( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

எகிப்து மம்மிகள் உருவான காரணம்


கேள்வி:
      மது பண்பாட்டின் சிறப்பும் அதன் தொன்மையான வயதும் ஆதாரங்களும் எனக்கு வியப்பை தருகிறது. இதே போன்று உலகம் முழுமைக்கும் உள்ள மக்களின் ஆதிகால சமய வரலாற்றை தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன். சரித்திர ஏடுகளில் கிரேக்கர்களை பற்றியும், ரோமர்களை பற்றியும் நிறைய படித்து இருக்கிறேன் ஆனால் அவர்களின் சமய உணர்வு எப்படி இருந்தது என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது அதை தாங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.குருஜி:
   பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந்திருக்கும் அதற்கு காரணம் அந்த மக்கள் வரலாற்று நிகழ்வுகளையும் மற்றும் பல முக்கிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு முறையோடு குறித்து வைத்திருப்பதே காரணம் எனலாம். கிரீஸ் என்னும் கிரேக்கர்களை பற்றிய குறிப்புகள் நமது நாட்டில் யவணர்கள் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நமக்கும் கிரேக்கர்களுக்கும் வர்த்தக துறை, அரசியல் துறை என்று பல மார்கங்களிலும் தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் தான் இந்திய தத்துவங்களில் தாக்கம் குறிப்பாக உபநிஷத கருத்துகளின் தாக்கம் கிரேக்க தத்துவத்தில் மிக அழமாக படிந்திருப்பதை காண முடிகிறது.

    கியாம்பிளிக்ஸ் என்னும் கிரேக்க தத்துவ ஞானி அன்றைய கால கட்டத்திலேயே சோதனை மிகுந்த அறிவுச் சுற்றுலா பல செய்து இருக்கிறார் அவர் தான் சென்ற நாடுகளை பற்றியும் அதன் கலாச்சார பண்பாடுகளை பற்றியும் குறிப்புகள் பல எழுதி வைத்திருக்கிறார் அவர் தமது குறிப்புகளில் எகிப்தியர், மொசபடோமியர், பிராமணர் ஆகியவர்களின் உபதேச மொழிகள் தான் கற்றிருப்பதாக குறிப்பிடுகிறார் அதுமட்டுமல்ல புருஷோத்தமன் என்ற இந்திய மன்னர் கி.மு.20-ம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகரத்திற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகவும் அந்தக்குழுவில் சாது ஒருவர் இருந்ததாகவும் அந்த சாது ஏதென்ஸ் நகர வணிகர்களின், பிரபுக்களின் அதிகார வேட்கையை எதிர்த்து தன்னை தானே தீயிட்டு கொளுத்திக்கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.


    இத்தாலி நாடு கிரேக்கர்களின் அடிமையாக இருந்ததினால் ரோமர்களின் மதத்திற்கும் கிரேக்க மதத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை காரணம் ரோமர்கள் நிர்வாகத் துறையில் பெற்றிருந்த அறிவைப்போல் சிந்தனை துறையில் அறிவை பெற்றிருக்கவில்லை அதனால் மதம் மற்றும் நுண்கலைகளில் கிரேக்கர்களையே பின்பற்றினார்கள். மகா அலெக்சாண்டரின் படையெடுப்பும் வெற்றிகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் மட்டுமல்ல அலெக்சாண்டர் தனது நாட்டின் புராதனமான மதக்கொள்கைகளை தமது நாட்டின் ஒரு பகுதியிலிருந்து தனது சாம்ராஜ்ஜியம் பரவி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றார்.

     அரசியல் மூலமாக மதங்களை பரப்பலாம் என்பதை உலகிற்கு முதன் முதலில் அறிமுகபடுத்தியது மகா அலெக்சாண்டரே ஆகும். அவரை பின்பற்றிதான் அசோக சக்கரவர்த்தியும் புத்த மதத்தை பல நாடுகளில் பரப்பினார் அலெக்சாண்டரின் கொள்கையை அன்பு வழியில் கையாண்ட அசோகரிலிருந்து மாறுபட்டு அராஜக வழியில் அரேபியர்கள் தங்கள் மதத்தை பரப்பினார்கள் என்பது மிகவும் குறிப்பிட தக்க விஷயமாகும்.


     ஆதிகால கிரேக்கர் மற்றும் ரோமர்களின் சமய சிந்தனை என்பது முழுமையான வளர்ச்சி பெற்றதாக இல்லையென்றே சொல்ல வேண்டும் தங்களது சின்னச்சின்ன அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள குட்டி தேவதைகளையே அவர்கள் வழிபட்டு வந்தார்கள். இதை மாபெரும் தத்துவ ஞானியான சாக்ரடீஸ் தான் விஷம் கொடுத்து சாகடிக்கப்படுவதற்கு முன் தனது சீடர்களில் ஒருவனை அழைத்து குறிப்பிட்ட ஒரு சிறு தேவதைக்கு தாம் சேவல் கோழி வாங்கி பலியிடுவதாக நேர்த்தி செய்திருப்பதாகவும் கூறி அதை அந்த சீடனே நிறைவேற்றச் சொல்லி வேண்டுதல் வைப்பதில் நாம் அறியலாம். 


    ஆதிகால இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் உணவுக்கு ஒரு கடவுள், கனவுக்கு ஒரு கடவுள், போதை தரும் மதுவுக்கு ஒரு கடவுள் என்று வைத்திருந்தார்கள். பிளாட்டோ, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகள் தோன்றிய பிறகும் ஹோமர் போன்ற கவிதாவிலாசமுள்ள கவிஞர்கள் தோன்றிய பிறகும் கிரேக்கர்களின் வழிபாட்டு சமயத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் பல ஏற்பட்டன. அரிஸ்டாட்டிலின் மருத்துவம் மற்றும் வானியல் ஆராய்ச்சி கிரேக்க பண்பாட்டின் மணி மகுடம் எனலாம்.


    உலக உற்பத்தி பற்றியும் மனிதர்களின் மறுமை வாழ்வு பற்றியும் கிரேக்கர்கள் சிந்திக்க ஆரம்பித்து ஜோதிடம், வைத்திய சாஸ்திரம், மாந்திரீகம் போன்றவைகளில் பல உண்மைகளை கண்டறிந்தார்கள் எனினும் சுட்டுப் போட்டாலும் சுய புத்தி போகாது என்பதுபோல் பெண் சுகத்திற்காகவும் மது மயக்கத்திற்காகவும் கிரேக்கர்கள் தெய்வங்களை வழிபடுவதை விடவில்லை. 


 கேள்வி: 
       கிரேக்கர்கள், ரோமர்களின் சமயச்சிந்தனையை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் அளவிற்கு எகிப்தியர்களும் சரித்திரத்தால் பேசப்படுகிறார்கள் அவர்களது மதச்சிந்தனையை பற்றி விளக்கமுடியுமா?


 குருஜி:
        நீலநதியின் ஓரத்தில் அமைந்த வளமான தேசம் எகிப்து ஆகும். இங்குள்ள பிரமிடுகள் உலக அதிசயம் மட்டுமல்ல அதில் பல அமானூஷ்ய விஷயங்களும் வேற்று கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொள்ளும் சமிக்கை விஷயங்களும் அடங்கியுள்ளது. நாம் பிரமீடுகளை பற்றி வேறொரு சமயத்தில் பேசலாம். இப்போது எகிப்தின் மத விஷயத்திற்கு வருவோம். ரோம் சாம்ராஜ்ஜியத்தின் எகிப்து ஒரு பகுதியாக இருந்ததினால் கிரேக்கர்களின் மத சிந்தனையின் தாக்கம் எகிப்திலும் இருந்திருக்கிறது.

     ஆயினும் கிரேக்கர்கள் ரோமர்கள் இவர்களை விட ஆதிகால எகிப்து மக்கள் மகாபுத்திசாலிகள் திறமை மிகுந்தவர்கள் அவர்களின் திறமைக்கு மருத்துவ அறிவுக்கு எடுத்துகாட்டாக பல ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இறந்துபோன மனித உடல்களை கெட்டுபோகாமல் பாதுகாக்கும் மம்மிமுறையை சொல்லலாம்.    உடல்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான முறைக்கு அவர்களின் சமயசிந்தனையே மூலகாரணம் ஆகும்.
எகிப்தியர்கள் இறந்துபோன மனிதர்கள் தங்களது மேல் உலக வாழ்கையை முடித்துவிட்டு ஒரு காலத்தில் பூமிக்கு வருவார்கள் அப்படி வரும்போது அவர்களின் உயிர்கள் தங்குவதற்கு பழைய உடம்புகள் கண்டிப்பாக தேவை அதில்தான் அந்த உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று எழும் என்று நம்பினார்கள்

    இதற்காக இறந்துபோன தங்களது அன்பிற்குரியவர்களின் உடல்களை கெட்டுப்போகாமல் பாடம் செய்து பிரமீடுகளுக்குள் அடைத்து வைத்தார்கள் அப்படி பாதுகாக்கபட்டது அரசர்களின் உடல்கள் மட்டுமல்ல சாதாரண பிரஜைகளின் உடல்களும் தான். 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டபோது இத்தகைய எகிப்து மம்மிகள் குவியல் குவியலாக கப்பல்களில் ஏற்றப்பட்டு பிரிட்டிஷ் தொழிற்சாலைகளில் எரிபொருட்களாக பயன்படுத்தப்பட்டது.


   அந்த மம்மிகளில் சுத்தப்பட்டிருந்த துணிகள் பல ஆயிரம் டன்களாக இருந்தது. செத்தவர்கள் உயிர்தெழுவார்கள் என்ற நம்பிக்கை எகிப்தியர்களிடமிருந்தே யூதர்களுக்கு பரவி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த கதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் வரலாற்று ஆய்வாளர்களிடம் பரவலாக உள்ளது.

    கிரேக்கர்களை போன்றே எகிப்தியர்களும் பறவைகள், மிருகங்கள், பாம்புகள் என்று பல தரபட்ட வழிபாட்டு முறையை மேற்கொண்டு இருந்தாலும் வாழ்க்கையை நெறிபடுத்துவதற்கான நல்ல பல வழிமுறைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை அந்த நாட்டில் கிடைக்கும் சிலாசாசனங்கள் பல நமக்கு தெளிவுபடுத்துகிறது.


     நல்ல வழியில் நடப்பது உத்தம மார்க்கம் மட்டுமல்ல திருப்திக்கும் சொந்த நலத்திற்கும் உடல்நலத்திற்கும் கூட நல்லது என்று அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் ஆனால் தீய வழியை துறந்து நல்ல வழியில் நடப்பதே ஆண்டவனுக்கு பிடித்தமானது என்று அவர்கள் கருதினார்கள் அவர்கள் ஏழ்மையை சாபக்கேடு என்று கருதவில்லை பணக்காரனாக மாளிகை வீட்டில் வசிப்பதைவிட ஏழையாக கடவுளின் அருளைப்பெற்று வாழ்தலே மேன்மையானது என்று கருதினார்கள் ஆடம்பர பிரியர்களாகவும் உல்லாச வித்தகர்களாகவும் இருந்த ரோமானியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தபோது கூட எகிப்தியர்கள் ஆடம்பரத்தை வெறுத்து வந்தது விந்தை ஆகும்.      இவர்களிடத்தில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் இருந்தது. கட்டிடக்கலையில் நிபுணத்துவம் மிக்க எகிப்தியர்கள் தங்களது வழிபாட்டு இடங்களை இந்திய கட்டிடக்கலை பாணியில் அதாவது இந்து கோவில்கள் போன்றே அமைத்திருப்பது நமது கலாச்சாரத்தின் பெருமைகளையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல பண்பாடு என்று ஒன்று உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அது இந்தியாவிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.


தொடரும்  ..................  


                                                                  
                                                                                                                 சந்திப்பு  சதீஷ் குமார்


+ comments + 15 comments

அரபிகள் தங்கள் மதத்தை அராஜக வழியில் பரப்பினார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியாது. ஏதாவது பக்க சார்பற்ற ஆதாரம் இருந்தால் முன்வைத்து கூறவேண்டும். அப்படி இல்லாவிட்டால் மற்ற மதத்தை குறை கூற கூடாது.

வணக்கம்! சாமி! கிரேக்க/எகிப்து சமய வழிபாட்டு முறைகளை தெரிந்து கொண்டோம்! நமது நண்பர் பார்ட்_1 ஆதாரம் கேட்டு இருக்கிறார். இருந்தால் சொல்லுங்களேன்! உண்மை தெரியட்டும்! சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!

வணக்கம்! சாமி! மன்னிக்கவும்! அது என்ன சாமி அரேபியர்களின் கலாச்சாரத்தை சொன்னால் அண்ணன் டென்ஷன் ஆகிறார். இதுக்கும் எதாவது தொடர்பு இருக்குமா! அட போங்க சாமி! நாம் சகிப்புதன்மை என்று நாம் தொலைத்த கலாச்சாரமும், சகோதத்திரமும் எங்கே! அரிது! அரிது! மானிடராய் வாழ்வது அரிது!

வாசகர்களின் கருத்துக்கள் அத்தனைக்கும் சரியான விளக்கங்கள் மாத இறுதியில் எனது இணையதள அனுபவங்கள் என்ற பகுதியில் வெளியிடப்படும் -நிர்வாகி

நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.
தொடருங்கள்..........

எகி்ப்து மம்மிகள் பற்றிய ஆராய்ச்சிப்பகிர்வுக்கு நன்றி ஐயா.

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் குருஜி...நன்றி...

பல தகவல்களை கொடுக்கும் கட்டுரை.

நன்றி அய்யா.

இன்னும் தொடருங்கள், உலக அறிவை வளர்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

இங்கிருந்து அங்கா? அங்கிருந்து இங்கா? என்ற கேள்விகளைக் காட்டிலும், காலத்தால் நிலைப்ப‌து நம்மிடமும் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

கட்டுரைக்கு நன்றி.

எகிப்தில் கைடு சரியாகச் சொல்லாத விஷயங்களைத் தெளிவு படுத்தும் கட்டுரை.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Anonymous
11:52

முகமதியர் கட்டய படுத்தியே தங்கள் மத நம்பிகையை தினித்தனர்

Anonymous
17:36

mamukku theriya vittal history therinthavangalidam

kettu therindu sollavendiyathuthane pavam nightla

patti kathiyai solli irukkirar

இஸ்லாத்தைக் கட்டாயப்படுத்தி திணிக்கவில்லை என்பது வரலாற்று ரீதியான உண்மை. காய்தல் உவத்தலின்றி வரலாற்றை அணுகிவிட்டு சாமி பேசினால் நல்லது. ஏனெனில், சாமியின் வாயிலிருந்து உண்மையன்றி வேறெதுவும் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர் சாமியல்ல. ஆசாமி ஆகிவிடுவார்.

Anonymous
15:15

Mr Paappaa Kutti

Only after Arabian invasion in to India (Indus Valley) , Muslim religion has spread. It resulted in wide spread religion in India by compulsory conversions. Those who are not muslims, were tortured. Becuase of the fear, some hindus and other religious people got converted into muslim to protect their life.
Also note that its only Gajini Mohammad who has succeeded invasion into India in his 18th time. Emporors like Aurangseeb murdered hindus and hindu temples/monuments just to spread thier religion. All these are historical facts . No one can hide these historical facts. No Hindu emporer invased Arabia. This shows what?. Hnidu Kings are highly religious tolerant.

அவுரங்கசீப்பின் தென்னிந்திய படையெடுப்பே இஸ்லாம் திணிப்பிற்கு முக்கிய காரணம்.நேரிடையாக பாதிப்படைந்த பகுதிகள் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் என்பது வரலாற்று உண்மை.அடக்குமுறையாலும்,அராஜகத்தாலும் இந்திய மக்களின் மீது திணிக்கப்பட்டவைதான் இஸ்லாமும்,கிறிஸ்தவமும்.
இன்று இந்தியனும்,இந்துக்களும் தங்கள் அடையாளத்தை இழந்து நிற்கின்றனர்.


Next Post Next Post Home
 
Back to Top