Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடிடும் மானிட பதரே...!


ங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து 
         இரண்டு உயிர்கள் இணைந்து,
சங்கமம் ஆன சடுதியில் இந்த
         சரீரம் வந்து விழுந்தது!
அங்கம் தூளியில் ஆடி களித்து
         ஆயிரம் முத்தம் பெற்று,
சிங்கம் என்றும் சிறுமலர் என்றும்
         சீர்மிகு கொஞ்சல் வாங்கி,

பாதம் மண்ணில் பதிந்து நடக்க
        பாசம் நிலவை காட்ட,
சாதம் பிசைந்து அம்மா ஊட்ட
        சரித்திரம் ஐயா சொல்ல,
மாதம் வருடம் உருண்டு செல்ல
        மலரும் வாலிப பருவம்!
காதல் பெண்ணை தேடி நெஞ்சம்
       கனலாய் நின்று எரியும்!

திருமணம் முடிய குழந்தை பிறக்க
       தினமொரு ஆசை பெருக,
கருணை அன்பு கனிவு பாசம்
       கானல் நீராய் மறைய,
வறுமை நோய்கள் வாட்டி வதைக்க
       மகிழ்ச்சி மறைந்து போக,
தருணம் பார்த்து காலன் அழைப்பான்
       தவிர்க்க நினைத்து தவிப்போம்!


மாடி வீடு கோடி இன்பம்
      மரணம் வந்தால் போகும்!
தேடி தேடி சேர்த்த செல்வம்
      தேவன் முன்னால் ஓடும்! 
ஆடி ஆடி சிலிர்த்த மேனி
      அள்ளும் சாம்பல் ஆகும்!
மூடி வைத்த பாவ புண்யம்
      முடிந்த பின்னே தொடரும்!

சேர்த்த சொந்த பந்தம் எல்லாம்
      செத்த பின்னே வருமா?
வேர்த்து உழைத்த செல்வம் கூட
     சொர்க்க போகம் தருமா?
ஆர்த்த கோபம் அனலாய் எரிய
     ஆடிடும் மானிட பதரே!
நீர்த்த மேனி தீர்ந்த பின்பு
      நின்று நிலைப்பது எதுவோ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG


Contact Form

Name

Email *

Message *