடு சொல்லை அள்ளி வீசினார் பித்து பிடித்தவர் போல இரவில் உறக்கமில்லாமல் நடக்க ஆரம்பித்தார்


 ஒருநாள் விடியற்காலையில் யாரிடமும் சொல்லாமல் பெட்டியில் இரண்டு செட் துணி எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பி விட்டார் நாங்கள் சல்லடை போட்டு தேடினோம் மூன்று நாட்கள் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை எங்கள் குடும்பத்தில் அனைவருமே இடி விழுந்தது போல கலங்கி விட்டோம் அவர் எங்களுக்கு அண்ணா மட்டுமல்ல குடும்பத்தின் அச்சாணியும் ஆவார் அவர் இல்லாமல் ஒரு நாளை கூட எங்களால் எண்ணி பார்க்க முடியாது வேண்டாத சுவாமி இல்லை பிராத்தனை செய்யாத கோயில் இல்லை நான்காவது நாள் அவர் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது அடித்து புரண்டு கொண்டு அங்கே ஓடினோம் போன எங்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல அஸ்திவாரமே தகர்ந்து போய்விட்டது போல் ஆகிவிட்டது.

அண்ணா ஒரு பணிக்கர் வீட்டில் இருந்தார் அங்கே இருந்த பெண்மணி அண்ணாவுக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார். அவரை விட்டு நான் வரமாட்டேன் அவள் தான் இனி என் வாழ்க்கைக்கு எல்லாமே நீங்கள் அனைவருமே தொல்லை செய்யாமல் போய்விடுங்கள் என்று முகத்தில் அறைந்தார் போல பேசினார் நாங்கள் கெஞ்சினோம் கூத்தாடினோம் அவர் கால்களில் விழுந்து மன்றாடினோம் கடேசி வரை அவர் மனம் கசியவே இல்லை இதுவரை தன்னோடு வந்த சொந்த பந்தங்களை ரத்த உறவுகளை ஏன் பெற்ற மக்களை கூட அவர் சட்டை செய்ய வில்லை எல்லோரையும் வெறுத்தார் அந்த பெண் மட்டுமே அவரது சிந்தனையில் நின்றது.


அண்ணாவின் நிறைந்த சொத்து அந்த பெண்ணுக்காக கரைந்து கொண்டே வந்தது அண்ணி பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவந்த நகைநட்டுகள் மார்வாடி கடையில் பணமாக மாறியது அவரது ஒரே மகன் இடுப்பில் போட்டிருந்த தங்கத்தால் ஆன அறைஞ்ஞான் கயிறு கூட அந்த பெண்ணின் மோக பசிக்கு இரையானது சில வருடங்களில் எல்லாம் முடிந்து பூஜ்யமாக அவர் நின்றார் அதன் பின் அவளுக்கு அவர் தேவையில்லை என்பதனால் மீண்டும் வேறு வழியே இல்லாமல் எங்களிடம் வந்தார் வந்த பிறகு தினசரி வயிற்று வலியால் துடித்தார் பல நேரம் அவர் வயிறு பானை போல ஊதிகொள்ளும் மூச்சி கூட விட முடியாமல் தவித்தார் இறுதியாக வில்லியனூரில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடவும் அவரை அழைத்து போனோம் அவர் பச்சையாக எதோ ஒரு மூலிகை கொடுத்தார் அண்ணா குடம் குடமாக வாந்தி எடுத்தார் அந்த பெண் இடுமருந்து கொடுத்து இவரை வசியபடுத்தி வைத்திருந்ததாகவும் எங்களுக்கு சொன்னார் இன்றுவரை அண்ணா நன்றாக இருக்கிறார். தனது தவறுக்கு பிராயச்சித்தமாக உழைக்கவும் ஆரம்பித்து விட்டார் அன்றிலிருந்து நான் மந்திரத்தை, மாந்திரகத்தை நம்புகிறேன் என்று சொன்னார்.

இப்படி எனக்கு மட்டுமல்ல உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் எங்காவது ஒரு மூலையில் மந்திரம் மாந்தீரீகம் இவைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி கேள்வி பட்டிருப்பிர்கள் உங்களில் சிலருக்கு அதில் சந்தேகமே வராமல் நம்பிக்கையும் இருக்கும் சிலருக்கு அது உண்மையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அவையெல்லாம் வெத்து கூச்சல் முட்டாள் தனத்தின் உச்ச நிலை என்று தோன்றும் நம்பிக்கை இல்லாதவர்களை பற்றி நமக்கு கவலையில்லை நம்பிக்கை இருப்பவர்கள் இது உண்மைதான் என்று எதை வைத்து நம்புவது நடந்த சம்பவங்களை வைத்து நம்பலாம் என்றால் அந்த சம்பவத்தில் உண்மை மட்டுமே இருக்கும் என்று எப்படி ஏற்றுக்கொள்ள என்று பல சங்கடங்கள் வரும் ஆனாலும் ஆர்வம் விடாது.


 இப்படி ஆர்வம் மேலிட்டால் மாந்திரீகம் என்பதை பற்றி அறிந்து கொள்ள நான் பல காலமாக உழைத்துள்ளேன் அந்த உழைப்பின் மூலம் சில நல்ல அனுபவங்களையும் பெற்றுள்ளேன் அவற்றை எல்லாம் எனக்குள் மட்டுமே மறைத்து வைத்தால் ஆவது என்ன? பத்து பேருக்கு தெரிந்தால் தானே ஏதாவது பிரயோஜனம் உண்டு என்று எண்ணி பார்த்தேன் அதன் விளைவே இந்த பதிவு இனி வரும் சில நாட்களில் மாந்தீரிகம் என்றால் என்ன? ஏவல், பில்லி சூனியம் என்றால் என்ன? என்றும் அவை சம்மந்தப்பட்ட பலதரப்பட்ட விஷயங்களை சிந்திக்க விரும்புகிறேன். உங்களுக்கும் இது சம்மந்தமான அனுபவமோ? விஷய ஞானமோ இருந்தால் நாம் பகிர்ந்து கொள்ளலாம். அது பலருக்கும் நன்மை தருமல்லாவா?
+ comments + 9 comments

Anonymous
08:26

மிக ஆர்வமாக உள்ளேன் ஐயா

அருமை, தொடரட்டும் இந்த பதிவு

Anonymous
13:30

All your issues and publishing are very good,this will also be good .Iam interested in manthra , thanthra issues.

உங்கள் எல்லா பதிவுகளும் அருமை எங்கள் வீட்டிலும் ஏவல், பில்லி சூனியத்தால் பாதிக்கபட்டு இன்னும் தீரவில்லை எல்லா தெய்வங்களுமே துணையாக இருந்து வருகிறது சூனியத்திலிருந்து விடுபட என்ன செயவது

நான் சிறு வயது ஆக இருக்கும் போது என் தாதா வுக்கு நல்ல பாம்பு கடித்து விட்டது, பிறகு பாடம் போட்டு நலம் ஆனார்கள்.

தமிழர்கள் அறிவியல் அறினர்கள், வாழ்க தமிழ்.

Anonymous
23:19

அய்யா யந்திரமும் மந்திரமும் உடலும் உயிரும் போன்றவை அதனை நீங்கள் நம்பினால் ; தங்கள் சிஷ்யர்கள் இனி வரும் பதிவுகளில் மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் படங்களை இடுவதை தவிற்குமாறு தாழமையுடன் வேண்டிக் கொள்கிறேன் ...படமானாலும் பார்ப்பவரின் மனதில்/வாழ்வில் சில சலனங்களை ஏற்படுத்தும் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் யந்திரங்களே என்பது எனது அனுபவமாகும் ... எல்லாம் அதிர்வுகளே ..பதிவு வழமை போல் அருமை !!! நாராயணன் துணை நன்றி :)

அய்யா தங்கள் பதிவைப் படித்தேன். வெறும் வேப்பிலையை வைத்துக் கொண்டு மந்திரங்களை உச்சரிப்பதால் விஷம் இறங்கிவிடும் என்றால் விஷமுறிவு மருந்துகளும் அதனைக் கண்டுபிடித்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களையும் மூடிவிட்டு அதற்காகப் படித்து பட்டம்பெற்ற மருத்துவர்களையும் ஓரங்கட்டிவிடலாமே.
ஏவல் பில்லி சூனியம் இவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியும் என்றால் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், வியாபார நிறுவனங்கள் ஒருவரையொருவர் வீழ்த்த, படாதபாடு படுகின்றனரே! அதைவிடுத்து ஒரு இந்து சாமியாரையோ, முஸ்லிம் அசரத்தையோ, கிறிஸ்தவப் பாதிரியாரையோ (அவரவர் நம்பிக்கைப் படி) வைத்து காரியத்தை கச்சிதமாக முடித்துவிடலாமே

Anonymous
13:49

sir, I am at Hyderabad. I have got a son by name R. Sridhar. He is 27 years old. He could not study from his childhood because he was declared that he is mentally handicapped. He never exhibited symptoms of mental child. He is normal. He does not know money value. I am a retired employee from post office. Kindly tell me about his future.

Dear Esteemed Guruji,

I'm Interest for manthra and thanthra issue. Please write ASAP.

Thanks & Regards

Velmuruganchelliah


Next Post Next Post Home
 
Back to Top