( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



மிர்த தாரா மந்திர தீட்சை டிசம்பர் 18 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தி.மு.க. தோற்க வேண்டும்! ஏன்?


     டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து வந்து தமிழகத்தை சுரண்டுகிறார்கள் என்று வீதிதோறும் மேடை போட்டு பாட்டுபாடி தீர்த்தவர்கள், இன்று வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் ஒட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையே உண்டுயில்லை என்று ஆக்கி கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது தி.மு.காவின் சுரண்டலை தாங்க முடியாமல் திரு. ராகுல்காந்தி கூட கொதித்து போயிருப்பதாக கேள்வி, இப்படி எல்லாதரப்பிலும் கரித்து கொட்டும் அளவிற்கு இவர்கள் செய்த தவறுகள் தான் என்ன? கலைஞர் அரசால் ஒரு ரூபாய்க்கு அரசி உட்பட இரண்டு ஏக்கர் நிலம், இலவசதொலைக்காட்சி பெட்டி, மருத்துவ காப்பிடு திட்டம் என ஏகப்பட்ட நல திட்டங்களை செய்து வருகிறார்களே இவர்களை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்? என சில விவரம் புரியாதவர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.


       ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே கலைஞர் ஆட்சியில் இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆற அமர உட்கார்ந்து அரசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் சோற்றை மட்டுமே சாப்பிட பழகி கொண்டவர்களால் தான் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சிறிய குடும்பத்தை பட்டினி இல்லாமல் நடத்துவதற்கு தினசரி இருநூறு ரூபாயாவது வேண்டும். அடிப்படை தேவைகளுக்கே மாதம் ஆறாயிர ரூபாய் வேண்டும் எனும்போது தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு மக்கள் கண்கள் பிதுங்கி விடுகிறார்கள்.


    அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு குடி மகனுக்கும் மாதம் பத்தாயிரம் உதவி தொகையா தர முடியும்? என்று சிலர் கேட்கலாம் தமிழகத்தில் இருக்கின்ற எந்த மக்களும் உதவி தொகை எதிர்பார்க்கவில்லை. பொருட்களின் விலைவாசி குறைந்தால் தங்களது வருவாய்க்குள் செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி கொள்ளலாம் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் கடைதெருவிற்கு போனால் சட்டை பையில் பணத்தை எடுத்து போயி கைப்பையில் பொருள் வாங்கிவரலாம். இப்போதோ கைப்பையில் பணம் எடுத்து போனாலும் கூட சட்டை பை நிறைய பொருள் கிடைப்பதில்லை.

     விலைவாசி நிலவரம் இப்படியென்றால் மின்சாரத்தின் கதையோ மிக மோசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலை முதல் குழந்தைகள் படிப்பது வரைக்கும் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றால் திருப்பூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் உற்பத்தி இழப்பு என்பது பல கோடி ரூபாயை தாண்டிவிடும்.

     இன்று தமிழகம் முழுவதிலுமே பலமணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. பலசிறிய தொழிற்சாலைகள் முற்றிலுமாக இயங்க முடியாத நிலைக்கு போய்விட்டன. இதனால் பல தொழிலாளர் குடும்பங்கள் வீதி வந்துவிட கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 



   நமது தமிழக அரசோ மின்சார உற்பத்தியை சீர்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை இரண்டாயிரத்து ஒன்பதில் கூட அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரளவு பிரச்சனையை சமாளித்து இருக்கலாம். அரசின் மெத்தன போக்கால் விவசாயம், தொழில்துறை, வீடுகள், மருத்துவமனைகள் கூட இருள் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யுனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்டுத்துபவர்களுக்கு யுனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் ஏற்றியிருப்பது கடும் வேதனைக்குரியது, இன்றைய நிலையில் 300 யுனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அதுவும் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மின்சார கணக்கீடு டிஜிட்டல் மீட்டர்கள், இண்டிகேட்டர் எரிந்தால் கூட மரவட்டை மாதிரி நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போது எல்லாம் சாதாரணமாக ஒரு குழல்விளக்கு எரிந்தால் கூட முன்னூறு ரூபாய்க்கு மேல் தான் மின்சாரகட்டணம் வருகிறது.


   தமிழகத்தின் பல ஊர்களில் குடி தண்ணீர் விநியோகம் என்பதே சுத்தமாக கிடையாது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கார்பேரஷன் குழாயில் குடிதண்ணீர் வந்தே வருட கணக்காகிறது. தர்மபுரி, திருப்பூர், நான்குனேறி, ராதாபுரம், மதுரையின் சில பகுதிகளில் குடிதண்ணீருக்காக ஒரு குடும்பம் மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

  நிலத்தடி நீரை சரியான முறையில் பயன்படுத்தினாலே தமிழகத்தில் குடீநீர் பிரச்சனையே ஏற்படாது. ஆனால் நிலத்தடி நீர் சுண்டி போவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் ஆளும் தரப்பு செய்து கொண்டியிருக்கு, 


   பல நகராட்சிகள், பேரூராட்சிகளில் தெருவிளக்கை கூட பராமரிக்க அக்கறையில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் குறிப்பாக தலூக்கா தலைநகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துக்களே இருப்பில் இருப்பது இல்லை.

     கலைஞர் மருத்துவ காப்பிடு திட்டம் மிகபெரும் சேவைதிட்டமாக அரசாங்கத்தால் விளம்பரபடுத்தப்படுகிறது. உண்மையில் அந்த திட்டத்தால் சில ஏழைகள் பயன்பட்டாலும் கூட, பெருமளவு பயனையும், இலாபத்தையும் அனுபவிப்பது ஆளும் கட்சிகாரர்களுக்கு வேண்டப்பட்ட தனியார் மருத்துவ மனைகளே ஆகும்.

     அரசாங்கத்திலிருந்து நோயாளிக்கு ஒரு லட்சரூபாய் வரை சலுகை வழங்குவதாக கூறப்பட்டாலும் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஏரளமான கட்டண தொகைகளை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து கரந்து விடுகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு தான் கிசிக்கை என்று இருக்கும். போது நோயாளிகளுக்கு அது சம்பந்தமான விவரங்கள் தெரியாத போது மக்களின் அறியாமையை பல மருத்துவ மனைகள் சுயலாபத்தோடு பயன்படுத்துகின்றனர். ஆளும் தரப்புக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலே காப்பிட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று கொள்ளப்படுகிறது. இது மருத்துவர்களால் பேப்பர் கேஸ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பிறகு சில செயற்கை கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணமாக்கப்படுவதாகவும் கேள்வி.



    சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்துவிட்டதாக அரசாங்கம் பெருமையடித்து கொள்கிறது. உண்மையில் இந்த கல்விமுறை பாடப்புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையோ, மாணவர்களும், பெற்றோர்களும் திணரும் வண்ணமே உள்ளது.

     தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருமே தங்களுக்கு என்று தனிதனி கல்லூரிகளை கட்டி வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கும் போது மக்களுக்கு பயன்படும் வண்ணம் கட்டண விகிதங்களை அரசாங்கத்தால் எப்படி தீர்மானிக்க முடியும்?

     கல்வியை வியாபார பொருளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்த்தவர்கள், ஆங்கிலத்தை வரவேற்று தமிழை அழித்தவர்கள் கல்விக்காக எப்படி சேவை செய்வார்கள். 


       சமுதாயத்தில் நடைமுறை தலைமுறையினரை தமிழ் பண்பாட்டை அறிய முடியாத வண்ணம் இன்று நாடு ஆகிவிட்டது. தமிழக்காக ஒடும் ஏயிலை இடைமறித்து தண்டவாளத்தில் தலைவைத்து, பாளையங்கோட்டை சிறையில் பாம்பும், தேளும் நடுவில் கடுஞ்சிறை அனுபவித்தவர் ஆட்சியில் தமிழ் பண்பாடு காற்றோடு போனதோ இல்லையோ பணக்கார தமிழன் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

       தி.மு.க. அரசு சொன்னதைதான் செய்யும், செய்ததை தான் சொல்லும் என்று நமது முதல்வர் அவர்கள் அழகான கவிதை மொழியில் பேசி ஐம்பது லட்சம் ஏக்கர் நிலத்தை நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கராக பிரித்து தரப்போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள், 


    ஆட்சிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடிய போகிறது. இதுவரை எத்தனை பேர்கள் நிலத்தை பெற்றார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக முதல்வரிடம் கேட்டால் ஐம்பது லட்ச ஏக்கர் நிலமில்லை, இருந்தால் காட்டுகள் பிரித்து தருகிறோம் என்கிறார்.

      இதை தான் ஆரம்பத்தில் வை. கோபால்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் மேடைகளில் கேட்டபோது ஏழைகள் நிலம் பெறுவது பிடிக்காதவர்கள் என்று எரிச்சல்பட்டார் முதல்வர், இன்று அவர் கூறுகிறபடியே பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கும் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்களையாவது பிரித்து கொடுங்கள் என்று ஏழைகள் கேட்டால் காவல் துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி தனது நிஜமான அரக்க தனத்தை வெளிகாட்டுகிறார்.



     பன்னாட்டு நிறுவனங்கள் வைத்துள்ள நிலங்களை கை வைத்து புதிய பிரச்சனைகளை கூட கிளப்ப வேண்டாம். அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களை ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை சார்ந்த திமிங்கலங்கள் பல காலமாக அபகரித்து அனுபவித்து வருகிறார்கள் அதை கையகப்படுத்தி மக்களுக்கு கொடுத்தாலே ஏராளமான பேர் பயனடைவார்கள்.

    தமிழக அரசே கூட திருவள்ளூர் மாட்டம் காவேரி ராஜபுரத்தில் 199 ஏக்கர் நிலத்தையும், பல்லவாடத்தில் 800 ஏக்கர் நிலத்தையும், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மா பட்டியில் 5000 ஏக்கர் நிலத்தையும் கைவசம் வைத்துள்ளது.

        கையளவு இடமிருந்தால் கூட கண்ணீர் விடும் ஏழைக்கு தானமாக கொடுப்பேன் என்று வசனம் பேசிய முதல்வர் இந்த நிலங்களையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டாலின் , அழகிரி, கனிமொழி தயாநிதிமாறன் போன்றோருக்கு பட்டாபோட்டு கொடுக்க போகிறாரோ என்னவோ? நிலைமை இப்படியிருக்க தி.மு.க அரசு செய்யும் பல நல்திட்டங்கள் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று எதிர்கட்சிகள் பொறாமைபடுவதாக ஆளும் தரப்பு வாய்வலிக்க புலம்புகிறது.



     தற்போதைய தமிழக அரசின் இலவச திட்டங்கள் எந்த கோணத்தில் மக்களால் பார்க்கப்படுகிறது, விமர்சனம் செய்யப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் மக்களிடத்தில் கூட சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இலவச அடுப்பு கொடுத்தார்கள் ஏரிவாயு சிலிண்டர் விலை பலமடங்கு ஏறிவிட்டதனால் அடுப்பு துருபிடித்து கிடக்கிறது.

   இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி தந்தார்கள். ஒரு நாள் ஒடியது மறுநாளில் வெறும் புள்ளி மட்டும் தான் தெரிந்தது. ஒடாத டி.வி யை மூலையில் போடுவதா அல்லது வெங்காயத்திற்கோ மரவள்ளி கிழங்கிற்கோ, காயலான் கடையில் போடுவதா?

    அடுத்ததாக இலவச நீர் மோட்டார் தரப்போவதாக தலைவர் அறிவித்து இருக்கிறார். அதை வாங்கி எந்த பழைய இரும்பு கடையில் போடுவது என்று மக்கள் பேசி கொள்கிறார்கள்.

      இதுமட்டுமல்ல இந்த இலவச திட்டங்களை எல்லாம் அறிவிப்பதை விட்டுவிட்டு நிலப்பதிவு அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், காவல் துறை போன்வற்றில் ஊழல் நடக்காமல் சாமானியனும் நிவாரணம் பெற வழி செய்தாலே கலைஞரை கை எடுத்து கும்மிடலாம் என்றும் பேசி கொள்கிறார்கள். இந்த பேச்சியெல்லாம் கலைஞர் காதில் எப்படியேறும்.

      இத்தகைய உருப்படி இல்லாத திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை கூட மன்னித்து விடலாம். .ஜெயலலிதா வந்தாலும் சரி வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழகத்தின் தலையெழுத்து இப்போதைக்கு இதுதான்.

    ஆனால் மன்னிக்க முடியாத, கூடாத ஒரு கொடும் செயலை கலைஞர் கடைபிடித்து வருகிறார். இத்தனை நாள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து ஏரளமான பணத்தை சுரண்டி வைத்திருக்கிறோம். அந்த பணத்தில் கால் பங்கை செலவழித்தாலே ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களையே விலைக்கு வாங்கி விடலாம் என்று செயல்படுகிறார். இதன் மூலம் ஜனநாயகம் என்பது செத்த சவமாகிவிடும். அதனால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் பிழைக்க சர்வ நிச்சயமாக தி.மு.க தோற்க வேண்டும்

.




+ comments + 26 comments

யாரை குறை சொல்ல தேர்ந்தெடுக்க பட்டவரையா அல்ல தேர்ந்தேடுதவர்களையா

வணக்கம்! நல்ல பதிவு! நம் இந்து மக்கள் சிந்திக்கும் சக்தி அற்றவர்கள்! அதனால்தான் இந்த நிலை! கிறித்துவ மற்றும் முஸ்லீம் சகோதரர்களுக்கு, அவர்களின் சமய குருமார்கள்,யாருக்கு ஓட்டு என்று தீர்மானித்து சொல்லி விடுவார்கள்! தலையாட்டியும், கைத்தட்டியும் பழக்கப்பட்ட இந்து மக்களும் அதே தவறானவர்களுக்கு ஓட்டு போடுவதால் வருவதுதான் இந்த நிலை! உண்மை சொல்ல வேண்டுமானால் சுயநலம் இல்லாத அரசியல்வாதி யாரும் இல்லை! இந்துக்கள் மாற வேண்டும்! உணர்வு வேண்டும்! அந்த உணர்வும் உயிராக இருக்க வேண்டும்! வெறியாக இருக்க கூடாது. எப்போது......?

kandippa aachi maarum

dont worry

17:36

U R saying absolutely correct.

18:11

intha naadum

naattu makkalum

naasamaai pogattum.

நல்ல கட்டுரை. ஆராய்ந்து அலசியிருக்கிறீர்கள். அருமை.

இதில் ஆராய்வதற்கு ஒன்றும் இல்லை நம் மக்களின் தினசரி வாழ்வின் நிலைதான் இது..

Anonymous
14:42

What author wants to tell us. People only wanted this situation and they are responsible not the politicians. Even if you take the new political parities, which has Tamil Heros, they do not have any vision to solve these problems. Those Heros just comment on the situation and the ruling party just to gain popularity. They do not have any plan to eradicate these problems. Even if they are selected they are going to do the same. We are talking about the symptoms of disease. If at all we want to cure a disease, we should diagnose the disease not the symptoms. This article too talks about the symptoms. Those leaders will not talk about the disease. Why not we and why not we educate the mass. - Sundar

Anonymous
10:29

entha katchi oozhal pannavillai. Lancham kodukkamal unnal oru govt velaiyai mudikkamudiyuma. ellorum nammoda velai mudincha sari endru lancham koduthu nammoda thevaiyai sari pannikkirom. piragu antha aatchi sariyillai indha aatchi sariyillai endru pulambikondiruppadhu muttalkalin pozhuthuphokku.

Anonymous
13:01

கலைஞர் தோற்று ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என ந்னைப்பவர்கள் யார் தெரியுமா ஆண்டாண்டுகாலமாக ராஜ்யம் செய்து கொண்டிருந்த ஜாதிவெறியர்களும் பார்ப்பனர்களும் தான் இலவசம் யாருக்கு கொடுக்கிறார்கள் வருமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டால் நாம் பார்ப்பனர்களும் ஜாதிவெறியர்களும் தொடர்ந்து அவர்களை ஏமற்றமுடியாது இதற்கு காரனம் கலைஞர் அதனால் அவரை எதிர்க்கிறார்கள்

Both the Kazhagams came to power using empty rheoterics and meaningless rhyming slogans which was silly.From 1967 to 2010 developments have happened not due to anyone's extraordinary efforts,but due to natural process.The only industry which has thrived is the useless Tinsel film world churning out obscene movies and spreading insidious opinions

Anonymous
08:26

andavanthan tamil nattai kappatra vendum as said by Rajini .
paarpanai adiyodu oliththa pinpum yeen intha thuvesham.avan yeenna pavam seithan.? anaivarukkum uthavum orey enam athu mattumey.iniyum avarkalai thuveshikkathir.thuveshiththavarkalukku nadri

Really Manavedhanai Kolgiren. Varum Kala Santhathigal romba kashtapaduvargal indha rowdi rajiyathal, Adhai ninaithal Manam Konthalikkaradhu. Ovvoru Nalum Kolai Kollai idhuthan news. Andavan than kaapatra vendum indha Thamizhagathay

Anonymous
21:21

change of DMK or ADMK is not needed. Change of Heart is need of the hour. From human person we can expect. from the heartless how can we...? let people exercise their power in choosing the right person who has heart to serve.

கிறிஸ்தவ குருமார்கள் தங்கள் மக்களிடம் யாருக்கு ஓட்டுப்போட வேண்டுமென்றெல்லாம் சொல்வதில்லை. யாரோ முகவரியில்லாத சில கைக்கூலிகள் அப்படிச் செய்யலாம், ஆனால் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமுதாயமும் அப்படி நடப்பதில்லை. தயவுசெய்து தவறான தகவல்களை எல்லாம் தெரிந்த ஞானி போல யோரோ ஒருவர் எழுதுவதையெல்லாம் அப்படியே தகவலாக போடாதீர்கள். கடந்த 25 ஆண்டுகளில் நானும் என் மனைவியும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கிறோம், ஆனால் இதுவரை நான் யாருக்கு ஓட்டுப்போட்டேன் என்றோ அல்லது அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்றோ ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டதில்லை. நாங்கள் கிறிஸ்தவர்கள் எவ்வளவுதான் நாணயமாக நடந்துகொண்டாலும் இந்த நாட்டில் நீதி நேர்மைக்கெல்லாம் மரியாதை இல்லை என்பதை சில இந்து நண்பர்களின் கருத்துக்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இஸ்லாமிய மதத் தலைவர்கள் தங்கள் மக்களை குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பக்கம் வழிநடத்துகிறார்களா என்ற முழுமையாக எனக்குத் தெரியாது. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்துக்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை அவர்கள் அறிவு மற்றும் மனச்சாட்சியின்படி தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். ஓட்டுப்போடும் விஷயத்தில் மதத்தைத் திணிப்பவர்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

சத்யராஜ் - பெங்களூரு

Please send this information through mail to all your friends

Chandru Chennai

Please send this Message to your friends throu mail

Anonymous
10:29

முதலில் இதைப் படித்துவிட்டு பதில் சொல்ல வேண்டும்

http://viduthalai.periyar.org.in/20101114/news06.html

இப்படிக்கு
தி. என்னரெசு பிராட்லா

suresh
10:35

தி கா not alloude thish web site plz sign out

\\\இத்தகைய உருப்படி இல்லாத திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை கூட மன்னித்து விடலாம். .ஜெயலலிதா வந்தாலும் சரி வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழகத்தின் தலையெழுத்து இப்போதைக்கு இதுதான்.\\\\\


இப்படிச்சொல்லிவிட்டு இறுதியில் தி மு க தோற்க்கவேண்டும் என்சொல்லி இருக்கிறீர்களே தி மு க தோற்றால் யார் ஆட்சிக்கட்டிலில் அமருவார்கள் என்பது உங்கள் என்னம்? அல்லது அ தி மு க தான் வரவேண்டும் என்பதை மறைமுகமாக நீங்கள் விரும்புகிறீர்களா?

இரண்டு திருடர்களில் எவன் நல்லவன் என்று தான் பார்க்கவேண்டியதுள்ளது. ஜெயலலிதாவ இல்லை கருணாநிதிய என பார்க்கும்போது ஜெய வை விட கருணா கொஞ்சம் பரவ இல்லை என்றுதானே மக்கள் கருணாநிதியை தேர்ந்து எடுத்தார்கள்.

ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளுமே சமமானவர்களே.

அதாவது

கருணாநிதி ஆடு நனையுதேன்னு ஒப்பாரிவைக்கும் ஓநாய் என்றல்

ஜெயலலிதா கொக்கை விருதுக்கு அழைக்கும் தந்திரக்கார நரி

Anonymous
14:53

சுயநலப் பதிவு...இப்படியெல்லாம் எழுதுனா அந்தம்மா ஏதாவது குடுப்பாங்கன்னு எழுதுறது....

Anonymous
07:36

Ippothaiya soolnilail nichayam vaikovuku oru nalla vaippaga irrunthu irrukum... vaipu amaiumpoluthu vaiko atharkana thaguthil illai... Karunanithi, Jayalalitha intha iruvarukum sirantha maatru Vaiko matumea... netru mulaitha vijayakantho, vijayo, sarathkumaro alla...

நீங்கள் எழுதியவை எல்லாம் உண்மை தான்
ஆனால் இதற்கான தீர்வு அனைத்து மக்களிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும்
அதற்க்கு நல்லவர் அடையாளம் காணப்பட வேண்டும்
அவர் கருத்தை மக்கள் புரிய வேண்டும்
அவர் பின் மக்கள் செல்ல வேண்டும்
ஏற்கனவே உள்ள கட்சிகள் அல்லாதவருக்கும் மக்கள் ஒன்று இணைந்தால் வெற்றி கிடைக்கும் என்ற ஒருமித்த நம்பிக்கை மற்றும் சிந்தனை வேண்டும்
ஓட்டு போடும் பொது ஜாதி மதம் மொழி இனம் பணம் கட்சி சின்னம் தலைவர்கள் நம் கண் முன் தெரிய கூடாது
வெற்றி பெற போகும் கட்சிக்கு என் ஓட்டு எதிர் கட்சிக்கு என் ஓட்டு என்ற மாயயை விளக்க வேண்டும்
நல்லவர ?
நேர்மையானவர ?
தனித்தன்மையுடன் இயங்க கூடியவரா ?
தனி மனித வாழ்கையில் ஒழுக்கமானவரா ?
நேர்மையான தொழில் செய்பவரா ?
இன்னும் பல நல்ல தகுதி உடையவரா என்று பார்க்க வேண்டும்

நல்லவருக்கு வாக்களிப்போம் நாட்டை காப்போம்
ஜெய்ஹிந்த்

Anonymous
13:02

சாரே...ஆட்சி மாறிவிட்டது...இப்பொழுது புரிந்திருக்குமே...யார் பரவாயில்லை என்று...குழந்தைகளின் கல்வியில் கூட கைவைத்துவிட்டார்கள்...
நீங்க சொன்ன விலைவாசியேற்றம் மேலும் எகிறியுள்ளது...இதை யார் வந்தாலும் குறைக்க முடியாது...உங்களைப்போன்றவர்கள் தங்களுக்கு பிடிக்காத ஆட்சியை அகற்ற கூறும் காரணம். இது உலகளாவிய பிரச்சனை...
விஜய்காந்த் வந்தால்...ஆஹா...பிரச்சாரத்தின் போதே பார்த்துவிட்டோமே...
இதற்குத்தான் சொல்வது...தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல்...ஏனென்றால் எங்களுக்கு வேறு "OPTION" இல்லை...
அப்படியே இருந்து, ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றும் தெரியாமலிருக்கும் அவர்களுக்கு அதிகாரிகள் அனைத்தையும் சொல்லிக்கொடுப்பார்கள்...
ஆக மாற வேண்டியது ஆட்சியாளார்களோ, அரசியல்வாதிகளோ அல்ல...அரசு அதிகாரிகளே!...

Anonymous
11:22

Thanks a lot for making Jeyalaltha the chief minister of Tamil Nadu. Let her punish the people of Tamil Nadu imposing new taxes and by increasing the bus fare, the milk price and the electricity charges. Let the people enjoy the gifts of Jeyalalitha's government. The revolution of Madam may continue for ever. The people richly deserve the punishment for voting this government to power.
M. Xavier
Vallioor

Anonymous
11:53

தமிழ் நாட்டு தலை எழுத்து இது. இப்போது கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறது அம்மையார் ஆட்சியில். பால் விலை பறக்கிறது ஆகாயத்தில். பஸ் கட்டணம் பாமரனை பள்ளத்தில் தள்ளிவிட்டது. மின் கட்டணம் மின்னலை போல உயரபோகிறது. முன்னால் இரண்டு மணி நேரம் மின் வெட்டு, இப்போது ஆறு மணி நேரம் அவதி. நாலாயிரம் கோடி வரி போட்டுவிட்டு நாலு நாள் கழித்து வரி இல்லா பட்ஜெட் போட்ட வான் புகழ் அரசாங்கம் இது. ஏற்றி வைத்துவிட்டீர்கள் இனி என்ன நடக்கும் என்று யார் சொல்லமுடியும். அவதிப்படுங்கள்! அழுங்கள்!! விதி மாற நாளாகும்.
மோசே


Next Post Next Post Home
 
Back to Top