( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனிதர்களை கண்காணிக்கும் ஒற்றர்கள்


        நமது இந்து மதத்தை பற்றி குறை கூறுபவர்கள் உங்கள் மதத்தில் பல கடவுள்கள் இருக்கிறார்கள் ஒரு தெய்வ வழிபாடு என்பது இல்லைவே இல்லை.  என்று முக்கியமான ஒரு குற்றசாட்டை முன் வைக்கிறார்கள்.  நம்மில் பலரும் அந்த குற்றசாட்டை கேட்டு அவர்கள் சொல்வதும் உண்மைதானே.கல்விக்கு ஒரு கடவுள்,  செல்வத்திற்கு பெற, இறப்பிலிருந்து தப்பிக்க என ஏகப்பட்ட கடவுள்களை வைத்திருக்கிறமே.  என்று தனக்குள்ளேயே சமதானம் சொல்லி கொள்பவர்களும் உண்டு, பல தெய்வ வழிபாடு எல்லாம் இல்லை ஒரே தெய்வம் தான் அதற்கு பல பெயர்களை வைத்திருக்கிறார்கள்  என்று பதில் சொல்பவர்கள் கூட ஒரே தெய்வத்திற்கு பல பெயர்கள் என்றால் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறதே யார் அந்த தேவர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் பலநேரம் தவிக்கிறார்கள்.  நெருப்பின் கடவுள் அக்கினி காற்றின் கடவுள் வாயு, தண்ணிரின் கடவுள் வருணன் என்று எல்லாம் சொல்லப்படுபவைகள் உண்மையில் கடவுள் தானோ என்று குழம்பியும் போகிறார்கள்.

   எது எப்படியிருந்தாலும் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றால் யார்? தேவர்கள் என்பது கடவுளை குறிக்கும் வார்த்தையா? இல்லையா? என்று எல்லாம் நமக்குள் சந்தேகங்கள் கிளம்புவதை தவிர்க்க இயலாது. உண்மையில் தேவர்கள் என்ற வார்த்தை கடவுளை சுட்டி காட்டுவது அல்ல தெய்வம் என்றால் தான் கடவுளை குறிக்கும் அப்போது தேவர்கள் என்றால் யார்?

   கிறிஸ்த்துவர்களின் வேத நூலான பைபிளை படித்தவர்கள் அதில் தேவ தூதர்கள் என்று சிலர் பூமிக்கு வந்து போவதை குறிப்பிட்டு இருப்பதை அறிவார்கள். தேவதூதர்களின் முக்கியமான பணி கடவுளின் சித்தத்தை மனிதருக்கு தெரிவிப்பது மனிதர்களின் கஷ்டங்களை நீக்க சொல்லி கடவுளிடம் மன்றாடுவது. இப்படி தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

  கத்தோலிக்க மத பிராத்தனை கூட ஏசுநாதரின் தாயாரான கன்னி மரியாளை நோக்கி எங்களுக்காக கர்த்தரை வேண்டி கொள்ளும் என்ற பிராத்தனையை கேட்டாலே தேவர்கள் மற்றும் தேவதைகள் என்பது கடவுளின் தூதர்கள் அல்லது பணியாளர்கள் என்பது சொல்லாமலே விளங்கும். இஸ்லாமிய மதத்தில் கூட மலக்குகள் என்று சிலரை குறிப்பிடுவார்கள். இறுதி தீர்ப்பு நாளன்று மனிதர்களின் நல்லது கெட்டதுகளை எடுத்து சொல்லி விளக்குபவர்கள் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்லுகின்றன.


   இனி இந்துமத தேவர்கள் என்பவர்கள் எத்தகையானவர்கள் என்பதை சிறிது ஆராய்வோம். கடவுள் என்பவன் இந்துமத தத்துவப்படி ஒருவனே அவனே படைக்கும் போது பிரம்மாவாகவும், காக்கும் போது விஷ்ணுவாகவும், அழிக்கும் போது சிவனாகவும் இருக்கிறான். கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும், உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் அதனதன் வாழ்வுக்கு ஏற்றுவாறு ஒழுங்குபடி அமைத்து கொடுப்பது தேவர்கள் ஆகும். எப்படி கிறிஸ்த்துவத்தின் தேவதூதர்கள் என்பது கடவுளின் தூதர்களோ, இஸ்லாத்தின் மலக்குகள், இறை பணியாளர்களோ அப்படி தான் இந்து மதத்தில் தேவர்களும். மனிதர்களை போலவே தேவர்களும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் தான். மனிதர்களுக்கு உயிரோடு வாழும் காலங்களில் பௌதிக உடல் மட்டும் தான் உண்டு, ஆனால் தேவர்களுக்கோ உருவமும் உண்டு, உருவம் இல்லாத நிலையும் உண்டு.

     கடவுளால் படைக்கப்பட்ட தேவர்களை தவிர மனித வாழ்க்கையில் உயர்ந்த தவத்தையும், மிக உயர்ந்த ஞானத்தையும் எல்லாவற்றையும் விட சிறந்த தியாகத்தை புரிந்தவர்களும், ஆத்ம பரிணாமத்தின் மூலம் தேவர்கள் ஆவதும் உண்டு, தேவர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களின் பெயர்களும் கின்னரர், கிம்புருஷர், யட்சர், சித்தர், சாரணர், சாத்தியர் கந்தர்வர் என மாறுபடும். தேவர்களுக்கு மூன்று வகையான ரூபங்கள் உடையதாக இந்து மத வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. தேவலோகத்தில் புனித சரீரத்தோடு அவர்கள் இருப்பதை ஆதி தைவீக ரூபம் என்றும், பூமியில் பஞ்ச புதங்களோடு கலந்து உருவமற்று இருக்கும் போது ஆதி பௌதிக ரூபம் என்றும், ஒவ்வொரு உயிர்கள் இடத்திலும் நிறைந்து இருக்கும் போது அத்யாத்மிக ரூபம் என்றும் சொல்லப்படுகிறது.

   மனிதர்கள் வாழுகின்ற பூமியை பூலோகம் என்று அழைப்பது போல் தேவர்கள் வாழுகின்ற அண்ட வெளியில் ஒரு பகுதியை தேவலோகம் என்று அழைக்கிறார்கள். இந்த தேவலோகம் என்பது பூமியிலிருந்து 85 நூறாயிரம் யோசனை தூரத்தில் அமைந்துள்ளதாக பாகவதம் உட்பட பல புராண நூல்கள் சொல்லுகின்றன. தேவலோகத்தின் தலைநகர் அமராவதி பட்டணமாகும். 


   இந்த பட்டணத்திலிருந்து தான் தேவர்களின் இணையற்ற அரசனாக தேவேந்திரன் ஆட்சி செய்கிறான் என்று பல பண்டைய நூல்கள் நமக்கு தரும் தகவல்களாகும் தேவலோகத்தில் இன்பத்தை தவிர வேறு எந்த உணர்வுகளுமே கிடையாது. பசி, பிணி, மூப்பு சாக்காடு என்ற நான்கு வகை கஷ்டங்கள் தேவலோக வாசிகளுக்கு இல்லவே இல்லை. இவர்களுக்கு பசியெடுப்பது இல்லையென்றாலும் அமிர்தத்தை மட்டும் உணவாக உட்கொள்கிறார்கள் நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.

   தேவர்களின் அரசன் தேவேந்திரன் என்பது நமக்கு தெரியும். இவனது மனைவி பெயர் இந்திராணி, மகன் பெயர் ஜெயத்தன், சுதன்மா என்ற தேவசபையில் அரசு புரியும் இவன் ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பவனி வருவானாம். இவனுக்கு கீழ் தான் முப்பது கோடி தேவர்களும்.

   இவர்களில் ஆதித்தர் என்ற தேவர் குழு பன்னிரெண்டு பேர் கொண்டதாகும். ஏகாதச ருத்திரர்கள் என்ற குழு பதினொரு போர் கொண்டதாகும். இது தவிர அஷ்டவசுக்கள், அஸ்வினி தேவர் இருவர் ஆக முப்பது பேர்தான் தேவர்கள் இந்த முப்பது பேருக்கும், தலைக்கு ஒரு கோடி பணியாளர்கள், இப்போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றால் யார் என்பது தெளிவாக தெரிந்திருக்கும்.  


    வைகத்தன், விபஸ்சுதன், வாசன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோக பிரகாசன், லோக சாட்சி, திருவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன் அங்கிமாலி என்பவர்கள் பன்னிரெண்டு ஆதித்தர்கள் ஆவார்கள். மகாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலகண்டன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோர்ப்பவன், கபாலி செழியன் என்ற பதினொரு பேரும் ஏகாதசருத்ரர்கள் ஆவார்கள். இந்த ருத்ரர்கள் படைப்பு கடவுளான பிரம்மாவின் நெற்றியில் தோன்றி அவன் படைப்பு தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தது அனலன், அனிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியுஷன், பிரபாசன் என்பவர்கள் அஷ்ட வசுக்கள் ஆவார்கள். நாசத்யன், தசரன் என்னும் இரண்டு பேர்கள் அஸ்வினி குமார்கள் என்ற மருத்துவ தேவர்கள் ஆவார்கள்.

  தேவர்களை மனிதர்கள் தங்காது ஊன கண்களால் காண முடியாது. நாமெல்லாம் பல ஆண்டுகள் பாடுபட்டால் தான் வேத அறிவை முழுமையாக பெற முடியும். ஆனால் தேவர்கள் பிறக்கும் போதே வேத அறிவோடு பிறப்பதாக சொல்லப்படுகிறது. வேத அறிவு என்பது வெறுமனே மந்திரங்களை உருப்போடுவது அல்ல. வேதத்தை நெஞ்சோடு நெஞ்ஞாக உணர்ந்து அனுபவிப்பதே ஆகும்.

  மனிதர்கள் செய்கின்ற செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை கடவுளிடம் இருந்து மறைக்க முடியாது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறோம். கடவுளுக்கு வேறு வேலையே கிடையாதா? உலகில் உள்ள ஒவ்வொருவரும் என்ன செய்கிறான். ஏது செய்கிறான் என்று கண்காணிப்பது தான் அவரது வேலையா? அது எப்படி ஒரே நேரத்தில் பலகோடி உயிர்களின்செயல்களை ஒரே கடவுளால் கண் காணிக்க முடிகிறது என்று பல நேரங்களில் நமக்கு சந்தேகம் வருவதுண்டு 


   அதற்கு விடையாக இந்த புராணங்கள் உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களின் ஒவ்வொரு உறுப்பிலும் தனித்தனியான கவனத்தை தேவர்கள் வைத்திருக்கிறார்கள் ஒரு செயற்கை கோளானது பூமியில் உள்ள அனைத்து நடமாட்டங்களையும் கண்டுபிடித்து கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பது போல தேவர்களின் கண்காணிப்பு கடவுளின் கவனத்திற்கு விஷயத்தை கொண்டு சேர்த்து விடும் என்ற ரீதியில் சூரியன் உயிர்களின் கண்களிலும் அக்னி வாக்கினிலும், இந்திரன் கைகளிலும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

  பொதுவாகவே மனிதர்களுக்கு அதிகமாக எண்ணங்கள் உற்பத்தியாவதற்கு கண்கள் தான் காரணமாகிறது. பல நேரங்களில் கண் வழியாக பெற்ற எண்ணமே வாய்வழி சொல்லாக வருகிறது. அடுத்த கட்டமாக கைகள் மூலம் செயலாக வடிவெடுக்கிறது. ஆக உயிர்களின் சிந்தனை சொல், செயல் எல்லாமே கடவுளால் ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்க படுகிறது

  இப்படி உணர்ந்தவன் தனது புத்தியை தீய வழியில் செலவிடமாட்டான். தீயவழியில் செலவிடாத புத்தி மனிதனை நற்கர்மங்களில் மட்டுமே ஈடுபடுத்துகிறது. நல்ல காரியத்தை தொடர்ந்து செய்யும் சாதாரண மனிதர்கள் கூட தேவர்களாகி விடலாம். இந்து மத சட்டப்படி மனிதன் தேவனாகலாம், ஆனால் தேவராக இருந்தால் கூட மீண்டும் மனிதராக பிறந்தால் தான் கடவுளின் பாதத்தில் ஐக்கியமாக முடியும் தேவராவதும் கடவுளோடு கலப்பதும் நாம் நல்ல மனிதர்களாக வாழ்கிறோமா என்பதில் தான் இருக்கிறது.

+ comments + 13 comments

சிந்தனைக்கு விருந்து.

@ரிஷபன்

நன்றி

manikandan
09:58

அருமைய இருக்கு குருஜி

@manikandan

நன்றி

Anonymous
12:26

நல்ல அருமையான கற்பனை வடிவம். ஏறத்தால 2000ம் வருடங்களுக்கு முன்னர் தமிழன் மேற்க்கு திசையில் சிறப்பான கடல் வணிகமும், கிழக்கு திசையில் பல ஆசிய நாடுகளை தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்து சிறப்பாக வாழ்ந்து வந்தான்.ஆனால் இன்றோ தன்னம்பிக்கையை இழந்து,அவநம்பிக்கையில் மூழ்கி, நடவடிக்கையில் மூடபழக்கவழக்கங்களை கையாண்டு,கடவுளே நம்மை இன்பமாக வாழவைப்பார் என்று புஜைக்கும்,கோவிலுக்கும் அதிக நேரத்தையும்,பணத்தையும் செலவு செய்து, இன்று நிற்பதற்கு ஒரு பிடி மண் இல்லாமல் தவிக்கின்றான். இதற்கான காரணத்தையும் கருவையும் ஆராய்ந்து திருத்திக்கொண்டால் நமது எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இல்லையென்றால் இப்போது நாட்டிற்கு வேண்டாதவர்களான நாம் பிறகு இவ்வுலகிற்கே வேண்டாதவர்ளாகிவிடுவோம்.

ததாஸ்து என்று ஒரு தேவன் நம் வீட்டில் எப்போதும் இருப்பான். அவன் எப்போதும் ததாஸ்து என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பான். நம் வாயில் இருந்து விழும் ஒவ்வொருவார்தைக்கும் இந்த ததாஸ்து உடனே அப்படியே ஆகட்டும் என்று ஆகி விடும். அதனால் எந்த நிலையிலும் தவறான வார்த்தைகளை பிரயோக்கிக்கக் கூடாது.

இது எங்கள் அம்மா அடிக்கடி சொல்லும் அறிவுரை. இதைப் பற்றி மேற்கொண்டு உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

@virutcham

அம்மா சொன்ன விபரங்கள் சரியானது தான் மேலும் விபரங்களை வரும் காலத்தில் பார்ப்போம்

சமாதான புறா
23:58

@Anonymous

அன்புள் சகோதரரே தமிழன் கடலை கடந்தான் எட்டுத்திசையும் கட்டி ஆண்டான் எல்லாம் உண்மைதான் ஆனால் அப்போது அவன் மேடை போட்டு நாத்திகம் பேசிக்கொண்டிருக்கவில்லை ஒழுங்கா கோவிலுக்கு போனான் சாமி கும்பிட்டான் பலஆலயங்கள் கூட கட்டினான் எப்போது முச்சந்தியில் மேடை போட்டு கடவுள் இல்லயென கத்தி கருப்புச்சட்டை போட்டானோ அன்னைக்கு கெட்டது நாடு பகுதறிவுவாதிகளை நம்பி நம்பி தமிழ் அம்மாக்கள் மம்மியானதுதான் மிச்சம் நம்ம பிள்ளைகள் தமிழை தமிழ் பண்பாட்டை மறந்ததுதான் மிச்சம் வயிற்றெரிச்சலை கிளப்பாதிரும்

Ismail
10:37

Dear Friends, One of the views expressed by Sri.Kamalakkannan of Pondichery who wrote many books on Sidhar ways that the "Kadavul" as denoted by us commonly has combination of three types of Energies namely.. Iraivan, Kadavul and Theivam.
Theivam is nothing but we commonly pray like siva, muruga, perumal and like sidhas who have realised who is God and are helping and guiding us to know the god.
Kadavul is nothing but one who himself has realised that god is within us. i.e.. Kada Vul.
Iraivan is the real God and who has created and managing the Universe as a whole and who is in everywhere( Irainthu Iruppavan- Iraivan).
I would like to open an debate on this subject and comments are welcome

19:10

நண்பரே வணக்கம்
நீங்கள் நன்றாக தெரிந்தே மக்களை குழப்புகின்றீர்! அப்பட்டமாக தெரியும் ஹிந்து மதத்தில் அளவற்ற கடவுள்கள் உண்டு என்று, ஆனால் முழி பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அல்லவா உமது இந்த கட்டுரை உள்ளது, சரி உங்கள் பேச்சு போலவே வாதித்து கொண்டாலும் ஏனையா அவர்களுக்கு ஈடான பெண் தெய்வங்கள், இதனை எப்படி எடுத்துகொள்வது? அதுமட்டுமா இன்னும் உமது மட்ட்ருமொரு கட்டுரையிலே வேதங்கள் என்பது மனிதர்கள் அந்த அந்த கால கட்டங்களில் அவர்களுக்கு தெரிந்த கருத்தை பதிவு செய்தது, மற்றும் வேதங்கள் தான் ஹிந்து மத நம்பிக்கையின் வித்து என்று வேற எழுதி உள்ளீர்கள்.... இது சராசரி மனித சிந்தனைக்கு உட்பட்டதா? எனது கேள்வி என்னவென்றால் பழமையானது என்று ஒரு சிறப்பு மட்டும் கொண்டு விளங்கும் வேதங்களை விட மிக உயர்வான கருத்துக்களை கொண்டு விளங்கும் உலகமக்களின் நல்வழி நூலான குரானை (மிக தெளிவான தீர்கமான கருத்துக்கள், நீர் முழுமையாக குர்ரானை படித்துருப்பீர் என்று நம்புகிறேன்) ஏன் பின் பற்றகூடது? அத போல் பைபிளை ( சில முரண்பட்ட கருத்துக்களும் பைபளிலே உண்டு)ஏன் பின்பற்றகூடாது? இதற்கு உமது மறுப்புரை ஏதேனும் உள்ளதென்றால் மீள் பாற்பதற்கு மிக்க ஆவலுடன் உள்ளேன். வேதங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களை நம்பி உம்மால் ஒரு இறை மறுப்பாளன் கேள்விக்கோ அல்லது ஓர் இறை கொள்கை உடயவுனுக்கோ விளக்கம் அளிக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அவ்வாறு இருப்பின் உமது முதல் விளக்கம் ஏதுவாக இருக்க எனது வாழ்த்துக்கள்! நான் வேதங்களை குறை சொல்லவேண்டும் என்ற நோக்கில் இதை பதிய வில்லை, மனிதன் தெளிவான சிந்தனைக்கு உட்பட்டவன் ஆவான், என்ற கருத்தின் கீழ் வேதங்களையும் இன்னும் பிற மார்க்க நூல்களையும் நோக்கினேன்! உமது நோக்களுக்கு முன் கூட்டியே எமது நன்றியை உரித்தாக்குகிறேன்!
இந்த

தேசாந்திரி
23:32

@Arif

ஐயா அறிவுஜீவியே நீர் வேதங்களை என்ன சொல்கிறீர் அது பழசு ஒன்னுக்கும் உதவாத குப்பை தூக்கி உடப்புல போடு என்கிறீரா? ஒன்றும் புரியலையே ?நேரா முகத்துக்கு முன்னால தைரியமா வேதங்களை விட குரான்தான் சிறந்தது என்று சொல்லவேண்டியதுதானே அதுக்கு எதற்கு இந்த பம்மாத்து வேலை எங்க நாலுவேதம் நாங்கத்தான் உசத்தி எங்களை நம்புகிறவன் மட்டும்தான் சொர்க்கத்துக்கு போவான் நம்பாதவங்க உருப்படவே மாட்டாங்க என்று சொல்லவில்லை நீ எதை நம்புனாலும் நம்பு ஆனா அதை உண்மையா நம்பு என்று சொல்கிறதே தவிற என்னை ஏத்துக்காதவன் சாத்தான் ஹாபீர்ன்னு சொல்லவில்லை நீ குரானை நம்பு அதுவழியில போ தப்புன்னு சொல்லவில்லை அடுத்தவன் வழியெல்லாம் முட்டாள்தனமானது என்று சொல்லாத உன்மீது கோபப்படுபவன் உன்னைத்திட்டமாட்டான் உன் நம்பிக்கையை திட்டுவான் தேவையில்லாத குழப்பம்தான் வரும் இந்துமதத்தில் ஆம்புள்ள கடவுளும் பொம்பளக்கடவுளும் இருந்தால் உனக்கு எதில் குறைந்து போச்சி எங்காளு எவனாவது வந்து ஐய்யோ இப்படி இருக்கேன்னு உன்கிட்ட அழுதானா? பேசாம வேலையைப்பாரு மற்றவனை சீண்டினால் உன் நாற்றமும் ஊர் முழுக்க வீசும் ஜாக்கிரதை

நல்ல கட்டுரை ஐயா.

மகாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலகண்டன இவர்கள் எல்லாம் ருத்திரர்கள். ஆனால் இந்த பெயரில் சிவனை வழிபட்டு வருகிறோம். இது குழப்பத்தை அதிகப்படுத்துகிறது.

"இந்து மத சட்டப்படி மனிதன் தேவனாகலாம், ஆனால் தேவராக இருந்தால் கூட மீண்டும் மனிதராக பிறந்தால் தான் கடவுளின் பாதத்தில் ஐக்கியமாக முடியும் "

சரியான வரிகள்

Mohamed Musthafa
23:32

Dear Viewers

Guruji sollum karuthai eduthukondu Adhai seyal paduthungal veen vivaadham vendaamaiya nalla thiyaanam pannungaiya pranayaama exercise ellam pannungaiya naam munnera munnerathaan naadu munnerum nam kudumbam munnerumaiya please.

Mohamed musthafa
Abu Dhbai


Next Post Next Post Home
 
Back to Top