( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வீடு வாங்க எளிய பரிகாரம்


வீடு நிலம் வண்டி வாகனங்கள் பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
                                                                                  மகாலட்சுமி   மதுரை

    பொதுவாக வீடு, வாகனத்தை ஒருவர் பெறுவாரா மாட்டாரா?  என்று விதியை அமைப்பது சுக்கிரனின் தன்மையாகும்.  அதேநேரம் சனிக் கிரகமும் இத்தகைய தேவைகளை நிர்ணயம் செய்கிறது.  பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 6ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் சொந்த வீடு அமைவதில் சிக்கல் ஏற்படும்.

    இப்படிப்பட்ட ஜாதகம் உடையவர்கள் சனி, சுக்கிரன் கிரகங்களைச் சாந்தி செய்வதை விட பூமிக் காரகனான செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.  வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலையும் பாரதேசிகளுக்குச் செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும்.  இப்படிச் செய்தால் நிச்சயம் இந்தக் குறை விலகும்.



உடல் ஆரோக்கியம் பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
                                                                               சபாபதி   சென்னை 
     ஒவ்வொரு ஜாதகத்திலும் 6வது இடம் உடல் ஆரோக்கியத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்.  இந்த இடத்தின் அதிபதியான கிரகத்தின் தன்மையைப் பொறுத்தே ஒருவன் உடல் ஆரோக்கியம் பலமாகவோ பலஹீனமாகவோ அமைகிறது.  ஆயினும் பொதுவாக சனி, ராகு, கேதுக்கள் நோய்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.  இந்த 3 கிரகங்களின் ஆகர்ஷணத்தை நல்ல முறையில் உடல் உறுப்புகளுக்குள் செலுத்தத் துணை புரிவது துளசி, வேம்பு, வில்வம், அருகம்புல் போன்ற மூலிகைகளைகளாகும்.  வாரத்தில் ஒருமுறை ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகைகளைச் சேர்த்துக் கொண்டால் உடலில் அதிகத் தொல்லைகள் கொடுக்கும் நோய்கள் வராது.  தன்வந்திரி பகவானையோ யந்திரத்தையோ முறைப்படி வழிபடுவது நல்லது.






Next Post Next Post Home
 
Back to Top