Store
  Store
  Store
  Store
  Store
  Store

கூரை ஏறாதவன் டெல்லி போறானாம்!


     மெரிக்க அதிபர் ஒபாமாவை பார்த்து பேசி ஆப்கானிஸ்தானத்திலிருந்து படைகளை விலக்கி கொள்ள சொல்ல வேண்டும். கையோடு மறக்காமல் ஈராக்கிலிருந்தும் அவர்களை கிளம்ப சொல்ல வேண்டும். 

தலைவரே நாம இருக்கிறது அரக்கோணம் ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நீங்கள் அமெரிக்காவை பேசுறீங்க 


இங்கிலாந்து பிரதமமந்திரி யாரப்பா? அந்தாளு பேரு சுத்தமா வாய்க்குள்ள நுழையமாட்டேங்கிறது அட இலங்கைக்கு வந்து யாழ்பாணம் எல்லாம் போயி கலாட்டா செய்தாரே அவருதாம்பா அவரு பேர மறந்துபோயிட்டேன் 

டேவிட் கேமரூன்

ஆமா சரியா சொன்னாய் அந்த ஆளை பார்த்து எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை சப்போர்ட் செய்யாதே உனக்கின்னு தல இருக்கு அதுல மூளை இருக்கு தனியா யோசி சுயமா முடிவெடுன்னு சொல்லணும் அமெரிக்கா ஆடும் ஆட்டத்திற்கெல்லாம் இந்த ஆளு தாளம் போடுறான்.

முதலில் நிதானத்துக்கு வாங்க தலைவரே நாம பிளாட்பாரம் டிக்கட் கூட வாங்கல...'

அட நீ ஒன்னு நேரம் காலம் தெரியாம தொன தொணன்னு பேசுற இந்த சீனாக்காரன் சப்ப மூக்கனுக்கு எம்புட்டு திமிரு இருக்கணும். நம்ம நாட்டு தலைவரு நம்ம நாட்டு மாநிலத்துக்குள்ள போனா ஏன்டா உள்ள வந்தேன்னு கேக்குறான் இவன் அநியாயமா ராவோடு ராவா திபெத்துக்குள்ள நுழைஞ்சி தலாய்லாமாவ நாட்ட விட்டே துரத்தினான அத யார் கேட்கிறது? வேறு வழியே இல்ல நான் தான் கேட்டாகணும். 

சீனாக்காரன அப்புறமா கேட்கலாம் இப்போ ரெயில்வேக்காரன் டிக்கெட் எங்கேன்னு கேட்டா...? என்ன பதில் சொல்றது? 

பங்களாதேஷ், பர்மா, நேபாளம் இந்தமாதிரி நாடுகளை எல்லாம் உடனடியா இந்திய மாநிலமா அறிவிக்கனும். பாகிஸ்தான சொந்தமா இராணுவம் வச்சிக்கிறதுக்கு தடை போட்டு நம்ம இராணுவம் தான் பாதுகாப்பு தரும்னு சொல்லணும். 

ஐயோ தலைவரே கையில் காலணா இல்லை வெளியில் போனால் டீ குடிக்க காலணா காசு கிடையாது ஏதாவது சத்திரம் சாவடியில் முடங்கி படுத்துக்கலாம்னா நம்ம மூஞ்சிய பார்த்தாலே சந்தேக கேசுல போலீஸ்காரன் பிடிச்சிட்டு போயிடுவான். நம்ம நிலைமைய நினைக்காம கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாம ப்ளெயின் ஏறி டெல்லி போறக்கதைய பேசுறீங்களே 

ரெண்டே நிமிசத்துல இலங்கைய வளைச்சி போட்டுறலாம் ஐரோப்பிய யூனியன உடச்சி இந்திய வல்லாதிக்கத்த கொண்டு வந்திரலாம் நீ ஒன்னும் கவலைப்படாத என்னை நம்பு. உன்னை எங்கேயோ கொண்டு வைக்கிறேன் பார்.

ஐயையோ தலைவரே யாருடைய தேர்தல் அறிக்கையையோ படிச்சிபுட்டு இந்தளவு மூளை குழம்பி புலம்புறீங்களே வாங்க ஆஸ்பித்திரி பக்கம் போகலாம். 

ஆஸ்பத்திரி டெல்லியில் இருந்தால் சொல்லு வருகிறேன் தமிழ்நாடு போரடிச்சி போச்சி எத்தன நாளைக்கு தான் உங்களோடைய கும்பல் கூழை கும்பிடை மட்டுமே பாக்கிறது. ஒரு மாற்றத்திற்கு வடக்கத்தியான் எப்படி கும்பிடுகிறான் என்று பார்ப்போமே....


Contact Form

Name

Email *

Message *