Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாய் கடியும் மேள சத்தமும்




    யா நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என் பெயர் மணிகண்டன் எங்கள் ஊரில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது யாருக்காவது நாய் கடி பட்டுவிட்டால் அவர்கள் இறப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு செல்ல கூடாது. பிணங்களை பார்க்க கூடாது. மீறி பார்த்தால் விஷம் தலைக்கேறி இறந்து விடுவார்கள் என்பதே அந்த நம்பிக்கையாகும். இது உண்மையா? என்பதை தெரியபடுத்தவும் 

இப்படிக்கு 
மணிகண்டன் 
திருநெல்வேலி 




    நாய் கடிப்பதை பற்றி இடத்துக்கிடம் நம்பிக்கை மாறுபட்டிருக்கிறது. சில பகுதிகளில் நாய் கடி பட்டவர்களை முறத்தால் அடித்தால் குணமாகி விடுமென்று நினைக்கிறார்கள். வேறு சிலர் கடித்த நாய் சாப்பிட்ட தட்டில் கடிபட்டவர் உணவருந்தினால் சரியாகிவிடுமென்று நினைக்கிறார்கள். இவைகள் அனைத்துமே தவறான நம்பிக்கைகள் இவற்றிற்கு அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவோ எந்த ஆதாரமும் கிடையாது. 

திருநெல்வேலி பகுதியில் நாய்கடி பற்றி வேறு சில சுவையான நம்பிக்கைகள் இருக்கின்றன. திருவிழா காலங்களில் ஆலயங்களில் வாசிக்கப்படும் மேள கச்சேரியையோ திருமண மேளத்தையோ கேட்க கூடாது மீறி கேட்டால் கண்டிப்பாக பாதிப்பு உண்டு என்றும் நம்புகிறார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் கடித்த நாய் இறந்துவிட்டால் கடிபட்டவருக்கு மரணம் நிச்சயம் என்றும் நம்புகிறார்கள். இப்படி எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. அவற்றிற்கு ஆதாரம் இல்லை என்பதே எனது எண்ணம்.


Contact Form

Name

Email *

Message *