Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு துளி "ஜீவன்"


னிய கீதத்தை இதழ்களின் மெல்லசைவில் 
மெளனமாக வெளிப்படுத்தும் 
ரோஜா மலர்கள்!
அதில்-
ரீங்காரம் விட்டுலவும் தேனீக்கள்!
வானிலிருந்து 
மண்ணைத் தழுவும் 
வெண்ணிலாக் கதிர்கள்!

அரூப ஸ்பரிசத்தால் 
தொலைந்துவிட்ட நினைவுகளை 
தூக்கி வரும் தென்றல்! 
ரகஸியம் பேசும் 
நதியின் சுழிவுகள்! 
வெள்ளை மணற்பரப்பில் 
மேல்னோக்கி எழும் 
சவுக்கை ஓவியம்!

வெள்ளை நுரைக் கொப்பளிக்க 
விழுந்து எழும் 
அருவியதன் பேரிசை! 
கரிய யானை 
மலைக் குகைகளில் 
எதிரொலித்து கெக்கலிடும் 

ஆலமர இலைகளில் 
கண்ணா மூச்சியாடும் 
சிறு இறகு புள்ளினங்கள்! 
காலையின் வரவுக்கு 
திருப்பள்ளி பாடும் சந்தலயம் 
நெஞ்சில் 
நிரம்பி வழியும் 

உதித்து வரும் ஆதித்தன் 
ஒளிதூரிகையால் 
மணல்திரையை தொடும் போது 
பலவண்ண கண்காட்சி 
இலவசமாய் திறந்துவிடும் 

வெள்ளை மேகங்கள் 
சமுத்திர மதுக்கடையில் 
மேனி கருக்கும் வரை குடித்து விட்டு 
ஆனந்த போதை தலைக்கேற 
ஒன்றை ஒன்று 
கட்டிபிடித்து ஆலிங்கனம் செய்து 
இதழ் கடித்து முத்தமிடும் 
-இடியோசை 
எதிர்த்திடும் பழம் கிழடாய் 
இடையில் புகுந்து வெட்டும் மின்னல்! 
துக்கம் அழுத்த 
கண்ணீர் துளியாய் மண்ணை தொடும் 
மழைத்துளிகள் 

ஒன்று இரண்டாக 
ஒவ்வொன்றும் நூறாக 
அத்தனையும் ஒன்றிணைந்து 
ஊரை நிரப்ப 
மலைமுகட்டை தொடுவதற்கு 
ஆர்பரித்து கொந்தளித்து 
நுரை சிந்தி எழும் 
அலைகளின் நடுவில் 
சிறிய துரும்பாக 
"ஜீவன்" 
பிரம்மாண்டமாய் அதன் மேல் 
உடனடியாக கவியும் "சாவின் நிழல்" 

அடங்காத சினமும் 
முடியாத ஆசையும் 
பயமும் வெட்கமும் 
புழுவாக்கும் கோழைத்தனமும் 
சுற்றி சுழன்று 
பூமி பரப்பை தாக்குகிறது.

நிலத்தை பிளந்து 
நெருப்பு பீறிட 
மலைத்தொடர்கள் அணுவாகி 
மரங்கள் எரிந்து 
பிடிசாம்பலாக மாற 
சமுத்திர அலைகள் 
கொதித்து நீராவியாகி 
கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போக 
வானத்திலிருந்து 
மீண்டும் வந்து விழுகிறது.
ஒரே ஒரு "ஜீவன்" என்ற சிறு துளி.


         15/05/1994 ல் எம் பி ஸ்ரீதர் ஜெயமுருகன் என்ற இயற்பெயரில் குருஜி எழுதி ஓர் உள்ளூர் கவிதை இதழில் பிரசுரமான புது கவிதை இது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *