( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடவுள் உருவாக்கிய மதம்


இந்து மத வரலாற்று தொடர் 1
  ன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்.  எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை.  ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.  அதற்கு காரணம் என்ன?  அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?  என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்றுதான்.  மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.

மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.  அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவுதான் இந்த தொடர் பதிவாகும் 


 மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.  ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.  இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.  எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.

 எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.  ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம்தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்.

 சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு அன்பரை நான் சந்திக்க நேட்டது.  அவர் பல விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியாக மதசம்பந்தப்பட்ட சில கேள்விகளை என்னிடம் கேட்டார்.  அந்த கேள்விகளில் மிகவும் முக்கியமானது இந்துக்களாகிய நீங்கள் சிலைகளை வழிபடுவது ஏன்?  பல கடவுள்களை நம்புவது ஏன்?  என்பதாகும்.  அவருக்கு நான் இந்துக்கள் உருவ வழிபாட்டை கடைபிடிப்பதன் காரணத்தையும் கடவுள் கொள்கைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.  அந்த விளக்கங்களில் அவர் எந்த வகையிலும் திருப்தி அடையவில்லை.  பொத்தாம் பொதுவாக கல்லை வணங்குவது தவறு என்பதில் பிடிவாதமாக இருந்தாரே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ள எந்த முயற்சியுமே எடுக்காமல் கண்மூடித்தனமாக தான் பேசுவதையே பிடித்துக் கொண்டு நின்றார்.  இத்தகைய பிடிவாதக் காரர்களிடம் வாதம் செய்வது என்பது மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பானதாகும்.  நமது பேச்சு நம் காதில் விழுமே தவிர மலையை எந்த வகையிலும் பாதிக்காது அதனால் அவரிடம் வேறு சில காரியங்களை பேசி அனுப்பி வைத்து விட்டேன்.  இப்படி மற்றவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்காதவாறு பல மனிதர்கள் உருவாக்கப்பட்டு நடமாட விடப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மட்டுமல்ல மன உணர்வுகளையும் புரிந்து கொள்வது இல்லை.


  சரி ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை புரிந்து கொண்டு விடுவதினால் பல நன்மைகள் உண்டு என்றாலும் கூட புரிந்து கொள்ளாமல் போவதனால் பெரும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  ஆனால் ஒரு இந்து தனது மதத்தை தெரிந்து கொள்ளாமல் போவதனால் நிச்சயம் பல பாதிப்புகள் ஏற்பட்டே தீரும் அந்த பாதிப்புகள் நமது நாட்டின் ஆத்மாவை அழிப்பதாகவே அமைந்து விடும்.

 மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது.  என்னால் சர்வ நிச்சயமாக அறுதியிட்டு கூறமுடியும் நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை என்று.  சரி நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் அவர்களை மட்டுமே குற்றவாளிகள் என்று கூறி விட முடியாது.  சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாத குற்றவாளிகள் என்று கருத வேண்டும்.

 புவியியல், பொறியியல் என்று படிப்பதனால் வேலை கிடைக்கிறது.  வருவாய் வருகிறது.  வயறும் நிறைகிறது.  மதத்தை பற்றிய அறிவை பெறுவதினால் என்ன கிடைத்து விடப்போகிறது உலக வாழ்க்கைக்கு உதவாத மத அறிவு தேவையே இல்லை.  என்று சிலர் நினைக்கிறார்கள் இவர்கள் நிச்சயமாக புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.  ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆகாரம் மட்டுமே போதுமானது என்றால் மனிதனையும், மிருகத்தையும் சமமான தரத்திலேயே வைத்துவிடலாம்.  மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தி காட்டுவது பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டு செறிவாகும்.  பண்பாடு தெரியாத எந்த மனிதனும் அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.  மதம் என்பதும் மனிதனை பண்படுத்தும் பண்பாடு தான்.  இன்னும் சொல்வதென்றால் மதத்திலிருந்து தான் பண்பாடே தோன்றியது எனலாம்.

  கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான்.  எனவே மனிதன் தான் அமைதியாக வாழவேண்டும் என்ற சுயநல காரணத்திற்காவது மத அறிவை பெற்றே ஆகவேண்டும்.  அப்படி பெற மறுத்தால் காற்று போன போக்கில் காற்றாடி பறந்து கிழிந்து கிடப்பது போல் நமது வாழ்க்கையும் கிழிந்து போய்விடும்.

 நமது ஜனங்கள் மத அறிவை பெறாமல் இருப்பதற்கு அவர்களின் அசட்டை மட்டும் காரணமல்ல ஆச்சாயர்களின் கவனக் குறைவும் காரணம் என்று முன்பே சொன்னேன்.  அது நான் வேடிக்கைகாக கூறியது அல்ல வேதனையோடு கூறியது ஆகும்.  நமது சங்கராச்சாயர்களும், ஜீயர்களும், பட்டர்களும் தங்களது பார்வைகளை விசாலப்படுத்தாமல் ஒரு சிறு குழுக்களின் மீது கவனம் செலுத்தி பெருவாரியான ஜனங்களை தங்களது ஞானத்தால் வழிநடத்தாமல் போனதே மிகப்பெய குற்றமாகும்.  மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல.  இவர்கள் தங்களை அவதார புருஷர்களாக கருதிகொண்டதனால் ஏற்பட்ட சோகமே நம்மக்களின் தோல்விகளாகும்.  மன்னர்களின் மானியங்களை திருமடங்களின் கருவறைக்குள் பாதுகாத்து வைக்கும் சிறத்தையை விட்டுவிட்டு மதக்கருத்துகளை மன்னவனுக்கு மாடு மேய்க்கும் சின்னவனுக்கும் சொல்லியிருப்பார்களே யென்றால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

 கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மத அமைப்புகளில் ஒரு நடைமுறை இருக்கிறது.  அது என்ன வென்றால் தங்களது மதத்தைச் சார்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மதக்கல்வி  அளிப்பது ஆகும்.  அந்த நடைமுறை நமது இந்து மதத்தில் எந்த பகுதியிலும் இல்லை அதனால் தான் நம் மதத்தின் புனித நூல் எது என்று கூட அறியாத பலர் இன்றும் இருக்கிறார்கள்.  இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் வருங்காலத்தில் நம் மதத்தின் அறிவுக் கருவூலங்கள் எது என்பதே தெரியாத வன்னம் அழிந்து போகக் கூடிய துயர நிலை ஏற்பட்டுவிடும்.  இதை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும்.


  சிலர் கேட்கலாம் நமது நாடு முழுவதும் இந்து கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  திருப்பதி, சபரிமலை, வைஷ்ணவி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களில் கூட ஆன்மீக கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகள் அதிகத்திருக்கிறது.  நிலைமை இத்தகைய வளர்சி பாதையில் செல்லும் பொழுது மத அறிவு வளர்ந்து தானே இருக்க வேண்டும்.  நூற்றுக்கு பத்துபேருக்கு கூட மத ஞானம் இல்லை என்பது எந்த வகையில் சரியாகும் என்று.

  இவர்கள் கேட்பதில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை.  ஆனால் இவைகளால் மட்டுமே மதஞானம் பெருகி உள்ளது என்று கூறி விட இயலாது.  ஆலயங்களுக்கு செல்வதும் யாத்திரைகள் மேற்கொள்வதும் கருத்தரங்கங்களை கேட்பதும் ஒரு மனிதனின் சமய அறிவை பெருக்கிவிடும் என்றால் பட்டி தொட்டியெங்கும் பகவத் கீதை பரவியிறுக்கும் பெருவாயான கிறிஸ்துவர்கள் கையில் பைபுளை வைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதுவது போலானது பகவத் கீதையை வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும்.

  ஆனால் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும் மக்கள் இன்று அலகு குத்துவதும், காவடி எடுப்பதும் நெருப்பில் நடப்பதும் தான் சமய வாழ்க்கை என்று கருதும் அறியாமை நிலை மாறியிருக்கும்.  பல கிராமங்களில் சில காட்சிகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன் கிறிஸ்துவ மத போதகர்கள் நம் மக்களை பார்த்து நீங்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறீர்கள் அது சாத்தானின் வழிபாடாகும் என்று கேலியும் கிண்டலுமாக பேசுகின்ற பொழுது  நம் மக்களில் பலர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் கோபத்தால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.  அவர்களிடம் மட்டும் சரியான சமய அறிவு இருந்திருந்தால் கேலி செய்யும் பாதிரிகளை பார்த்து கத்தோலிக்கே ஆலயங்களிலிருக்கும் சிலைகள் மட்டும் கடவுளா முதலில் உங்களது சிலை வழிபாடுகளை நிறுத்தி விட்டு எங்களை பற்றி பேசுங்கள் என்று காரசாரமாக பதில் சொல்லியிருப்பார்கள்.  ஆனால் பாவம் அவர்கள் அப்படி பயிற்றுவிக்கப்படவில்யே நமது மடாதிபதிகள் அவர்களை பல்லாக்கு தூக்குபவர்களாகத்தானே வைத்திருக்கிறார்கள்.


 இந்த மாதிரியான சிந்தனைகள் எனக்குள் எழுந்து கொண்டு இருந்த பொழுது எனது சீடர்களில் ஒருவரான சிவானந்தத்தின் குழந்தை சிவசங்கரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். “ குருஜி இந்து மதம்னா என்ன”?  என்பதே அந்த கேள்வியாகும்.  இது சாதாரணமான ஒரு குழந்தையின் விளையாட்டு தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த கேள்வியை என்னால் விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் நமது மதத்தை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை மத வல்லுநர்கள் அதை மக்களுக்கு தரவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது இந்து மதம் என்றால் என்ன என்று மக்கள் அறிந்து கொள்ள இதுவரை நாம் செய்தது என்ன என்றெல்லாம் எனக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியது.

 மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுவது மிக எளியது.  ஆனால் அப்படி குற்றம் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஒருவனின் சமூகப்பணி முடிந்து விடுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.  குறைகளை பற்றி பேசிக்கொண்டிராமல் அவைகளை நிறைகளாக்க முயற்சிப்பவனே சிறந்த மனிதன் என்று எப்போதுமே நான் கருதுவது உண்டு.  அதனால் என்னால் முடிந்த வரை நமது மதத்தை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்வது என்று முடிவு செய்ததின் விளைவே இந்த பதிவாகும் .

 எந்த ஒரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயமாகும் அந்த சிக்கலை நிவர்த்தி செய்து விட்டோம் என்றால் எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம்.  எனவே இந்த தொடரை குழந்தை சிவசங்கரி கேட்ட இந்து மதம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.


  நாம் அனைவரும் இந்துக்கள் நமது மதம் இந்து மதம் என்பது எப்படி நமக்கு தெளிவாகத் தெரியுமோ அதை விட தெளிவாக இந்து மதம் என்ற பெயர் நமக்கு நாம் சூட்டிக் கொண்டது அல்ல.  அந்நியர்கள் நமக்கு தந்த பெயராகும் என்று தெரியும்.  நமது நாட்டிலுள்ள பழைய கால நூல்கள் எதுவும் நமது மதத்தை இந்து மதம் என்ற பெயரில் அழைக்கவே இல்லை.  அவைகள் நமது மதத்தை சனாதன தர்மம் என்ற பெயரிலேயே அழைக்கிறது.  கி.பி. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தத்த சாஸ்திர நூல் ஒன்றே இந்து மதம் என்ற வார்த்தையை முதல் முதலில் பயன்படுத்துகிறது.  அதற்கு முன்பு உள்ள அனைத்து நூல்களும் என்றும் அழியாது நிலைத்திற்கும் வழிமுறை என்ற பொருள் கொண்ட சனாதன தர்மம் என்ற பெயரையே மதத்தை குறிப்பிட பயன்படுத்துகிறது.  நிலைமை இப்படி இருக்க இந்து மதம் என்ற பெயர் எப்போது யாரால் நமக்கு கொடுக்கப்பட்டது என்ற வினா எழும்புவது இயற்கையே ஆகும்.

   சிந்து நதிக்கு கிழக்கு பக்கத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் கிரேக்கர்கள் இந்துக்கள் என்று அழைத்தார்கள்.  சிந்து நதியோர மக்கள் என்றால் அவர்களை சிந்துக்கள் என்று தானே அழைக்க வேண்டும்.  இந்துக்கள் என்று எப்படி அழைக்கலாம் என்று கேட்டால் அதற்கொரு வேடிக்கையான பதில் இருக்கிறது.  பழைய பாரசீக மொழியில் சீ என்ற எழுத்தே கிடையாது.  அவர்கள் சீ என்று துவங்கும் பதங்களை ஹீ என்ற எழுத்திலேயே அழைப்பார்கள் அதனால் தான் சிந்துக்கள் ஹிந்துக்களானார்கள்.

  உலகிலுள்ள பிற மதங்கள் அனைத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் தான் இருக்கும்.  அந்தக் கொள்கையை மட்டுமே சுட்டிக்காட்டி அந்த மதங்களை விவரித்து விடலாம்.  ஆனால் இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கொண்டது அல்ல.  அதனால் நமது மதத்தை வேற்றுமைகளின் உரைவிடம் என்று கூறிவிடவும் முடியாது.


   நமது ஒருமைபாடு கொள்கை அடிப்படையிலேயோ அமைப்புருவாலோ இல்லை.  அதே நேரம் நம் மதம் ஒரு இறையியல் கோட்பாடுமாகாது.  கடவுள் என்பது இது தான் இப்படித்தான் என்று பிடிவாதம் செய்யும் சுபாவமும் நம் மதத்திற்கு இல்லை.  குருட்டாம்போக்கிலான நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆட்பட்டது அல்ல.  இன்னென்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் நமது மதமாகாது.  குறிப்பிட்ட வரையறைகளோ எல்லைகளோ நமக்கு இல்லை.  கடவுளை இல்லை என்பவனும் இந்து தான்.  அவர் உள்ளார் என்று தூக்கி வைத்து ஆடுபவனும் இந்துதான்.  வேதங்களை மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் அவன் இந்து தான்.  உருவ வழிபாடு மடத்தனமானது என்பவனும் சிலைகளின் கலைகளில் இறைவனை கானுகிறேன் என்பவனும் நமது மதத்தை சார்ந்தவனாகத் தான் கருதப்படுகிறான்.

 இந்து மதம் எந்த மதத்திலேயும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து கேலி பேசும் சுபாவம் கொண்டது அல்ல.  விண்ணிலிருந்து விழுகின்ற ஒவ்வொரு மழைதுளியும் எப்படி தூய்மையானதோ, நதிகள் எல்லாம் பல இடங்களில் தோன்றினாலும் எப்படி அனைத்தும் கடலில் போய் சங்கமிக்கிறதோ அதே போலவே எல்லா மதங்களும் புனிதமானவைகள் தான்.  அனைத்து மதங்களும் இறைவனிடம் மனிதனைக் கொண்டு சேர்ப்பவைகள் தான் என்று உயரிய கோட்பாடுகளை கொண்டது தான் இந்து மதம்.

எவனாவது தன்னை வெட்ட வந்தவனை சாகடிக்க முயற்சி செய்தவனை மார்போடு அனைத்து நீயும் என் சகோதரன் தான் என்று கூறுவானா அப்படி கூறுகிறவன் எவனாக இருந்தாலும் மனித நிலையிலிருந்து புனித நிலையில் இருப்பவனாகவே கருதப்படுவான் அல்லவா.  இந்து மதமும் அப்படித் தான் தன்னை அழிக்க வந்த தனது அஸ்தி வாரத்தையே ஆட்டம் காட்ட வந்த புத்த மதத்தை தனது ஒரு பிரிவாகவே கருதி கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக ஏற்று தமதாக்கிக் கொண்ட பெருந்தன்மை நம் மதத்திற்கு மட்டும் தான் உண்டு.


  நம் மதம் எப்போதும் தான்தான் உயர்ந்தது என்று பெருமையடித்து கொண்டது இல்லை.  தனது குருமார்கள் மட்டும் தான் இறைவனின் தூதர்கள் என்று வீண் ஜம்பம் பேசியது இல்லை.  தனது கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் மட்டும் தான் இறைவனின் குழந்தைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று பேதம் காட்டியது கிடையாது.  பொதுவாக இந்து மதத்தை பற்றி சுருக்கமாக சொல்லுவது என்றால் இது வெறும் மதம் மட்டுமல்ல பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாக உள்ளது என்றே சொல்லவேண்டும்.


 மற்ற மதங்கள் இன்ன இடத்தில் இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லிவிடலாம்.  ஆனால் இந்து மதம் தானாகவே மெல்ல மெல்ல வளர்ந்து பரவி நிற்கும் ஜீவசக்தியாகும்.  மற்ற மதங்களை தார்சலைக்கு ஒப்பிட்டால் நம் மதத்தை ஒற்றையடி பாதைக்கு ஒப்பிடலாம்.  தார்சாலையை எந்த அளவு மக்கள் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவு அது பழுதடைந்து காலத்தால் மறைந்துபோய் விடும்.  ஒற்றையடி பாதை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவு பண்படும் உறுதிபடும் காலத்தால் இயற்கை மாற்றங்களால் கூட அழியாமல் நிலைத்து நிற்கும்.
                                  + comments + 36 comments

தொடருங்கள்.... இந்து மத தோற்றம் குறித்த உங்கள் பதிவு அருமை.. புத்தகமாக வெளிவர என் வாழ்த்துக்கள்

மிக அருமையான தொடர் சார் ,
தொடருங்கள் வாழ்த்துக்கள் .உங்களை போன்றோர் எழுதினால் தான் இளைய சமுதாயதிருக்கு ஹிந்து மத கலாச்சாரம் தெரியும் .
நன்றியுடன் ,
கோவை சக்தி

நம் மதத்தின் புனித நூல் படிப்பதை கட்டாயபடுத்த வேண்டும் - எனது நோக்கமும் கோரிக்கையும் அதுதான்..
மிக சிறந்த தகவல் நன்றி..

இந்து மதத்தில் உள்ள ஜாதிகள் எனும் சொல்லால் தான் நம்மை மற்ற மதத்தினர் கிண்டல் செய்கின்றனர்

Anonymous
21:30

every religion is good in itself. when it is used for power and money and plesure it becomes what it should not be. love your religion. respect other religions. never force anything on others and in others freedom of faith and belief. what is true subjectively for you may not be for others.but the god is absolutely objective. he is for all

கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான். -
ஆம் பிரேக் இல்லாத வாகனத்தில் வேகமாகப் பயணிக்கிறான்.

17:28

எங்கள் குமரி மாவட்டத்தில் அணைத்து ஹிந்து திருகோவில்களிலும் சமய வகுப்பு அணைத்து வகுப்பினருக்கும் ஞாயிற்று கிழமை நடைபெற்று கொண்டு இருக்கிறது. நடத்துபவர் வெள்ளிமலை வித்யாபீடம் முழு நேர, பகுதிநேர உழியர்கள். நிறுவனர் குருஜி.மதுரானந்தமகராஜ் அவர்கள் ஆகும். சி . ராமதாஸ்

வணக்கம் ஐயா ! தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை . ஒரு முக்கியமான செய்தி. இந்துக்கள் பற்றிய செய்திகள் வடக்கொடு மட்டும் முடிந்து போகாது . நம் மதத்தின் 100சதவிகிதம் பங்கு தெற்கில் மட்டுமே உள்ளது . அது பாரதத்துக்கு முன்னாள் இருந்த லெமுரியா கண்டத்தில் இருந்து தொடர்கிறது . அப்போது இமயமலை கூட இல்லை . அதன் உண்மையான வரலாறு , தமிழரின் வழிபாட்டு முறைகள் , தமிழ் வேதம் தொடர்பான கருத்துக்கள் எங்களிடம் உண்டு . எங்களிடம் மட்டுமே உண்டு .தமிழருக்கு அரச பாரம்பரியம் , குரு பாரம்பரியம் , இலக்கிய பாரம்பரியம் என்ற மூன்று உள்ளது . மற்றும் சித்தர்களின் அதிசயங்களைக்கான தொடர்பு கொள்ளவும் .

ம.நாகராசன் .தொடர்பு எண்-9788054414

வணக்கம் ஐயா ! தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை . ஒரு முக்கியமான செய்தி. இந்துக்கள் பற்றிய செய்திகள் வடக்கொடு மட்டும் முடிந்து போகாது . நம் மதத்தின் 100சதவிகிதம் பங்கு தெற்கில் மட்டுமே உள்ளது . அது பாரதத்துக்கு முன்னாள் இருந்த லெமுரியா கண்டத்தில் இருந்து தொடர்கிறது . அப்போது இமயமலை கூட இல்லை . அதன் உண்மையான வரலாறு , தமிழரின் வழிபாட்டு முறைகள் , தமிழ் வேதம் தொடர்பான கருத்துக்கள் எங்களிடம் உண்டு . எங்களிடம் மட்டுமே உண்டு .தமிழருக்கு அரச பாரம்பரியம் , குரு பாரம்பரியம் , இலக்கிய பாரம்பரியம் என்ற மூன்று உள்ளது . மற்றும் சித்தர்களின் அதிசயங்களைக்கான தொடர்பு கொள்ளவும் .

ம.நாகராசன் தொடர்பு எண்-9788054414

Anonymous
00:34

இஸ்லாத்தில் உருவ வழிபாடு ஏன் இல்லை?
please watch completely and analyse.

http://www.youtube.com/watch?v=_T0vWAJuteo&feature=player_embedded

Anonymous
08:01

பாரதத்துக்கு முன்னாள் இருந்த லெமுரியா கண்டத்தில் இருந்து தொடர்கிறது . அப்போது இமயமலை கூட இல்லை . அதன் உண்மையான வரலாறு , தமிழரின் வழிபாட்டு முறைகள் , தமிழ் வேதம் தொடர்பான கருத்துக்கள் எங்களிடம் உண்டு . எங்களிடம் மட்டுமே உண்டு .தமிழருக்கு அரச பாரம்பரியம் , குரு பாரம்பரியம் , இலக்கிய பாரம்பரியம் என்ற மூன்று உள்ளது .

முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம். நேற்றும் இன்றும் இந்திய வாழ்வின் பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்தச் சாரத்தின் அடிப்படையே ஜனநாயக மறுப்புதான்.

சாதி, மொழி, இன, பாலியல் ஒடுக்குமுறைதான் இந்து மதத்தின் நான்கு வேதங்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையில் கூட உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடையாது என்று கூறும் மதம் இது மட்டுமே. வாழ்க்கை முறை, சட்ட திட்டம், தண்டனை அனைத்தும் பார்ப்பன – சமஸ்கிருத இலக்கியங்கள் முழுவதிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரை நடைமுறையிலும் இவை இந்திய உழைக்கும் மக்களை மூழ்கடித்தே வந்திருக்கின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கொடூரமான வாழ்க்கை விதிகள் பைபிளிலோ, குர்-ஆனிலோ நிச்சயம் இல்லை.அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரன் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.

Anonymous
14:35

குர்ரானையும் பைபிளையும் போற்றி பேசும் நீங்கள் அந்த மதங்களை பின்பற்றிய ராஜாக்கள் பண்ணிய கொடூரங்களை அறியாத சிறு குழந்தையா நீங்கள். மத சஹிப்பு தன்மை இந்துக்களை தவிர வேறு யாரிடமும் இல்லை. ஜாதியை பற்றி வாய் கிழிய பேசும் நீங்கள் உங்கள் மதத்தில் ஜாதி இல்லையா? பெயர் அளவில் தான் மதத்தை பின்பட்டுகிருர்கள். அங்கு மட்டும் ஜாதி ஒளிந்து விட்டதா?

இந்து கோவில் பணம் தான் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் செலவிடபடுகிறது. மற்ற மதத்தில் வரும் பணம் எங்கே போகிறது? இதுதான் ஜனநாயகமா?

யோகி அவர்கள் இந்து மதம் சர்ந்தவர்க்களுக்கு தான் எழுதிள்ளார். மற்ற மதத்தவர்களுக்கு அல்ல. மேலோட்டமாக படித்துவிட்டு எதையாவது எழுதி அடுத்தவர் மனதை புண்படுத்தாதீர்கள். உங்கள் மதம் இதை கற்பித்து தரவில்லையா?

80 % இந்துகள் இருக்கும் இந்த நாட்டில் எங்கள் மதத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க முடிகிறது. இது தான் உண்மையான ஜனநாயகம். மற்ற மதங்கள் உள்ள நாட்டில் நிலைமை என்ன என்று உங்களுக்கே தெரியும்.

இந்து மதத்தில் உள்ளவர்கள் யாரையும் கட்டாயபடுத்தி மதம் மாற்றுவதில்லை. nursery குழந்தைகளிடம் கூட மத விஷயங்களை விஷம் போல் ஏற்றி வைத்து இருக்கிறர்கள். (இந்து குழந்தைகளிடம் திருநீரை அழிப்பது, சாத்தான் குழந்தை என கூறுவது, கடவுள் குழந்தைகள் எல்லாம் கை uarthungal என டீச்சர் கூறினால் இந்து குழந்தைகளை பார்த்து நீ சாத்தான் குழந்தை கை uarthathei என மற்ற குழந்தைகள் கூறுகின்றனர்) இவை எல்லாம் எங்கள் நேரடியான அனுபவங்கள்.

சிவா.
குமரி.

இஸ்லாமியருக்கு இங்கு என்ன வேலை?

https://www.facebook.com/kavinnnn/posts/3219488609385

நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.

**
இதற்கு பதில் அளித்துள்ள லோக்கல் தாலிபான் ஒருவனின் பதில்..

Jafferali Jahafar கணிணி கிடைத்துவிட்டது என்று முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபியை பற்றியும் அவரை பின்தொடர்ந்த சகாபாக்கள் பற்றியும் தாறுமாறாக எழுதிய இவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...காவல் துறையோ,சமூக இயக்கங்களோ எதுவும் இவனை காக்கமுடியாது..இவனது முடிவு மிகவும் கொடூரமாக இருக்கு...

Anonymous
13:07

அலகு குத்துவது, காவடி எடுப்பது, நெருப்பில் நடப்பது எல்லாம் அறியாமை என்று எதைவைத்து கூறுகிறீர்கள்? இது எப்படி அறியாமையாகும் என்பதற்கு சான்றுகள் உள்ளனவா? சிவ ஞானபோதம் எல்லாவற்றையும் தெளிவாகக்காட்டும்.நமது பலவீனமே ஒன்றை முழுவதுமாகக் கற்காமல் வெகுவிரைவில் ஒரு முடிவுக்கு வருவதுதான். சிவ ஞானபோதத்தை அறிவதற்கு குறைந்து இருபது வருடங்கள் ஆகும். இதுவே நம் சமூதாயத்தில் உள்ள பலவீனம்.'மெளனம் என்பது ஞான வரம்பு' என்று ஔவையார் கொன்றைவேந்தனில் கூறியுள்ளார். ஆக மெளனாக இருந்தால் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாம். 'அவசரம் ஆயிரம் பொன்னை அழிக்கும்'. இதை நான் கூறுவது அன்று. இது ஆண்டவனின் கூற்று.

v nvn

I advise Him to abandon Religion of Arabia and embrace Mother India religion - Hinduism at once.Religion of Arabia is yet to develop fully.It is arrogrant.
Mohammed waged 46 wars against those innocent people who did not recognise him as Prophet of God.Koran is the only Book which says sexually exploit Women who are war captives.You can have sex not only with your wifes But also with War captive women. Mohammed had many such concubines-Kumus women -war captives.In India we have better examples than Mohammed

@rosha................only those who lack spiritual knowledge neglect hinduism (sanatanism) .......u hate us.....then y do u read such blogs............ R U SO MUCH INTERESTED IN WATCHING & STUDYING THE PRINCIPLES OF HINDUISM.u rn't eligible 2 b here...........

v nvr go nd comment foolishly in other religion's profile.........thats d diff b/w sanatanism and other so called religions

@siva .....well said siva.........i too have experienced such things in primary school

Anonymous
07:34

Dear Rosha, Good day, before come to conclusion u must have through study and need proper reference in documented way. r u sure about ur opinions. plz make confirm and post.Ok dont just post any comments as u like. U r living in still water as like FROG. Plz come outside realize the Hinduism as a OCEN.OK. Good luck God has to guide for the proper mannersims....

Thanks
Dr.J.Mohan.

,இதற்குதான் ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தா் அந்தா்யோம் என்ற ஆன்மீக பயிற்சி திட்டத்தை இந்துக்களுக்காக உருவாக்கினாா். இந்துக்களுக்கு பிற மதத்தவர்கள்போல ஒரு குறைந்தபட்ட ஆன்மீக பயிற்சி - சாதனை பயிற்சி -குறைந்த பட்ட திட்டம் -அனுஷ்டானம் -கற்றுக் கொடு்ப்பதுதான் அந்தா்யோகத்தின் நோக்கம். இதைத்தான் நான் பிணத்தை தொடரும் ஆவி என்ற தங்களது கட்டுரையில் நான் வலியுருத்தினேன். சுவாமிஜி தாங்களும்
ஆஸ்ரமத்திலும் வெளி கிராமங்களிலும் ” அந்தா்யோகம் ” நடத்த வேண்டும் என பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

கோவிலுக்கு சென்றால் பக்தி வராது மூடு தான் வரும், அந்த அளவுக்கு அங்கே உள்ள சிற்பங்கள் இருக்கின்றன. உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் வேத மந்த்ரங்களை தமிழில் போடுங்களேன்

நீங்களே சொல்லுகின்றீர்கள் மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பாகும் என்று சொன்னீர்களே, மலையும் கல் தான் நீங்கள் வணங்கும் சாமிகளும் கல் தானே ஆசிரியரே

kal endru parthal kalthan ange epadi namparvai manam epadi ulladho appadi than sani pidithu pillaiyar engirom manjalaiyum pillaiyar engirom manathuimai ullathuimai koviluku nee selvathanal koviluku uriya mariyathaiudan than sella vendum bakthidhan mukiyam adhu unveedo alladhu barro alla

indhu mathathil jadhigale illai idhuepadi solgiren bagavan geethail bramanan shathriyan vysian suthiran endruthan sonnare thavira nee kanakan kavundan iyer iyangar endru kooraveillai awar awar thozhilai vaithe jathigalai urvakinan manithan panathai panamaga parkamal ennikail parka arampithadhuthan prachanaie arambithathu

Dear Mr.Tableeq Soriyan- அரேபிய சமய பிரசாரரே? 53 வயது முகம்மது 6 வயது சிறுமி ஆயிசாவை திருமணம் செய்து கொண்டு 9 வயதில் தன்வீட்டிற்கு அழைத்துச் சென்றார. 9 வயதில் அச்சிறுதியோடு பாலியல்உறவு வைத்துக் கொண்டார. தன்வளர்ப்பு மகனுடைய மனைவி சைனப் என்ற பெண்ணை -மருமகளை உடைமாற்றும்போது பார்க்க நேரிட்டதாம். பின் சதா சைனப் மிக அழகாக இருக்கின்றாள் என்று சதா கூறிக்கொண்டிருந்தாராம். அதுகேட்டு எரிச்சலடைந்த மகன் நான் வேண்டுமானால் விவாகரத்து செய்துவிடுகின்றேன்.தாங்கள் திருமணம் செய்து கொள்ளுங்களேன என்று கூறினாராம். எப்படியோ சைனப்வை விவாகரத்து செய்து விட்டார.உடனே மருமகளை மாமா திருமணம் செய்து கொண்டார்.இத்திருமணமத்தை ஊர் மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால் உடனே இறைவன் இதை ஏற்று வஹி அனுப்பி விட்டார் -நம்ம ஊர்சாமியாடிகள் கூற்று -என்று மக்களை ஏமாற்றிவ விட்டார. முகம்மதுவிற்கு எத்தனை பெண்டாடடி எத்தனை குமுஸ் வைப்பாட்டி என்று தாங்கள் கூறுவீர்களா? வைப்பாாட்டி வைப்பவன் நபி ஆவாரா ?
குரானின் அல்மஆரிஜ் அத்யாயம் 70 -1 வசனம் கூறுகிறது தங்களது மனைவிமார்கள் மீது அல்லது அவர்களது வலக்கரங்கள் உடமையாக்கிக் கொண்ட அடிமைப் பெண்கள் மீதேயன்றி நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்படக் கூடியவர்கள் அல்ல. அடிதடியில் ஒரு பெண்ணை கைப்பற்றினால் அவளோடு உறவு கொள்ளலாம் என குரான் என்ற அரபி புத்தகம் கூறுகிறது. இது புனித நூலா ? சொல்லுங்கள் ஐயா ?

அரேபிய மதம்குறித்து கேள்வி கேட்டால் வாய் பொத்திக் கொள்வார்கள்.கௌதமபுத்தர் ஸ்ரீசங்கரர் போன்ற உயர்நிலை ஆன்மிகவாதிகளை ஒப்பிட்டால் முகம்மது ஒரு சிறு படை அரேபிய தளபதி என்று குறிப்பிடலாம்.

Anonymous
04:53

தென்மாவட்டங்களில், குறிப்பாக கிராமங்களில், நான்கே வரியில் ராமாயணக் கதையைச் சொல்லு பார்க்கலாம் என்று கேட்பதுண்டு. அதற்கு, "ராமத் தேவர் பொண்டாட்டியை ராவண அய்யர் தூக்கிட்டுப் போயிட்டார். அனுமந்த ராயனோட உதவியால ராவண அய்யரைத் துவைத்தெடுத்து, ராமத் தேவர் பொண்டாட்டிய மீட்டு வந்தார்' என்று கூறுவார்கள்.
கவிஞர் கபிலன் எழுதிய நான்கு வரிக் கவிதை ஒன்று. இதுவும் ராமாயணத்துடன் தொடர்புடையது. படித்துவிட்டு, வயிறு குலுங்கச் சிரித்தேன்.
"அப்பனுக்கு
ஆயிரம் மனைவிகள்
எந்தப் பிரச்னையும் இல்லை;
மகனுக்கு
ஒரே ஒரு மனைவி
ஆயிரம் பிரச்னைகள்!
ஆரியர்கள் வந்தேறிகள் எனத் தெரியும். அவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளல்லர் என்பதும் தெரியும். ஆனால், அவர்கள் எதற்காக, எப்படி வந்தேறினார்கள் என்ற காரணம் மேம்போக்காகவே நமக்குள் புகுத்தப் பட்டிருக்கிறது. 1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட மானுடவியல் ஆய்வு முடிவுகளை வைத்து ஆரியர்களின் படையெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இரண்டு முக்கியமான உண்மைகளுக்குச் சான்றாகிறது.

ஒன்று, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினரின் தாய் வழி மரபணுக்களும்; தந்தைவழி மரபணுக்களும் ஆசியர்களுக்குரியது என ஆய்வில் கண்டறியப்பட்டது. அதே வேளை முன்னேறிய சாதியினரான பார்ப்பனர், வைசியர், சத்திரியர்களில் 40 சதவிகிதம் பேருக்கு தாய் வழி மரபணுக்கள் ஆசியர்களுக்குரியதாகவும்; தந்தை வழி மரபணுக்கள் கிழக்கு ஐரோப்பியர்களுக்குரியதாகவும் இருப்பது தெரியவந்தது. இவர்கள் இந்நாட்டின் பூர்வ குடிகளாக இருப்பார்களெனில், அவர் களின் மரபணுக்கள் பொய் சொல்ல வாய்ப்பில்லையே. சரி, இவர்களின் தாய் வழி மரபணுக்கள் மட்டும் எப்படி ஆசியர்களுக்குரியதாக இருக்க முடியும்? இக்கேள்விதான் ஆரியர்கள் நம் நாட்டிற்கு எப்படி வந்தேறினார்கள் என்பதற்கான பதிலாக மாறுகிறது.

இடப்பெயர்ச்சி காரணமாக வந்திருந்தால், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு ஆரியர்கள் குடும்பம் குடும்பமாகவே வந்திருப்பர். அப்படியல்லாமல் படை யெடுத்து வந்ததாலேயே, அவர்கள் இங்குள்ள பெண் களோடு வாழ நேர்ந்தது. இந்து இதிகாசங்களும், புராணங்களும் பெண்களை இழிவுபடுத்துவதன் பின்னணி இதுதான். இங்குள்ள சாதி இந்து பெண்கள் ஆரியர்களல்லர் என்பதாலேயே, நம் பெண்களை இழிவு படுத்தி அடிமைப்படுத்தும் நோக்கோடு இந்து அடிமை விதிமுறைகளை அவர்கள் உருவாக்கினர். ஆதிக்கத்தாலும், வேதம் ஓதுதல் போன்ற சடங்குகளாலும் சமூகத்தை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், இதனால் கி.மு. 365-இல் சந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில் பிழைப்பிற்காக பார்ப்பனர்கள், விவசாயிகளாகவும் போர்ப்படை வீரர்களாகவும் மாற வேண்டியிருந்தது. அதன் பின்னர் கி.மு. 265- இல் பவுத்த நெறிமுறைகளைப் பின்பற்றியே ஆட்சி புரிந்தார் அசோகர். சாலைதோறும் மரம் வளர்த்தார் என்பது மட்டுமே அசோகரின் அடையாளமாக நிலைநாட்டப் பட்டிருக்கிறது. உண்மையில், அசோகர் ஒரு ஜனநாயகவாதி. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற நவீன வரலாற்றிற்கு அடித்தளமிட்டவர் அசோகர். அவருடைய ஆட்சி சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தது. இலவச கல்வியையும் மருத்துவ வசதிகளையும் கட்டாய மாக்கினார் அவர்.நீதியின் வழியில் மக்களை வழிநடத்திய புத்தரால் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு அடக்கி வைக்கப்பட்ட பார்ப்பனியம், அசோகரின் பேரனான ப்ரிஹந்தரின் ஆட்சியில் புஷ்யமித்ர சுங்கர் என்ற ஆரியப் பார்ப்பனரால் மீட்டெடுக்கப்படுகிறது. பார்ப்பனியத்தின் ஆட்சி முழு வீச்சோடு தொடங்கிய காலகட்டம் இதுதான். சேனாதிபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கர் அரசவை யிலேயே ப்ரிஹந்தரைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கிறான். அதன் பின்னர் நடந்ததெல்லாம் ஆதிக்க வெறியாட்டம். பவுத்தம் தகர்க்கப்பட்டு, சதுர்வர்ணம் என்ற நான்கு பிரிவு பல்லாயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டு, மனிதர்கள் கும்பல் கும்பலாக துண்டாடப்படுகின்றனர். மநுதர்மம் எழுதப்படுகிறது. ஊர்களும் சேரிகளும் உருவாக்கப் படுகின்றன.

இந்த அநீதியை ஏற்காத மக்கள், புஷ்யமித்ர சுங்க னோடு சண்டையிட்டு காடுகளில் வாழத் தொடங்குகின்ற னர். அவர்களே இன்றைய பழங்குடியினர். சிலர் எதிர்த்துப் போராடி தோற்கடிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ நேரிடுகிறது. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, இறந்த விலங்குகளை உணவாக்கும் நிலைக்கு விடப்பட்ட அவர்களே தீண்டத்தகாதோர். துப்புரவுப் பணியைப் போன்ற கடைநிலை வேலைகள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டன. புஷ்யமித்ர சுங்கனிடம் சரணடைந்து, பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சூத்திரர்களாக நிலைத்துவிட்டனர். இப்படியாக சாதியின் பிறப்பை, அது நம்மை பிரித்து முடக்கிய விதத்தை உண்மையான மானுடவியல் ஆய்வுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

04:56

இந்து மதத்தின் உரிமையாளர்களாக தங்களை முன்னிறுத்தி, அதன் பெயரால் ஒருமைப்பாட்டை சீர் குலைக்கும் வன்செயல்களைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிக்க சாதியினரான பார்ப்பன, வைசிய, சத்ரியர்களோடு இந்து மதமும் வந்ததாக நாம் நம்புகிறோம். உண்மையில் இந்து மதம் என்ற ஒன்று அக்காலங்களில் இல்லவே இல்லை. சிறுபான்மையாக இருந்த ஆரியப் பார்ப்பனியமே பின்னாளில் பெரும் பான்மையை வேண்டி பிற்படுத்தப்பட்டோரையும் தலித் சாதியினரையும் ஒன்றிணைத்து இந்து மதமாக மாறியது. 1920 வரையிலும் தங்களை ஆரியர்களாகவே இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

1920-களில் இந்திய சுதந்திரப் போராட்டம் உக்கிரத்தில் இருந்த காலகட்டத்தில், தங்களை இந்துக்களாக அறிவிக்காமல் போனால் நாடற்றவர்களாக தனித்து விடப்படுவோம் என்ற அச்சத்திலேயே இந்துத்துவ அரசியலை, பார்ப்பனர்கள் கையிலெடுக் கின்றனர். அதுவரையிலும் ஆரியர்களாக இருந்தவர்கள் இந்துக்களாக மாறி, 1922-இல் இந்து மகா சபையை உருவாக்கி, மத அரசியலை தொடங்குகின்றனர்.

இந்து (மதம்) என ஒன்று உண்மையில் இல்லை. உதாரணத்திற்கு மளிகைக் கடையில், நாம் எல்லா பொருட்களையும் வாங்க முடியும்; ஆனால் மளிகையை வாங்க முடியாது. அது போல, இந்து மதம் வெறுமனே ஜாதிகளின் தொகுப்புதான். அதில் ஒவ்வொரு வரும் ஜாதியாகவே இருக்கிறார்கள்; இந்துவாக அல்ல. ஆரியப் பார்ப்பனியமாகவே இருந்த வரையிலும், பூர்வகுடிகளான பெரும்பான்மைச் சமூகத்தின் அச்சுறுத்தலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆக, இந்து மதம் என்பது சங்கிலி. ஒவ்வொரு சாதியும் அதன் கண்ணிகள். இந்த கண்ணிகள் அறுந்துவிடுமானால் பார்ப்பனியம் அழிந்துவிடும். பகுத்தறிவினாலோ, வேறு மதங்களாலோ கண்ணிகளில் விரிசல் வருமானால் பார்ப்பனர்கள் பதற்றமடைவது அதனாலேயே!
கடவுளின் பெயராலேயே சாதி உருவாக்கப்பட்டது; கடவுளின் பெயராலேயே அது பாதுகாக்கப்படுகிறது. இங்கு சாதி இல்லாத இடமே இல்லை. வேற்று மதங் களிலும் சாதிப் பாகுபாடு உன்டு. முஸ்லிம்களிடையே மூவர்ண பாகுபாடு உள்ளது.

உங்களது கருத்துக்கள் அருமை ஆதாரப்பூர்வமாக கிடைக்க வேண்டுகிறேன். புத்த மதத்தை இந்து மதத்துடன் இணைத்தது யார்? அவர் விஷ்ணுவின் அவதாரம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

அதற்கான விளக்கங்கள் உங்கள் மத குருமார்கள் நன்றே அறிவார்கள். மாயைகளை தவிர்த்து மெய்ப்பொருளை உணர்வதே அதன் நோக்கம். சிற்பங்களை கண்டு வாய் பிளந்து நின்றால் மெய்ப்பொருளை உணர்வது எப்படி?

அருமை அரு​​மை. இந்து மதத்தை கீழ்த்தரமாக பேசும் மற்றையவர்கள் மத்தியில் தலைக்குனிந்து நின்ற இந்து மக்களில் நானும் ஒருவர். உங்கள் இந்து மதத்துக்கான பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள். தொடர்ந்தும் வாசிப்பேன். நன்றி


Next Post Next Post Home
 
Back to Top