( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை அக்டோபர் 22 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உலகின் முதல் மதம் இதுதானா...?

  இந்து மத வரலாற்று தொடர் 2
  ந்த ஒரு மனிதனை பார்த்தாலும் அவனைப் பற்றி உடனடியாக நமக்குள் எழும்பும் கேள்வி இவன் வயது என்னவாக இருக்கும் என்பதுதான்.  சாதாரணமான மனிதனின் வயதையே அறிந்து கொள்ளும் ஆர்வம் வரும் போது மதங்கள் போன்ற பெரிய பெரிய விஷயங்களை அறிந்து கொள்ளும் பொழுது இது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்ற சிந்தனை வருவது தவிர்க்க முடியாததே ஆகும்.

 5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.  இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது.  அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம்.


  பொதுவாக இந்து மதத்தின் தோற்றத்தை வேத காலத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் நம்முடைய வழக்கமான மரபு.  ஆனால் இந்து மதம் உண்மையில் வேதகாலத்தில் தான் தோன்றியதா அல்லது அதற்கு முன்னரே தோன்றிவிட்டதா என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சிந்திப்பது இல்லை.  காரணம் நமக்கு வேதகாலம் என்பதே எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது சரிவர தெரியாத போது அதற்கு முன்பே உள்ள காலத்தை எப்படி கணித்து பார்க்க முடியும்.  அப்படி முடியாது என்பதினால் காலங்களை அறிந்து கொள்ளும் நமது ஆர்வத்தையும் முயற்சிகளையும் கைவிட்டு விடமுடியுமா எனவே வேதகாலத்திற்கு முற்பட்ட காலத்தை அறிந்து கொள்ள நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போம்.  அப்படி பார்த்தால் தான் இந்து மதத்தின் தொன்மையை நாம் உணர முடியும்.

 புவியியல் அறிஞர்கள் உலகத்தில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியாவில் தான் என்று சொல்கிறார்கள்.  இவர்களின் இந்த கூற்றுக்கு சில யூகங்கள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறதே தவிர அறிவியல் சார்ந்த அசைக்க முடியாத சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை இருந்தாலும் கூட நமது இந்திய நாட்டை பொறுத்த வரையில் மனித இனம் தோன்றியது தெற்கில் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன.

 பல கோடி ஆண்டுகள் வயதுடைய முதுமையான கற்பாறை படிவுகள் தென்னிந்தியாவில் காணப்படுகிறது.  அப்பாறை படிவுகள் இருக்கும் பகுதிகள் காடுகளும் மலைகளும் சார்ந்த பகுதிகளாக இருப்பதினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித சமூகம் வாழ்ந்திருக்க வேண்டும்.  எப்படியென்றால் இங்குதான் அதிக சிரமப்படாமல் மனிதர்கள் வேட்டையாடி மிருகங்களை உணவாக்கிக் கொள்ளவும் காய் கனிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்பிருந்திருக்கிறது.  மேலும் விந்திய மலை தொடருக்கு வடக்கே இன்று பரந்து கிடக்கும் கங்கை சமவெளியும் இமயமலை தொடரும் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது. 


     இன்று கூட இமயமலை சிகரங்களின் உச்சியில் கடல்வாழ் உயிரனங்களின் படிமங்கள் படிந்திருப்பதை பார்க்கும் பொழுது இமயம் கடலுக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது.  வட இந்திய பகுதி கடலுக்குள் மூழ்கி கிடந்த காலத்தில் தென்னிந்தியா தான் உயரமாகவும் காடுகளும் மலைகளும் சூழ்ந்ததாகவும் இருந்திருக்க வேண்டும் அதனால்தான் மனித இனம் இந்தியாவை பொறுத்த வரை தெற்கில் தான் தோன்றியிறுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  புவியியல் கணக்கு படி சுமார் ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இமயமும், கங்கை சமவெளியும் கடலுக்குள்ளிருந்து வெளிவந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

 ஆக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கன்யாகுமரியிலிருந்து தெற்கே நெடுந்தொலைவிற்கு நிலப்பரப்பு பரந்து கிடந்ததாகவும் அந்த பகுதிதான் லெமுரியா கண்டம் என்று ஒரு சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  முதன் முதலில் மக்களினம் லெமுரியா கண்டத்தில் தான் தோன்றியதாகவும் இன்று இலங்கையிலும் மேற்கிந்திய தீவுகளிலும் தென்னிந்தியாவில்  வாழக்கூடிய மக்கள் அந்த ஆதிமனிதர்களின் வாரிசுகள் என்று கருதப்படுகிறது.  அப்படி கருதுவதற்கு காரணமும் இருக்கிறது.  இந்த பகுதிகளின் நில அமைப்பு வாழும் மக்களின் உடலமைப்பு தோலின் நிறம் ஆகியவைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக காணப்படுகிறது.  இதுமட்டுமல்ல நியுஜிலாந்தில் வாழும் மேவா என்ற ஆதிமக்களின் மொழியமைப்பில் தமிழ்சொற்கள் பல இருக்கின்றன.  மேலும் மேற்கிந்திய தீவு மக்களின் சில பழக்க வழக்கங்களும் வழிபாட்டு முறைகளும் சின்னங்களும் சற்றேரக்குறைய தமிழ் மரபோடு ஒத்து அமைந்திருக்கிறது.

  போர்னியாவில் உள்ள ஆதி குடிமக்களான டயாப்புகளும் நமது ஆனைமலை பகுதியில் வாழும் காடர்கள் என்ற மலை சாதியினரும் ஒரே மாதிரியான வகையில் மரம் ஏறும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.  இது தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்களுக்கும் தமிழ்நாட்டு வனவாசிகளுக்கும் உருவத்திலும் நடை உடை பாவனையிலும் சமயச் சடங்குகளிலும் ஒற்றுமையிருப்பதை இன்றும் காணலாம்.  இலங்கை தமிழ் மக்களுக்கும் நமக்கும் உள்ள ஒருமைப் பாட்டை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 


   இவைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது விந்திய மலைத் தொடங்கி ஆப்ரிக்கா வரையில் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை நம்பாமல் இருக்க முடியாது.  நமது பழந்தமிழ் இலக்கியங்கள் மிகப்பெரும் கடல்கோள் ஒன்று ஏற்பட்டு தமிழ்நிலப் பகுதிகள் பலக்கூறுகளாக பிரிந்து போய்விட்டதாக பதிவு செய்து வைத்திருக்கிறது.  இந்த கடல் கோளினால் லெமோரியா கண்டம் இந்திய நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டது அல்லது அழிந்துபோய் விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

 கடல் சீற்றத்தால் லெமோரியா கண்டம் அழிந்த பொழுதுதான் இமயமலையும் கங்கைச் சமவெளியும் நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும்.  இந்த காலகட்டத்தில் கடல் தாக்கத்திலிருந்து தப்பி பிழைத்த மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்திருக்க வேண்டும்.  அப்படி குடிபெயர்ந்து வாழ்ந்த மக்களின் நாகரீக சுவடுகள் தான் சிந்து சமவெளி நாகரீகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.  வரலாற்று அறிஞர்களை வியப்பிலும் திகப்பிலும் ஆழ்த்தக்கூடிய பல பொருட்கள் சிந்து சமவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   


   பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வழி முழுவதும் பரவி இருந்த ஒரு பெரும் நாகரீகத்தின் சின்னங்களாக அவைகள் இன்று நமக்கு காட்சி தருகின்றன.  மொகஞ்சதரோ, ஹராப்பா ஆகிய இரு புதை நகரங்களிலும் காணப்படும் கட்டடங்களின் அமைப்பும் நகரங்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது.  அந்த காலத்தில் மொகஞ்சதரோ வளமையான நகரமாக விளங்கியதாகவும் பெரும் வெள்ளத்தினால் அந்நகரம் ஏழுமுறை தாக்கப்பட்டு மண்மூடிப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

  மொகஞ்சதரோவிலும் ஹராப்பாவிலும் ஊருக்கு வெளியே கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன அக்கோட்டைகள் மன்னர்களின் அரண்மனைகளாகவும் படைவீரர்களின் பாடிவீடுகளாகவும் பயிற்சி கூடங்களாகவும் இருந்திருக்க வேண்டும்.  அவைகளில் பெரிய பெரிய நீச்சல் குளங்களும் நேரான சாலைகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டிருந்தன.  மத குருமார்களுக்கு தனிதனி குடியிறுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  அந்நகர மக்கள் அழகான மண்பாண்டங்களும் பொம்மைகளும் வெண்கல சிலைகளும் செய்ய கற்றிருந்திருக்கின்றனர். 

  செப்பேடுகள் எழுதும் பழக்கமும் அவர்களிடம் இருந்திருக்கின்றனர்.  அவர்கள் பயன்படுத்திய நாணயங்களிலும் சில பட்டையங்களிலும் சில பாத்திரங்களிலும் இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் சிந்து வழி எழுத்துக்களில் அடிக்கடி ஒரு குறி வருகிறது மூடியில்லாத மண்பாண்டத்தை போன்று அந்த குறி வரையப்பட்டுள்ளது.  அது அரசமரத்தை குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த ஆய்வு குழவினர் கூறுகிறார்கள்.  இது அரசமரத்தை காட்டும் குறியல்ல மரக்கலத்தை அதாவது படகை சுட்டிக்காட்டும் குறியென்று பின்லாந்து நாட்டை சேர்ந்த அறிஞர்கள் கருதுகிறார்கள்.  அந்த குறியீட்டை நாம் நேரடியாக பார்க்கும் பொழுது அரச மரத்தை காட்டும் குறியாகவே அது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர மரக்கலத்தை காட்டுவதாக தோன்றவில்லை.


  சிந்து வழி நாகரீகத்தில் முன்னூறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.  அதில் ஒரு எழுத்துக்கு கூட இன்று வரை அர்த்தம் கண்டுபிடிக்கபடவில்லை இந்த எழுத்துகள் தவிர பல வித சித்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அந்த சித்திரங்களில் பெருவாரியானவைகள் விலங்குகளும் ஆயுதங்களும் தெய்வங்களும் மனிதர்களும் ஆகும்.  அந்த விலங்கு சித்திரங்களை பார்ப்பவர்கள் வேதத்தில் குறிப்பிடும் யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை காட்டுவதாக சொல்கிறார்கள்.  ஆனால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

  காரணம் என்னவென்றால் யானைகளும் காண்டாமிருகங்களும் அந்த ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன.  எந்த சூழலிலும் இத்தகைய மிருகங்களை வேள்விகளில் பலியிடப்பட்டதாக வேதத்தில் எந்த குறிப்பும் கிடையாது எனவே இந்த முத்திரை சித்திரங்கள் நிச்சயமாக வேதங்களை சார்ந்தது அல்ல என்று துணிந்து கூறலாம்.  இது மட்டும் அல்ல இந்த சித்தரங்களில் வேதங்களில் குறிப்பிடப்படும் தெய்வ உருவங்கள் எதுவுமே வரையப்படவில்லை. 

  மேலும் அந்நகர சுவடுகளில் கிடைக்கும் எல்லாவகையான சமயச்சார்புடைய ஆதாரங்களை திரட்டி பார்க்கும் பொழுது சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கைகும் வேதங்களில் குறிப்பிடப்படும் சமய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது.  ஒன்று அந்த மக்கள் வேதம் சாராத வழிபாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேதகாலத்திற்கு முற்பட்ட சமயநெறியை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

  ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி வந்ததாக ஒரு சாராரும் இல்லை அவர்களும் இந்நாட்டின் பூர்வ குடிகள் தான் என்று ஒரு சாராரும் முடிவே இல்லாமல் வாதாடி வருகிறார்கள்.  இன்னொரு சாரார் திராவிடர்கள் கூட இந்தியாவில் குடியேறியவர்களே தவிர பூர்வ குடிகள் அல்ல என்று கூறுகிறார்கள் எல்லோருமே தங்களது வாதங்களுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை தருகிறார்கள்.  அவற்றில் எது சரி எது தவறு என்ற முடிவிற்கு நம்மால் வரமுடியவில்லை காரணம் அனைவரின் தரப்பிலும் கொஞ்சமாவது உண்மையிறுப்பதை நம்மால் உணரமுடிகிறது. 

  ஆனால் இந்த வாதபிரதி வாதங்களில் இந்த மதத்தை பொறுத்த வரையில் அசைக்கமுடியாத ஒரு உண்மையை நாம் பெற முடிகிறது.  அந்த உண்மை என்னவென்றால் வேதங்களுக்கு முன்பே இந்து மதம் இந்த நாட்டின் தாய் மதமாக இருந்திருக்கிறது.  என்பது தான் அது.  எதைவைத்து இந்த முடிவை நான் சொல்கிறேனென்றால் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கடவுள் உருவங்களில் பல வேதங்களில் குறிப்பிடப்படாதவைகள் இருக்கின்றன.  அது மட்டுமல்லாது அந்த மக்களின் வழிபாட்டு முறைகள் பல வேதக்கருத்துகளுக்கு மாறுபாடுடையதாக இருந்திருக்கின்றது.  அதற்கு பல ஆதாரங்களை நம்மால் கூறஇயலும்.

 சிந்து சமவெளியில் பல இடங்களில் லிங்க உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த மக்கள் லிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று துணிந்து கூறலாம்.  ஆனால் வேதங்களில் லிங்க வழிபாடு என்பது சிறப்பித்து கூறப்படவில்லை.  மாறாக கேலி செய்யும் பாணியிலேயே சில வேத ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.  இவைகளை வைத்து பார்க்கும் பொழுது வழிபட்டவர்களும்  கேலிசெய்பவர்களும் ஒருவராகவே இருப்பார்கள் என்று கூறமுடியாது.  வேதகால மக்கள் சிந்து வழியில் வாழ்ந்தவராக இருந்து பிறகு கங்கை வெளியில் பரவி குடியேறி இருப்பார்கள் ஆனால் சிந்துவெளி சின்னங்களாக எழுத்து முத்திரைகளும் செப்பேடுகளை பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே கொண்டு சென்றிருக்க வேண்டும்.  ஆனால் வேதகால நாகரீகத்தில் இவைகள் முற்றிலுமாகவே இல்லை என்று சொல்லலாம்.


  வேதகால மக்களின் மனித சித்திரத்தையும் சிந்துவெளி மக்களின் மனித சித்திரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மிகப்பெரும் வித்யாசம் இருப்பது தெரிகிறது.   சிந்துவெளி மனிதனின் உதடுகள் தடித்து பிதுங்கி உள்ளதையும் வேதகால மனித உருவம் அதற்கு மாறுபட்ட வடிவில் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது.  மொகஞ்சதரோ பகுதியில் கிடைக்கும் களிமண் முத்திரைகளை பசுபதி வடிவிலுள்ள சிவபெருமான் அமைதியான யோக முத்திரையுடன் காணப்படுகிறார்.  ஆனால் வேதத்தில் குறிப்பிடப்படும் ஸ்ரீ ருத்ரன் ரௌத்ர காலத்தில் அதாவது கோபாவேச மூர்த்தியாக காட்டப்படுகிறது.  இது மட்டுமல்லாது பெண் தெய்வ வழிபாடு சிந்துமக்களிடம் போற்றத்தக்க அளவில் இருந்திருக்கின்றது.  ஆனால் வேதங்களில் பெண் தெய்வங்களுக்கு உரிய முக்கியத்துவம் ஆரம்பத்தில் கொடுக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

 சிந்துவெளி மக்கள் தங்களது இறை வழிபாட்டில் கோள்கள், விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார்கள்.  வான சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் சிறந்தவர்களாக அம்மக்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் பல கிடைகின்றனர்.  இந்த இரு சாஸ்திரங்கள் அவர்களது வாழ்க்கையில் பின்னி பினைந்திருப்பதை அவர்களுடைய மனித பெயர்களுடன் நட்சத்திரங்களின் பெயர்களை இணைந்து வைத்திருப்பதனால்  நாம் அறிந்து கொள்ளலாம்.  இந்த கூறுகள் அனைத்துமே ஆரம்பகால வேதங்களிள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.  பிற்காலத்திலேயே வானவியலும் ஜோதிடவியலும் வேதங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

 மேலே சொன்ன காரணங்களை பின்னர் விரிவாக நாம் பேசினாலும் இன்னும் இருக்கின்ற சில வேறுபாடுகளை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதினால் இந்துமதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பதை இன்னும் தெளிவாக நாம் உணர வழி ஏற்படும்.


  வேதங்களில் பறவைகளையும், விலங்குகளையும் தெய்வத்தன்மை வாய்ந்ததாக சொல்லும் கருத்துகள் ஆரம்ப காலத்தில் இல்லை.  வேதகாலமானது முடிவுக்கு வரும் நேரத்திலேயே அவைகளை புனிதமானதாக கருதும் நிலை எற்பட்டுள்ளது.  அதாவது ஆரம்பகால வேத பாடல்களில் பசுவை புனிதமாக கருதக்கூடிய எந்த குறிப்பும் இல்லாததை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.  சிவனுக்கு எருதுவும் துர்க்கைக்கு சிங்கமும் விஷ்ணுவுக்கு கருடனும் பிரம்மனுக்கு அன்னமும் பிற்காலத்திலேயே வாகனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.  இது எப்படி ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும்.

 மனிதன் தவிர மற்ற உயிரனங்களும் தெய்வ தன்மையை தங்களோடு வைத்திருப்பதை சிந்து வழி மக்கள் நம்பி பறவைகளையும் விலங்குகளையும் வழிபட்டு இருக்கிறார்கள்.  இந்த வழிபாடானது திடீரென்று அவர்களுக்கு தோன்றியதாக இருக்க வாய்பில்லை.  பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக நம்பி வந்ததையே தங்களது பழக்கத்தில் அவர்கள் வைத்திருக்க வேண்டும். 

  சிந்து பகுதி மண் மேடான பிறகு அதிலிருந்து தப்பி பிழைத்த சில மக்கள் கங்கையோரத்தில் குடியேறியிருக்க வேண்டும்.  பிற்காலத்தில் கங்கை நதி புறத்தில் வேத நாகரீகம் பரவிய போது இந்த மக்களின் வழிபாட்டிலுள்ள கவர்சி மிக்க இந்த அம்சம் வேத விற்பன்னர்களை ஈர்த்து வேதங்களில் இவைகளை பற்றிய குறிப்புகளை ஏற்றியிருக்க வேண்டும்.  அப்படித்தான் வேதத்தின் கடைசி காலத்தில் இவைகள் வந்திருக்க வேண்டுமே தவிர ஆதியிலிருந்து இம்முறை இருந்ததற்கான வாய்ப்பில்லை.  


   வேதங்களில் பானிகள் என்று ஒரு புலத்தினர் குறிப்பிடப்படுகிறார்கள் இவர்கள் வணிகர்கள் என்று காட்டப்படுகிறார்கள்.  இப்பானி மக்கள் வட்டி தொழிலை மேற்கொண்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன.  மேலும் இவர்கள் புதிதான ஒரு வழிபாட்டு முறையை கடைபிடித்ததாகவும் அந்த முறை வேதமுறைக்கு முரணானதாக இருந்ததாகவும் இதனால் வேத நெறி நிற்பவர்களுக்கும் இந்த புலத்தாரருக்கும் அடிகடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் க் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.  இந்த பானிமக்களே சிந்து வழி மக்களாக இருக்க வாய்ப்புள்ளது.  இவர்களுடன் ஏற்பட்ட பகைமையை பெரிதாகக் கொள்ளாமல் இவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் பொருந்திய வழிபாட்டு முறைகளை வேதங்கள் சுவிகாரம் எடுத்து கொண்டிருக்க வேண்டும்.

 சிந்துவெளி நாகரீகத்தில் மட்டுமல்ல அதற்கும் முந்தைய காலத்திலும் இந்துமதம் இந்த நாட்டில் இருந்துள்ளது பல சர்ச்சைகள் இருந்தாலும் சிந்து நாகரீக காலத்தை கி.மு. 5000 க்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே அதாவது கி.மு. 90000 ஆண்டிலேயே விநாயகரை வழிபடும் வளக்கம் மக்கள் மத்தியில் இருந்துள்ளது சிந்துமாநிலத்திற்கு அறுகிலுள்ள நௌஸர் என்னும்இடத்தில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை 1992 ஆண்டு கண்டெடுக்கப்பட்டது இந்த சிலைக்கு இன்றைய வயது 11 ஆயிரம் வருஷம் மட்டும் தான் இபிகே7712 என பெயர் சுட்டப்பட்ட இந்த விநாயகர் உருவம் தற்போது பாகிஸ்த்தான் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது


  வேதங்களில் உள்ள சிறப்பான அம்சமே எந்த வகையிலாவது நல்லவற்றை எடுத்து கொள்வதே ஆகும்.  ஆரம்பகால வேத ஸ்லோகங்கள் ருத்ரனை மூலமூர்த்தியாக கருதியது கிடையாது ஆனால் சிந்து வழி மக்களிடமிருந்து பசுபதியை சுவிகரித்துக் கொண்டவுடன் வேதக்கடவுளான ருத்ரனின் நிலையை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் வேதங்களால் பசுபதி போற்றப்படுகிறார்.  யோக முத்திரைகளும் பெண் தெய்வ வழிபாடும் மரம், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் மேன்மைகளும் அப்படியே வெளியிலிருந்துதான் வேதத்திற்குள் அழைத்துவரப் பட்டிருக்கின்றன அவைகள் தான் இந்து மதத்தின் ஆதிகூறுகள் ஆகும். அதன் விரிவாக்கத்தை அடுத்த அத்யாயத்தில் தெளிவாக பார்ப்போம்.


+ comments + 48 comments

மனோகரன்
01:36

ஸ்வாமிஜி நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தையும் இந்த வரலாற்றுத் தொடரில் விளக்கினால் எங்களைப் போன்ற புதிய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும் இன்று உலகத்தில் உள்ள புத்தமதம் ஜைனமதம் கன்பூசியஸ்மதம் ஹிண்டோ மதம் தாவோயிஷம் ஹீபூரு மதம் கிறிஸ்த்துவம் இஸ்லாம் சீக்கியம் பஹாய் இன்னும் பிற மதங்களெல்லாம் கூட உருவாவதற்கு இந்து மதமே காரணம் அந்த மதங்கள் அனைத்தும ஏதோ ஒருவகையில் இந்துமதத்திடம் இருந்துதான் கருத்துக்களை சித்தாந்தங்களை பெற்றிருக்கின்றன அவைகளைப்பற்றியும் ஆதாரங்களுடன் தகவல் தாருங்கள்

சுவாமிஜி ... அருமை...
கிமு. 5000 த்தில் தொன்றிய....
யூப்ரிட்டிஸ் டைகிரீஸ் நதி படுக்கையில்
உருவான
மெசபடொமிய, சுமேரிய, சால்திய, அக்கேடியன், அசிரியன்,
கிரேக்கம்........
அதன் பின் சிந்து சமவெளி ...
அதிலிருந்து பயத்தின் வெளிப்பாடாக சகுனம்,
ஜொதிடம், இயற்கை வழிபாடு, மதங்கள்
என உருவெடுத்திருக்கலாம்..........

Excellent info!!!

முதல் மதம் நம் மதம். முதல் கடவுள்?.

suresh
22:14

@ஜெகதீஸ்வரன்.

முதல் மதம் நமது எனும் பொது கடவுள் மட்டும் இறக்குமதியா ஆவார் நம்ம கடவுள்தான் முதல் கடவுள் நிஜ கடவுள்

சாமீ அவர்களே தங்கள் கருத்துக்களும் பதிவுகளும் அருமை,
மேலும் நீங்கள் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் படித்திருக்கிறீர்களா?இந்த நூலாசிரியர் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று பல விவரங்களைத் திரட்டி இந்நூலை எழுதி உள்ளார்.இது சாகித்திய அகாடமி விருது பெற்ற புத்தகம்.ஒரு முறை படித்துப் பார்த்து கருத்துக்களை எழுதுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்.

கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ருத்ர ஜபம் வேதத்தில் பின்னால் சேர்க்கப் பட்டதா? வேதங்கள் பற்றி கருத்து சொல்லும் போது reference குடுப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. வேதங்களில் உருவ வழிபாடு ஆகம வழிபடு பற்றிய குறிப்பு இருக்கா என்பதையும் சொல்லவும்.

For information,
அரவிந்தன் நீலகண்டன் எழுதும் பகுதியையும் பார்க்கவும்.

http://www.tamilpaper.net/?p=1114#comment-1536

அன்பரே, நீங்கள் கூறிய கருத்துக்களில் அதிக பிழை இருக்கிறது...வரலாறுகளை முதலில் நன்றாக தெரிந்து கொண்டு பிறகு கட்டுரை எழுதுங்கள்...இஸ்லாம் மதம் கிருஸ்தவ மததிற்க்கு பின்பு வந்தது என கூறி உள்ளீர்கள்..யார் சொன்னது உங்களுக்கு...எங்களுக்கு கடைசியாக வந்த நபி தான் ரசூல் அவர்கள்..அதற்க்கு பல வருடத்திற்க்கு முன்பே ஒரு ஒரு சமுதயதிட்க்கும் பல நபிகள் அனுப்பபட்டார்கள்...அதில் ஒரு நபி தான் இயேசு என்பவரும்...ஆனால் வரல்லாற்று ஆய்வாளர்கள் அவர் வேறு ஒரு மதத்தை போதிக்கிறார் என தவறாக சித்தரித்து விட்டார்கள்....எங்கள் குரானின் படி அதாம் ,ஏவாள் என்பவர்களும் இஸ்லாத்தை போதிக்க வந்த நபி தான்...அதனால் எங்கள் மதமே முதல் மதம் ....

@virutcham

எமது அடுத்த பதிவில் வேதங்களுக்கான விடை கிடைக்கும்

@சாமீ அழகப்பன்

நீங்கள் கூறிய நூலை படித்துள்ளோம் அதை வேறு பதிவுகளில் சில இடங்களில் கையாளுவோம்

Anonymous
11:37

உங்கள் கட்டுரை ஆதி மதத்தை பற்றி சரியான முடிவு கூறவில்லை, மாறாக இந்து மதத்தை முதல் மதமாக சித்தரிக்க முற்படுவதாக உள்ளது.
பிற மதங்களை பற்றி நிறைய அறிந்து அதன்பின் இக்கட்டுரையை எழுதினால் உங்களுக்கு இந்த தவறு ஏற்பட்டிருக்காது.

உங்கள் கூற்றுப்படி யூத மதத்திற்கு பின் கிருத்துவம் பின் இஸ்லாம் என்றால் நீங்கள் வரலாறு தெரியாதவராவீர்கள் ஏனெனில் நன் இஸ்லாமியன் என்ற முறையில் உங்கள் கூற்றை போய்பிக்கமுடியும், இஸ்லாத்தில் மொத்தம் 1,24,000 இறைத்தூதர்(நபி)கள் இருந்தனர், இவர்கள் இறைவனின் (அல்லாஹ்வின்) கட்டளைகளை மனிதர்களுக்கு போதிப்பது மற்றும் அதன்படி மக்கள் முன் வாழ்ந்து காட்டுவதாகும், இதன்படி இயேசுவும் எங்கள் நபிமார்களில் ஒருவர்தாம் மேலும் முகம்மது நபி (அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதராவார் இதன் மூலம் கிருத்துவம் என்பதே இஸ்லாத்திலின் திரிந்தபோதனை நிலையாகும் (இதனால் கிருத்துவம் இஸ்லாம் ஆகாது நிலையானது)

இஸ்லாத்தில் இறைபோதனைகளை பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துச்சொன்ன 1,24,000 இறைத்தூதர்(நபி)கள் நீங்கள் குறிபிடும் காலங்களுக்கும் அப்பாற்பட்டு இஸ்லாத்தை போதித்திருக்கிரார்கள். குறிப்பாக உலகின் முதல் மனிதன் ஆதம் என்பதை உலகமே ஏற்கிறது அவர்தாம் முதல் நபி என்று குறஆன் கூருகிறது

ஆனந்த குமாரசாமி
19:24

ஐயா பெயர் குறிப்பிடாமல் கருத்தை சொல்கின்ற பெரியவரே நீங்கள் ஒன்றும் பாததூரமான கருத்தை சொல்லிவிட வில்லை அதனால் பெயரை வெளிட்டிருந்தாலும் ஒன்றும் குறைவு வந்திராது மேலும் நமது யோகியார் இந்தப் பதிவுகளில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் வரலாற்று ஆதாரகளை வைத்தே தவிற தனது சொந்த அவிப்பிரயங்களை அல்ல நீங்கள் உலகின் முதல் மதம் இஸ்லாம்தான் என நம்புவதில்குற்றம் சாட்டயாருக்கும் உறிமையில்லை அதே நேரம் உங்கள் நம்பிக்கைத்தான் வரலாறு என வாதிடுவது சரியான பாதையல்ல இஸ்லாம்தான் முதல் மதம் ஆதாம்தான் முதல் நபி என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன உள்ளன என்பதை தெரிவிக்கலாம் குரான் தவிர்த்து வேறு என்ன தடயங்கள் அதற்கு இருக்கிறது தாருங்கள் விவாதிப்போம்

ஆனந்த குமாரசாமி
நீர் கொழும்பு

Anonymous
20:51

sri
இஸ்லாமியா்கள் எப்பவும் யேசுவை ஒரு மனிதனாக சித்தரிக்கிறார்கள் அது தவறு

ஹலீம்
16:30

உலகில் பிறந்த எவருமே மனிதர்தான். அது ஏசுவானாலும், ராமரானாலும் முஹம்மதானாலும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். ஏசுவையோ அல்லது ராமரையோ கடவுளாக பார்ப்பது உங்களின் நம்பிக்கையே தவிர அது உண்மையில்லை, அதில் எந்த நியதியும் இல்லை என்பதை உணர வேண்டும். கடவுள்கள் மனிதாராக பிறக்க முடியாது ஏனென்றால் கடவுள் மனிதப்படைப்புக்கு அப்பாற்பட்டவன் மேலும் மனிதனையே படைத்தவன்.

@riyaa
>>இஸ்லாம் மதம் கிருஸ்தவ மததிற்க்கு பின்பு வந்தது என கூறி உள்ளீர்கள்
>>எங்கள் குரானின் படி அதாம் ,ஏவாள் என்பவர்களும் இஸ்லாத்தை போதிக்க வந்த நபி தான்...

நண்பர் ரீயா அவர்களே குரான் எப்பொழுது கூரப்பட்டது அல்லது இயற்றப்பட்டது?

@Rajan: இஸ்லாம் மதம் கிருஸ்தவ மததிற்க்கு முன்பு வந்தது என கூறி இருந்தேன்....அதற்க்கு எங்களுக்கு ஆதராமாக குரான் விளங்குகிறது...திரு குரான் என்பது முஹம்மது நபி மூலம் இறைவன் எங்களுக்கு கொடுத்தது..அதில் உள்ள வாசகங்கள் அனைத்தும் இறவன் மனிதருக்கு கூறியது..அதில் கிருஸ்தவர்கள் நபியை தவறாக சித்தரித்தது பற்றியும், அதாம் போன்றோரும் நபி என்பதையும் இறைவன் அதில் கூறுகிறான்....குர்ஆண் 1450 வருடங்களுக்கு முன் நபி மூலம் இறைவன் அளித்தது...திருகுரான் 1450 வருடங்களுக்கு முன் வந்தாலும், அதில் உலகம் தோன்றியதிலிருந்து உள்ள பல வரலாற்று உண்மைகளை இறைவன் கூறுகிறான்..அந்த வரலாற்று ஆதாரங்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கின்றன..

09:13

உள்ள்கில் முதலில் தோன்றிய நமது மொழி ஈனம். இவ் உள்லகில் முதலின் அளியும்யேன்பதில் உண்மைகள் உள்ளத ????

Anonymous
00:17

hello sir

i have doubt,,, most of the website saying lingam means wowens reproductive and male reproductive,,, is it true?

but i couldn't accpet what they are saying...
will u please explain

@Anonymous

சைவ சமயத்தை பற்றி சொல்லும் போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்

மிக அருமை.
உங்கள் கூற்றுக்கு உதவிய ஆதார மூலத்தையும் பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இபிகே 7712 பற்றி கூகிள் லில் தேடினேன் கிடைக்கவில்லை.

Anonymous
22:21

The first God in the World is the SUN i.e.Siva (Sivanthan) and the other is MOON which is nothing but Murugan. The others are the Planets and the Stars.

Anonymous
22:30

The First religion in this world is HINDU and the first GOD is the SUN. The sun knows all the activities happening in this world by the human beings. Without his knowledge nothing will happen in this world.

Anonymous
16:54

@Anonymous
to anonymous@ But the scientists say The SUN is going to dead in coming years.

ஈடில்லா இணையம்,உங்கள் உஜிலா தேவி.கல்வியாளர் பேசாத பெருள்கள்,தங்கள் தலைப்புகளில்.இன்னும் விரியட்டும் உங்கள் கைவண்ணம்.

http//tamil-mani-osai.blogspot.com

Anonymous
10:37

இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?

முதலில் இந்து என்ற மதம் உண்டா?

இந்தக் கேள்விக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் 125,126 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கின்றார் என்றால்,

இந்து என்பது நமது பூர்வீகப் பெயரல்ல. வைதீக மதம், சனாதன மதம், என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவுமில்லை.

நமது ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை.

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சங்கராச்சாரியே சொல்லிவிட்டார்.


சங்கராச்சாரியைப் போலவே இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பே இருக்கின்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மைக்கேல் X எதிர் வெங்கடேஸ்வரன் (65 லிகீ 108) என்ற வழக்கில் நீதிபதி பி.வி. ராஜமன்னார் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றார்.

அந்தத் தீர்ப்பில், இந்து மதம் என்று (நான்) குறிப்பிடும்போது அச்சொல்லின் பொருள் தெளிவற்ற ஒன்றாக இருப்பதை உண்மையில் உணர்ந்தே இருக்கின்றேன்.

நாம் புரிந்துகொண்டுள்ள பொருளில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. அது (அச் சொல்) இந்தியாவில் தோன்றியதுமன்று.


இந்துக்கள் தங்கள் மதத்திற்கு அப்பெயரை எப்பொழுதும் பயன்படுத்தியதுமில்லை. ஆனால் அச்சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டது.

மதம் மற்றும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் குறிப்பிட அச்சொல் வசதியின் காரணமாகப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்று உயர்நீதிமன்றமே தீர்ப்புச் சொல்லிவிட்டது இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று.

Anonymous
10:44

இதுவரை இந்து மதத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு கீதையும் மனுதர்ம சட்டமும் பிராமணர்களின் உயர்வுக்காகவே படைக்கப்பட்டவை; இந்து மதம் என்று சொல்லப்பட்டது கூட பிராமணர்களால் படைக்கப்பட்டது என்பதாகும்.


இந்திய வரலாற்றுப்படி இந்து மதத்தில் மிக உயர்வாகக் கருதப்படும் பிராமணர்கள் யார் என்றால், மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். எல்லா வரலாற்று ஆசிரியர்களும் இக்கூற்றை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

ஆக, நமக்கு அய்யம் வரக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் பிறக்காத, இந்திய நாடும் அல்லாத, நாடோடிகளாய் இந்தியாவிற்குப் பஞ்சம் பிழைக்க வந்த பிராமணர்கள், இந்தியாவில் உள்ள மதத்தில் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?


இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த மக்களை இழிவுபடுத்தி இந்தியர் அல்லாதவர்களை உயர்வு படுத்தும் ஒரு மதம் எப்படி இந்திய மதமாக இருக்க முடியும்?


அன்னியர்களுடைய மதம் இந்தியாவில் எப்படி பெரும்பான்மை மதமாக இருக்க முடியும்?

இவற்றுக்கெல்லாம் சங்பரிவார்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?

இந்துத் தீவிரவாதம் என்று சிதம்பரம் சொல்லி விட்டாராம் அதற்காக குதிக்கிறார்கள். நாம் ஒன்று கேட்கலாம்_முஸ்லிம் காரன் மதானி குண்டு வைத்தால் அது முஸ்லீம் தீவிர வாதம், சரி, பிரக்யாசிங் குண்டு வைத்தால் அது எந்தத் தீவிரவாதம். தயவு செய்து சொல்லுங்கள்.

நெருப்பு தமிழன்
14:29

மதம் மதம் என்று நம் மனிதன் என்பதை மறந்துவிட்தோம்
மதங்கள் மனிதனின் நன்மைக்காக உருவானவை
எல்லாம் மதங்கல்லும் நல்லவைதான் எது முதலில் வந்து என்று சண்டை போடாமல் குரு அவர்கள்

கூறியவைகளை படித்து அறிவை வளர்போம்...

மதங்களை மதித்து மனிதனாய் வாழ்வோம்...

abcd
15:13

Allah enral padaiththavan . Ellorum Allah enru sollamal padaiththavane enru sollalam

12:45

இறைவன் இந்தியாவை மட்டும் படைக்க வில்லை, உலகம் முழுவதையும் தானே படைத்தார். இங்கே வேதம் கொடுத்தது போல என் வேறு நாட்டீனவருக்கும் கொடுத்தது இருக்க கூடாது. வேறு மொழி வேறு நாடு எனத்தற்காக மட்டுமே அதை புறக்கணிக்க வேண்டுமா? என்றால் ஏன் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை நாம் ஏற்க வேண்டும்?

Anonymous
19:49

என்னங்கடா பேசிக்கிட்டு இருக்கிறீங்க ?

ஆதியும் அந்தமும் இல்லாதது தமிழ்
ஆதியும் அந்தமும் இல்லாதது இந்துமதம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியன் எங்கள் சிவன்

ஆதியில் உதித்த மதம் சைவ தமிழ்

Hmm...interesting

மதம்னிதனுக்கு மட்டுேமே

Anonymous
16:27

இஸ்லாம் இறைவனின் ஏகத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும்; அவனுக்கு மட்டுமே வழிபடவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இறைவனுடை சிறப்புகளிலும் பண்புகளிலும் அதிகாரத்திலும் அவனுக்குப் பங்காளிகளை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத பாவமாக இஸ்லாம் கருதுகிறது. அதனால்தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் உருவ வழிப்பாட்டை மறுக்கிறோம்.

1.இறைவன் உருவ மற்றவனும் பார்வைக்கு புலப்படதவனும் ஆவான் என்றுதான் இந்து மதம் உள்பட உலகின் எல்லா மதங்களும் சொல்கின்றன. கேனோபநிஷத்தில் இவ்வாறு உள்ளது

'யன்மனஸா ந மனுதே யே நாஹுர் மநோ மதம் ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம யதிக முபாஸதே (1:6)

(மனத்தால் அறிய முடியாததும், ஆனால் மனதுக்கு அறியக்கூடிய ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. 'இதுதான் பிரம்மம்' எனக்கருதி உபாசிக்கப்படுவது எதுவும் பிரம்மம் அல்ல.)

'யச்சக்ஷுஷா ந பஷ்யதி யேன சக்ஷும்ஷி பஷ்யதி ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம் யதித முபாஸதே' (1:7)

(கண்களால் காண முடியாததும், கண்களுக்குப் பொருள்களைக் காணும் ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. இதுதான் அது என உபாசிக்கப்படும் எதுவும் பிரம்மம் அல்ல.)

'யது ஷ்ரோத்ரேன நஸ்ருனோதி யேன ஷ்ரோத்ரமிதம் ஷுர்தம் ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம் யதித முபாஸதே

(செவிகளால் கேட்க முடியாததும், கண்களுக்குப் பொருள்களைக் காணும் ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. 'அதுதான் இது' என உபாசிக்கப்படும் எதுவும் பிரம்மம் அல்ல.)

இறைவன் உருவமற்றவன் என இந்துமதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உபநிஷத்துகள் இறைவனைக் குறிப்பிடும்போது உருவமற்றவன் என்றே குறிக்கிறது.

'நிர்கத ஆகாராது ஸ நிகாரா' - எவன் ஒருவனுக்கு ஆகிருதி(உடம்பு) ஒன்றும் இல்லையோ அவனே இறைவன் (சுவாமி தயானந்தசரஸ்வதி, சத்யார்த்த பிரகாசம், ஆர்ய பிராதேசிக பிரதிநிதி சபா,பஞ்சாப் பக்கம்38)

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதுகிறார்:

இறைவன் உருவமற்றவன்; ஏனெனில் உருவமுள்ளவனாக இருந்தால் வியாபகனாய் (எங்கும் நிறைந்து) இருக்க முடியாது. வியாபகனாய் இல்லையெனில் அனைத்தும் அறிபவன் போன்ற குணங்கள் அவனிடம் இருக்க வாய்ப்பில்லை. பரிச்சனாமாய பொருளில் உள்ள குணம், கர்மா, சுபாவம் போன்றவையும் பரிச்சினங்களாகவே இருக்கும். அதுமட்டுமல்ல இறைவன் உருவம் உள்ளவன் எனில், தட்ப வெப்பங்கள், நோய்கள், தோஷங்கள், குறைகள் போன்ற பாதிப்புகளில் இருந்து விலகி இருக்க முடியாது. ஆகவே இறைவன் உருவமற்றவன் என்பதே தீர்மானமான உண்மை. (சத்யார்த்த பிரகாசம் பக்கம் 288)

குர்ஆன் கூறுகிறது:

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்கமுடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். அல்குர்ஆன் 6:101-103

உருவமற்றவனும் பார்வைகளுக்கு எட்டாதவனுமாகிய இறைவனுக்கு உருவம் கற்பிப்பது செயற்கையானதாகும். சத்தியத்தை கற்பனையுடன் கலக்கும் செயல். அது இறைவனைப் பற்றிய கருத்தை நம்பிக்கையாளர்களிடம் உருவாக்குகிறது. அதனாலேயே அது இறைவன் மீது இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகிறது. இது தொடர்பாக பிரமானந்த சுவாமி சிவயோகி எழுதுகிறார்:

அல்லா தான் உலகை படைத்தான் என்றால் ..எல்லோரையும் இஸ்லாமியர்களாய் படைத்திருக்கலாமே......படைக்கும் முன்னே சுன்னத் செய அது படைத்திருக்லாமே

அன்புக்குரியவர்களே
முதலில் மதம் எது , மார்க்கங்கள் எது என்பதில் தெளிவடைய வேண்டும். பிரபஞ்சத்தில் மதம்
என்ற பூரணத்தோடு இருப்பது நம் இந்து(சனாதன) மதம் மட்டுமே, இதுவே சத்தியம். மதம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது ஆக இருப்பதே! அங்கு இல்லாத எதுவும் இல்லை. நாம் பார்க்கும்
விருப்பு விருப்புவெறுப்புகளும் உண்டு. ஒரு தாயின் கருவறையில் எவ்வாறு எல்லாவற்றிலும்
நிறைந்த சூழலில் கரு வளர்கிறதோ, அதுபோல்தான் இந்து மதம்.
மார்கம் என்பது தனக்கும் தன்சமுகத்திற்கும் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டனர் அவை இறைதூதர்கள் வழியாக போதிக்கபட்டது. அவ்வழியில் வந்தது
புத்தம் சைனம் சீக்கியம் பர்சி இஸ்லாம் கிருத்துவம். ஆகியவையும். அக இவைகள் மார்கங்கள்தான் மதம் ஆகாது. எனவே இந்து மத்த்தை எதனுடனும் ஒப்பிட்டுக் காட்டமுடியாது . அது எப்போதுமே பூரணத்தோடு இருப்பதாகும்.
கடலில் இருந்து குவளையில் நீர் எடுத்துவிட்டு அதில் அலை இல்லை அழுக்கு இல்லை என்று கூறிவிட்டு எல்லாத்தையும் தன்னுள் அடக்கி கொள்ளும் கடலை அது இது என்று தவறு கற்பிப்பதில் பாவம் தான் வரும். தன் தேவைகளுக்காக பிற மார்கத்தை தேடி விட்டு , பூரணமானதாக இருக்கும் இந்து மத்த்தை(சனாதன தர்மத்தை) துவேசிக்காதர்கள்.


பாபா.........

மதம் வேறு மார்கம் வேறு இந்துமதம் மட்டும் மத்த்தில் சேரும் மற்றவை அனைத்தும் மார்கமே மதம் பூரணமானதாக இருக்கும் மார்கம் அதில்
இருந்து எடுக்கப்பட்ட தேவையான சாரம்சம்.

இஸ்லாத்தில் இறைபோதனைகளை பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துச்சொன்ன 1,24,000 இறைத்தூதர்(நபி)கள் நீங்கள் குறிபிடும் காலங்களுக்கும் அப்பாற்பட்டு இஸ்லாத்தை போதித்திருக்கிரார்கள். குறிப்பாக உலகின் முதல் மனிதன் ஆதம் என்பதை உலகமே ஏற்கிறது அவர்தாம் முதல் நபி என்று குறஆன் கூருகிறது
----------------------------------------------------------------
மகா முட்டாள்தனமான கருத்து.ஆதாமும் ஏவாளும் அம்மணமாக பிறந்து யாருக்கு வழிகாட்டினாா்கள். அவர்களது இரண்டு மகன்களும் ஒருவனை ஒருவன் கொன்றான். அவர்கள் என்ன உடை அணிந்தாா்கள் .வீடு கட்டினாா்களா ? மசுதி இருந்ததா ? தொழுகை நடததினாா்களா ? குரான் ஓதினாா்களா ? அரபு மொழியிலா வேறு என்ன மொழியில் ? அந்த மொழிக்கு எழுத்து வடிவம் இருந்ததா ? புத்தகங்கள இருந்ததா ? புத்தகங்கள் பேப்பாில் செய்தாா்ளா ? அச்சு ஆபீஸ் இருந்ததா ? சைபிாியாவிற்கு அனுப்பப்பட்ட நபி யாா் ? ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட நபி யாா் ? குரானில் சம்மா கப்சாவை நமது ஐயா அள்ளி விடுவாா். முஹம்மதுவின் கூற்று கோமாளி்த்தனம். சுத்த புரூடா.

அதெப்படி கடவுளாம் மனித பாஷை பேச முடியும் மனித பாஷையில் வேத நூல் அளிக்க முடியும் என்றால் மனித உருவில் மட்டும் ஏன் வர முடியாது? ஒரு வேலை இஸ்லாம் மதத்தில் வந்திருக்களாம் ஆனால் வரலாற்றை பதிவு செய்ய அல்லாவே விரும்பாமல் இருக்கலாம் எந்த கடவுளாம் முடியாத காரியம் இல்லை அனைத்து உயிர்இனங்களை படைத்த இறைவன் அந்ததந்த இனத்தின் உருவம் எடுத்தால் மட்டுமே படைத்த அனைத்து உயிர் இனங்களும் கடவுளும் தொடர்பு மற்றும் கடவுள் போதிக்க முடியும்

எனது கேள்விகளுக்கு எதிா் உரை அளிக்க முஸ்லீம் வாசகா்கள் முன்வர வேண்டும்.முஹம்மது அவர்கள் சொா்க்கத்திற்கு இறைவன் புராக்கு என்ற சிறகு உடைய குதிரை போன்ற மிருகத்தின் மீது ஏறி அழைத்துச் சென்றானாம். இங்கு யுத அரேபிய வரலாற்றில் உள்ள சில நபிகளை மட்டும் பாா்த்து பேசினாராம். 125000 நபிகளை ஏன் அவர் பாா்க்கவில்லை ? மேற்படி நபிகள் எல்லாம் எங்கே போனாா்கள்.
விடை தருமா அரேபிய மதம்.

யுத்தத்தில் கைபற்றிய பெண்களை வைப்பாட்டிகளாக செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யும் பொருளாகப் பயன்படுத்திக் கொள்ள குரான் அனுமதி அளிக்கின்றது. பிறன்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்றும் இருமாதரை சிந்தையாலும் தொடேன் என்னும் இந்துமதம் ஏங்கே ? குரான் காலாவதியானயான ஒரு புத்தகம்.out of date.

உங்கள் எல்லோருக்கும் நான் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். அன்றும் சரி இன்றும் கூட அல்லாஹ் தான் கடவுள் அதாம் தான் முதல் மனிதன் இந்த முதல் மனிதன் தான் உங்கள் சிவன் சிவன் பிறப்பு இல்லாதவன் அதாம் அப்படியே சிவனுக்கு மனைவி உண்டு அதாமுக்கும் மனைவி உண்டு. இவர்கள் அல்லாவின் படைப்புகள்.

உண்மை.
.

Anonymous
04:51

Mubaraq - பிறக்கும்போதே சுன்னத் செய்தால் தாயின் கருவறையில் பனிக்குட நீரானது கெட்ட நீராகும் அதன் மூலம் வியாதிகள் உண்டாகலாம் இதுதான் இறைவனின் அதிசய படைப்பு.

Anonymous
05:02

Mubaraq - இந்து மதத்தில் பிறந்த முதல் மனிதன் ஜீன்ஸ் பேண்ட்டீ-ஷர்ட் போட்டுட்டு பிறந்தானா

மனிதன் படிப்படியாக தன்னுடய அறிவை வளர்த்துக் கொண்டான் என்று எல்லாருக்கும் தெரியும் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாம விவாதத்துக்கு வராத டாக்டர் அன்புராஜ் , கேவலமா இருக்கு.

Anonymous
05:07

@Dr.Anburaj அப்புறம் ஏன்டா எல்லா இந்து கடவுள்களும் ரெண்டு மூணு சில கடவுள் ஆயிரம் பொண்டாட்டி வச்சி இருக்கானுங்க

ஆதாம் ஏவாள் கற்பனை கதை
அது எந்த மொழியில் எந்த இடத்தில் வாழ்நத்வர்கள் வைத்த பெயர் என்று எந்த இலக்கியத்திலும் இல்லை இருந்தால் சொல்லுங்கள்


மூன்றாயிரம் வருடத்திற்கு அல்லா யாரென்று கேட்டால் இருக்காது இதிலும்

இடையில் உருவாக்கபட்ட கற்பனை கதை


Next Post Next Post Home
 
Back to Top