( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாருக்கு ஓட்டு போடக்கூடாது?
   ண்கள் மூட்டாளாய் ஆவது எப்போது என்றொறு கேள்வியை கேட்டதற்கு பலரிடமிருந்து வரவேற்ப்பில்லை யாருக்கு ஓட்டுப்பாடக் கூடாது என்ற கேள்வி தளத்தில் பதிவானதோ இல்லையோ அந்த நிமிடம் முதல் இதோ இந்தப்பதிவு இடும் நேரம் வரை வந்தப்பதில்கள் உண்மையில் எண்ணி மாளாது அவைகள முழுமையாக வெளியீட்டால் குறைந்தது 5 மணி நேரமாவது படிக்க ஒதுக்க வேண்டும் அதனால் சிறந்த கருத்துக்கள் என் எனக்கு தோன்றிய சிலவற்றை மட்டுமே வெளியிடுகிறேன் தங்கள் கருத்துக்கள் கண்டிப்பாக வரும் என எதிர்பார்க்கும் பலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம் அவர்கள் அன்புடன் மன்னிக்கவும்    

    நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடக் கூடாது அந்த அம்மாவுக்கு ஆளும் திறமை சுத்தமாக கிடையாது தன் கட்சிக்காரரையே நம்பாத அவர்களால் இயக்கத்தையே ஒழுங்காக நடத்தத் தெரியாத போது நாட்டை வழிநடத்தி செல்ல எப்படி முடியும்? அவரின் தோழியின் குடும்பக் கூட்டம் கொள்ளையடிக்க வெறியோடு காத்திருக்கிறது வெற்றி பெற்று விட்டால் போதும் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தக் கதையாக தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி விடுவார்கள்

                                                                                                       P . ஜெயகுமார்
                                                                                                             திசையன்விளை 


  ருணாநிதியை நல்ல நிர்வாகி என்று சொல்வார்கள் ஆனால் அவரின் இப்போதைய அரசின் நடவடிக்கைகளப் பார்த்தால் அப்படி எந்த அறிகுறியும் கண்ணில் தென்படவில்லை அவருடைய சுயநலமும் குடும்பபாசமுமே மேலோங்கித் தெரிகிறது இவர்களை மீண்டும் ஆட்சி நடத்த அனுமதித்தால் தமிழ் நாட்டைஇரண்டாக கூறுபோட்டு அழகிரியும் ஸ்டாலினும் பங்கு பிரித்துக் கொள்வார்கள்
                              
                                                                                                         S.கரிக்கோல் ராஜன்
                                                                                                                            விருதுநகர் 


1)   வாரிசு அரசியல் வேண்டாம்,
2)  ஜாதி அடிப்படையில் அறிவிக்கப்படும் வேட்ப்பாளர் வேண்டாம்..
      மக்களுக்காக உழைக்காத எந்த வேட்ப்பாளர்க்கும் ஓட்டு போடக்கூடாது...

                                                                            P.V. பிரவீன் சுந்தர் MCA, Mphil CS.,
  லைஞரின் அரசு எப்போதுமே நல்லரசு அல்ல அவர் ஆட்சிக்கு வரும் காலங்களில் சமூக விரோதிகள் பயம் தெளிந்து நடமாட துவங்குவார்கள் இப்போது அவர் கட்சிக்காரர்களே சமூக விரோத செயல்கள் பலவற்றை முன்னின்று நடத்துக்கிறார்கள்

                                                                                                  G .கிருஷ்ணவேணி
                                                                                                                  மதுரை

 
  ஜெயலலிதாவும் சரியில்லை கலைஞரும் சரியில்லை 1967 க்கு பிறகு தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் எதுவும் அதிகாரத்திற்கு வரவில்லை இதனால்தான் பல நல்ல திட்டங்களில் நம் மாநிலம் பின்தங்கி உள்ளது நதிநீர் பிரச்சனைகள தீர்க்க முடியாமல் தத்தளிக்க வேண்டிய நிலை தொடர்கிறது எனவே பிராந்தியக்கட்சிகளுக்கு ஓட்டுப் போடக் கூடாது

                                                                                          R .ராமகிருஷ்ணன்
                                                                                                  செங்கோட்டை    மீண்டும் மீண்டும் ஐய்யா அம்மாவென்று தேர்ந்தெடுத்து சலித்து விட்டோம்  காங்கிரஸ் பாஜக விலும் திறமையான தலைவர்கள் இல்லை கம்யூனிஸ்ட் கட்சிகளூம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை ராமதாஸ் விஜயகாந்த் திருமாவளவன் என யாரிடமும் நியாயமில்லை தர்மப்படி பார்த்தால் தமிழ் நாட்டு ஜனங்கள் இவர்களில் ஒருவருக்கு கூட ஓட்டுப் போடக் கூடாது ஆயினும் ஜனநாயக கடமை இருக்கிறதே அதனால் யாருமே வேண்டாம் என நடுநிலமை வாக்கு அளிக்கலாம்

                                                                                                                     கே.ஏசுபாதம்
   யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் விஜயகாந்த்துக்கு மட்டும் போடாதீர்கள் அவருக்கு போட்டால் இன்னொரு சினிமா அரசியல்தான் தொடரும் நாடு இன்னும் ஐந்தாண்டுக்கு கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிடும் திராவிடக்கட்சிகள் எல்லாமே நடிகர்களின் கூடாரம்தான் இவர்கள் யாருக்கும் தெளிந்த அரசியல் கோட்பாடுகள் கிடையாது நல்லது செய்வது போலவும் மேதாவிகள் போலவும் நடிக்க மட்டும்தான் இவர்களால் முடியும்

                                                                                                     மணி
                                                                                                         திருச்சி 


  ஜெயலலிதா பேரில் நிறைய குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் ஆனால் அவர் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் போன்றோடத்தில் கருணாநிதி போல இறக்கம் காட்ட மாட்டார்  கந்துவட்டி கட்டபஞ்சாயத்து வழிபறி போன்றவைகள் அவர் ஆட்சியில் குறைவு எனவே கலைஞரை இந்தத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பலாம்

                                                                                                         V .ரோஜா
                                                                                                                 விழுப்புரம்  

 ம்ம கலைஞர் பெரிய குடும்பஸ்த்தர் சில மனைவிகள் பல குழந்தைகள் ஏராளமான பேரக்குழந்தைகள் இவர்களை சமாளிப்பதே பெரிய கஷ்டம் இந்த இக்கட்டில் அரசை வேறு கவனிக்க வேண்டும் மென்றால் தள்ளாடும் வயதில் தடுமாற்றம் வரத்தான் செய்யும் அவரது கூரிய மூளை எத்தனை சிக்கல்களைத்தான் சமாளிக்கும் ? அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதுதான் சரியானது

                                                                                                               E .சசி
                                                                                                                         கோபி   ராமதாஸ் திருமாவளவன் கிருஷ்ணஸ்வாமி போறோர்கள் ஜாதிகுடை பிடிக்கும் விஷக்காளான்கள் இவர்களை கூட்டணியில் சேர்ப்பவர்களும் நாடு கெட துணை போகின்றவர்கள் தன் சகோதர ரத்தத்தையே உண்டு கொளுக்கும் இந்த வல்லூருகள் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு ஓட்டுப் போடாதே என்று சொல்லுவதே பெரிய தேச சேவை

                                                                                                     V .செல்வம்
                                                                                                           திருவண்ணாமலை  காங்கிரஸ் கட்சி சரியான சந்தர்ப்பவாத கூட்டத்தரால் நடத்தப்படுகிறது சுரண்டிக் கொழுத்த வர்க்கத்தில் ஊரித்திளைக்கும் அவர்களை கருவறுப்பதே சிறந்தது

                                                                                                   D  . தனபால்
                                                                                                               சென்னை


 தமிழர்கள் அனைவரயும் ஏமாற்றியவர் டாக்டர் கலைஞர் இலங்கைத்தமிழரை கைவிட்டு மலேசியத் தமிழரை புறம்தள்ளி தமிழகத் தமிழரையே குடிகார கூட்டமாக்கியவர் அவர் அவருக்கு ஓட்டுப்போட்டு மீண்டும் அரியனை ஏற்றினால் ஒட்டுமொத்த தமிழருக்கும் கல்லறை கட்டிவிடுவார்

                                                                                                                கே.ராஜாராம்
                                                                                                                           தருமபுரி 


  ழையின் வயிரும் ஈரம் காண மலிவுவிலை அரிசி தந்தவர் கலைஞர் பணக்காரர்களும் அவர்களுக்கு வால்பிடிக்கும் நடுத்தர வர்க்கமும் மட்டும கண்டுகளித்த வண்ணத் தொலைகாட்சி பெட்டியை குடிசைகளிலும் கொலு வைதவர் கலைஞர் உழுதவனுக்கு இலவச மின்சாரமும் இலவச மின்மோட்டாரும் நந்து உழவனின் முகத்தில் இறைவனை கண்டவர் கலைஞர் கல்லனை கட்டிய கரிகாலன் போல கான்ங்ரீட் வீடுகளை பட்டித்தொட்டி எங்கும் கட்டி ஒழுகும் குடிசையிலிருந்து குப்பத்து தமிழனுக்கு விடுதலை தந்தவர் கலைஞர் ஆலகால விஷத்தை அள்ளித் தெளித்து  ஆரிய கூட்டத்தினருக்கு சாமரம் வீசிய சழுக்கர்களின் கழுத்தை நெரித்து சமத்துவபுரம் தந்தவர் கலைஞர் அவருக்கு போடாத ஓட்டு தமிழன் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் வேட்டு உன்னத தலைவனுக்கு மக்கள் நல்கும் சீட்டு தமிழின உயர்வுக்கு இசைக்கும் பாட்டு
                                                                               
                                                                               s .செந்தமிழ் செல்வன்
                                                                                       மணலூர் பேட்டை


 தி. மு. க. வுக்கு வாக்களித்தால் அது தமிழனின் தற்கொலை

                                                                             சந்தானராமன்
                                                                                     கும்பகோணம்

 ருணாநிதிக்கு ஓட்டுப் போட்டால் தமிழக மக்களுக்கு மான உணர்வு இல்லை என்றாகி விடும்
                                 
                                                                              ராஜா
                                                                                     சென்னை


லசம் கொடுத்து மக்களின் அறிவை மழுங்கடிக்கும் கலைஞர் மீண்டும் வென்றால்  அது தமிழனின் அவமானம்

                                                                                      J .மணிகண்டன்
 


+ comments + 4 comments

Dhanam
01:34

கலைஞருக்கு ஓட்டுப் போட வேணாமுன்னு நெறைய பேரு சொல்லதாவ கேட்கயில என்னமோ நல்லாத்தான் படுது ஆனா இப்படி சொல்லிய இவுகளுல எத்தனைபேரு எலக்சன் அன்னிக்கி ஓட்டுப் போட போவாக ஒரு குஞ்சும் போவாது வூட்டுல கருவாட்டுக் கொழம்புல சோத்த தின்னுப்புட்டு பொட்டியில படம் பாப்பாக இவுக ஓட்ட காடப்பயலுக போடுவானுங்க நம்ம சொட்டத்தலை மகாராசா ஜம்முன்னு கோட்டயில உக்காருவாரு

49ஒ'ன்னு (49O) ஒன்னு இருக்கு...அதை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை...இது ஓட்டு இருப்பவர்களுக்கு...யாருக்கும் போட வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு....
ஓட்டே இல்லாதவர்களை எந்த இடத்தில வைப்பது...(இதில் நானும் ஒருவன் தான் - போன பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசன், சென்னை தியாகு, திருப்பூர் செம்பியன் கார்த்தி ஆகியோர் ஓட்டு போட முடியவில்லை என்ற வருத்தத்தை ஒரு பதிவின் மூலம் தெரிவித்திருந்தேன்...)

குருஜி, வணக்கம். என்னோட தளத்துக்கு anindianviews.blogspot முதல் follower நீங்க. மிக்க நன்றி.

யாருக்கு ஒட்டு போடக்கூடாதுன்னு பல பேர் கருத்து சொல்லியிருக்காங்க. அவங்க சொல்றது உண்மையா இருந்தாலும், இருப்பதில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் நமது (முறையான) கடமை. எனவே தேர்தல் கூட்டணி அமைவதை பொறுத்து தான் கருத்து சொல்ல முடியும்.

INTRAYA SOOL NILAIYIL JAYALALITHAA VIRKKU OTTU POODUVATHAE NALLATHU.


Next Post Next Post Home
 
Back to Top