Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜிக்கு வாழ்த்துக்கள்....!   ஜிலாதேவி இணையதளத்தின் இனிய வாசகர்கள் அனைவருக்கும் குருஜியின் சீடர்களான எங்களின் பணிவான வணக்கம்

ஜூலை மாதம் 16  ஆம் தேதி நமது குருஜியின் பிறந்த தினம் அவர் ஆங்கில தேதியை பிறந்த தினமாக கொண்டாடுவது கிடையாது தனது ஜென்ம நட்சத்திரத்தையே பிறந்தநாளாக கருதுவார் அந்த நாள் கூட பல வருடங்கள் அவருக்கு மறந்து போய்விடும் நினைவு வந்தால் யாரவது நினைவு படுத்தினால் அருகிலுள்ள எதாவது ஒரு கோவில்க்கு செல்லுவார் அதுகூட இன்ன கோவிலென்று கிடையாது பெருமாள் கோவிலாக இருந்தாலும் ஐயனார் கோவிலாக இருந்தாலும் கூட கவலை இல்லை

நாம பிறந்தது என்ன உலகத்தின் முக்கியமான நாளா? ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஜனங்கள் பிறவி எடுக்கிறார்கள் எத்தனையோ ஜனங்கள் இறந்து போகிறார்கள் அவர்களில் நாமும் ஒருவர் உலக பரப்பளவில் நாம் ஒரு சிறிய புள்ளிகூட கிடையாது இதில் பிறந்தநாள் அது இதுவென்று கொண்டாடுவது வீணானஆடம்பர செலவு. மனிதனின் அகங்காரத்தை தான் அது வளர்க்கும் என்று பதில் கூறி விடுவார்.

அவர் அப்படி கூறினாலும் நம்மால் விட்டுவிட முடியுமா? பல ஆண்டுகளாக நாங்கள் இப்படிதான் வாழவேண்டும் என்று எங்களுக்கு நல்ல வழிகாட்டி வருகின்ற ஒரு அற்புதமான குருவின் பிறந்தநாளை சாதாரண நாள் என்று எப்படி எங்களால் ஒதுக்கிவிட முடியும் அதனால் நாங்கள் தமிழ் தேதி நட்சத்திரம் என்பதை எல்லாம் பார்க்காமல் உலகத்தில் உள்ள பெருவாரியான சாதாரண மக்கள் எந்த தேதியின் அடிப்படையில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்களோ அந்த தேதியில் கொண்டாடி வருகிறோம்

பிறந்தநாள் என்றால் கொண்டாடுபவருக்கு பரிசுகள் கொடுக்க வேண்டும் குருஜியிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்டால் எல்லாம் தான் என்னிடம் இருக்கிறதே பிறகு நான் எதை கேட்க இருப்பது போதும் புதியதாக எதையாவது வாங்கி இடத்தை நிரப்பாதே பரிசு பொருளுக்கு செலவு செய்கிற பணத்தை வெளியில் வயிற்று சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் யாருக்காவது கொடு அது உனக்கும் புண்ணியம் எனக்கும் புண்ணியம் என்று கூறிவிடுவார்

நிஜமாக குருஜிக்கு நாம் பரிசு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் சாலையில் தெரு மூலையில் பசியால் கிடக்கிற மனிதனுக்கோ விலங்குக்கோ உணவு கொடுத்தால் அதுவே அவருக்கு மகிழ்ச்சி தரும் பரிசாகும். அதை நாம் ஒவ்வொருவரும் சொந்த இடத்திலேயே நம் கையாலையே செய்தால் அவர் மிகவும் சந்தோசபடுவார்


அவரிடம் தனிப்பட்ட ரீதியில் நெருங்கி கேட்டால் எனது லட்சியம் என் வாழ்நாளின் நோக்கம் மறைந்து போன நமது ரிஷிகள் அரும்பாடுபட்டு கண்டுபிடித்த மந்திரங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் சென்றடைய வேண்டும் கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு சோதனையில் கிடக்கும் எல்லா மனிதர்களும் சங்கடத்தை விலக்கி கொள்ள தங்களுக்குள் இருக்கும் பேதா பேதங்களை அகற்றி கொள்ள இறைவனின் தரிசனத்தை நேருக்கு நேராக பெற்றுக்கொள்ள மந்திரங்களின் மகத்துவத்தை அறிந்து அதை பயன்படுத்தி தங்களது வாழ்க்கை சமூத்திரத்தை நல்லபடியாக கடக்க வேண்டும் என்று சொல்வார்

அவரது இந்த உயரிய நோக்கம் தன்னலம் சார்ந்தது அல்ல தான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்ற பொதுநோக்கு கொண்டது எனவே அவரது லட்சியத்தை முன்னெடுத்து செல்ல நம் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு கடமை உண்டு அதனால் நன்மையையும் உண்டு சோக சுமைகளை சுமந்து கொண்டு அலைபவர்களுக்கு தாகம் தணிப்பதற்கு தண்ணீர் கொடுத்தல் அதை விட பெரும்பேறு என்ன இருக்க முடியும் எனவே அவரது பிறந்த நாளில் அவர் லட்சியம் நிறைவேற நாம் அனைவரும் அவரோடு சேர்ந்து உழைப்போம் என்று உறுதி ஏற்போம்.

ஒரு நல்ல செய்தி 

   நீங்கள் குருஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து நேரில் சொல்ல விரும்புகிறீர்களா? அவர் 16/7/2015 அன்று மட்டும் இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் பத்துமணி வரை உங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு நேரில் பதில் சொல்கிறார் ஒவ்வொருவரும் ஒரு நிமிட நேரம் மட்டும் பேசலாம் அவரது லட்சியம் நிறைவேற நீங்கள் வாழ்த்தலாம் அவரது ஆசிர்வாதத்தையும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பெறலாம்
இப்படிக்கு 

என்றும் குருஜியின் பணியில் 
கே.கோவிந்தசாமி, வி.வி.சந்தானம், 
ஆர்.வெங்கட்ராமன், பி.சிவானந்தம், 
எம்.முருகன், சேலம் சீனிவாசன், 
பி.சதிஷ்குமார், பி.சந்தோஷ்குமார், 
வி.பிருந்தாதேவி, ஈஸ்டர்ராஜ்,
மன்சூர் அலி, பிரியா, ,,,


Contact Form

Name

Email *

Message *