Store
  Store
  Store
  Store
  Store
  Store

தானம் கொடுப்பது சரியா?



    குருஜி அவர்களுக்கு வணக்கம். புகழ்பெற்ற ஆலயங்களில், சில மனிதர்கள் ஆடைகள், தாம்பூலம் மற்றும் மங்களப்பொருட்களை தானமாக வழங்குகிறார்கள். ஆலயங்களில் பிரசாதங்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை மீறி தனிப்பட்டவர்கள் தானம் வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்? அந்த தானத்தை பெறுவது சரியா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு,
ஹேமலதா,
திருச்சி.



    ன்று தானங்கள் வழங்குவது என்பதே ஆடம்பரமாகவும், அரிதாகவும் ஆகிவிட்டது.தன்னுடைய சுய செல்வாக்கை வளர்த்துக்கொள்ள தானம் வழங்குபவர்கள் தான் அதிகம். ஒருமுறை மிகவும் புகழ்பெற்ற உலக அளவிலான தொண்டுநிறுவனம் ஒன்று மணலூர்பேட்டையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணப்பொருட்கள் வழங்கும் விழாவை நடத்தினார்கள். அதில் என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா போன்ற பொருட்களை வழங்கினார்கள்.

அந்த விழாவில் கலந்துகொண்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. காரணம் விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் ஆடம்பரமாக செய்திருந்தார்கள். மாவட்டத்தின் மிக முக்கியஸ்தர்களை அழைத்தும் இருந்தார்கள். அவர்களுக்கான விருந்து உபசரிப்பு தடபுடலாக இருந்தது. ஆனால் மாணவர்களுக்கு கொடுத்த பொருட்களின் மதிப்போ மிகவும் குறைவு. அதனால் முந்நூறு ரூபாய் சேவை செய்வதற்கு மூவாயிரம் ரூபாயில் அலங்காரம் நடந்திருப்பது மிகவும் வேதனையான ஒன்று என்று அந்த மேடையிலேயே பேசினேன். அதன் பிறகு யாரும் என்னை அவர்கள் நிறுவன விழாவிற்கு அழைப்பது கிடையாது.

இப்படியான உலகில் ஆலயத்தில் தானம் வழங்குவது என்பது மிகவும் சிறப்பான செயலே என்பது என் கருத்தாகும். எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் வேஷ்டி கொடுத்தார்கள், சேலை கொடுத்தார்கள் என்று தான் மக்கள் பேசுவார்களே தவிர, ராமையா தேவரின் மகன் மூக்கையா தேவர் கொடுத்தார் என்று யாரும் மனிதர்களை குறிப்பிடப்போவதில்லை. இதைவிட விஷேசம் ஆலயத்தில் வைத்து யார் எதை கொடுத்தாலும், யார் எதை பெற்றாலும் அதன் பெயர் பிரசாதமே தவிர தானமோ, பரிசோ அல்ல. நமது சாஸ்திரங்கள் அப்படித்தான் சொல்கிறது. எனவே அதை தாராளமாக வரவேற்கலாம்.



Contact Form

Name

Email *

Message *