( குருஜியை நேரில் சந்திப்பதற்கு...!! click here --- குருஜியிடம் பேசுவதற்கு...!! click here --- )



அப்பா நன்றாக யோசியுங்கள்


அன்புள்ள அப்பாவுக்கு
நீங்கள்
தலைக்குமேல்
தூக்கிக் கொஞ்சும் போது
உங்கள்
நெஞ்சில் மிதித்த பிஞ்சு மகன் எழுதுவது


உங்களுக்கு நினைவிருக்கிறதா
கிணற்றின்
ஆழத்தைக் கண்டு
நான் பயந்தபோது
வயிற்றிற்குள் கைகளை கொடுத்து
நீந்த  கற்றுக் கொடுத்தீர்கள்


அன்று முதல் இன்றுவரை நீந்துகிறேன்
கறை இன்னும் தெரியவில்லை
களைத்து தலை சாய்க்க
ஓரு தோளும் எனக்கில்லை


சட்டையில் போட்ட பூக்கள்
நன்றாக இல்லையென
அழுதேன்
என் கண்ணீரின்
அளவை விட
அதற்காக நீங்கள் சிந்திய
வியர்வையின் அளவு அதிகம்
என்பது அப்போது தெரியாது


இங்கிலீஷ்  மீடியத்தில்
சேர்த்திருந்தால்
அதிக மார்க் வங்கியிருப்பேன்
என ஆலட்டிக் கொண்டேன்


அந்த மீடியங்களின்
வாசலைக் கூட
தொட முடியாத
உங்கள் வருமானம்
என்னை
கல்லூரி வரை கரை
சேர்த்த அதிசயத்தை அறியேன்


ஆசை முளைத்து
ஆசை துள்ளிய போதும்
மொட்டைச் சுவர் ஓரமாய்
கட்டுப் பீடி பிடித்த போதும்
உங்கள் முறைத்த கண்களே
எனக்கு காவல் ஆனது


சீட்டாட்டம்
ஆடிய நண்பர்களோடு
பிடிபட்டு
காவல் நிலையச் சுவரோரம்
முட்டுக்கட்டி
உட்கார்ந்த போது
உங்கள் முரட்டுப் பாசத்தின்
அர்த்தம் புரிந்தது


அழுக்காடையில் இருந்த போதும்
ஆழமானது
உங்கள் செல்வாக்கு என்பது தெரிந்தது


என்வேலை உங்கள் சுமையை
குறைக்கும் என்று
கால்காசுக்கும்
உதவாத மனிதர்களிடத்தில்
கால் கடுக்க காத்திருந்தீர்கள்


பெட்டியுடன் கிளம்பும் போது
வழியனுப்பிய
உங்கள் கண்களில்
ஆயிரம்
கனவுகள் அணிவகுத்ததைப் பார்த்தேன்


அதில் அடமானப் பட்ட வயலையும்
தங்கையின் திருமணத்தையும் தான்
பார்த்திருப்பீர்கள் என்பது தெரியும்
அப்பா!
அக்கா கல்யாணக்
கடனை மறக்காமல் நினைத்திருப்பீர்கள்


பாப்பா
கல்யாணத்தயும்
எப்படியோ நடத்தியாச்சி
நல்ல பெண்
அமைந்ததால்
உனக்கும் நல்லது பண்ணியாச்சி


வெள்ளத்தில்
பயிர் மூழ்குவதைப் போல்
வட்டியில்
நிலம் மூழ்குவதாக
கடிதம் போட்டிருந்தீர்கள்


அம்மாவுக்கு
அடுத்ததாய் சோறு போட்டதல்லவா
வயல்
உங்கள் வியர்வையின்
வெளிப்பாடு அல்லவா அது
நமக்கு பின்னும்
உங்களின் பேரனின்
மகனுக்கன்றோ அது சொந்தம்


அதை
மீட்காமல்
வாழ்வது ஓரு வாழ்வா


உங்கள் மருமகளிடம்
பதமாகச் சொன்னேன்
கழுத்தை சாய்த்து
கன்னத்தில் கையூன்றி
கவனமாய் கேட்டாள்


நீங்கள்
எனக்கு முடித்து வைத்தப்
பெண்ணல்லவா அவள்
நல்ல அறிவாளி
நாளைக்கு நடப்பதை
இன்றே கணக்கிடும் தீர்க்கதரிசி


மாமாவின்
உழைப்பை மதிக்காமல்
விட்டுவிடலாகாது
காப்பாற்றியே ஆக வேண்டும்
ஆனால்
இப்போது கையில் காசு இல்லையே
என்ன செய்வது


அன்றியும்
கிராமத்தில் கிடக்கும்
நிலத்திற்கு வருங்காலத்தில்
என்ன மதிப்பிருக்கும்


நமது
குழந்தைகள் நன்றாக
படிக்க வேண்டும்
நாலுபேரோடு
சேர்ந்து நாகரீகம் பழகவேண்டும்


வேலை வாய்ப்பெல்லாம்
கிராமத்தில் ஏது
அதனால்
நல்ல விலைக்கு
இப்போதே விற்றால்
இங்கொரு
வீடுவாங்கலாமே என்கிறாள்


நாலும் தெரிந்தவர் நீங்கள்
அவள் கூற்றில் உள்ள
நியாயம் தெரியாதா உங்களுக்கு


நீங்கள் பட்டத் துயரை
நாங்கள் பட
அனுமதிப்பீர்களா


வண்டி மாட்டிற்கு
சுகவீனம் என்றாலே
தூங்காத நீங்கள்
பேரக்குழந்தையின் நலத்திற்கா விரோதி
அப்பா!
நன்றாக யோசியுங்கள்...



  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

  •  

                                                         


    ---

    Print Friendly and PDF

    <---------------------------------------------------------->



    + comments + 8 comments

    Blogger ILA(@)இளா

    எனது பதிவினை தேர்வு செய்து பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
    கடவுள் உங்களுக்கு நல்லது செய்யட்டும்

    Lawrence
    17:43

    நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்த கவிதையை படித்து இந்த கல் அழுதது, என்னுடைய சிறிய வயதில், என்னுடைய அப்பாவை எப்படி எல்லாம் கஷ்டப்படுதினேன் என்று நினைத்து.இந்த கவிதையை பிரசுரித்தமைக்காக நன்றி.

    VERY NICE GURU

    Naan seida thavarai unargiren.
    Manathirkul azhugiren.
    Manadai neruda vaithuvitteergal Guruji.

    vaarthikal illai mounam than bathil...

    Post a Comment