( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாம் இந்துவோ முஸ்லீமோ அல்ல ! இந்தியர்கள் !!


    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர்  24தேதி தீர்ப்பு வரப்போகிறது தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது

    காஷ்மீர் விவகாரத்தில் சொதசொதப்பாக நடந்து கொள்வது போல் இந்த விஷயத்திலும் மத்திய அரக நடந்துக் கொண்டால் இந்திய மக்கள் தேவையற்ற இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்
   எனவே புத்திசாலித்தனமாக நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து தக்கப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அரசின் வேலை தும்பை விட்டுவாலைப்பிடித்தால் அதிகப்படியான இழப்பை நாடுஎதிர்கொள்ள நேரிடும் அதை நாடு தாங்காது

  கலவரத்தில் ஈடுபடுவது இந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும் அவர்களை பேதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் இதில் ஓட்டு அரசியல் யார் பார்த்தாலும் அவர்கள் நிச்சயம் பாரதத்திருநாட்டின் பகைவர்கள் என்றே கருதப்படுவார்கள்
    தனிமனிதர்களின் முக்கியத்துவத்தை விட மதங்களின் புனிதத்தன்மையை விட நாடு பெரியது இதுமட்டும்தான் போற்றுதலுக்குறியது என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும்

  இந்த முக்கியமான நேரத்தில் இந்து மக்கள் ஒன்றை உணரவேண்டும் பாபரும் அவனைப்போன்ற அந்நியர்களும் இந்த நாட்டிற்குள் வந்தது ஆட்சியை நடத்தியது எல்லாமே நாம் விரும்பியது அல்ல என்றாலும் அது நடந்து முடிந்த விஷயம் அதற்காக இன்று வரலாற்று நிகழ்வுகளை மாற்றியமைக்க முயல்வது சரியான சிந்தனை அல்ல
    ராமர் பிறந்த இடத்தை பாபர் இடித்ததாகவே வைத்துக் கொள்வோம் அந்த முட்டாள் மன்னனின் செயலுக்காக காலம் கடந்தும் பரிகாரம் காண நினைப்பது எந்த வகையில் தர்மம்? 

    ராமர் கோயிலுக்கான போரட்டாம் பல தலைமுறையாக நடந்து வருகிறது சில சுயநல அரசியல்வாதிகளால்தான் பிரச்சனை பூதாகரமானது எனவே நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்று சிலர் சொல்லலாம்
     கற்பின் வடிவான சீதாதேவியை கடத்திக் கொண்டுப்  போன ராவணனே நிராயுதப்பாணியாய் நேரில் நின்றபோது இன்றுபோய் நாளை வாவென சொன்னவன் ஸ்ரீராமன் அவனது நிஜமான குழந்தைகள் நாம் என்றால் எதிரிகள் யாராக இருந்தாலும் எத்தகையவராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் அன்போடு அரவணைக்க வேண்டும் அதுதான் ராமனுக்கு நாம் செலுத்தும் வந்தனம்
    இந்த அறிவுரை இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் ராஜபோகம் தன்னைசுற்றி இருந்தாலும் குடிசையில் வாழ்ந்தவர் முகமது நபி தனது கிழிந்த ஆடையை  தானே தைத்து உடுத்தி பொது வாழ்க்கைக்கு புது இலக்கணம் வகுத்தவர் அவர் தனது கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தந்தைவழி உறவினரையே மாற்ற நினைக்காமல் மாற்ற முனையாமல் மற்றவர்களின் கருத்து சுதந்திரத்திர்கு மதிப்புக் கொடுத்தவர் அண்ணல்நபி அவரின் வழியில் நடக்கும் எந்த உண்மையான முஷல்மானும் கலவரப்பாதையை தேர்ந்தெடுக்க மாட்டான்

    உலகில் எந்த நாட்டிலும் இந்துக்களைப்போன்ற பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினருக்கு சமஅந்தஸ்து வழங்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம் இந்தஉண்மையை உணர்ந்து ஏழ்மையில் கிடக்கும் லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களுக்கு கல்வியும் மருத்துவமும் கொடுக்க பாடுபடுங்கள்

     முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தினால்தான் வளர்வார்கள் என்பது வெறும்மாயை முஸ்லீம்களுக்கு வாழ்வாதாரம் வழங்கினால்தான் இஸ்லாம் வாழும் என்பதுதான் எதார்த்தம்

     எனவே ஆயுதங்களுக்கு செலவிடும் பணத்தை ஆக்க வழியில் பயன்படுத்த உங்கள் தலைவர்களுக்கு சொல்லுங்கள் சுண்ணாம்பாலும் செங்கல்களாலும் உருவான ஒருகட்டிடத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டு சாவது மடத்தனம்

    காந்தி பிறந்த மண்ணில் அந்த அவலம் மீண்டும் மீண்டும் நடப்பது வேதனை மட்டுமல்ல அவமானமும் ஆகும் பாபரும் ஒளரங்கசீப்பும் தான் அந்நியர்களே  தவிர இங்கிருக்கும் முஸ்லீம்கள் யாரும் அந்நியர்கள் அல்ல நம் சொந்தங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் நமது ரத்தப்பந்தங்கள்

   ஒரு இந்துவை கொலை செய்துவிட்டால் ஜிகாத் நடத்தியதாக அல்லா மகிழ்வார் என்று எந்த முஸ்லீம் சொன்னாலும் அவன் நபிவழியை கேவலபடுத்தியவன் ஆவான்

    இஸ்லாமியனை கொன்றால் ராமன் மகிழ்வான் என எந்த இந்து நினைத்தாலும் அவன் ராமனை மட்டுமல்ல இந்து தர்மத்தையே குழிதோண்டி புதைத்தவன் ஆவான்

    தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நாம் வழக்கமாக அக்பர் வீட்டில் ரமலான் கஞ்சிக் குடிப்போம் அக்பருக்கு ராமநவமி பிரசாதம் கொடுப்போம்+ comments + 36 comments

கருத்துக்கள் சென்றுசேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர வேண்டும். கயவர்களாக வாழும் அரசியல்வாதிகளும்,மதத்தின் பெயரால் தீமைகளை வளர்ப்பவர்களும் உணரட்டும்...


சக்திவேல்

நன்றி

சமுதாய சிந்தனை கொண்ட நல்ல கட்டுரைக்கு நன்றி அய்யா.

12:26

தமிழ்நாடு மத நல்லிணக்கத்தில் எவ்வளவோ பரவாயில்லை..

பாபர் மசூதிப் பிரச்னையை ஓட்டு வங்கி அரசியல் மட்டுமல்ல; உணர்வுத் தூண்டல்களும் சிக்கலாக்குகின்றன..

கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பது, இந்தியா போன்ற தேசத்தில் இயலாத ஒன்று..

@ARRநன்றி

மத நல்லிணக்கம் என்ற மாபெரும் சிந்தனைக்கு தீனி போடும் விதமான அருமையான கட்டுரை

@சிவஹரிநன்றி

சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வுகு நன்றி

@நிஷா


நன்றி

குலாம்பாஷா.GM
இன்றுள்ள மட்டுமல்ல இந்தஉலகம் தோன்றியது முதல் யாரும் வன்முறையை விரும்பியது கிடையாது இதை ஓட்டுப் பொருக்கி அரசியல் வாதிகளும் மதத்தின் உண்மையான கோட்பாடுகளை விளங்கிக் கொல்லாத மதவெறியர்களும் உணரவேண்டும் இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை ஆதரிப்பது கிடையாது "யார் ஒருமனிதரை வாழவைக்கிராரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் வாழவத்தவர்போலாவர்,யார் ஒருமனிதரை அநியாயமா கொலை செய்கிறாரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவர் அவர்."(அல்குரான்) முஸ்லிம்கள் ஏற்கனவே தங்கள் நிலையை தெளிவுபடுத்திவிட்டார்கள் கோர்ட்டு தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று. அக வரக்கூடிய தீர்ப்பு எதுவாகிலும் இருதரப்பும் சட்டப்படிதான் வழக்கை சந்திக்கவேண்டுமே தவிர வன்முறையை நாடக்கூடாது.
வன்முறை செய்பவர்களை எந்தமதத்தைசர்ந்தவராக இருந்தாலும் காவல் துறை சரியானமுறையில் விசாரணை மேற்கொண்டு ,நீதித்துறையும் மதமட்சருயங்களுக்கு அப்பாற்ப்பட்டு கடுமையாக தண்டித்தாலே தீவிரவாதம் வாதம் கண்டு ஒழியும் நாடு சுபிட்சமடையும் மக்களனைவரும்இன்புறுவர்.

பொது சிந்தனை நிறைந்த‌
மிக சிறந்த கட்டுரை
உண்மையின் செறிவு மிகுந்த கட்டுரை
அரசியல் சாயம் பூசுவாரன்றி
அனைவரும் ஏற்றுக்கொள்ளதக்க கருத்து

@GM.BASHAநண்பருக்கு நன்றி

நன்னா இருக்கு கட்டுரை

Anonymous
17:26

உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை .உங்களைப்போன்றவர்கள் தான் காவி கும்பலை தோலுரித்துக் காட்டவேண்டும் . இதில் குளிர் காயும் அரசியல்வாதிகளை அடையாளம் கட்டவேண்டும் .குருஜியி கருத்து வெற்றி காணவேண்டும்

Anonymous
19:54

முக்கயமான நேரத்தில் அப்பாவி மக்கள் படிக்க வேண்டிய அருமையான கட்டுரை.மண்ணில் இருக்கும் வரை மனித நேயத்துடன் வாழ்வது நன்று. நன்றி sharmila

நீங்கள் சொல்வது மிக மிக உண்மை. கடந்தவைகளுக்காக வருந்துவதோ கோபம் கொள்வதோ வீண்வேலை.

@reshmakutty


நன்றி

மதங்களைக் கொண்டு, மதம் பிடிக்கும் மனிதர்கள் மாறினால் மகிழ்ச்சிதான்.

@அன்பு
நன்றி

Kannan
11:45

nalla katturai guruji
arasiyal vyayhikal matrum matha thalaivarkal othungikondal ayothyavil vaalum hindukkalum, muslimkalum amarndhu pesinal indha pirachanaikku oru nalla theervu kanalam

babarum, orangashipum anniyarkal ingirukkum muslimkal anaivarum indiyarkal endru unarnthal nam naadu vallarasavathai yaralum thadukka mudiyathu

athepola kasmir pirachanaikku orey theervu raanuva aatchi mattume
kasmir-il vaalum muslimkal naam indiyar enbathai unarndhuvittal theeviravathikalukkum pakisthaniyarukkum velai erukkaathu

indiyavai aalum aanda arasukal Vote Bank Arasiyalai kaivittal Kaavi, Pachai, Vellai........theeviravatham erukkaathu JAI HIND

Anonymous
11:56

நல்ல கட்டுரை குருஜி
அரசியல் வாதிகள் மற்றும் மத்த தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டால் அயோத்யாவில் வாழும் ஹிந்துக்களும் , முஸ்லிம்களும் அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணலாம்

பாபரும் , ஓரங்கஷிபும் அன்னியர்கள் இங்கிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்கள் என்று உணர்ந்தாள் நம் நாடு வல்லரசவதை யாராலும் தடுக்க முடியாது

அதேபோல கஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு ராணுவ ஆட்சி மட்டுமே
கஷ்மீர் -இல் வாழும் முஸ்லிம்கள் நாம் இந்தியர் என்பதை உணர்ந்துவிட்டால் தீவிரவதிகளுக்கும் பாகிஸ்தானியருக்கும் வேலை இருக்காது

இந்தியாவை ஆளும் ஆண்ட அரசுகள் Vote பேங்க் அரசியலை கைவிட்டால் காவி , பச்சை , வெள்ளை ........தீவிரவாதம் இருக்காது ஜெய் ஹிந்த்

Anonymous
13:11

வாழ்த்துக்கள்

இந்த கட்டுரையை அனைவரும் படிக்கவேண்டும் முடிந்தால் இங்கிலீஷ் ஹிந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்தீர்களானால் இன்னும் பலரை தங்களின் கட்டுரை சென்றடையும்

Your article is 100% correct. Congratulations Guruji

24-m THETHIYIL VARA IRUPPATHU BAABAR MASUTHI IDIPPU VAZHAKKIN THEERPPU ALLA! ATHU 80 VARUSHAMAAHA NADAKKUM SOTHTHU VALAKKU! IRUNTHAALUM ELLORUM COURTIUN THEERPPAI MATHIKKA VAENDUM!

@lcnathanநன்றி

இது உரிமைக்கும் கள்ளதனத்திற்கும் இடையே நடக்கின்ற போராட்டம். ராமர் பிறந்த இடம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவிலை இடித்தே மசூதி கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரங்கள் ஏறாளம். முன்னோர்கள் கட்டிய கோவிலை இடிக்காமல் அருகிலேயே பாபர் மசூதி கட்டியிருந்தால் யாரும் பிரட்சனை செய்யப் போவதில்லை. கோவில் கட்டிய கற்களையே மசூதிக்கும் பயன்படுத்தி அதனை அழிக்கும் எண்ணம் அவருக்கு வந்திரக்கக் கூடாது. அந்த தவறை காலம் கடந்து நம்மவர்கள் சரி செய்திருக்கின்றார்கள். இது உரிமைக்கும் கள்ளத்தனத்திற்கும் இடையேயான போராட்டம்.

@ஜெகதீஸ்வரன்.


தகவலுக்கு நன்றி

இன்று மசூதியை அகற்றி அங்கே கோவில் கட்டினால் நாளை அது இடிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
இரு தரப்பும் ஒத்து வந்து அந்த இடத்தை ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக நிறுவி விட்டு வேறு இடத்தில கட்டிக் கொள்ளலாம். வரலாற்று சின்னமாக இருக்கும் ஒரு விஷயம் காலம் காலமாக பலராலும் வந்து பார்க்கப் படும். எல்லா தரப்பு மக்களும் வந்து போவர்.

Anonymous
14:52

பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்


1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார்.

பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

Anonymous
14:54

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.


வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.@virutcham

உங்கள் கருத்துதான் என் கருத்தும் ஆனால் இதை செய்யபோவது யார் ?

Anonymous
07:23

shri raamaanantha guruji avargaLE, ungaL upathEsaththil mukkiyamaana pala vishayangaLil theLivu iruppathaaga theriyavillai. islaamiya aakkiramippaaLaraana baabar namathu naattu muSleemgaLukku mukkiyamaanavanaaga irukkavEndumaa? namathu makkaLin vaazhvil aatharsa purushanaaga purushOththamanaaga karuthappadum raaman piRantha idaththil uLLa kOvilukku neethimanRamE anumathi aLiththaPOthum (1952 aam aaNdu faisaapaath neethimanRa theerPPu) hinthukkaLai nimmathiyaaga vazhipaadu nadaththa anumathikkaatha arasaangaththaiyum arasiyalvaathigaLaiyum eppadi ERRukkoLLa mudiyum?

Anonymous
14:55

u say we are all indians and we need to be brothers and sisters.
good,but what about my brothers and sisters getting killed by our governments,we still have to think we are indians,or u say its politics,we are not into that,whether it is politics or anything else you call,how do you justify whn our own govenmnent sending troops to kill people who are fighting fo their freedom.let you not say it is a neighburing country,(who kill our people) and we need tto help themto fight against terror,please understand terror and freedom fight are 2 different things.dont u hv any records showing EELAM was separate counry and ruled by tamilians.1(H)INDIAN KILLED IN AUSTRALIA AND ENTIRE COUNTRY AND GOVERNMENT IS AGAINST THAT,WHEREAS SOMANY TAMIL FISHERMEN ARE KILLED BY LANKAN NAVY AND THE GOVT YS NOTHING,and the minister say NOW THE KILLING IS REDUCED SO NOHING TO WORRY,bcz for them (H)INDIAN LIFE IS PRECIOUS AND NOT TAMILANS.so for me its better to be a tamilan and not (h)indian.TAMILARS THIRST IS INDIPENDET EELAM.sri

வினோத் கன்னியாகுமரி
21:29

நீங்கள் சொல்வது மிக மிக உண்மை. கடந்தவைகளுக்காக வருந்துவதோ கோபம் கொள்வதோ வீண்வேலை.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...


Next Post Next Post Home
 
Back to Top