Store
  Store
  Store
  Store
  Store
  Store

காசு கொடுத்து பதவிக்கு வந்தேன்


ருக்கு நடுவால
உக்காந்து இருக்கும் சாமி
உலகத்தார் மத்தியில
உன்பலம் என்னன்னு காமி

காசு கொடுத்து

பதவிக்கு வந்தேன் என்கிறான்
கடமையை செய்யுன்னா
கைமேல அழுத்து என்கிறான்
அழுத்தி அழுத்தி
என் ரத்த அழுத்தம் ஏறுது
அழுத்திய பிறகும்
பேப்பர் மேஜையில தூங்குது

ஓட்டைப் பிரிச்சி

திருடன் உள்ளே வந்தான்
அவனை கண்டுபிடிக்க
கதவை திறந்து காக்கியும் வந்தான்
பொண்டாட்டி நகைகளும் போச்சி
என் கைப்பணமும் கையூட்டா ஆச்சி

முட்டி முட்டிப் படிச்சப்புள்ள

முக்காலுக்கும் மேல
மார்க்குகளை வாங்கி
டாக்டரு சீட்டுப்போயி கேட்டா 
லச்ச லச்சமாய் கேட்கிறான் பேட்டா

கரைவேட்டி புண்ணாக்கு

கைநாட்டு அண்ணாச்சி
கல்லூரி சேர்மனாம்
கண்வலிக்க படிச்சவன்
புத்தகத்த
கரைச்சிக் குடிச்சவன்
 வாசலுக்கு காவலாம்

பள்ளிக்கூடம் கட்டுன்னா

தண்ணிக்கூடம் கட்டுறான்
தண்ணி வித்த பணத்தால
சலுகைகள கொட்டுறான்
தாலியை அறுத்துப்புட்டு
தலைக்குபூவை சூட்டுறான்

அப்பனும் புள்ளையும்

அடுத்து வந்த வாரிசும்
அரசாச்சி செய்ய துடிக்கிறான்
ஆனாலும் தான் மட்டும் உத்தமன்
மாதிரி நடிக்கிறான்
தட்டிக் கேட்கயாரும்
தலையை தூக்கிப்புட்டா
கல்லைப் போட்டு
கதையை முடிக்கிறான்

சூரன் ஒருவனைக் கொல்ல

 உங்கம்மா பெத்தாளாம் வீரப்புள்ள
கால்தடுக்கி விழுந்த இடம் மொத்தம்
சூரன் எக்காளச் சிரிப்பு சத்தம்

ஆனைக்காது உனக்கு சாமி

சிரிப்புச் சத்தம்
கேட்கலைன்னா தாங்காது பூமி

ஊருக்கு நடுவால

உக்காந்து இருக்கும் சாமி
உலகத்தார் மத்தியில
உன்பலம் என்னன்னு காமி




  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

  •  




    Contact Form

    Name

    Email *

    Message *