இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..
இறைவனுக்கான பூஜையில் உயிர்பலி தேவையா?
உங்கள் பதில் என்ன?
உங்கள் பதில்களை பின்னூட்டங்களாகவோ அல்லது மின்னஞ்சல் sriramanandaguruji@gmail.com மூலமாகவோ எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.... உங்களது பதில்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 1-1-2016 அடுத்த நாள், வேறு கேள்வியும் பரிசு பெற்றவரின் விபரமும் தெரிவிக்கப்படும்.
+ comments + 15 comments
ஐயா வணக்கம் இறைவனுக்கான பூஜையில் உயிர்பலி அவசியமில்லாதது
உயிர்பலிக்கு பதிலாக பூசணிக்காய்.எலுமிச்சைபழம்.குங்குமம்.
இவற்றை பயன்படுத்தலாம்.
இறைவனுக்கு உயிர் பலி தேவையில்லை... ஐயா
நம்மைபோல் தான் இந்த பூமியில் அதுவும் ஒரு ஜீவன்.
இது என் அறிவுக்கு எட்டியது
இறைவன் பூஜையில் உயிர் பலி தேவைகிடையது. நம்முடைய மன நிம்மதிக்காக.இறைவன் நம்மிடைய எதையும் எதிர்பார்ப்பதில்லை.
ஆம் கட்டாயம் உயிர்பலி தேவை அதாவது மனிதனிடம் தெய்வம் அசுரன் என்று இரண்டு உள்ளது அதில் அசுரன் என்பவனை பலிகொடுத்தால் நம் பூஜை பூர்த்தி ஆகும்
ஹிந்து மதம் பல்வேறு மதங்களைப் பார்க்கின்றபோது நல்ல மத சுதந்திரத்தை தந்துள்ளது. பல்வேறு சக்திகளின் வெளிப்பாடாக பல்வேறு தெய்வங்கள், தெய்வங்கள் எதிலும் இருப்பது என்பதன் வெளிப்பாடாக, சில சீரிய தன்மை உள்ள விலங்குகளும், தாவரங்களுக்கும் தெய்வத் தன்மை தரப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு மனநிலை, வாழ்க்கை நேரிமுரைக்குட்பட்டு சில வழிபாட்டுமுறைகள் வழக்கத்தில் வந்துள்ளன. அதன்படி, பூஜை செய்வது, பணிவிடை செய்வது, உடல் உழைப்பு தருவது, உடல் வருத்தி இறைவனை வணங்குவது, புனிதத்தலங்களுக்கு சென்றுவருவது, பூணித நீராதுவது இப்படி பல. அதில், சிலருக்கு தமக்கு ஏற்பட்ட துன்பங்களை பலி கொடுப்பதன் மூலம், இறைவன் என் துன்பத்தை துடைப்பான் என்று எண்ணினால் ஒரு ஆன்ம பலமும் திருப்தியும் கிடைக்குமானால், - இதனிலிருந்தும் உயரிய சிந்தனையும், மனப்பக்குவமும் ஒரு பக்தனுக்கு கிடைக்கும்வரை, இதை செய்யலாம் என்பது என் கருத்து. நான் ஒரு சுத்த சிவன் என்பது குறிப்படத்தக்கது.
இறைவனுக்கான பூஜையில் உயிர்பலி தேவை இல்லை. இறைவன் படைத்த உலகத்தில் உயிர் வாழ எல்லா ஜீவன்களுக்கும் உரிமை உண்டு.
மாறாக இறைவனிடத்தில் மனிதனின் 1.ஆணவம், 2. அகங்காரம், 3. நான் என்கிற அகந்தை, இந்த குணங்களை பலியிடுவது அவசியம்.
- கிருஷ்ணார்ப்பணம்
சத்தியராஜ்
சென்னை
மதிப்பார்ந்த குருஜி
இறைவன் பூஜைக்கு உயிர்பலி தேவையா
எனக்கேட்டிருந்தீர்கள்...
மிக சுருக்கமாக கூறுவதானால் திருக்குறளில் வரும்
ஹகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்’
என்கிற குறளை எடுத்;துக்கொள்ளலாம்
இங்கே உயிர்களைக்கொல்லாதவனை மட்டுமல்ல கொல்லப்பட்டஉடலைச் சாப்பிடாதிருப்பவனைக்கூட எல்லோரும் கையெடுத்துக்கும்பிடுவர் என்னும் நிலையிருக்கும் போது கடவுள் எங்கே தனக்காக உயிர்களைப் பலியிடும்படி கேட்டார்?;
எல்லாம் கெட்டபுத்தியுள்ள மனிதன் தன் சுய விருப்புக்காக எல்லாத்தையும் செய்து கொண்டு கடவுளில் பழியைப்போட்டுத் தான் தப்பிக்கிறான்.. அவ்வளவே..
கடவுள் எம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. உண்மையான பக்தியையும் அன்பையும் காணிக்கையாக்கினாலேபோதும்
ஆனால் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளையும் சொல்;லாலோ செயலாலோ நினைவாலோ துன்பப்படுத்தாமல் வாழ்ந்தோமானல் அதனால் அவர்திருப்தியடைவார். தன்பக்கத்தில் எம்மை அரவணைதிருப்பார். நிம்மதியான வாழ்வை அளிப்பார்..
மனிதனாகப்பிறந்தவன் பிறஉயிர்க்கு நன்மைசெய்யத்தான் முடியாவிட்டாலும் பரவாயில்லை தீமைசெய்யாதிருந்தாலே போதும்.. பேறுபெற்றவன் ஆவன்.
பணிவான வணக்கம்
திருமதி குமார்
இலண்டன்
திரு அன்புராஜ் அவர்களின் கருத்து மிக சரியானது, தெளிவாக குரான் வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ் முஸ்லிம்கள் மனதில் எழும் தீய எண்ணங்களை தவிர்க்க, மனதுஉடன் போராடுவதே ஜிகாத் ஆகும் என கதை விடுகிறார்கள். உண்மையில் அவர்கள் மத வெறிபிடித்து அலைகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காந்தி, மற்றும் நேரு எடுத்த முடிவுகள் மிக மிக தவறானவை என இன்று அனைவரும் உணர்கிறோம். அன்றே அத்தனை முஸ்லிம்களையும் பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும். தவறி விட்டனர், இதனால் இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை பாகிஸ்தானைவிட இங்கு மிக அதிகமாகிவிட்டது. மேலும் நேருவிற்கு பிறகு நாட்டை ஆண்டவர்கள் பிரிட்டிஷ் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து இண்டுக்களிஇடம் ஜாதி பிரிவினை ஏற்படுத்தி நேரு குடும்பம் தொடர்ந்து பதவி சுகத்தில் இருக்க முஸ்லிம் சிருபன்மெய் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் நடத்தி நம்பவைத்து, ஆண்மை இன்றி அரசியல் செய்ததன் விளைவே இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்புகள்,தீவிரவாத செயல்கள் அரங்கேறி வருகின்றன, முஸ்லிம் ஓட்டுக்காக பாகிஸ்தானை அடக்கி வைக்க தவறிவிட்டனர். இதன் விளைவாக பாகிஸ்தான் ஜிகாத் அணுகுண்டு மற்றும் ஏவுகணைகள் தயார் செய்ய விட்டுவிட்டனர், விரைவில் ஐ எஸ் ஐ, அல்கொய்தா, தலிபான்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் வசம் பாகிஸ்தானின் அணுகுண்டு மற்றும் ஏவுகணைகள் சென்று விடும் அபாயம் உள்ளது, அவை அத்தனை நம்நாட்டின் மீது செலுத்தி நம்நாட்டை அடியோடு அழிக்க போகிறார்கள். இந்த அபாயத்தை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், ஜாதி அரசியல் கட்சிகள் போன்றவை இன்னமும் உணராமல் இந்து வெறுப்பு அரசியல் செய்து கொண்டு இருகிறார்கள். நரேந்திர மோடி அவர்கள் மீது வீண் பழிகளை சுமத்தி கொண்டு அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனை துரர்ஷ்டவசமாக நம்நாட்டின் பல இந்துக்களும் ஒன்றுசேராமல் அவர்களின் போலி மத சார்பின்மை கொள்கைகளில் நம்பிக்கை வைத்து உள்ளார்கள். என்று இந்த முட்டாள், மட மக்கள் உண்மையை, வரகூடிய பேராபதெய் உணருவார்கள் என்று தெரியவில்லை. ஆண்டவன் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.thiru anburaj
கோவில்களில் உயிர்பலி கூடவே கூடாது. இதற்காகத்தான் சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று வள்ளற்பெருமான் கூறினார். உயிர்பலி நடக்கும் கோவில்களில் சென்று அதனை தடுக்கவும் செய்தார் வள்ளலார். எனவே கோவில்களில் பலி இடுதலை தடுக்கும் சட்டத்தை அரசு மீண்டும் கொண்டுவர வேண்டும்.
தி.ம.இராமலிங்கம்
கடலூர்
உயிர்பலி தேவையில்லை.
மேலே கூறப்பட்டுள்ளது போல, சரணாகதியும்,தன்னிடத்தும் பிறவுயிர்களிடத்தும் அன்புமே அவசியம்.
பூஜை என்பதே ஒரு சடங்கு அதுவே அவ்சியமில்லை என்றும் சில அருளாளர்கள் கூறியுள்ளனர். அப்படியிருக்கையில் அதில் இன்னுமோர் சடங்காக உயிர்ப் பலி தேவையில்லை.
மேலே திரு. சத்தியராஜ் சொல்லியுள்ளபடி, ஒரு குறியீடாக, நமது தீக்குணங்களை பலியிடலாம்.
@Ragu Nathan
நம்மில் உள்ள அசுரனை பலி கொடுப்பதற்கு பதிலாக, ஒர் ஐந்தறிவுள்ள உயிரைப் பலியிடலாமா? அது சரியெனில், அதே வழியில், தேவர்கள் மனிதர்களைப் பலியிட்டால் அது நியாயமாகுமா?
உயிர்பலி இறைவனுக்கான பூஜையில்தேவையில்லை
uyir bali thevai ellai god has given life so we should not take anybodys life we have no right to do
சுவாமி,
தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
நான் விவேகானந்தன், தங்களிடம் முன்பே அறிமுகம் ஆகியவன்.
குவைத்தில் இருந்து எழுதுகிறேன்.
நான் நடுத்தர சாதி,குடும்பத்தில் இருந்து வந்தவன்.
ஆறுமுகம்,வீரபாகு,குழந்தைவேல்,
சண்முகையா,இரத்தினசாமி என ஐந்து தலைமுறை வரலாறு தெரிந்து வாழ்பவன்.
மரணப்படுக்கையில் இருந்த போது கூட பொங்கல் கழிந்த பின்பு அடுத்த நாள் ஆட்டுக்கறி சமைக்காததால் கடுமையாக கோபித்தார் என் அய்யப்பா.
கடுமையான அசைவ உணவு விரும்பி. என் தந்தை கூட அப்படியே.
ஆனால் என் மனைவியின் அய்யப்பா
குலதெய்வம் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்தார்.
கூடவே வைத்து குழந்தை மாதிரி இழை,தளை கொடுத்து வளர்த்தார் .
திருவிழா அன்று பலிகொடுக்க வெட்டும் போது திரும்பி இவரைப்பார்த்து மேமே என்று கனைத்தது. மனது வெம்பி கண்ணீர் விட்டு திரும்பி பார்க்காமல் கோவிலை விட்டு வந்து விட்டார்.
அன்று முதல் சாகும் வரை சைவ உணவு மட்டுமே உண்டு வாழ்ந்து மறைந்தார்.
இவர்களின் வழி வந்த எனது கருத்து "எந்த வகையான உயிர் வதையும் எதற்காகவும் கூடாது" என்பதே.
ஆனால் சாமானிய மக்களின் சந்தோசமே ஊர் திருவிழாக்களும்,
குலதெய்வ வழிபாடு மற்றும் கொடைகளுமே.
அவற்றில் தமது வீட்டு வழக்கங்கள், உணவு முறைப்படி உறவு கூடி உண்டு களித்து மகிழ்வர்.
முற்காலத்தில் திருவிழா காலத்திலும்,ஆடி,தீவாளிக்கு மட்டுமே அசைவ உணவு உண்டனர்.
ஆதலால் அந்த வழக்கமாக கோயில்களில் பலி என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே.
ஆதலால் மக்களின் வழக்கத்தை பழிக்கவேண்டியது இல்லை.
அவரவர் மனசாட்சி சொல்லட்டும்,தள்ளட்டும்.
எனது கருத்து உயிர் வதை கூடாது, எங்குமே..முக்கியமாக வழிபாட்டுத் தளங்களில்.
வணக்கங்களுடன்,
விவேகானந்தன்.இர
குவைத்.
நம் மனதில் இருக்கும் காமம்,ஆசை,குரோதம்,லோபம்,பேராசை,வஞ்சகம்,பொறாமை போன்ற கெட்ட குணங்களைப் பலியிடுவதன் தாற்பரியமே.நம்முள் ஒழிந்து இருக்கும் தீய குணங்களைப் இறைவனுக்கான பூஜையில் பலியிட வேண்டும் என்பது மிகவும் அவசியம்.