Store
  Store
  Store
  Store
  Store
  Store

உண்மை பேசுவதில் உள்ள சுகம்


கேள்வி : தனி மனித எண்ணங்களைச் செயல்படுத்தி சாதனைகள் படைக்க முடியுமா? அதற்கு என்ன தேவை?
                  
                                                                                                    கே.ரவிசங்கர்   சென்னை
  
  துவரை உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய சம்பவங்களையெல்லாம் உற்று நோக்கினால் இறைவன் தனிமனிதன் சிந்தனை மூலமாகவே அனைத்தையும் செய்திருக்கிறான் என்பது புரியும், எல்லாம இறைவன் செயல் என்றாலும். அந்தச் செயல் தனிமனித சிந்தனை மூலமே வெளிப்படுகிறது, துரியோதனனின் தனிப்பட்ட சிந்தனை தான் குருச்சேத்ர யுத்தத்துக்கு வடிவெடுத்தது, மகாத்மா காந்தியின் அகிம்சாவாதம் தான் புதிய புரட்சிக்கு வித்திட்டது, நெப்போலியன். தாமஸ் ஆல்வா எடிசன். ஜகதீஸ் சந்திர போஸ் போன்ற மகாபுருஷர்களின் தனிச்சிந்தனைதான் உலகை நடத்திக் கொண்டு வந்திருக்கிறது, இந்தச் சிந்தனையின் ஊற்று. இறைவன் என்றாலும் அதன் செயல்வடிவம் தனி மனிதனே ஆவான், இறைவனின் இந்தத் தாக்கத்தை அவர்களால் எப்படி தாங்கி நமக்குக் கொடுக்க முடிந்தது என்றால் அவர்களிடமிருந்த மாபெரும் வைராக்கியம். இடைவிடாத முயற்சி தோல்வி கண்டு தளராத மனத்தின்மை போன்றவையே ஆகும், எனவே தனிமனித சாதனைக்கு எது தேவையெனில் வைராக்கியம். ஓய்வே இல்லாத உழைப்பு. எதையும் தாங்கும் மனம் ஆகியவை நிச்சயம் வேண்டும், இவற்றைப் பெற நாமும் இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்,


கேள்வி : என்றும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்க என்ன வழி?
                                                          வி.செல்வி  கன்னியாகுமரி

    உண்மையே பேசி வருவதால் கிடைக்கிற சுகம் வேறெதிலும் இல்லை, ஆனால் உண்மையை மட்டுமே பேசி இன்றைய உலகில் வாழமுடிவதும் இல்லை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது, என்றாலும் காரண. காரியமின்றிப் பொய் சொல்லுவதைக் குறைத்துக் கொள்ளவாவது பழக வேண்டும், அப்படிப் பழகினால் நாளடைவில் உண்மையே பேசும் பக்குவம் வந்துவிடும், பிறகு தினசரி யாரோ ஒருவருக்கு சிறிய உதவியாயவது செய்யப் பழக வேண்டும், அப்படிச் செய்த உதவியை பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கே செய்ததாக எண்ணி மகிழ வேண்டும், இந்த இரண்டையும் நடைமுறைப்படுத்தினாலே மற்ற நல்ல பழக்கங்கள் அனைத்தும் வெல்லக்கட்டியைத் தேடி வரும் எறும்பைப் போல - தானாக வந்து சேரும், இதுதான் எப்போதும் எந்தக் காலத்திலும் சந்தோஷமாக இருக்க ஏற்ற வழியாகும்,



Contact Form

Name

Email *

Message *