Store
  Store
  Store
  Store
  Store
  Store

மூலிகை தாவரம் தானா...?

   மூலிகை என்று அழைக்கப்படும் செடி கொடிகள் தாவர வகையை சேர்ந்தது தானே அவற்றையும் தாவரங்கள் என்று அழைப்பது தானே முறையாக இருக்கும் அப்படி செய்யாமல் அவற்றிற்கு மட்டும் மூலிகை என்ற சிறப்பு பெயர் கொடுப்பது ஏன்?

நடராஜன்,மலேசியா


     டுப்பு மூட்டி பானை வைத்து அரிசி போட்டு சமைப்பது சாதம் அதே போலதான் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியமும் சமைக்க படுகிறது. அதை யாரும் சாதம் என்று அழைப்பது இல்லை அது ஏன் என்று எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா? சாதாரண அரிசி சாதம் இறைவனுக்காக அற்பணிக்கும் போது பிரசாதமாகிறது. காரணம் அந்த சாதத்தில் அரிசி மட்டும் இருப்பதில்லை கூடவே பக்தியும் இருக்கிறது.

வெளிச்சம் வர ஏற்றப்படும் விளக்கில் இருப்பதும் நெருப்பு அது வணங்க படுகிறது. அதே நெருப்பு வேட்டியில் பிடித்து கொண்டால் வெருக்கபடுகிறது. திருக்குறளில் இருக்கும் எழுத்துக்கள் தான் மஞ்சள் பத்திரிக்கைகளிலும் இருக்கிறது அதற்காக இரண்டையும் ஒன்றாக கருத முடியாது. ஆக பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அது பயன்படும் விதத்தை பொறுத்து மதிக்க படுவதோ மிதிக்க படுவதோ நடக்கிறது.

வைத்தியத்திற்கு பயன்படும் மூலிகைகளும் செடி கொடி மரவகையை சேர்ந்ததே ஆகும். உலகில் உள்ள எல்லா தாவரங்களிலும் எதோ ஒரு வகையான சக்தி இருக்கிறது. அது மருத்துவ சக்தியாகவும் இருக்கலாம் உயிரை எடுக்கும் விஷ சக்தியாகவும் இருக்கலாம் அந்த குறிப்பிட்ட தாவரத்தில் இருப்பது எந்த சக்தி அது எத்தகைய பலனை தரும் என்று மனிதனால் அறியப்பட்ட பிறகு அதற்குள்ள பொது பெயரான தாவரம் என்ற சொல் மாறி மூலிகை என்ற வகைக்குள் இணைத்து அழைக்கபடுகிறது

அதாவது எந்த பொருளாக இருந்தாலும் அது பயன்படும் விதத்தை பொறுத்து சிறப்பிக்க படுகிறது. அந்த பொருளின் பயன்பாடு மக்களுக்கு தெரியாத வரையில் அது மாணிக்கமாக இருந்தாலும் சாதாரண கூழாங்கல்லாகவே கருதப்பட்டு ஒதுக்கபடுகிறது. எனவே பொருளில் உயர்வு தாழ்வு கிடையாது. அது பயன்படும் விதத்தை வைத்தே ஏற்ற தாழ்வு கற்பிக்க படுகிறது. இது தாவரத்திற்கு மட்டும் அல்ல மனிதனுக்கும் பொருந்தும் நாலு பேருக்கு பயன்படும் மனிதனை மாமனிதன் என்று அழைப்போம் அவனே நாலு பேருக்கு குழி வெட்டுவனாக இருந்தால் இரண்டு கால் இரண்டு கை இருந்தாலும் அவன் மிருகமே.


Contact Form

Name

Email *

Message *