( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கல்யாணம் செய்து வைப்பாரா தந்தை...?
    ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் என் வயது முப்பதை தொடபோகிறது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன் என் தகப்பனார் குடிகாரர் உழைப்பதற்கு எண்ணமே இல்லாத ஒரு விசித்திர மனிதர் என் தாயாரின் கஷ்டத்தால் நான் படித்தேன் எனக்கு ஒரு தம்பியும் இருக்கிறான் அவனும் சென்ற வருடத்தில் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்துவிட்டான் கடினமான நோய் ஒன்றால் எனது தாயார் ஆறு மாதங்களுக்கு முன்பு காலமாகி விட்டார் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என் தாய் உயிரோடு இருக்கும் வரை எவ்வளவோ போராடிபார்த்தார் அவரால் என்னை மணக்கோலத்தில் பார்க்க முடியவில்லை அதற்கு ஒருவகையில் என் தகப்பனாரே காரணம் என்று சொல்லலாம் எதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி வருகிற வரன்களை எல்லாம் தட்டிக்கழித்து விட்டார் என் தாயார் இருக்கும் போதே எனக்கு திருமணம் செய்துவைக்க நினைக்காத தகப்பனார் இப்போது செய்து வைப்பாரா? என்று தெரியவில்லை தயவு செய்து நீங்கள் எனக்கு திருமணம் ஆகுமா? அதுவும் முறைப்படி நடக்குமா? என்பதை நன்றாக ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் .

இப்படிக்கு 
சந்திரமதி 
ஊத்துக்குளி 
   ஒரு தந்தை தனது மகளுக்கு கொடுக்கும் மிகபெரிய தண்டனை அவளுக்கு திருமண வயது வந்தபிறகும் அதற்க்கான ஏற்பாடுகளை செய்யாமல் இருப்பது தான் அப்படிப்பட்ட தந்தை நரகத்தை அடைவான் இதை நான் சொல்லவில்லை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது 

பருவம் வந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும் அவைகள் அனைத்தையும் அவளால் தாய் தகப்பனிடம் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது சில விஷயங்களை நெருங்கி பழகுகிற தோழிகளிடமே சொல்வதற்கு  கூச்சபடுவார்கள் 

பெண்களின் தன்மையை இத்தகைய மென்மையாக நமது பண்பாடு வளர்த்துவிட்டது வீட்டில் உள்ள பெரியவர்கள் தான் பெண்களின் மன இயல்புகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு அவளுக்கு செய்ய வேண்டியவைகளை நேரங்காலத்தில் செய்ய வேண்டும் 

அதிஷ்டவசமாக நமது பெற்றோர்களில் பலர் பெண்களை பெருத்தமட்டில் கடமையிலிருந்து தவறுவது இல்லை காரணம் தங்களது குடும்பத்தின் மானம் பெண்கள் கையில் இருப்பதை நன்கு அறிவார்கள் ஒருசிலர் மட்டுமே பெண்குழந்தைகளுக்கு மட்டுமல்ல மற்ற எந்த குழந்தைகளுக்கும் செய்ய கூடிய கடமைகளை செய்ய தவறி விடுகிறார்கள் அவர்களை கடவுள் மன்னிக்கட்டும் 

உங்கள் ஜாதகப்படி இப்போது திருமணத்திற்கான காலம் வந்துவிட்டது இனி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை தந்தை செய்ய கூடிய கடமையை தம்பி செய்வான் நம்பி இருங்கள் இன்னும் ஐந்து மாதத்தில் நல்லது நடக்கும்.Next Post Next Post Home
 
Back to Top