( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாகசாலை அமைக்கலாம் வாங்க !


  திகால மக்கள், இறைவனை வழிபடுவதற்கு கோவில்களை கட்டவில்லை. இயற்கையான வழியில், இயற்கையான பொருட்களைக் கொண்டு இறை வழிபாட்டை நடத்தினார்கள். அப்படி அவர்கள் நடத்திய போது தான் இறைவனுக்கும், மனிதனுக்கும் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தி கொடுப்பது நெருப்பு. அந்த நெருப்பை வளர்த்து, யாகம் செய்து பிரார்த்தனைகளை வைத்தால், இறைவன் உடனடியாக அதை நடத்தி வைப்பான் என்பதை அனுபவப் பூர்வமாக கண்டார்கள்.

இதனால் அரசனுக்கு அரண்மனை கட்டப்பட்டதோ இல்லையோ, யாகம் வளர்க்க யாக சாலைகள் ஊர் தோறும் கட்டப்பட்டது. ரிஷிகள் வாழுகிற இடம், கல்வி கற்பிக்கிற இடம், நியாய சபைகள் அனைத்திலும் யாக குண்டம் இருப்பது, அத்தியாவசியமாக இருந்தது. ஆலயங்கள், வானுயர எழுந்தபிறகு யாகசாலைகள் ஆலயத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டிய நிலை வந்தது. ஆனாலும், ஆசிரமங்கள், ஆன்மீக நிலையங்கள் ஆகியவற்றில் பழைய மாதிரியே யாக சாலைகள் இருந்து வந்தன.

நமது குருமிஷன் அறக்கட்டளையின் வளாகத்திலும், குருஜி நித்திய பூஜைகள் செய்கின்ற தனியிடத்திலும், மிகச் சிறிய அளவு யாக குண்டங்கள் இருந்து வருகிறது. இதில் தான் இதுவரை குருஜி பல பூஜைகளை செய்து வருகிறார். பித்ரு தோஷத்தை நீக்கும் யாகங்கள் துவங்கி, விவாகத்தடை போன்ற யாகங்கள் வரை இவைகளிலேயே நடத்தப்பட்டு வந்தன. இடப் பற்றாக்குறையாலும் மற்றும் பல காரணங்களினாலும் ஒன்றிரண்டு பேர்களை தவிர மற்றவர்களை அதிகமாக அனுமதிக்க முடியாத நிலைமை இதனால் இருந்து வந்தது.

 எந்த ஒரு செயலும், பத்து பேர் கலந்து கொள்ளாமல் பெரிய அளவில் எடுத்து செல்ல முடியாது என்ற உண்மையை குருஜி விளக்கி சொன்னபோது, நமது ஆசிரமத்திலும் பெரிய யாகசாலை இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டோம். அந்த யாக சாலை, யாகங்கள் வளர்ப்பதற்காக மட்டும் இல்லாமல் மற்றும் பல தெய்வீக காரியங்களுக்கு உதவக் கூடியதாகவும், இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேளையில், தற்போது நமது ஆசிரம நிர்வாகம் இறங்கி வருகிறது.

நமது குருஜி அவர்கள், தனது தவ நாட்களில், தியான நிலையில் பெருமாளையும், சிவனையும் ஒரு சேர தரிசித்த இடத்தில் சூரிய நாராயண லிங்கம் என்ற மாபெரும் மூர்த்தியையும் அவரைச் சுற்றி ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அருளாளர்களை ஆவாகனப்படுத்தும் நூற்றி எட்டு லிங்கங்களையும், பிரதிஷ்டை செய்திருக்கும் புனித இடத்திற்கு நேர் மேற்கிலும், இப்போது பாட சாலையாக இயங்கி வரும் பிரதான கட்டிடத்திற்கு வடக்கேயும், விசாலமான யாக சாலை அமைப்பதற்கான இடம் உள்ளது. அதில், குறைந்த பட்சம் ஐந்நூறு பேர்கள், அமரக்கூடிய நூற்றி ஐம்பதடி நீள யாக சாலை அமைக்க குருஜி இசைவு தந்துள்ளார்.

ஆலயங்கள் எழுப்புவது போல, கல்விச் சாலைகள் உருவாக்குவது போல, யாக சாலைகளை உருவாக்குவதும், மிகப் பெரிய புண்ணிய காரியமாகும். லிங்கங்கள் பிரதிஷ்டை செய்வதற்கு, பல லட்ச ரூபாய் செலவானாலும், அதை மிக நெருங்கிய சீடர்கள் மட்டுமே காணிக்கைகளாக செலுத்த வேண்டும், மற்றவர்களிடம் நன்கொடை வசூலிக்க கூடாது என்று குருஜி கூறியதனால், நமது இணையதளத்தில் அதைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. ஆனால், யாக சாலை என்பது ஒரு சிலரால் மட்டுமே உருவானதாக இருக்க கூடாது. பலருடைய அர்ப்பணிப்பு, உழைப்பு அதில் இருக்க வேண்டுமென்று குருஜி விரும்புகிறார்.


இந்த யாக சாலையில் வருங்கலத்தில், பல விதமான வைதீக யாகங்களும், தாந்த்ரீக ஹோமங்களும், நடைபெறுவதோடு அமானுஷ்யமான சில வழிபாட்டு முறைகளும் நடைபெற இருக்கிறது. சாந்தி பெறாத முன்னோர்களின் ஆத்மாக்கள், சரியான கிரிகைகள் செய்யாமல் திண்டாடும் ஆத்மாக்கள் சாபம் கொடுத்து, மரித்துப் போன ஆத்மாக்கள், பசி, பட்டினி மற்றும் நிறைவேறாத ஆசைகளோடு மேலுலகம் சென்ற ஆத்மாக்கள் என்று அத்தனை விதமான ஆத்மாக்களும், சாந்தியடைய இந்த யாக சாலையில் தினசரி பூஜைகள் பல நடைபெற இருக்கிறது.

அதனால் மேற் குறிப்பிட்ட காரணங்களால், துன்புறுகின்ற மனிதர்கள் தங்களால், இயன்ற ஆதரவினை நல்கினால் அவர்களுக்கும் விடுதலை கிடைக்கும். அவர்களும் மேன்மையுற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே, இந்த யாக சாலைக்கான நன்கொடைகள் கோரப்படுகிறது. இவ்வளவு என்றில்லை. உங்களால் முடிந்த சிறிய தொகையாக இருந்தாலும் கூட, நன்கொடையாக கொடுங்கள். பணமாக கொடுக்க முடியவில்லை என்றாலும், ஒருமுறை நேரில் வந்து உங்கள் உடலுழைப்பை தாருங்கள். அப்படி செய்வதன் மூலம், உங்கள் தலைமுறையும் நற்கதியை அடையுமென்ற ஒரே காரணத்திற்காக உங்களை கரம் சேர்க்க அழைக்கிறோம்.

இந்த யாக சாலை திறம்பட அமைவதற்கு, ஏழரை லட்சரூபாய் (7.5 லட்சம்) வரை செலவாகுமென்று கணக்கிட்டு கூறுகிறார்கள். அதை அமைத்து தரும் தொழிலாளர்களும், தங்களால் இயன்ற பங்கு பணியை தருவதாக சொல்லி இருப்பதனால், இந்த குறைவான செலவில் அமைக்க முடிகிறது. நாம் அனைவரும் சேர்ந்து, இந்த யாக சாலையை உருவாக்கினால் இயற்கை சார்ந்த வழிபாட்டையும், வேதங்கள் கூறுகின்ற தர்மத்தையும், சாஸ்திரங்கள் பறை சாற்றுகின்ற சம்பிரதாயங்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அன்பை, அருளைப் பெறுகின்ற வழியையும் அடைவோம் என்பது சர்வ நிச்சயம்.

யாக சாலை அமைப்பதற்கு காணிக்கை அனுப்ப வேண்டிய வழிமுறைகள்.
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் - +91-9442426434


காணிக்கை அனுப்ப வேண்டிய வங்கி முகவரி:-

Name : Guruji
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR Branch

_______________________________________________________

வெஸ்டன் யூனியன் வழியாக  காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி:-
Guruji
4/76 c Kamaraj Road,
Arakandanallur,
Tirukoilur (TK)
Villuppuram (DT)
Tamilnadu
India

நேரில் வந்து காணிக்கை செலுத்த வேண்டிய முகவரி:-

குருஜி
ஸ்ரீ குரு மிஷன்
விழுப்புரம் சாலை
காடகனூர் அஞ்சல் 605755
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு

மேலும் விபரங்களுக்கு:-

தொலைபேசி எண் - +91-9442426434


இப்படிக்கு, 
குருஜியின் இறைபணியில்,
சதீஷ் குமார், 

+ comments + 3 comments

Yaaka salaam amaikka yennal mudiththathai anuppukiren guruji.....

om
10:43

om

Gurujiku Vanakkam...
Iyandrathai seivom iraipanikku....


Next Post Next Post Home
 
Back to Top