( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை !


ராமாயணத்தில் ஒரு காட்சி

     யுத்தம் முடிந்துவிட்டது சீதையை சிறைபிடித்த ராவணனும் அவனுக்கு துணையாக நின்ற வீரர்களும் மாய்ந்துவிட்டார்கள் இலங்கை ராவவணனின் ஆட்சியிலிருந்து விடுபட்டு விட்டது. யுத்த பூமியில் பெருக்கெடுத்து ஓடிய குருதி ஆறு கூட காய துவங்கி விட்டது.

ராமனும் சீதாவும் அவர்களின் நிழல் போன்ற இளையபெருமானும் அயோத்திக்கு கிளம்ப சித்தமாகி விட்டார்கள் வானரவீரர்களுக்கு ஒரே சந்தோசம் கிஷ்கிந்தா என்ற தனது தாய்நாட்டை மீண்டும் காணபோகின்றோம் என்ற சந்தோசம் மட்டும் அவர்களுக்கு இல்லை உலக நாயகனான ராமபிரானின் துயரத்தை துடைக்க தோள்கொடுத்தோம் என்ற சந்தோசம் உயிரையும் துச்சமாக மதித்து ஈடுபட்ட போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற சந்தோசம் இதற்கெல்லாம் மேலாக பிரிந்திருந்த ராமபிரானும் சீதாப்பிராட்டியும் இணைந்துவிட்டார்கள் என்ற சந்தோசம்.

வானரர்களின் வெற்றிவிழா கொண்டாட்டம் இலங்கையிலேயே துவங்கி விட்டது. ஆடலும் பாடலுமென மகிழ்ச்சி மத்தாப்பு பளிச்பளிசென்று நாலாபுறமும் வெடித்து சிதறின வெற்றி களிப்பில் ஆடிகொண்டிருந்த ஒரு சில வாணர்களுக்கு கடலை தாண்டி இலங்கையை அடையும் போது தங்களோடு இருந்த இணைபிரியாத தோழர்கள் பலர் இப்போது இல்லை ராம சேவைக்காக தங்களது இன்னுயிரை அர்பணித்து விட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு கவலைபடாமல் ஆடி பாடி கூத்தடிப்பது நியாயமா என்று தோன்றியது. 


 கால் வண்ணத்தால் கல்லாகி கிடந்த அகலிகையை பெண்ணாக சமைத்த கருணை வடிவான ராமனின் சேவகர்கள் அல்லவா வானரர்கள் தனது தோழர்களின் வீர மரணத்திற்காக மட்டுமா வருந்துவார்கள் ராவணனுக்காக போர்புரிந்து உயிரை கொடுத்த லட்சோப லட்ச அசுர வீரர்களுக்காகவும் வருந்தினர். அண்ணனை இழந்து அருமை துணைவனை இழந்து பெற்ற தந்தையை இழந்து உதிரத்தில் சுமந்த மகனை இழந்து எத்தனை எத்தனை அசுர மாதர்கள் கண்ணீர் வடித்து கொண்டிருப்பார்கள். என்று அவர்களில் பலரின் சிந்தனையில் தோன்றியது உடனே ஆட்டமாடிய வானரங்கள் அனைத்தும் சோக மயமாக அமர்ந்துவிட்டன.

அப்படி அமர்ந்த வான வீரர்களில் ஒருவன் கேட்டான் நாம் அனைவரும் ராமனுக்காக சண்டை செய்தோம் முறைதவறி அன்னை சீதாவை கவர்ந்து சென்ற ராவணனின் ஆணவத்தை அடக்க போர் செய்தோம் அது தவறல்ல ஆயிரம் தான் தர்ம யுத்தமாக இது இருந்தாலும் எத்தனையோ உயிர்கள் நமது கைகளால் கொல்லபட்டனவே கடமைக்காக கொலை செய்தோம் என்றாலும் கொலை கொலைதானே? அது பாவம் தானே ஒரு உயிரை படைக்க நம்மால் முடியாத போது அதை பறிக்கும் உரிமை நமக்கு ஏது? நமது யுத்தத்திற்கான காரணம் நியாத்தொடு இருந்தாலும் கொலை செய்த பாவம் நம்மையும் நமது தலைமுறையினரையும் தாக்கும் அதிலிருந்து விடுபட என்னவழி

வானர வீரனின் வார்த்தைகள் ஒவ்வொரு வானரன் காதுகளிலும் எதிரொலித்தது ஆமாம் நான் நூறு பேரை கொன்றேன் நான் கொன்றதோ ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். நான் செய்த கொலைக்கு கணக்கே இல்லை இதற்க்கெல்லாம் என்ன பரிகாரம் என்று எல்லா வானரங்களும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தன அமைதியான அந்த பிரேதேச முழுவதும் வானர குரல்கள் எதிரொலித்தன பெரும் சலசலப்பை அது உண்டுபண்ணியது பாசறையில் ஓய்வாக இருந்த ராமச்சந்திர மூர்த்தியின் காதுகளிலும் அந்த குரல்கள் வந்து விழுந்தன தம்பியை அழைத்து வீரர்களின் சலசலப்புக்கு காரணம் என்ன என்று அறிந்து வா என்று அனுப்பி வைத்தான்.


 அண்ணனில் ஆணையை சிரமேற் கொண்ட இளையபெருமான் வானரவீரர்களிடம் சென்று விசாரித்தான் அவர்களும் தங்களது மனதிற்குள் ஓடிய கொந்தளிப்பை லஷ்மனனிடம் கொட்டி தீர்த்தார்கள். அண்ணணி வாக்கை மட்டுமே கேட்டு பழக்கப்பட்ட தம்பிக்கு பதில் சொல்ல தெரியவில்லை காரணம் இதுவரை அவன் அண்ணன் செய் என்று சொன்னால் செய்வான் நிறுத்து என்றால் நிறுத்துவான். அது பாவமா? புண்ணியமா? என்று எப்போதுமே நினைத்து கூட பார்த்ததில்லை அண்ணன் சொல்வது தர்மமாக மட்டுமே இருக்கும் என்பது அன்பு தம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை அப்படியே வாழ பழகியவனுக்கு வீரர்களின் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாதது விந்தை அல்ல.

அன்பான வீரர்களே இதுவரை நான் அண்ணின் வார்த்தையை மட்டுமே சத்திய பாதையாக கொண்டதனால் பாவ புண்ணியங்களை யோசித்ததில்லை அதனால் பரிகாரங்களை பற்றி எனக்கு தெரியாது. அறியாத விஷயத்தை அறிய செய்வது பெரியோரின் கடமை எனவே அசுர வீரர்களை கொன்ற பாவத்திற்கு என்ன பரிகாரமென்று அண்ணனிடமே சென்று அடிவணங்கி கேட்போம். வாருங்கள் என்று அனைவரையும் அழைத்து கொண்டு ராமன் முன்னால் வந்து நின்றான்.

தாமரை மலர் போன்ற ராமனின் வதனத்தை தரிசனம் செய்த வானர வீரர்கள் தங்களது நெஞ்சிக்குள் புகைந்து கொண்டிருந்த குமுறல் நெருப்பை அண்ணலின் திருப்பாத கமலங்களில் சமர்பித்தார்கள். ஐயா தசரத குமாரா நாம் செய்தது தர்ம யுத்தம் அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. ஆணவம் கொண்ட ராவணனை வீழ்த்தியதற்காக நாங்கள் வருந்தவில்லை நாங்கள் அனைவருமே உங்கள்மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த யுத்தத்தை உத்வேகத்தோடு செய்தோம். அதனால் எங்களுக்கு காயங்கள் கூட வலிக்கவில்லை.


 ஆனால் அசுர வீரர்கள் மகிழ்வோடு யுத்த களத்தில் குதிக்கவில்லை தங்கள் அரசன் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அரச கட்டளைக்காக ஒரு வேலையாகத்தான் சண்டையில் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருமே கொன்று தீர்த்து விட்டோம். உயிர்களை கொல்வது பாவமல்லவா? அந்த பாவத்தை தர்மத்திற்காக செய்தாலும் பாவம் பாவம் தான் அதிலிருந்து விடுபட என்ன வழி எங்கள் ஆத்மா கடைத்தேற என்ன பரிகாரம் என்று எங்களுக்கு தெரியவில்லை நீர் இருட்டை விரட்டும் ஞான சூரியன் எங்களது அஞ்ஞனம் என்னும் சந்தேக இருட்டை நீக்கி தெளிவை தாருங்கள் என்று வணங்கி நின்றார்கள்.

நாளை முதல் நீயே அரசன் என்ற போது எப்படி மலர்ந்து இருந்ததோ அப்படியே நாளை நீ காட்டுக்கு போ என்ற போது இருந்ததே அதே அழகிய ராமனின் வதனம் வானர வீரர்களின் கேள்வியை கேட்டவுடன் மலர்ந்தே இருந்தது. ஆனாலும் அந்த சந்திர முகத்தில் சிந்தனை மேகம் சூல்கொள்ள துவங்கியது. ராமன் அமைதியானான் ஆழமான சிந்தனை அவனை சுற்றி படர்ந்தது. வெகு நேர சிந்தனைக்கு பின் ராமனின் திருவாய் மலர்ந்து வார்த்தைகள் வந்தன.

தவிர்க்க முடியாத நிலையில் கொலை செய்தாலும் அந்த கொலைக்கான பாவ கணக்கில் எந்த ஜீவனும் தப்ப முடியாது. ஆனாலும் அந்த பாவ நெருப்பு முழுமையாக நம்மை சுட்டு விடாமல் இருக்க ஒரு வழி உண்டு மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டால் பாவம் விலகும் இங்கே நடந்து முடிந்த சத்திய யுத்தத்தில் நீங்கள் பெற்ற பாவ சுமையை இறக்க வேண்டுமென்றால் கற்புக்கரசியான மண்டோதிரியின் திருநாமத்தை மந்திரம் போல் ஜெபித்து இறைவனிடம் முறையிடுங்கள் அதுவே சிறந்த வழி என்றான் ராமன்,


 கேட்ட அனைவருக்கும் வியப்பு வந்தது மண்டோதிரி மாண்டு போன எதிரியின் மனைவி அவன் செய்த அத்தனை தவறுக்கும் சரிபங்கு பொறுப்பை ஏற்கும் சகதர்மிணி அப்படி பட்டவளின் பெயரை சொன்னால் பாவம் போகுமா? என்று அவர்களுக்கு தோன்றியது. அதனால் அதற்கான விளக்கத்தை தருமாறு ராமனிடம் முறையிட்டார்கள்.

மண்டோதிரியை இலங்கை அரசனின் மனைவியாக மட்டும் நீங்கள் பார்கீரீர்கள் நான் அவளை அப்படி பார்க்கவில்லை என் தாயாகவே அவளை கருதுகிறேன். அதற்கும் காரணமுண்டு தாய் மட்டுமே தன் மகனிடம் இல்லாத சிறப்புகள் இருப்பதாக மிகைபடுத்தி கூறுவாள் அது தான் தாய்மையின் சிறப்பு தாய்மையின் பாச வெகுளித்தனம் என்றும் சொல்லலாம். ராவணனின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் அவள் என் சிறப்புகளை என் வீரத்தை புகழ்ந்தே பேசினாள் ராமனோடு சண்டை போடாதே அவன் அசகாய சூரன் ராமனோடு சமாதானமாக போ அவனே உன் ரச்சகன் அவன் மனைவியை கவர்ந்து வந்தது பாவத்திலும் பாவம் ஆனாலும் நீ மன்னிப்பு கேட்டால் கருணையோடு மன்னிப்பதில் ராமன் ஒரு இமையம் என்றெல்லாம் பேசினாள் ஒரு தாய் மட்டுமே இப்படி பேச முடியும்.

இவைகளால் மட்டும் மண்டோதிரி சிறந்தவள் என்று நான் கூறவரவில்லை அவள் பிறந்த போது அவளை தாய்தந்தையர் இருவரும் புறக்கணித்து அனாதையாக வனத்தில் விட்டு விட்டார்கள். அன்று துவங்கியது அவளின் துயரம் அனாதையாக திரிந்த மண்டோதிரியை இரக்கமே வடிவாக கொண்ட அசுரன் ஒருவன் தனது மகளாக போற்றி வளர்த்தான். அவளை ராவணன் கண்டு மணம் பேசிய பிறகு கணவன் செய்த ஒவ்வொரு தவறுகளையும் எண்ணி எண்ணி அழுதாள் அகங்காரமே வடிவாக கொண்ட தனது இல்லற நாயகன் என்றாவது ஒருநாள் சரியான தண்டனைக்கு உள்ளாவான் என்று ஒவ்வொரு வினாடியும் தனது மாங்கல்யம் பறிபோய்விடுமே என்றும் அழுது கொண்டே இருந்தாள்.


 ராவணன் செய்த ஒவ்வொரு தவறுக்கும் அவன் பெற்ற ஒவ்வொரு சாபத்திற்கும் அவனை கரம்பிடித்தவள் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத பாவத்திற்கு தண்டனை சுமந்தாள். அவள் இருந்தது அரச மாளிகையாக இருக்கலாம் ஆனாலும் அது அவளுக்கு நெருப்பு மாளிகையாகதான் இருந்தது. கட்டிய கணவன் கண்கண்ட தெய்வம் அவன் செய்வது ஒவ்வொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அதை தட்டி கேட்பது மனைவிக்கு அழகல்ல என்று அவள் எப்போதுமே கருதியதில்லை மனைவி மதி சொல்லும் மந்திரியும் கூட கணவனின் தவறை திருத்த சொல்வது தன் கடமை என்று எண்ணினாள் அதை தன் வாழ்நாளில் கடேசி வினாடி கூட கடைபிடித்தாள் ஆனாலும் கருத்து குருடனான கணவன் மனைவியின் அறிவுரையை மதிக்கவே இல்லை ராஜ மாளிகையில் அவள் ஒரு அலங்கார பதுமையாகவே ராவணனால் கருதபட்டாள். மனைவி உடலாக மட்டுமே கணவனோடு வாழ்வது மிகபெரிய துயரம் அந்த துயரம் அவளுக்கு சாகும்வரை நீங்கவே இல்லை.

அன்பர்களே இதையெல்லாம் விட பெரிய துயரத்தை மண்டோதிரி அனுபவித்தாள். அதற்காக அவள் மெளனமாக அழுத அழுகை அவளை சுற்றி உள்ள நான்கு சுவர்களே அறியும். ஒரு பெண்ணுக்கு மிக பெரிய துயரம் எது தெரியுமா? தான் உயிரோடு இருக்கும் போது தனது கணவன் இன்னொரு பெண் மீது மோகம் கொண்டு தன்னை புறக்கணித்து நிற்கிறானே என்ற துயரத்திற்கு ஈடு இணையே கிடையாது. அவன்தான் எல்லாம் என்று அர்பணித்து வாழும் மனைவியை விட்டு விட்டு மற்றொரு பெண்ணை நாடும் கணவனோடு வாழ்வதே பெரிய நரகம் அந்த நரகத்தில் மண்டோதிரி கிடந்தாள். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் துயரத்தை மட்டுமே கண்டறிந்த ஒரு ஆத்மாவால் தான் மற்றவர்களின் துயரத்தின் பாரம் என்னவென்று அறிய முடியும். துன்பபட்டவர்களுக்கு தான் மன்னிக்கும் தகுதி இருக்கிறது. அது மண்டோதிரியிடம் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. எனவே அவளை பிராத்தனை செய்யுங்கள் அது சிறந்த பரிகாரம் என்றான்.

இந்த ராமாயண கதை நமக்கு சொல்வது என்ன? கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் கோட்டான் மாதிரி கூத்தியாள் வைப்பான் என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு மலர்க்கு மலர் தாவும் வண்டுகளை போன்ற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கட்டியவளை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டு கண்டவளோடு உல்லாசம் புரியும் ஆண்கள் என்றாவது ஒருநாள் ராவணனை போல் வீழ்ந்து கிடப்பார்கள். காரணம் மனைவிக்கு செய்த துரோகம் அதற்கான சம்பளம் மரணத்திற்கு பின் அல்ல வாழும் போதே கிடைக்கும். எனவே தான் தாவும் மனதை கட்டி போட வேண்டுமென்று ஆண்கள் எச்சரிக்க படுகிறார்கள்.
+ comments + 7 comments

Anonymous
09:54

/// கற்புக்கரசியான மண்டோதரியின் திருநாமத்தை மந்திரம் போல ஜபித்து இறைவனிடம் முறையிடுங்கள் ///கற்புக்கரசிகளில் இவரும் ஒருவர் என்பது ராமபிரானே ஒப்புகொள்கிறார் எனில் அதற்கு மறு அப்பீல் ஏது?

karthi
10:20

super

Anonymous
10:59

அரகண்டநல்லூர் கோவில் 11ம் தேதி கும்பாபிஷேகம்

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான புத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு செல்வ வினாயகர், பாலமுருகன், நாகசக்தி கன்னி, நவக்கிரகங்களுடன் கூடிய புத்துமாரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று (9ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் 10ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, புதிய சிலைகள் பிம்பஸ்தாபனம், மகா பூர்ணாஹுதி, மாலை 6 மணிக்கு மூன்றாம்கால யாகசாலை பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, மூலமந்திர பூஜை, ஜபஹோமம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 11ம் தேதி காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 6 மணிக்குமேல் 7 மணிக்குள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

ஆஹா , அருமை,
ராமாயணம் முழுவதும் என்ன ஒரு காவியம், எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும், இது போன்று அதில் இருந்து ஒரு சிறு கதை கேட்டாலும் கூட பக்தி என்ற நீர் கண்களில் தேங்குகிறது.

இப்படி யாரும் அதிகமாக அறியாத செய்தியை கூறியதற்கு மிக்க நன்றி....

Anonymous
01:25

இந்த இராமாயணமும், இராமர் பாலமும் வெறும் கதைதான் என்றால் பேச வார்த்தைகள் இல்லை. அருமையான கதை . நல்ல நீதி.
“கட்டியவளை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டு கண்டவளோடு உல்லாசம் புரியும் ஆண்கள் என்றாவது ஒருநாள் ராவணனை போல் வீழ்ந்து கிடப்பார்கள்”.
அருமையான நீதிதான் பாராட்டுக்கள். உங்கள் கதையின் இடையே இப்படி ஒரு வாசகம் வருகிறது அதாவது ”கால் வண்ணத்தால் கல்லாகிக் கிடந்த அகலிகையை பெண்ணாக சமைத்த இராமன்”
ஏன் அகலிகை கல்லானாள்? அதைப் பற்றி ஏன் சொல்லவில்லை? சொன்னால் இந்து மதம் நாறிப்போகும் என்ற பயமா?
இராவணன் ஒரு அசுரன். அவன் மாற்றான் மனைவியைக் கவர்ந்து சென்றான். அவன் கை கூட அவள் மேல் படவில்லை. இப்படிப் பட்ட மாபெரும் குற்றத்திற்காக இராமன் இராவணனையும், அவன் கூட்டத்தார் பல லட்சம் பேரையும் கொன்றான் என இராமாயணக் கதை கூறுகிறது.
இப்போது அகலிகையின் கதைக்கு வருவோம்.இந்திரன் தேவர்களின் தலைவன். பிராமணன், கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழித்து விட்டான். இதில் அகலிகை செய்த பாவம் என்ன? ஏன் அவளை கவுதமமுனிவன் கல்லாக உருமாற சபிக்க வேண்டும்? இந்திரனுக்கு என்ன தண்டனை கிடைத்தது?
அடுத்தவன் பொண்டாட்டியை தொடவே செய்யாத ஒருத்தனுக்கு மரண தண்டனை. ஏனென்றால் அவன் அசுரன். கற்பழித்தவனுக்கு தண்டனையே கிடையாது. ஏனென்றால் அவன் தேவர்களின் தலைவன், பிராமணன். இதற்குப் பெயர்தான் ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்பதோ?
இதை கதையாக கேட்டாலே காறி துப்ப தோன்றுகிறது. ஆனால் இந்த நீதிதானே இந்தியா முழுதும் நடைமுறையில் உள்ளது.
சரசுவதியை பிரம்மன்தான் படைத்தானாம்,அவனுக்கு அவளே பொண்டாட்டியும் ஆகிப் போனாளாம். தகப்பனுக்கும் மகளுக்கும் உள்ள உறவு புருசன் பொண்டாட்டி உறவு சூப்பரோ சூப்பர்.
தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழு-முதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவ-தாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த _ மாபாதகம் தீர்த்த புராணங்-கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் _ அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் _ தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்-தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.
கடவுளின் பாதுகாவலர்களே உங்களுக்கு மத புத்தகங்களைப் படிக்கும் போது, மத கதைகளைக் கேட்கும் போது சந்தேகமே வராதா? சந்தேகப் பட்டு கேள்வி கேட்டால் சாமி கண்ணை குத்தி விடுமா? பயமா?
இந்த உலகில் நல்லதும் கெட்டதும் எல்லோருக்குமே சமமாகத்தான் நடக்கிறது.
பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பது சரியாகவே உள்ளது.

nedugampattu veeraasaami
01:56

புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் வெறும் குப்பைகள் அசிங்கமான சம்பவங்களின் தொகுப்புகள் என்று பல பகுத்தறிவாதிகள் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் மேடைபோட்டு முழங்குகிறார்கள் ஒரு வாதத்திகாக அதை ஏற்றுகொள்வோம் அகலிகை இந்திரன் இவையெல்லாம் பழையகதை கிடக்கட்டும் தற்போதைய நாகரீக காலத்தில் பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் பெரியார் தனது தள்ளாடும் எழுபத்தி இரண்டாம் வயதில் இருபத்தி இரண்டு வயது பெண்ணை மணமுடித்தாரே அது எந்த ஊர் நாகரிகம் இது தான் பெண்ணுக்கும் பெண்மைக்கும் கொடுக்கும் மரியாதையா? இதை பற்றி பேசினாலே பகுத்தரிவாதிகளுக்கு பற்றிக்கொண்டு வருகிறதே அது ஏன்? ஊரார் குற்றத்தை ஒப்பாரி வைத்து பாடும் அவர்கள் தனது குற்றங்களுக்கு புனுகு பூசுவதுதான் காலகாலமாக செய்துவரும் திராவிட தொண்டு

அப்படியா? இராவணன் மகள் தான் சீதை என்றும் ஒரு கதை இருக்கிறது, தெரியுமா?


Next Post Next Post Home
 
Back to Top