( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அகங்காரம் வெந்து சாம்பலாகும்

      ரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம்.

  சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

       நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை  ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது, அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில்  பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

   இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில் அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

    அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும் பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப்பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம்,

      ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான், விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான், காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,

     இப்படிப்பட்ட பூஜையும். பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில் ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்?

     தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாக ஒப்படைத்துவிடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடைய வேண்டும், அதற்கு நீ ஆமை போல் ஐம்புலன்களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,

          ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது, படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால் அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப் போகவேண்டியதுதான்.

     மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில் உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்

+ comments + 16 comments

நல்ல ஆக்கம் ஒன்று சகோதரி. ஆனால் நான் கடவுளை மட்டும் தான் நம்புபவன். படைத்தவன் படியளப்பான் தானே....வாழ்த்துக்கள்

super sir!

சிந்திக்க துண்டும் எழுத்து நடை . ஒவ்வொரு பதிவு அதுபோன்றே ! புகைப்படங்களின் தேர்வுகள் அருமை .இந்த பதிவில் ஒருத்தர் மிகவும் கோபத்துடன் முறைக்கிறார் பயமாக உள்ளது சொல்லி வையுங்க . பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துகள்

அன்புடன் வணக்கம்,"" சரியான உரைகள்"" சிவ பெருமானை ஒரு அடியார் அன்புடன் வேண்டினாராம் சுவாமி நீவிர் இருக்கும் கைலாசத்தில் மிகவும் குளிராக உள்ளது உமது பக்தர்களும் உமக்கு அபிஷேகம் என்று சதா நீர் உற்றி மேலும் குளிர்விக்கிரார்கள் ஆகவே தேவரீர் எனது இதயத்தில் வாரும் அங்கு ஒரே குரோதம் காமம் லோபம் என்று எப்போதும் சூடாகவே இருக்கும் சுவாமி வாருமே !! என்று தனது இயலாமைய வெளிபட கூறி தனை ஆட்கொள்ள வேண்டுகிறார்!!

Natarajan
20:07

I share a lot of your ideas & pursuits.

Especially on poverty and education.
The Chinese Philosophers defined knowledge as:
Anyone learning and not thinking, the efforts are wasted. Not learning and thinking, the individual and socieity around will be ruined.
Our education system have not taught how to think. So we have a society without rationale which is under utter poverty.
The education where thinking (as it was taught in Gurukula of the past) is essential for upliftment of poor as well as Super power dream.

The Super power dream with text book economist. We spend several tens of thousands of Crore for a 20 day games show when we do not have storage for food grains.

Those who produce food in our country die because they cannot get food.

Government with misplaced priorities, capital which flies out of the country will vanish when people become knowledgeable.
Today with freebie, every poor can be cheated.

http://science-of-good-living.blogspot.com/
http://shake-hands-with-bramma.blogspot.com/

பக்தியில் பரவசமாகிறேன். இதயம் என்வசம் இல்லை. கட்டுரையில் லயிக்கிறேன். பக்தியில் நனைய வைத்ததிற்கு நன்றிகள்

11:06

அசத்திட்டீங்க போங்க! உங்களின் ஒவ்வொரு படைப்புக்களும் தினம் தினம் மலரும மலர்களை விட இன்னும் மேலதிகமாக வாசனை வீசுகின்றன அறிவெனும் ஆற்றலால். சமயங்களாகட்டும், சம்பிரதாயங்களாகட்டும், வழித்தோன்றல் ஆயினும் அதற்கேற்ப உங்கள் விளக்கங்கள் யாவும் பிரமாதம். புகழவில்லை.யதார்த்தமே அது தானுங்க.. உங்கள் ஒவ்வொரு எழுத்தின் மூலமும் அகல வேண்டியவை அகலட்டும். நன்றி உங்கள் அவ்வப்போதைய வெளியீடுகளை என்னோடு ஈ மெயில் மூலம் பகிர்வதற்கு. நன்றி நன்றி!

its very nice

I am trying again and again but but not able

Anonymous
22:13

in the present world every body wants to live for money and fashions hence your preachings are not understood properly
can you tell me whether you can do the service without fees

தீய குணங்கள் அழி்ந்தால்தான் இறைவன் நம்மில் குடியிருப்பான் என்றால்,இறைவன் தூனிிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது பொய்யா.இறைவனுக்கு அதாவது பரம்பொருளுக்கு இன்பம் துன்பம்,பாவம் புண்னியம்,நல்லவர் தீயவர்,நல்லது தீயது,வெப்பம் குளிர்ச்சி,இவைகள் ஏதுமற்றவர் அருக்கு மேற்கூறிய குணங்கள் இருக்குமேயானால் அவரும் சாதாரன மனிதனே,தயவுசெய்து பரம்பொருள் இந்தந்த குணங்களுடன்தான் இருப்பான் என்று நீங்களே
போதிக்காதீர்கள்,பரம்பொருள் தூய்மை மற்றும் பரமாணந்தத்தின் இருப்பிடம்(ஒரு வேளை அவருக்கு கீழ்நிலை தெய்வங்களுக்கோ நவ கிரகங்களுக்கோ வேன்டுமானால் குணங்களில் உயர்வு தாழ்வு பேதங்கள் இருக்கலாம்).மனிதன் நல்லவனோ தீயவனோ இறைவனிடத்தில் உண்மையான தூய்மையான(இங்கு தூய்மமை என்பது உடல் சுத்தமோ மனசுத்தமோ அல்ல,ஒரு மனிதன் நல்லவனோ தீயவனோ அவன் செய்கின்ற தொழிலில் மரியாதையும் நேர்மையும் பக்தியும் கொன்டவன்போல் )பக்தி வேண்டும்.அது போதும் அவன் எப்படியும் மேல் நிலைக்கு வந்துவிடுவான்,நிச்சயம் அவனுக்கு முக்தி கிடைக்கும்.ஒருவன் செய்கின்ற செயல் அனைத்துமே பாவம்,ஆனால் அவன் ஒரே ஒரு புண்ணியம் மட்டும் செய்திருக்கிறான் அதுதான் பரம்பொருளிடம் கொண்டிருக்கும் உண்மையான பக்தி,அதனால் அவனுக்கு கண்டிப்பாக முக்திதான் கிடைக்கும்.ஆனால் மற்றொருவனோ செய்வதெல்லாம் புண்ணியம் பாவம் செய்வதே கிடையாது ஆனால் கடவுள் பக்தி துளியும் இல்லை ஆனால் இவன் கதி என்னாவது,கண்டிப்பாக முக்தி கிடைக்காது மாறாக அவனுக்கு மறு ஜெந்மத்தில் நல்ல சொகுசான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்,ஆனால் ஓரு மனிதன் நல்லவனோ தீயவனோ பரம்பொருளின் அனுக்கிரகமும் பார்வையும் இருந்தால் மட்டுமே அவன் மேல் நிலைக்கு வரமுடியும்,இல்லையென்றால் கீழ்நிலையிலே இருக்க வேண்டியதுதான்,இது நிதர்சனமான உண்மை.பரம்பொருளின் அருளும் அன்பும் அனுகிரகமும் முக்தியும்,வேண்டும் என்றால் நீங்கள் இன்றே இப்பொழுதே பக்தி செலுத்த ஆரம்பியுங்கள் அது உண்மையான தூய்மையான பக்தியாக இருக்கட்டும் அதை மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார்.ஆசிரியர் அவர்களே நீங்கள்மேலே கூறியுள்ளதை போன்று,தீயவர்களிடத்தும் மனதூய்மை இல்லாதவர்களிடத்திலும் இறைவன் குடிகொள்ளமாட்டான் என்று பயமுறுத்தாதீர்கள்,மீன்டும் அவர்கள் அந்த படுகுழியில் வீழ்ந்து தன் வாழ்கையை அழித்துக்கொள்வார்கள். இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த உலகம் என்னும் நாடகமேடையில் யார் யாரெல்லாம் கதாநாயகன் என்றும் கதா நாயகின் என்றும் வில்லன் என்றும் அவனால்தான் தீர்மானிக்கபடுகிறது,இங்கு தீய்மை பாவம் இதெல்லாம் பரம்பொருளுக்கு எதிராக இருந்துகொன்டு,எவனோ ஒரு சாத்தான் மக்களிடத்து புழக்கத்தில் விட்டுக்கொன்டிருக்கிறான் என்று நினைக்கவேண்டாம்,எது எது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ,கொடுக்கப்பட்டதோ,பெறப்பட்டதோ,அது அது அங்கிருந்தே(பரம் பொருள்)எடுக்கப்பட்டது,கொடுக்கப்பட்டது,பெறப்பட்டது,எல்வற்றையும் படைத்து,காத்து அழித்து,மறைத்து, அருள் புரிவது எல்லாம் ஓருவனே அவனே பரம்பொருள்.

20:42

guruji mannikkavum intha karutthilum unmai iruppathaippol thonrukirathu engalukku vilakki puriyavaiungal,thavarirunthaal mannikkavum,s.maheshwaren,periyanayakkanpalayam.

பா.தமிழ்மணி
22:02

எங்களுக்கு மிகவும் ஊக்கத்தை கொடுக்கிறது, ஐயா...

Next Post Next Post Home
 
Back to Top