Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தை வரம்தரும் துளசி பூஜை...!


  பாம்பனை மேல் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு இரண்டே இரண்டு பொருட்களின் மீது தீராத காதல் என்று திருமால் அடியவர்கள் சொல்கிறார்கள் அதில் முதலாவது பொருள் கள்ளம் கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம் இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம்பரப்பும் துளசி 

துளசி என்ற சொல்லுக்கு தன்னிகர் இல்லாத பெண் என்று பெயர் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் துளசியை திருத்துழாய் என்று அழைப்பார்கள் ஸ்ரீ மகலக்ஷ்மியின் அம்சமாக துளசி கருதபடுவதோடு அனுவரதமும் திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் புனிதமிக்க ஆபரணமாகவும் துளசி திகழ்கிறது துளசியின் ஒவ்வொரு அங்கமும் புனிதமானது அதன் இலை கிளை வேர் மட்டுமல்ல துளசி செடியை தாங்கி புண்ணியம் பெற்ற மண்ணும் மகத்துவம் பெற்றதாகவே கருதப்படுகிறது துளசியின் வேர்களில் சகல தேவதைகளும் வாழ்வதாக அன்பர்கள் நம்புகிறார்கள் 


தர்மத்வஜன் மாதவி என்ற தம்பதினருக்கு கார்த்திகை மாதம் பெளர்ணமி திதியில் துளசி அவதரித்தாள் பிரம்மனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற துளசி பெண்வடிவத்தை விட்டு செடி வடிவம் தாங்கி திருமாலுக்கு பிரியமானவளாக விளங்குவதாக புராணங்கள் சொல்லுகின்றன துளசி செடியின் அடியில் தேங்கி நிற்கும் தீர்த்தத்தில் பாவங்களை போக்கும் புண்ணியங்களை தரும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு 

ஹரிவம்சம் என்ற நூல் மகாவிஷ்ணு ஒருமுறை தன்னை மகிழ்விக்கும் துளசியை மகிழ்விக்கும் பொருட்டு துளசி பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது கார்த்திகை மாத பெளர்ணமி தினத்தில் திருமால் அப்பூஜையை செய்ததாகவும் அன்றைய தினம் நாமும் செய்தால் துளசி மனமகிழ்ந்து வரங்களை கேட்காமலே தருவாள் என்று பயன் பெற்றவர்கள் நெஞ்சம் நெகிழ சொல்கிறார்கள் 

நமது முன்னோர்கள் நெருப்பு வடிவான சிவ பெருமானுக்கு குளிர்ச்சி தருகின்ற வில்வபத்திரத்தையும் குளிர்மேகம் போன்ற விஷ்ணுக்கு வெப்பத்தை தரும் துளசி பத்திரத்தையும் பூஜை பொருளாக வைத்திருக்கிறார்கள் ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள் தைமாத வெள்ளி கிழமையும் மாசி மாத சுக்லபக்ச துவாதிசியும் பங்குனி மாத அம்மாவசை மற்றும் பெளர்ணமி சித்திர மாத பெளர்ணமி ஆனி மாத சுக்லபக்ச தசமி மார்கழி மாத விடியற்காலை நேரம் துளசி தேவியை பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் என்று முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள் 

ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசியின் மகாத்மியம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது தசரத மகராஜனுக்கு குழந்தை பேரு வேண்டி அவன் முதல்முதலில் பட்டத்து ராணிகளோடு துளசி பூஜை செய்ததாகவும் துளசி தேவியே நேரில் தோன்றி துளசி காஷ்டம் என்ற துளசி குச்சிகளை கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய் உனக்கு பகவானே மகனாக பிறப்பான் என்று வரம்கொடுத்ததாகவும் இருக்கிறது 


எனவே துளசி வழிபாடு என்பது சகலபாவங்களையும் போக்குவது மட்டுமல்ல குழந்தைவரத்தையும் தருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது நானும் மகப்பேறு இல்லாத தம்பதினர் சிலருக்கு துளசி வழிபாடு செய்ய சொல்லி அறிவுறித்தி இருக்கிறேன் அவர்களும் பக்தி சிரத்தையோடு செய்து நல்ல பலனை கைமேல் பெற்றிருக்கிறார்கள் 

துளசி பூஜை செய்யும் போது மிக கண்டிப்பாக ஸ்ரீ கிருஷ்ணனாக கருதப்படும் நெல்லி மரத்து கிளையை அருகில் வைத்து செய்ய வேண்டும் தொடர்ச்சியாக பூஜை செய்யப்படும் போது நெல்லி மரகிளை வாடிவிடும் என்பதனால் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவ படமோ பிரதிமையோ வைத்து பூஜை செய்யலாம் நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்துபாருங்கள் மனதில் மகிழ்ச்சியும் இல்லத்தில் இன்பமும் வாழ்வில் ஒரு வித தெம்பும் கிடைப்பதை கண்கூடாக காணலாம் துளசி மாதா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள் .

Contact Form

Name

Email *

Message *