Store
  Store
  Store
  Store
  Store
  Store

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!


பிள்ளை ஒன்று இல்லையென்று
தூங்காமல் தவமிருந்தேன்
பிள்ளை வந்து பிறந்ததம்மா-என்
பிள்ளைக்கலி தீர்த்ததம்மா!

கன்னங்களில்
முத்தமிட்டு முத்தமிட்டு
கனவுகளில் நான் மிதந்தேன் -என்
கனிந்த வயிறு குளிர்ந்ததம்மா!

பறக்கின்ற குருவிகளை
பனி நிலவின் பேரெழிலை
கைவீசி அழைத்ததம்மா!-என்
இளம்மார்பில் துயின்றதம்மா!

கண்மூடும் நேரமெல்லாம்
கனவிலும் என்பிள்ளை
கைகொட்டி சிரித்ததம்மா!

கட்டாத கோட்டையில்
சூட்டாத மகுடத்தை
சூட்டியே ஆண்டதம்மா

மொட்டாக இருந்தப் பிள்ளை
பூத்து
பிஞ்சாக வளர்ந்ததம்மா

கைபிடித்து நடந்த போது
வழிகாட்டி வந்தபோது
காலம் என்னை முடித்ததம்மா

தூக்கிவிட கைகளின்றி
அரவணைக்க உறவுமின்றி
அனாதையாய் நின்றதம்மா-என்பிள்ளை
நாதியற்று போனதம்மா!

அன்னம் பிசைந்து ஊட்டி
அரவணைத்த அம்மாவை
சாவுக்கு கொடுத்து விட்டு
உண்பதற்கு சோறின்றி
உறங்குவதற்கு வழியின்றி
தெருவில் பிள்ளை அலையுதம்மா!-அதன்
சின்ன வயிறு வேகுதம்மா!

இரையுட்டும் பறவை பார்த்து
பாலூட்டும் ஆட்டைக் கண்டு
தாயுறவை வேண்டுதம்மா!

கண்ணில் விழும் கானலுக்குள்
காய்ந்து எரியும் நாணலுக்குள்
அம்மா முகம் தேடுதம்மா!

பட்டினியில் துடிதுடித்து
பாசத்திற்கு தேடித்தேடி
பாதம் நோக நடக்குதம்மா

சோங்களை மறைத்துக் கொண்டு
சொந்தங்களை சுமந்துக் கொண்டு
விம்மி வாழும் பெண்ணினமே!
பிடியரிசி கூடசேர்த்து உலையிலிடு
கதரியழும் பிள்ளைக்கு
ஒரு கவளம் சாதமிடு

ஆதரவாய் மென்கரத்தால் தட்டிக்கொடு
பாதாளமில்லை நீ பார்க்கின்ற உலகு !
பாசமுண்டு என்று காண்டு
உன் கண்சிந்தும் கருணையால்
கைகொடுக்கும் சக்தியால்
காய்ந்தமனம் குளிரட்டும்
என்மகனின் ஈரவிழி உலரட்டும்

ஆசைகளை சுமந்தப்படி
அறைகுறையாய் செத்தவளின்
வேண்டுதலை நிறைவேற்று
என் பசுந்தளிரை கரையேற்று
உன்பிள்ளை அனாதையாய்
ஒருநாளும் ஆகாமல்
உன்தர்மம் காத்து நிற்கும்



  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்



  • Contact Form

    Name

    Email *

    Message *