Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜியின் வாழ்வின் சில துளிகள்



பெயர்: யோகி ஸ்ரீ இராமானந்த குரு               தந்தையார் வைத்த பெயர் லோகிதாசன் இது அவர்களின் குலதேவதையின் பெயராகும் ஆயினும் தாய் வழி பாட்டி ஸ்ரீதரன் என்று அழைத்ததனால் அப்பெயரே சில காலம் நீடித்தது பிறகு சிகிச்சை அளித்த மருத்துவர் தன்மருந்தை விட முருகனின் அருளே இவரை காப்பாற்றியதாக கருதி முருகன்       என பெயர் சூட்டினார் அந்த நாள் தொடங்கி சன்னியாசம் பெறுகின்ற நாள் வரை எம் பி ஸ்ரீதர் ஜெயமுருகன் என்றே அழைக்கப்பட்டார்



பிறந்த தேதி :       1960-07-16




பெ ற்றோர் :        பாலு-அரிச்சந்திரக்கனி


தாக்கிய நோய்கள் :         ஒரு வயதிற்கு மேல் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் உள்ள உறுப்புக்கள் செயலிழந்து விட்டன


கல்வித் தகுதி  :        ஏறக்குறைய 20 ஆண்டுகள் மருத்துவமனையிலேயே வாழ்க்கை கழிந்தாலும் அவ்வப்போது  வீடு திரும்பும் போது 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கடின முயற்சியில் படிக்க முடிந்தது


படித்த  பள்ளிகள்  : 
       TDTA  நடுநிலைப் பள்ளி மற்றும் RC துவக்கப் பள்ளி


மனங்கவர்ந்த ஆசியர்கள்   :       திருமதி தேவநேசம் தங்கையா திருமதி சௌந்திரம்  அம்மாள் திரு ஜான்சன்


மறக்க முடியாத பள்ளித் தோழர்கள் :         காசிமுருகன், பூமியளந்த பெருமாள்,கோபால், செந்தூர் பாண்டியன், கிருஷ்ணவேல், ஜேம்ஸ்,சின்ன ஜமின்தார், அப்துல்ரஹ்மான், கேபிகே ராஜன், கிருஷ்டோபர், ஜெயசிங், க்ளோரிசாந்தினி,காமிலாபேகம்,மரகதம்,அன்னக்கிளி,முத்துக்குமார்,ஜெயக்குமார் மற்றும் கினேதா

                                               குழந்தை  பருவத்தில் யோகி ஸ்ரீ ராமானந்த குரு 



இலக்கிய நாட்டம்  :        மருத்துவமனையில் வலி மறப்பதற்காக தந்தை மற்றும் தமக்கையாரால் சொல்லப்பட்ட இராமாயணம் மற்றும் மஹாபாரதக் கதைகளால் சுயக்கற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டது


முதல் படைப்பு    :      கதை எழுதும் ஆர்வத்தில் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியின் மாணவர் மன்றம் ஏற்பாடு செய்த கலை விழாவில் கொள்ளைக்காரன் என்ற நாடகத்தை காலையில் எழுதி மாலையில் அரங்கேற்றியது


இலக்கிய அனுபவ வளர்ச்சி  :        கலையார்வ முடைய நண்பர்களான சேகர் ஜெயக்குமார் ஜெயராமன் ஆகியோரின் கூட்டுறவால் அமுதா ஒரு காவியக் கன்னி ,இராவணனின் மறுபக்கம்  சிலம்பரசி , பாஞ்சாலி சபதம் போன்ற மேடை நாடகங்களை எழுதி ஊர் பொது மேடைகளில் அரங்கேற்றினார் 1977 ல் ராணி வார இதழில் தூக்குகயிறு என்ற சிறுகதையும் மயக்கம் என்ற கவிதையும் பிரசுரரமாகி ஆர்வத்திற்கு துண்டுதல் செய்தன



ஆன்மீக அனுபவம்   :    1979 ஆம் வருடம் ஊமையன் என்ற சித்த புருஷன் உடலின் ஆதாரச் சக்கரங்களைத் தொட்டு விழிப்படைய செய்தார் அப்போதைய சூழலில் அதன் அர்த்தம் விளங்கா விட்டாலும் ஒருவித பரவச நிலையை உணர்ந்தார்


இடப் பெயர்ச்சி :    பிறந்த மண்ணை விட்டு தகப்பனார் வியாபாரம் செய்த விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூருக்கு 1980 ல் வந்தார் அதன் பின்னர் தான் சமூதாயத்தின் பல முகத்தையும் வாழ்வில் பல அனுபவங்களையும் காண பெற்றார் செல்வத்தால் ஏற்படும் அகங்காரமும் வறுமையால் உண்டாகும் தளர்ச்சியும் சமூகத்தில் ஊறிக்கிடக்கும் அறியாமையும் மூடத் தனமும் முதல் முறையாக இவர் காண நேரிட்ட போது அளவிட முடியாத அதிர்ச்சிக்கு உள்ளானார் இதுவரை தான் கொண்டிருந்த சமூக மதிப்பீடுகள் தவறானவைகள் என முடிவு செய்தார்.


                                       தாயார் மற்றும் சகோதரிகளுடன்  யோகி ஸ்ரீ ராமானந்த குரு  


 நாத்திக சிந்தனை :    அடிமைத் தனமும் மூட மதியும் வறுமையும் மக்களிடம் மலிந்து கிடப்பதற்கு மத நம்பிக்கைகளே மூலக்காரணம் என அவருக்கு தோன்றியது அந்தச் சூழலில் அவர் படித்த காரல்மார்க்ஸ், லெனின், மாவோ நூல்களும் அந்த சிந்தனைக்கு வலுசேர்த்தது


அரசியல் பிரவேசம்:   1980 களில் உருவான பொதுவுடமைச் சிந்தனை அவரை தீவிர அரசியல் செயல் பாட்டிற்கு இழுத்தது கம்யுனிஸ்ட் இயக்கங்களின் போராட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்காற்றினார் சிறிது காலத்தில் அந்த இயக்கங்களுக்கு உள்ளே நிலவும் அதிகார போட்டியும் வசூல் வேட்டையும் மனச் சங்கடத்தை ஏற்படுத்தியது இதனால் அவற்றின் மீதுள்ள ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு  அதி தீவிர போராட்டக் குழுக்களோடு உறவை நெருக்கமாக்கினார்.



சித்தாந்த மாற்றம்:     ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொன்ட போராளிகள் முதலாளிகளின் கைக்கூலியாக செயல்படுவதை உடனடியாகவே புரிந்துக் கொண்டார் இத்தகைய அனுபவங்கள் பலவற்றை உடனுக்குடன் சந்தித்ததனால் பொதுவுடமை  சித்தாந்தம் பேசுவதற்கு சிறந்ததே தவி நடைமுறை வாழ்விற்கு உகந்தது அல்ல என்ற தெளிவிற்கு வந்தார் இந்த நிலையில் தகப்பனாரின் அறிவுரை நண்பர்களின் வேண்டுகோள் எல்லாம் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் பால் ஈர்த்தது அக்கட்சியில் சேவா தளப் பிரிவில் இனைந்து சில காலம் பணியாற்றினார் இருப்பினும் அங்கிருந்த பதவிச் சண்டைகள் அவருக்கு பிடிக்கவில்லை எனவே அரசியலில் கவனம் செலுத்துவது வீண் கால விரயம் என்ற முடிவிற்கு வந்தார்


இலக்கணப் பயிற்சி:       அரசியல் ஈடுபாடு குறைந்ததனால் இலக்கிய ஆர்வம் அதிகரித்தது முறைப் படியிலான மொழிப் பயிற்சி இருந்தால் மட்டுமே இலக்கியங்களில் உள்ள நுட்பத்தை புந்து கொள்ளவும் பங்காற்றவும் முடியும் என தீர்மானித்து புலவர்  சு . கண்ணன் என்ற கவிஞர் பெண்ணைவளவன்  அவர்களிடம் தமிழ் இலக்கனம் கற்றார். அதே வேளையில் நண்பர் வேலு நாயக்கரிடம் ஆங்கிலமும், அரங்கநாதன் அவர்களிடம் சமஸ்கிருதமும் கற்றார்


வியாபார ஈடுபாடு:  தந்தையார் நடத்தி வந்த பல்பொருள் அங்காடியை முழுமையாக கவனித்தார் அதே நேரம் நண்பர் மஹேந்திர குமார் ஜெயினோடு இனைந்து  தங்க வியாபரத்திலும் ஈடுபட்டார்



தற்கொலை முயற்சி:          1980 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை அரசியல் இலக்கியம் வியாபாரம் என உற்சாகமாக சென்று கொண்டிருந்த யோகி ஸ்ரீராமானந்த குருவின் வாழ்கையில் 1987 மே மாதம் முதல் சூறாவளி அடிக்க ஆரம்பித்தது அதே ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியில் பல தூக்க மாத்திரைகளை உட்கொண்டார் டாக்டர் புருஷோத்தமன் அவர்களின் மிகத் தீவிர சிகிச்சையால் காப்பாற்ற பட்டார்


சன்னியாசசங்கல்பம்:          தற்கொலை முயற்சி தோல்வி அடைந்த அவமானமும் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேடுமோ என்ற அச்சமும் பிரமாண்டமாய் அச்சுறுத்த சில நாட்கள் தனக்குள்ளேயே முடங்கி போனார் ஆனால் அவருக்கே உரிய போராட்ட குணம் பீறீட்டு எழ தன் வாழ்நாளை இறைவனுக்கும் மக்களுக்கும் அர்ப்பணிக்க உறுதி பூண்டு அந்திலி லஷ்மி நரஸிம்மர் முன்பாக ஸங்கல்ப்பம்1987 ஆகஸ்ட்டு 24 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்


ஆன்மீகபயிற்சிகள்:     கோதண்டபாணிபுரம் சிதம்பரம் பிள்ளையிடம் யோகாப்பியாசத்தின் சில நுனுக்கங்களும்; மதுரை விஜயரங்கராகவனிடம் முறைப்படியான தியானமும் கற்றுக்கொள்ள துவங்கினார் ஆயினும் அவருக்குள் எரிந்து கொண்டிருந்த ஆர்வ நெருப்பிற்கு இவர்களால் தீனி கொடுக்க முடியவில்லை இப்பயிற்சிகளில் தன்னிறைவு பெற தக்க குருவை தேடிக்கொன்டிருந்த போது அரகண்டநல்லூர் பச்சையம்மன் ஆலயத்தில் எதேச்சையாக சந்தித்த பெயர் சொல்ல விரும்பாத சித்தர் ஒருவர் குண்டலினி பயிற்சியை முறைப்படி குருஜி  உடல் நிலைக்கேற்றவாறு சொல்லிக்கொடுத்தார் 1988 ஜனவரி 24 முதல் தீவி பிரமச்சர்ய விரதத்தை மேற்கொண்டு 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி நள்ளிரவு 1-30 மணிக்கு குண்டலினி சிகரத்தை தொட்டார்


சாஸ்திர பயிற்சிகள்:     கோதண்டபாணிபுரம் சிதம்பரம் பிள்ளை; கடகால் துரைசாமி கவுண்டர் ; அரகண்டநல்லூர் பட்டுசாமி ஐயர் ஆகியோரிடம் ஜோதிடமும் ரேணுகொண்டா ராஜேந்திரன் ராஜூ; திருவனந்தபுரம் கிருஷ்ணமேனன் போன்றோரிடம் மந்திர சாஸ்திரமும் கீழையூர் பேபி (எ) மாதவனிடம் அதர்வண வேத பிரோயோகமும் கற்றார் இது தவி  சித்தர்கள், யோகிகள், மஹான்கள் பலரும்  இவரைத் தேடி வந்து ஞான மார்க்கத்தின் ரகஸிய வழிகள் பலவற்றை கற்பித்தனர்.


அமானுஷ்ய அனுபவங்கள்:     மந்திர யந்திர தேவதைகளின் தீவி உபாசனையால் சூட்சம சக்திகளின் நேரடி தரிசனங்களும் தொடர்பும் ஏற்பட்டது இதனால் பரகாய பிரவேசம் ஆஹாஷ சஞ்சாரம் ஐம்பூதக் கட்டுக்கள் போன்ற அரியக் கலைகளில் தேர்ச்சியும் நல்ல அனுபவமும் ஏற்பட்டது


வேறு அனுபவங்கள்:    நரிக்குறவர் ரங்காவிடம் வேட்டையாடுதல் காட்டு விலங்குகளின் இயல்புகள் பற்றியும் அரவாணி விமலாவிடம் அவர்களின் உணர்வுகள் வாழ்கை முறைகள் பற்றியும் பாலியல் தொழிலாளி ராஜேஸ்வரியிடம் விபச்சாரிகளின் நிலைப் பற்றியும் பிச்சைக்காரர் குப்புசாமியிடம் அவர்களின் மறுபக்கத்தையும் சிறைக்கைதி ரமேஸிடம் சிறை அனுபவங்களையும் தேச சஞ்சாரி வேதாந்தபுரியிடம் பல்வேறுபட்ட மக்களைப் பற்றியும் இரண்டு பாக்கிஸ்தான் யுத்தங்களில் போர் முனையில் பணிபுந்த ராணுவ அதிகாரி ராபர்ட் வின்சென்ட் அவர்களிடம் நவீன யுத்த தந்திரங்கள் பற்றியும் லாரி ஓட்டுனர் ஆரோக்கியசாமியிடம் நெடுஞ்சாலை ஓர வாழ்கை முறைகளையும் முழுமையாகத் தெரிந்துக் கொண்டார் மேலும் சமுதாயத்தில் மறைமுகமாகவும் நேரிடையாகவும் உள்ள பல்வேறு தரப்பட்ட விஷயங்களையும் அந்தந்த மனிதர்கள் மூலமாகவும் நேரிடை அனுபவமாகவும் தெரிந்துக்கொண்டார்



முதல் ஆன்மீக சொற்பொழிவு:திருவண்ணாமலை அருணகிரிநாதர் விழாவில் 15-08-1994 ல்இந்து சமயம் கூறும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பில் உரையாற்றி பேராசிரியர்கள் சோ.சத்தியசீலன், அறிவொளி, ருக்மணிதேவி, பாடகர் பித்துக்குளி முருகதாஸ் டி.எம். சௌந்திரராஜன் உட்பட பலரின் பாராட்டை பெற்றார்


முதல் சன்மானம்:        கரிசல் நிலத்தில் கண்ணன் கீதம் என்ற கவிதையை பிரசுரம் செய்து 150 ரூபாய் சன்மானமும் சிறப்பு தரிசன அனுமதியும் கொடுத்தது திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியீடான ஸப்தகிரி மாத இதழ்.


முதல்    பரிசு:     சுமார்10 வயதில்திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களிடமிருந்து பரிசு பெற்றார்.


அறக்கட்டளை உதயம்: சமூக, சமய அறப்பணிகளுக்காக விவேகானந்தா சேவா சமிதி என்ற அறக்கட்டளை என்.சுப்பிரமணியன், வி.வி.சந்தானம், கே.ஆர்.பாபு, ஆர்.சக்திவேல், ஆர்.லக்ஷ்மிநாராயணன், கே.ஹரிஹரசங்கரன், எஸ்.செல்வபெருமாள், பி.நிர்மல்குமார், எஸ்.ராஜ்குமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகிய நண்பர்களை உறுப்பினர்களாக கொண்டு 1995 ஆம் வருஷம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமங்கள விநாயகர் ஆயத்தில் துவக்கப்பட்டது

                                                              ஆலயத்தில் அறிமுக உரை


 சேவைகள்:     ஆலயங்கள் பலவற்றில் உழவாரப் பணிகள், பல நூறு பேர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடிகள் வழங்கியது, ஊன முற்றோர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் தொழில் உபகரணங்கள் உட்பட பல உதவிகள் வழங்கியது, விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு சுயதொழில் ஏற்பாடு செய்தது, ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தியது, கிராமங்கள் பலவற்றில் இலவச மாலைநேர வகுப்புக்கள் ஏற்படுத்தியது, தொழுநோய், யானைக்கால் நோய்களுக்கான தடுப்புமுகாம்கள், பொது மருத்துவ முகாம்கள்  புராண இதிஹாசங்கள் கீதை வகுப்புகள்; மாணவ மாணவிகளுக்கு சுயத்திறன் வளர்க்கும் பயிற்சிகள், தியான வகுப்புகள் என பல்வேறு வகையான தொண்டுகள்....


மறக்க முடியாத மனிதர்கள்:    திருவனந்தபுரம் மருத்துவ மனையில் தன்னோடு சிகிச்சை பெற்று அளவிட முடியாத பாசத்தைக் காட்டி மரணத்தின் கோர சித்திரத்தை மனதில் நிரந்திரமாய் தீட்டி 8 வயதில் இறந்து போன சிறுமி ஊர்மிளா, மருத்துவ மனை வாழ்வில் கண்டிப்போடு பராமரித்த செவிலித்தாய் அபர்ணா நாயர் அறிவிலும் வாழ்கைப் போராட்டத்திலும் எதிர்நீச்சல் செய்யும் மனோ வேகத்தை ஊட்டிய நண்பர் வேலு நாயக்கர் தனது ஆயுர்வேத திறமையால் இளம்பிள்ளை வாத நோயிலிருந்து இவரை மீட்டெடுத்தே தீருவேன் என போராடி விதியின் முன்னால் தோற்றுப் போன பால கிருஷ்ண பணிக்கர் இவன் விருப்பத்திற்கு எப்போதும் தடை போடாத தந்தை பாலு சோதனை மிகுந்த காலங்களில் பக்க பலமாய் நின்ற எம்.எஸ்.கே.அக்பர். திறமைக்கு முதலிடம் வேண்டும் என பல வாய்ப்புக்களை கொடுத்த திருவண்ணாமலை வி.தனுசு


துறவுபூனுதல்:      1997 ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் காலை 6-15 மணிக்கு               மஹாஅவதார் ஸ்ரீமத் ருத்ரபரமஹம்ஸரிடம் சன்னியாச தீட்ஷை பெற்றார்


ஆஸ்ரமம் உதயம்:     1999 ஆம் வருஷம் மார்ச் மாதம் மஹாஸ்ரீ இராமானந்த குரு மடத்திற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி 2000 மாவது ஆண்டில் நிறைவு பெற்றது


                                                அயல் நாட்டு சீடர்களுடன்  யோகி ஸ்ரீ ராமானந்த குரு  



ஆஸ்ரமப்  பணிகள்:  பரிபூரண அவதாரமான பஹவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நித்திய பூஜைகள், தனிமனித நலனுக்காகவும் சமுக ஷேமத்திற்காகவு யாகங்கள், ஹோமங்கள் நடத்துதல், மந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் மனிதர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் சித்தா-ஆயுர்வேதா மருத்துவ ஆராய்ச்சி மற்றும் முழுநேர இலவச மருத்துவ சேவை, மறைபொருளாகிப் போன சாஸ்திரங்கள், அருங்கலைகள் போன்றவற்றை வெளியிட ஆய்வு, ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சி, இயற்கை வேளான்மை, கல்விப் பணி அரசியல் விழிப்புணர் பணி, மத நல்லிணக்கம் மற்றும் பல சமுகப்பணிகள்


சீடர்கள்:    தலைமைச் சீடர்களாக பொறியாளர் கே.கோவிந்தசாமி, டாக்டர் வி.வி,சந்தானம்

                                                          எழுதிய நூல்கள்



                                1 உள்ளங்கையில் சிகரம்
                                2  இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில்
                                 3   யார் ஞானி
                                 4 ஜோதிடப் பகாரங்கள்
                                 5 பிள்ளைகளை வழி நடத்தி செல்வோம்
.

எழுத்துலகில் திருப்புமுனை சீடர் ஆர். வெங்கட்டரமணன் மற்றும் சேலம் சீனிவாசனின் பெரும் முற்சியால் சி.எம்.ரத்தினசாமி அவர்கள் ஆசிரியராக இருந்த தெய்வீக ஆவிகள் அமானுஷ்ய மாத இதழில் இன்னொரு உலகம் என்ற தொடர் எழுதி அமெரிக்கா முதல் இலங்கை வரை பல வாசகர்களை பெற்றுதந்தது.


பத்திரிக்கைப் பணி:     தியான பூமி ஆன்மீக மாத இதழில் கௌரவ ஆசிரியர்
ஓம் பேசும் ஆவிகள், நலம்வள பேசும் ஆவிகள் போன்ற அமானுஷ்ய மாத இதழ்களின் ஆசிரியர் இலங்கை வீர கேசரி நாளிதழின் ஜோதிட கேசரியில் தலைமை ஜோதிட ஆலோசகர் பணி


                                                                  விஜய்  டிவி யில் நேர் காணல்



தொலைக்காட்சி பங்களிப்பு:       விஜய் டிவியில் கேள்விகள் 1000 நிகழ்சியில் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்பு, மக்கள் டிவியில் உரிமைக்குரல் நிகழ்சியில் சிறப்பு விருந்தினர், வஸந்த் டிவியில் மெய்யா பொய்யா நிகழ்சியில் பலமுறை பங்கேற்பு, கலைஞர் டிவி யில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார்.


தனித் தகுதிகள்:     மந்திரசாஸ்திரத்தில் பூரண தேர்ச்சி, ஜோதிடம்,வாஸ்து போன்ற துறைகளில் பூரண ஞானம் தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல் வரலாற்றுத் தெளிவு நவீன கலை இலக்கிய ஞானம் சுற்றுச்சூழல் ஆர்வம் கிராமப்புர மக்களின் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்து அவர்களின் நிஜமான எதிர்பார்ப்புக்களை நிவர்தித்தல் குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் மனச்சிக்கல்களை மனோ தத்துவ ரீதியில் அனுகி நீக்குதல் ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாற்றுதல்

                                                  ஆளுனரிடம் சாதனையாளர் விருது 

பெற்ற விருதுகள்:      அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலைமாமணி விக்ரமன் முன்னிலையில் புதியப்  பார்வை ஆசியர் டாக்டர் மா. நடராஜன் அவர்களிடமிருந்து பாரதி பணிச்செல்வர் விருது, சிங்கப்பூரைச் சேர்ந்த அசன்டாஸ் நிறுவனம் சார்பில் தமிழக ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடமிருந்து வாழுங்கலை சாதனையாளர் விருது, அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் சென்னை மாநகர மேயர் மா.பாலசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து ஆன்மீக சேவா ரத்தினா விருது, தமிழ்நாடு சினிமா கலைமன்றம் சார்பில் மாநில தலைமை தேர்தல் ஆனையர் சந்திரசேகரன் முன்னிலையில் நடிகர் சாருஹாசனிடமிருந்து தத்துவப் பேராசிரியர் விருது



 எதிர்கால நோக்கம்:     வயிறு வளர்க்கும் கல்வி அல்லாது அறிவை வளர்க்கும் கல்வியை இளைஞர்களுக்கு வழங்க பாடுபட வேண்டும், ஆன்மீகத்தில் கலந்து விட்ட அரசியலை புறம்தள்ள வேண்டும் தாய் மொழி ஆர்வத்தை குலைக்கும் சக்திகளுக்கு எதிராக உழைக்க வேண்டும் நேர்மையும் தூய்மையும் பொதுவாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் சுற்றுச்சூழல் மேம்பட தேசமெங்கும் மரமில்லாத வீடுகள் கூடாது என்றகட்டாயம் வர வேண்டும்அறிவு வளர்ச்சி பாதையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை களையவேண்டும் பழங்கால விஞ்ஞானத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கினைத்து புத்தம் புதிய உலகம் அமைய பாடுபட வேண்டும் விவசாய முன்னேற்றம் கைத்தொழில் மேம்பாடு போன்றவை வளரபாடுபட வேண்டும் பள்ளிக் கூடங்கள் கல்லூரிகள் கலாசாலைகள் அமைக்கவேண்டும் இன்னும் பல .............

                                  தலைமை  சீடர் Dr.V.V. சந்தானமுடன் யோகி ஸ்ரீ ராமானந்த குரு   


முகவரி

                         யோகி ஸ்ரீ இராமானந்த குரு
                         ஸ்ரீ குரு மிஷன்
                         விழுப்புரம் சாலை
                         காடகனூர் அஞ்சல் 605755
                         விழுப்புரம் மாவட்டம்
                         தமிழ்நாடு
                        தொலைபேசி எண்    +91- 9442426434



                                                                                                தொகுப்பு  சதீஷ் குமார்

Contact Form

Name

Email *

Message *