( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தோஷங்களில் இருந்து விடுபட வைக்கும் ஆஞ்சநேய வசிய மந்திரம்


     யல்நாட்டுக்காரர் ஒருவர் கேள்வி ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார், பகவான் கிருஷ்ணனை முழுமுதற் கடவுளாக இந்துக்களாகிய நீங்கள் கருதுவது சரிதான், காரணம். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சரித்திரத்தை அங்குலம் அங்குலமாக ஆராய்ச்சி செய்தாலும் ஒவ்வொரு அங்குலத்திலும் அவரின் பரிபூரணத்துவத்தை எங்களால் அறிய முடிகிறது, ஆனால். ஆஞ்சநேய ஸ்வாமி என்பவரை ஹிந்துக்கள் வழிபடுவதின் தாத்பரியத்தை புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது என்றும். அதற்கான காரணத்தைக் கேட்டும் எழுதி இருந்தார், அதற்கு விரிவான விளக்கத்தை அவருக்கு நான் அனுப்பிவிட்டேன்.

    ஆஞ்சநேயரின்பக்தி. தியாகம். தொண்டுள்ளம். வீரியம் இவையெல்லாம் நமக்குத் தெரியும், அயல்நாட்டுக்காரர்கள் அவரின் உருவத்தை மட்டுமே காண்பதனால் இத்தகைய கேள்விகள் எழுவது அவர்களுக்கு இயற்கை தான், இந்தக் கேள்வியில் கருத்துக்கள் பல  இருந்தாலும் ஒரு விஷயம் என்னை சுண்டி இழுத்தது, பரமாத்மாவான மாதவனுக்கும். பரம பக்தனான மாருதிக்கும் என்னென்னை ஒற்றுமைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்க அடிமனம் தூண்டியது, அந்த ஆராய்ச்சியின் தேடுதலோ என்னவோ சுவாரஸ்யமான பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன.


    மாருதியும் மாதவனும் தூதுவர்களாக செயல்பட்டு உள்ளனர், இருவரின் தூதுமே யுத்தத்தில் தான் முடிவடைந்திருக்கிறது, மாருதியின் தூது ராவண வதத்தையும். மாதவனின் தூது கௌரவ வதத்தையும் உலகிற்கு கொடுத்தது.

    ஹனுமான் சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வந்து இளைய பெருமாளையும். வானர சேனையையும் காப்பாற்றினான், இதனால் அவன் சஞ்சீவையா ஆனான், மதுசூதனனோ கோவர்த்தன கிரியை குடையாய்ப் பிடித்து யது குலத்தையும் ஆநிறைகளையும் காத்து கோவர்த்தனனான், அஞ்சனையின் மைந்தன் சீதா பிராட்டிக்கும். பீமசேனனுக்கும் விஸ்வரூப தரிசனம் கொடுத்து தான் விஸ்வநேசன் (உலகத்தை விரும்புபவன்) என்பதை பறைசாற்றினான், தேவகி மைந்தன் துரியோதனன் சபையிலும். குருஷேத்ர பூமியிலும் விஸ்வரூபம் தரிசனம் கொடுத்து தான் விஸ்வரூபி (உலக வடிவானவன்) என்பதை ஐயந்திரிபற உலகிற்குக் காட்டினான்.

    மேலும் “பாரிஜாத தருமூல வாஸினம்” ஆனவன் மாருதி, அதாவது பவழமல்லி மரத்தின் வேரில் ஆஞ்சநேயன் வாசம் செய்வதாகவும். “பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்தா ஸனோ பரி ” கொண்டவன், அதாவது பவழமல்லி மரத்தடியில் சிம்மாசனத்தில் இருப்பவன் ஸ்ரீ கிருஷ்ணனென்னுறம் பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.

    பரமாத்மாவான கிருஷ்ணனுக்கு வெண்ணையைப் படைக்கிறோம், பராக்ரமசாலியான ஆஞ்சநேயனுக்கு வெண்ணையை சாற்றுகிறோம், இதேபோன்று இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை கூறிக்கொண்டே செல்லலாம், இந்த ஒற்றுமைகளில் இருந்து எல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

    இறைவனுக்குப் பிரியமான நிஷ்காமிய கர்மத்தை செய்து கொண்டு பராபக்தியில் எவனொருவன் லயித்து விடுகிறானோ அவனுக்கு பகவான் தனது சர்வமங்களத் தன்மையை அருளிவிடுகிறான், அதாவது பக்குவப்பட்ட பக்தனிடத்தில் பகவத் தன்மை தானாகவே வந்தமைந்து விடுகிறது, இதனால். பகவானும் பக்தனும் ஒருவராகவே மாறிவிடுகிறார்கள் என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

    பகவத்தன்மையை முழுமையாகப் பெற்ற பக்தன் தன்னைப் போன்று பக்தர்களுக்கு மட்டுமல்ல. துன்பச் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் சாதாரணமான மக்களையும் துயர் துடைத்து தன்னிலைக்கு உயர்த்திவிட தயங்கமாட்டான், அந்த வகையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இன்றும் நாம் கண்ணால் காணுமாறு பல அற்புதமான லீலா வினோதங்களை புரிந்து வருகிறார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வயதில் இளமையும். உடலில் முதுமையும். மனதில் தெளிவுமற்ற ஒருவர் என்னைப் பார்க்க வந்தார், மனத்துணிச்சல் இல்லாததாலேயே தான் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும். விமோசனத்தை தேடித் தேடி அலுத்து விட்óடதாகவும். கூறினார், அவர் ஜனன ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்த போதும் அனைத்துக் கிரகங்களுமே வலுவிழந்தும் அவருக்கு எந்த நிலையிலும் கோள்கள் உதவ முடியாமலும் இருப்பதை உணர்ந்து கொண்டேன், இறைபலம் ஒன்றுதான் அவரைக் காக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்த நான் ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூலமந்திரத்தை அவருக்கு உபதேசித்தேன், பின்பு அவரைப் பற்றி மறந்து விட்டேன்.

    இரண்டு மாதத்திற்கு முன் திடீரென அவர் மீண்டும் என்னைப் பார்க்க வந்தார், பட்டு வேஷ்டி. அங்க வஸ்திரம் மிக கம்பீரமாக காட்சி அளித்தார்,  நான் அவருக்கு உபதேசித்த ஆஞ்சநேய மூல மந்திரம் அவர் வாழ்வில் பல  திருப்புமுனைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தான் ஏமாந்து போன பல விஷயங்களில் மோதி வெற்றிபெருமளவிற்கு இம்மூலமந்திரம் அசாத்தியமான பலத்தை தனக்குக் கொடுத்திருப்பதாகவும். தான் மனைவி மக்களோடு மிக நல்ல நிலையில் இருப்பதாகக் கூறி ஆசீர்வாதம் வாங்கிச் சென்றார்.

    அப்போது பல விஷயங்களை நான் புரிந்து கொண்டேன், தாந்ரீக சாஸ்திரத்தில் வசியப்படுத்த முடியாத தேவதை அனுமான் தான் என்றும். காரணம் கிரகங்களின் வழி அனுக்கிரகம் செய்யாமல் கிரகங்களின் வீச்சை அடக்கி அனுக்கிரகம் செய்ய வல்லவர் என்று மந்திர சாஸ்திரம் கூறுவதன் உண்மையை கண்ணெதிரேக் கண்டேன்.

    ஆஞ்சநேயர் புராணத்தைப் படித்திருப்பவர்களுக்கு அவர் ஜனனமான உடனேயே சூரியனைப் பிடிக்க பறந்ததையும் அதைத் தடுக்க வந்த ராகுவைத் துரத்தி அடித்ததையும் நன்றாகத் தெரிந்திருக்கும், ஆஞ்சநேயரின் வீரியத்தின் முன்னால் ராகுவால் மட்டுமல்ல. மற்ற அசுப கிரகங்களும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிடுவதை பலருடைய வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன், அதற்கு சாட்சியாக எத்தனையோ நிகழ்வுகளை என்னால் பட்டியல் இட முடியும்.

    பாரதப் போரில் அர்ச்சுனனுடைய தேர்க்கொடியில் ஆஞ்சநேயர் இருந்ததாகவும், அதனால்தான் மந்திரப் பூர்வமான அஸ்திரங்கள் எதுவும் அர்ச்சுனனை தாக்கவில்லை என்றும் யுத்த முடிவில் அனுமார் விலகியவுடன் தேர்பொடிப்பொடியாக சிதறி விட்டதாகவும் இதனாலேயே அர்ச்சுனனுக்கு அனுமானால் காக்கப்பட்டவன் என்ற பொருளில் அனுமத்வஜன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும். மகாபாரதம் கூறுகிறது.

    இதன்மூலம் கிரகங்களின் தீய பலனை மட்டுமல்ல. மந்திரங்களின் தீய சக்தியைக் கூட ஆஞ்சநேயரால் சம்ஹாரம் செய்துவிட முடியும் என்பது புரிகிறது எந்தவொரு நல்ல செயலையும் செய்யத் துவக்கும் முன் பிள்ளையாரை வழிபட்டே செய்கிறோம், செயல் நல்லவிதமாக முடிந்த பின்னர் ஆஞ்சநேயரை வழிபட்டு நிறைவு செய்கிறோம், இது தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு விஷயமாகும், ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகம் உள்ளதுபோல் ஹேரம்ப விநாயகருக்கு பஞ்சமுகம் இருப்பதை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள், இதன் தாத்பரியம் மிகவும் ரகசியமானது, அரிதான சில மந்திர நூல்களில் இந்த ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது, மூல முதற்பொருளான விநாயகப் பெருமான் தான் ராம சேவைக்காக அனுமாராக அவதாரம் எடுத்தார் என்ற இந்த ரகசியம் நம்மிற் பலருக்குத் தெரியாது.

    ஆஞ்சநேயரை எப்படி மந்தரங்களால் வசப்படுத்த முடியாதோ அதே போன்று விநாயகரையும் வசப்படுத்த முடியாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன, ஆனால். குரு மூலமாக பல மறைமுக மந்திர வித்தைகளை கற்றவர்கள் இதை மறுத்துச் சொல்கிறார்கள், தேவாங்கு தோலில் மந்திரப் பிரயோகம் செய்து இந்த இரு தெய்வங்களையுமே கட்டிவிடலாம் எனக் கூறுகிறார்கள், இது அபிசார வழி என்பதனால் இதில் உண்மையிருக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை, எது எப்படியோ கிரகங்களுக்கும். மந்திரங்களுக்கும் கட்டுப்படாதவர் ஆஞ்சநேயர் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.


    தீவிரமான வைஷ்ணவ அன்பர்கள் தங்களுக்கு ஏற்படும் கிரக தோஷஙóகளுக்கு பரிகாரம் செய்து கொள்ள சற்றத் தயங்குகிறார்கள், பரிகார வழிபாடு சைவ வழிபாடுபோல் இருப்பதாகக் கருதி இந்தத் தயக்கத்தைக் கொள்கிறார்கள், உண்மையில் பகவானுக்கோ பரிகாரங்களுக்கோ சைவ. வைணவ பேத மென்பது கிடையாது, சைவர்களாக இருப்பினும் சரி. வைணவர்களாக இருப்பினும் சரி பரிகார பூஜையில் ஸ்ரீ ஆஞ்சநேயரை ஆவாகணப்படுத்தி செய்வார்களேயாளால் மிக நல்ல பலனை உடனடியாக அடைவார்கள் என்பதில் ஐயமில்லை, கிரகப் பிருத்திக்காக எதையுமே செய்ய வசதியில்லாதவர்கள் என்ன செய்வது என்று விழிக்க வேண்டாம், துளசிதாசர் இயற்றிய அனுமன் சாலிசாவைபாராயணம் செய்தாலே போதுமானது.

    உள்ளத்தூய்மையுடனும். உறுதியான பக்தியுடனும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து செவ்வாய் தோஷம். புத்ர தோஷம். மாங்கல்ய தோஷம் மேலும் பலவிதமான தோஷங்களிலிருந்து விடுபட்டு இருப்தை நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் எதை வேண்டி அனுமனைப் பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அவன் தயங்காமல் தருவான், காரணம் தான் பெற்ற இறைத்தன்மையை மற்றவர்களுக்கு வாரி வழங்குவதில் வள்ளலுக்கும் மேலானவன்  அவன்.








+ comments + 14 comments

அருமையான விளக்கம் சார் ,
விநாயகர் தான் ஆஞ்சநேயர் என்பது புதிய தகவல் ,
நன்றி ,
அன்புடன் ,
கோவை சக்தி

nice explanation... nandri

அன்புடன் வணக்கம்
அஞ்சநேயரை நீங்கள் எப்பிடி வேண்டுமானாலும் கொண்டாடுங்கள் ஆனால் விநாயகரின் அவதாரம் மாதிரி சொல்லி எங்களை போன்றவர்களை மனதை புண்ணாகாதீர்கள் ..நீங்கள் சொன்ன அதே வரிகள்......"""" பிறந்தவுடன் சூரியனை பிடிக்க சென்றவர்."""" சரி!! இந்திரனால் வஜ்ராயுதத்தினால் அடி வாங்கியவர் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்த்து எழுதுங்கள் சுவாமி!!!

அகத்திய மந்திரத்தைக் கூறினால் அனைத்துவிதமான இன்னல்களும் முடிவுக்கு வரும்.அகத்திய மந்திரத்தை என்னால் வெளிப்படையாக் கூற இயலாது.

அகம் அந்தம்
புறம் பந்தம்

அறிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.நன்றிகள் பல.

Anonymous
17:40

Thanks for Your Information Guruji

sivakumar

விளக்கத்தீர்க்கு மிக்கநன்றி

Anonymous
00:10

திரு ராவணன் அவர்களுக்கு தாங்களிடம் உள்ள அகத்திய மந்திரத்தை எனக்கு தர முடுயுமா mksupersix@gmail.com

sir will u pls give tat agathiya manthiram thank you divyasurya2005@gmail.com

Anonymous
16:52

@hamaragana

Anonymous
16:34

thanks guruji thangal sollum ella visayamum yosikka thundukirathu. n.prakash.covai

Raavanan sir please give me the agasthiyar manthra as i desperately need it: rajni1402@yahoo.com

Anjaneyar mula mandiram anuppungal swami


Next Post Next Post Home
 
Back to Top