Store
  Store
  Store
  Store
  Store
  Store

பத்து பேருக்கு சோறு போடுவீர்கள் !


குருஜி அவர்களுக்கு எனது வணக்கம்,

      நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்றும் குழப்பமுடனும் இருக்றேன், தங்கள் தான் தெளிவு தரவேண்டும், தயவு செய்து தங்களது பொன்னான நேரத்தை என்னக்காக சற்று நேரம் தாருங்கள்.

எனது பெயர் சத்யராஜ், வயது 24 , நான்கு வருடங்களுக்கு முன்பு சொந்தமாக விட்டில் ஒரு தொழில் நான் கூறியதின் காரணமாக வைத்து கொடுத்தார்கள், எனது தொழில் இணையதள மையம் (Brwosing Centre). சிறுவயதில் நான் ஆரம்பத்தில் நான் ஆரம்பித்து தொழில் நுணுக்கக்களை கற்று நிறைய ஏமார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி ஒரு அளவிற்கு தொழில் செய்து வருகிறேன், வருகிற வருமானம் என்னவோ வாடகை, கரண்ட் விட்டு வாடகை , விட்டு செலவு என்று எல்லாதிற்கும் சரியாக உள்ளது, எதுவும் எடுத்து சேர்த்து வைக்கும் அளவு இல்லை, அனால் எனது பயம் வேறு , சிறு வயதிலேயை படித்து முடித்ததும் தொழில் வைத்து விட்டதால் என்னக்கு வேறு எந்த வேளையிலும் அனுபவம் இல்லை, இப்போதைய உலகம் கண்ணியுகம் என்று சொல்லும் நிலைமை மாறி கைபேசி யுகம் என்று ஆகிவிட்டது, அனைத்தும் இருந்த இடத்தில மக்கள் கையில் இருக்கும் கைபேசியிலையை அறிந்து கொள்கிறார்கள். இப்போதே இப்படி என்றால் இன்னும் இரண்டு ஆண்டுகளில், எனது இந்த தொழில் பெரிய அளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது , வெளிய போய் வேலை செய்யலாம் என்றால் எனக்கு முன் அனுபவம் ஏதும் இல்லை, அப்படி இப்போது வெளியை போய் வேலை செய்தலும் சம்பளமும் எனது அனுபவத்தை பொருத்து மிகவும் குறைவாக தான் கிடைக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். அனால் இப்போதைய குடும்ப சூழ்நிலைக்கு அது போதாது, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது தலை சுற்றுகிறது, தொழில் வைத்து தாருங்கள் என்று விட்டில் கூறி தவறு செய்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

ஆகவே குருஜி ஆவர்களை, எனக்கொரு நல்ல வழி தாறுகள் எனது ஜாதக படி, சொந்த தொழில் செய்தால் நல்லதா இல்லை வெளியில் சென்று வேலை தேடுவது நல்லதா , எது எனக்கு சிறந்தது என்று தங்கள் தான் கூற வேண்டும், தங்கள் பதில் வைத்து தான் நான் அடுத்து என்னை செய்வது என்று யோசிக்கவேண்டும்,

தயவு செய்து தெளிவு தாருங்கள்.

சத்யராஜ்,சென்னை



   கோதரர் சத்தியராஜ் அவர்களே இன்றைய தலைமுறையினர் பலரிடம் இருக்கும் குழப்பம் உங்களிடமும் இருக்கிறது. ஒரு காரியத்தை துவங்கி விட்டு அதில் சுணக்கமும் சோர்வும் வந்தவுடன் நாம் செய்துகொண்டிருப்பது சரிதானா முறைதானா வெற்றிபெற இவற்றால் முடியுமா? அல்லது வேறு எதாவது செய்யலாமா செய்தால் அதுவும் இதே போலதான் இருக்குமா? என்று குழம்புவது நீங்கள் மட்டுமல்ல உங்களை போல் நிறையப்பேர் இருக்கிறார்கள்

எவனொருவன் தான் எடுத்த கர்மத்தில் முன்வைத்த காலை பின்வைக்காமல் உறுதியோடு நிற்கிறானோ அவனே வெற்றி பெறுவான் சாதனையும் படைப்பான் சின்ன தோல்விகளும் பெரிய துயரங்களும் வந்தாலும் கூட இவைகள் தற்காலிகமானதே இவற்றில் இருந்து மீண்டு எழுந்து வர என்னால் முடியும் என்று நினைப்பதே வெற்றியின் ரகசியம்.

அதே நேரம் காலை பின்னுக்கு இழுக்க கூடாது என்ற உறுதியில் தண்ணீர் இல்லாத குளத்தில் நீச்சல் அடிப்பது அறிவுடைமை ஆகாது. நம்மால் முடிந்தது எது நம்மால் செய்ய கூடியது எது என்ற தெளிவு வந்த பிறகே காரியங்களை துவங்க வேண்டும். அப்படி துவங்கிய பிறகு வருத்தப்பட கூடாது. ஒன்றை நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். என்பது பழமொழி இதை மட்டும் வாழ்க்கையில் எந்த நிலையிலும் மறக்க கூடாது மறந்தவன் மற்றவர்களால் மறக்கபடுவான்.

உங்கள் ஜாதகத்தில் புதாத்திய யோகம் தெளிவாக வழுவாக இருக்கிறது. அது சொல்வது என்னவென்றால் உங்கள் புத்தி கூர்மையானது நல்லது கெட்டவைகளை உடனுக்குடன் எடைபோடக்கூடிய திறன் படைத்தது மற்றவர்கள் பத்துமுறை படித்து புரிந்து கொள்வதை நீங்கள் இரண்டே முறையில் புரிந்து கொள்வீர்கள். அதே நேரம் உங்களிடமுள்ள கெட்ட பழக்கம் தவறான இடத்தில் சரியான வேலை செய்வீர்கள் அதனால் உங்கள் திறமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளமுடியாத நிலையே நீங்களே ஏற்படுத்தி கொள்வீர்கள். சில நேரங்களில் கொல்லன் பட்டறையில் ஊசி விற்க முயல்வீர்கள்.

அதே போலதான் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஜாதகப்படி தற்போதைய சூழலில் அயல்நாட்டு வேலைக்கு முயற்சி செய்வது சிறந்த பலனை தரும். சில வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்த பிறகு உள்நாட்டில் சொந்த தொழில் துவங்கலாம். பத்து பேருக்கு சோறு போட்டு பிழைப்பு கொடுக்கும் அளவிற்கு வாழ்க்கையில் உயர்வீர்கள். இதில் சந்தேகமே இல்லை இந்த ஆண்டில் அயல் தேச பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள் நாராயணன் நல்லதை மட்டுமே செய்வான்.


Contact Form

Name

Email *

Message *