( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அண்ணன் தம்பி சண்டைக்கு இப்போது நேரமில்லை


   பலநூற்றாண்டு காலமாக போராட்டத்தில் இருந்த ஒரு சிக்கலுக்கு 60 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது இது சரியான தீர்ப்பா? இல்லையா இதை சம்மந்தப்பட்ட இருதரப்பாரும் ஏற்பார்களா? மாட்டார்களா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் மிகச்சிக்கலான ஒரு பிரச்சனைக்கு பக்கம் சாராமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் தராமல் நடுநிலமையோடு தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிபதிகளுக்கு முதலில் நம்பாராட்டுதலை தெரிவிக்க வேண்டும்

   இந்துக்களும் முஸ்லிம்களும் உணர்வுப்பூர்வமாக கொந்தளித்து விடாமலும் நாட்டு அமைதிச்சூழலுக்கு எந்தவகையிலும் குந்தகம் ஏற்படாமலும் குறிப்பாக வரலாற்று ஆவணங்களையும் நம்பிக்கைகளையும் இணைத்து இந்துவாகவும் முஸ்லிமாகவும் தங்களைக் கருதாமல் சட்டத்திற்கு உட்பட்ட நீதிபதிகளாக மட்டுமே கருதி தீர்ப்பு வழங்கியிருக்கும் விதம் எவ்வளவு பாராட்டினாலும் போதாது காந்திப் பிறந்த மண்ணில் மட்டும்தான் இத்தகைய அற்புதங்கள் நடக்க இயலும் சின்னச்சின்ன குறைபாடுகள் இருந்தாலும் இந்தியா இன்னும் நியாய வழியில்தான் நடைபோடுகிறது என்பதற்கு இத்தீர்ப்பு நல்ல உதாரணம்

   இருப்பினும் அனுபவம் வாய்ந்த சில அறிவாளிகள் இந்தத் தீர்ப்பு அரசியல்மயமானது என்று கருதுகிறார்கள் அவர்களின் கூற்றையும் தவறுதலானது என சொல்லிவிட முடியாது இருந்தாலும் இது வெறும் ராமர்கோவில் பாபர் மசூதி சம்மந்தப்பட்ட விவகாரமாய் மட்டும் இருந்திருந்தால் அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொள்ளாமல் சட்டத்தை மட்டும் மனதில் வைத்து தீர்வு சொல்லியிருக்கலாம் 

   நல்லதோ கெட்டதோ இந்த விஷயத்தில் அரசியலும் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள் அதனால் தீர்ப்பிலும் அரசியல் நெடி வீசத்தான் செய்யும் அதை தவிற்க முடியாது மேலும் தினமணி போன்ற உண்மையான நடுநிலை இதழ்கள் நிலத்தை மூன்று பேருக்கும் பிரித்துக் கொடுத்திருப்பதைப்பற்றி சொல்லும்போது கட்டப்பஞ்சாயத்துப் பாணியில் தீர்ப்பு இருப்பதாக சொல்லியிருந்தார்கள் 


   இதுசற்று மனவேதனையான வார்த்தை என்றாலும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை இல்லை வழக்கில் சம்மந்தப் பட்ட முத்தரப்பினடமும் நிலம் தங்களுக்குத்தான் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லாத போது இடத்தை அரசு வசம்தான் நியாயப்படி ஒப்படைத்திருக்க வேண்டும்

    இந்த வழக்கையே முன்னுதாரணமாய் கொண்டு நளை வேறு யாராவது குறும்புக்காரர்கள் மதிப்புமிக்க புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இதே போன்ற தீர்ப்பை தங்களுக்கும் தரவேண்டும் என்று கேட்டால் கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது

   ஆனால் இந்தத்தீர்ப்பு அப்படிப்பட்ட செயல்களுக்கு வழிகோலிவிட கூடாது என்ற அக்கரையில் இத்தகைய கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் நாடு எதிர்நோக்கி நிற்கும் இக்கட்டான இந்த விஷயத்தில் நிலத்தை அரசாங்கத்திடப் ஒப்படைத்திருந்தால் நாம் எதிர் பார்ப்பது போல் அங்கு அறுங்காட்சியகமோ அமைதிப் பூங்காவோ ஏற்படாது 


   இன்று ஆட்சியிலுள்ள கட்சி தனக்கு சாதகமானதையும் நாளை ஆட்சிக்கு வருபவர்கள் தங்களுக்கு சாதகமானதையும்தான் செய்யத் துணிவார்களே தவிற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட விடமாட்டர்கள் பிறகு என்ன நடக்கும் பழையபடி வெட்டுக்குத்து நாடே ரத்தக்காடாகும் வேண்டுமா அந்நிலை?

    ஆகவே சண்டைக்காரர்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுத்ததுதான் சரியானது இருப்பினும் சில நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை நாளை நீதிமன்றம் சொன்னதைப்போல நிலம் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது என வைத்துக் கொள்வோம் வக்பு வாரியம் மசூதிகட்டும் இந்து அமைப்பினர் கோயில் கட்டுவர்கள்

    இருதரப்பாரும் வழிபாடு செய்ய ஆரம்பிக்கும் போது புதுப்பிரச்சனைகள் தலைதூக்கும் இவன் பூஜை செய்யும் போது அவன் பாங் சொல்லுவான் அவன் தொழுகை நடத்தும் போது இவன் மேளதாளம் தட்டுவான் இப்படி ஏற்படாது என யாரும் உறுதிசொல்ல முடியாது இந்தமாதிரி சிக்கல்கள் நாடு முழுவதுமே பல இடங்களில் நடப்பது அன்றாடங்கதை

   இந்தக்கதை மற்ற இடங்களில் நடந்தால் எதுவும் பெரிய விஷயமாகப் படாது அயோத்தியில் நடந்தால் கேட்கவா வேண்டும் ? வெறும் வாய்க்கு மெல்ல எதாவது கிடைத்தால் ஊரையே துண்டாட இரண்டு பக்கமும் ஏராளமான வல்லூருகள் காத்துக்கிடக் கின்றனவே

   எனவே அரசாங்கம் இத்தைகைய சில்லரை விஷயத்தையும் கவனத்தில் எடுத்து ஜாக்கிரதையாய் நடக்க வேண்டும் மேலும் இந்த தீர்ப்பை ஏற்காமல் இஸ்லாமிய அமைப்பு மேல் முறையீட்டுக்கு போகப் போகிறதாய் உடனே அறிவித்து விட்டார்கள் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது அல்ல அது அவர்களின் உறிமையும் கூட

   ஆனால் ஒரு பிரச்சனையை முடிக்காமல் இழுத்துக் கொண்டே செல்வது நாட்டுக்கு நல்லதல்ல மூன்றில் ஒருபங்கு இடத்தைப் பெற்றுக் கொள்வதினால் நாட்டில் முஸ்லிம்களுக்கு உரிய எந்த உறிமையும் இல்லாது போய்விடப் போவதில்லை அவர்களை யாரும் தரக்குறைவாக கருதிவிடப்போவதும் இல்லை மாறாக இந்திய முஸ்லிம்களின் மதிப்பும் மரியாதையும் பலமடங்கு உலகில் உயரும்

   சிலர் கேட்கலாம் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டது போல இந்துக்களுக்கு ஒரு பங்குதான் சொந்தம் என்று தீர்ப்பு சொன்னால் இந்துக்கள் அதை ஏற்றுக் கொண்டு மேல்முறையீட்டுக்கு போகாமல் இருந்து விடுவார்களா? என்று அப்போதும்  கூட நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் சொல்லவேண்டும்

   நம்முன்னால் இப்போது நிற்பது இந்துக்கள் பெரியவர்களா முஸ்லிம்கள் பெரியவர்களா என்ற பிரச்சனை அல்ல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய எதிரிகள்  நம்மை வீழ்த்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை எதிர்கொள்ள ஒற்றுமையாக உழைக்க வேண்டிய நேரமிது அண்ணன் தம்பி  சண்டைக்கு இப்போது நேரமில்லை

+ comments + 18 comments

அந்தோனி
00:15

சபாஷ்! சரியான தீர்ப்பு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது ஆனால் நடைமுறையைப் பார்த்தால் சிக்கல் இத்தோடு தீறுமுன்னு தோணலையே எல்லாம் கடவுள் செயல்

இறை வணக்கங்கள் , தங்களைப்போலவே நாத்திக ஈடுபாடு பின்னர் ஆன்மீக தெளிவு அதனால் தானோ என்னவோ தங்களின் கருத்துக்கள் அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. தங்களைப்பற்றி படித்தேன் உண்மையாகவே உங்களின் போராட்ட குணம் உன்னதநிலைக்கு உயர காரணம். தங்களின் பணி தொடர இறை அருள் வேண்டுகிறேன்.

@Pazhaselvaraaju


தங்களின் கருத்துக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி சகோதரரே நாம் சாதாரணமனிதர்கள் கடவுளின் ஆற்றலுக்கு முன்னால் துரும்புக்கு கூட சமமாக மாட்டோம் தன்னை இல்லை என சொல்ல வைப்பவனும் அவன்தான் உண்டு என நம்பவைப்பவனும் அவனே! நம்மால் முடிந்தவரை நல்லதை சிந்திப்போம் செய்வோம் உங்கள் ஆலோசனையை தொடர்ந்து தாருங்கள் சேர்ந்து அவனுக்காய் உழைப்போம்

எனது இடுகை உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறது.

இப்போது நமக்குள் வேண்டியது சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும். உங்கள் பதிவில் நடுநிலை தெரிகிறது.

இதே கருத்துக்களை எனக்கு தோன்றிய விதத்தில் தந்துள்ளேன்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/
தங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.
நன்றி.

Anonymous
10:37

சலாம்
அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கு ..... அதற்க்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா??? .... நீதி என்பது தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டும் .... ஆம் அல்லது இல்லை என்பதுதான் நீதி .... அதைவிடுத்து பிரித்து கொடுக்க நீதிமன்றம் யார் ???
பக்க சார்பு நீதிபதிகளுக்கு வந்தால் ...நாட்டில் நீங்கள் எதிபார்க்கும் அமைதி எப்படி வரும்?? நாட்டின் கடைகோடி பாமரன் கடைசியாக நம்புவது நீதிமன்றங்களைதான் .... அவைகளும் தாதகளாக நடந்துகொண்டால் ...அவன் எங்கு போவான்???

Annanaka irunthalum thampiyaka irunthalum niithi enpathum tharmam enpathum
samamaka irukka vendum athuthan GEETHAI solkirathu.. ithu tharmama
ithuthan niithiya.. oru unmaya HINDu vaka irunthu
Thiirpu parri pesalame

இந்த தீர்ப்பை தவறு என்று விமர்சிப்பவர்கள் விரும்புவது இது மொத்தமாக வக்ப் அமைப்புக்கு சென்றிக்க வேண்டும் என்பது தான். அப்போது கூட அது முஸ்லிம்களுக்கு சென்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு முஸ்லிம் அமைப்புக்கு சென்றிக்கிறது அவ்வளவே. இப்போது மூன்று அமைப்புகளுக்கு சென்றிருக்கிறது அவ்வளவே.
இதில் நான் முக்கியமாக நினைப்பது யாருக்கு எவ்வளவு என்பதை விட இருபாலருக்கும் இந்த மண் சொந்தம் என்ற ஒரு சகோதரத்துவ உணர்வைக் கொடுக்க முயன்றிருப்பது தான். நடைமுறைச் சிக்கல் இருக்கிறது தான்.
ஆனால் ஒரு சாராரிடம் கொடுத்திருந்தால் மற்றவர்களின் உரிமை முற்றிலுமாக மறுக்கப் பட்டது என்று ஆகி இருக்கும். அது தவிர்க்கப் பட்டு இருக்கிறது என்பது நாடு தழுவிய இந்த அமைதியே சாட்சி.

இதில் இரு மதம் சம்பந்தப் பட்டவர்களை விட நடுநிலைவாதிகளாக வேஷம் போடுபவர்களுக்கும் பிற மத பஞ்சாயத்து வாதிகளுக்குமே பெருத்த ஏமாற்றம். அவர்கள் தான் அதிகம் குதிக்கிறார்கள். அவர்கள் வெகு கவனமாக மூன்று நீதிபதிகளும் ஒத்துப் போயிருக்கும் விஷயத்தையும் மற்றும் இந்திய அகழ்வாராய்ச்சி அறிக்கை இங்கே முக்கிய கவனம் பெற்று இருக்கிறது என்பதையும் மறைத்து முரண் கருத்துக்களை மட்டும் பரப்பி ஒரு மத நம்பிக்கை அடிப்படையிலான தீர்ப்பு என்று சொல்லி தூண்டி விடும் வேலையை செய்கிறார்கள். இவர்களுக்கு தேவை வம்பு வாதங்களும் வன்முறையும். தாங்கள் பாதுகாப்பான இடத்தில அமர்ந்து கொண்டு தூண்டிக் கொண்டுஇருக்கிறார்கள்

மாறுபட்ட பார்வை ...

ஒரு பிரச்சனையை முடிக்காமல் இழுத்துக் கொண்டே செல்வது நாட்டுக்கு நல்லதல்ல மூன்றில் ஒருபங்கு இடத்தைப் பெற்றுக் கொள்வதினால் நாட்டில் முஸ்லிம்களுக்கு உரிய எந்த உறிமையும் இல்லாது போய்விடப் போவதில்லை அவர்களை யாரும் தரக்குறைவாக கருதிவிடப்போவதும் இல்லை மாறாக இந்திய முஸ்லிம்களின் மதிப்பும் மரியாதையும் பலமடங்கு உலகில் உயரும்//

ஐயா மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். இதுதான் இந்தியாவை அமைதிப்பாதையில் அழைத்துச் செல்லும். தங்களின் இந்தப் பதிவை வரவேற்கிறேன். நாம் சகோதரர்களாக வாழ்வோம். விட்டுக்கொடுப்போம்.

'விட்டுக்கொடுப்பவன் கெட்டுபோவதில்லை' என்பது எங்கள் ஊரில் உள்ள வழக்கு மொழி.

சபாஷ் சரியான நேரத்தில் சரியானக் கட்டுரை

இந்த பதிவிற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்த அத்தனை அன்பர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்

சமூக சிந்தனை மிக்க பதிவு,வாழ்த்துக்கள்

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous
23:16

இப்போதைய சூழ்நிலையில் இதை விட சிறந்த தீர்ப்பு இருக்குமா என
தெரியவில்லை. இத்துடன் இந்த பிரச்சனை முடிந்தால் சரி. இல்லையாவிடில்
இதற்கு முடிவே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு திறந்த மடத்துடன்
ஏற்றுக்கொண்டு ஒற்றுமையுடன் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக
செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாடு நோக்கி ஏகப்பட்ட
மற்ற தலையாயண பிரச்சனைகள் இருக்கிறது. அதில் எல்லோரும் கவனம்
செலுத்துவோம்.

@Anonymousநன்றி


Next Post Next Post Home
 
Back to Top