( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அல்சர் வந்தால் வாயில் போடு பூட்டு


  காபியை பிராமண சாராயம் என்று சொல்வார்கள்.  ஆரம்ப காலத்தில் அந்நியர்களிடம் பணியாளராக சேர்ந்த சில பிராமணர்கள் காபி குடிக்கும் பழக்கத்தை வீடு வரையிலும் கொண்டுவந்து விட்டார்கள்.  1967-க்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் நாவல்கள் பலவற்றை படித்தால் பிராமணர்கள் காபியின் மேல் எந்தளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும்.  கும்பகோண வெத்தலையும், சீவல் பாக்கும் போட்டு நாக்கு தடிப்பேறிய தஞ்சாவூர் பிராமணர்கள் கைநிறைய சக்கரை போட்டு கெட்டியான டிக்காஷனில் காபி குடிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும்.  பிராமண சாராயமாக இருந்த காபி இன்று அக்ரகாரத்தை விட்டு அண்ட சாரசரத்தையே பிடித்து ஆட்டுகிறது எனலாம்.

  சுடசுட இட்லியை வெங்காய சாம்பாரில் மிதக்க விட்டு கை பொறுக்காமல் உச்சி கொட்டி வாயில் போட்டு வயிறு நிறைய சாப்பிட்டு கட்டி பாலில் ஆவி பறக்கும் காபியை தொண்டை குழி வரையிலும் சூடேற உறிஞ்சி குடிக்கும் சுகம் இருக்கிறதே அந்த சுகத்திற்காக சொத்தையே எழுதி வைக்கலாம் என்று சொல்லும் எத்தனையோ மனிதர்களை தினசரி காணலாம்.  


   காபி மோகம் அந்த அளவுக்கு மனிதர்களை பாடாய்படுத்துகிறது.  ராத்திரி தூங்காமல் விழித்திருந்து படிக்க வேண்டியது இருக்கிறது, வேலை செய்ய வேண்டியிருக்கிறது, தூக்க களைப்பு வராமல் இருக்க ஒரு கப் காபி நிச்சயம் தேவையிருக்கிறது என்று சொல்வோரும், தினசரி நாலு கப் காபி சாப்பிட்டால் இதய நோய் என்பது வரதாம் இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று காபிக்கு ரத்தின கம்பளம் விரிப்போரும் ஏராளமான பேர்கள்.

 இவைகளையெல்லாம் கூட்டிகழித்து  பார்க்கும் போது ஒரேயொரு உண்மை நமக்கு தெளிவாக தெரிகிறது.  காபியில் தற்காலிக சுறுசுறுப்பை தரும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று.  இப்படி நாம் சொன்னவுடன் அந்த மாதிரியான கண்றாவியெல்லாம் கிடையவே கிடையாது.  செண்ட் அடித்து கொண்டால் ப்ரஸ்ஷாக  இருப்பது போல ஒரு மாய தோற்றம் கிடைக்கும்.  அப்படி தான் இந்த கதையும் என்கிறார்கள் சிலர்.

சிகரெட் பிடிப்பது கெட்ட பழக்கம் என்று நமக்கு தெரியும்.  நமது அரசாங்கம் கூட சிகரெட் பிடித்தால் உடம்பு கெட்டு போயிவிடும் என்று அட்டையில் யாரும் படிக்க முடியாத படி சிறிய எழுத்தில் விளம்பரம் செய்வதை நாம் அறிவோம்.  ஆனாலும் கூட சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும், சிகரெட் கம்பெனிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி தான் வருகிறது.  நமது நாட்டை பொறுத்த வரை சிகரெட் பிடிப்பதற்கு நல்ல வேளை இன்று பல பெண்கள் போட்டிக்கு வருவதில்லை அந்த ஒரு பழக்கமாவது ஆண்களுக்கு என்று தனியாக இருக்கட்டும் என கருணை காட்டி விட்டுவிட்டார்கள்.


   ஆனாலும் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை விட  காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.  குழந்தை குட்டிகளிலிருந்து பாட்டன் பாட்டிவரை கணக்கு போட்டால் மலைத்து போய் நமது இதயமே நின்றுவிடும்.  நாட்டில் எவ்வளவோ பிரச்சனையிருக்கிறது.  குடிக்க தண்ணீர் வருவதில்லை.  மின்சாரம் எப்போ வரும் போவும் என்று தெரியவில்லை, குழந்தைகளின பள்ளி கட்டணமோ தங்கவிலை மாதிரி ஏறி இறங்கி கொண்டிருக்கிறது.  இந்த அவஸ்தையில் இருந்து மீள சிறிதளவாவது காபி குடித்து ஜனங்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுவிடலாம்.  ஆனால் காபியால் ஏற்படும் பல கொடுமைகளை அறிந்த போது இத்தனை சங்கடத்தில் இருக்கும் இதுவாலும் சங்கடத்தை அனுபவிக்க வேண்டுமா?  என்று மனது துடிப்பதினால் தான் இந்த கட்டுரை.

 அல்சர் நோயை பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரியும்.  அதன் வலியை அனுபவித்தவர்கள் மிளகாய் புகைச்சலை கூட கஷ்டம் என்று கருதமாட்டார்கள்.  அல்சர் நோய் முற்றி போய் கேன்சராகி செத்தவர்களும் நிறைய உண்டு.  வயிற்று எரிச்சல் தாங்காமல் தற்கொலை செய்தவர்களும் உண்டு வேளாவேளைக்கு தான் சாப்பிடுகிறேன்.  அதிக காரம் எடுத்து கொள்வதில்லை.  அப்படியிருந்தும் அல்சர் வந்துவிட்டது என அங்கலாய்ப்பவர்கள் நிறையபேர் உண்டு.  வேலை பளுவால் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டியுள்ளது.  அவசர பயணங்களால் பல நேரம் சாப்பிடவே முடிவதில்லை.  அதனால் கிடைத்த பரிசு அல்சர்.  அந்த நோய்க்கும் மருந்து சாப்பிடுகிறேன்.  வருடங்கள் தான் ஓடுகின்றதே தவிர நோய் குணமானபாடு இல்லை.  என்று புலம்புவர்களும் உண்டு.

  சரியாக சாப்பிடுபவர்களுக்கும் அல்சர் வருவது ஏன்?  சிகிச்சை எடுத்துகொள்ளும் பலருக்கு நோய் குணமாவதில்லையே ஏன்?  என்ற கேள்விகளுக்கு விடையை தேடி மருத்துவ விஞ்ஞான பக்கம் சென்றால் அங்கு சரியான பதில் நமக்கு காத்திருக்கிறது.  அப்படிப்பட்ட நபர்கள் நிச்சயம் அதிகமாக காபி குடிப்பவர்களாக இருப்பார்கள் என்ற அந்த பதில் நமது மனதை உறைய செய்கிறது.  

   வயிற்றை கெடுக்கும் அப்படி என்ன விஷம் காபியில் இருக்கிறது என பலருக்கு தோன்றலாம்.  காபியில் உள்ள காஃபின் என்ற விஷமே வயிற்றை புண்ணாக்குகிறது.  இந்த உண்மையை முதன்முதலில் கண்டறிந்தவர் எச்.என். உவைட் என்ற ஆராய்ச்சியாளரே ஆவார்.  இவர் மிக நல்ல ஆரோக்கியத்திலுள்ள மனிதன் ஒருவனை தேடிபிடித்து நான்கு நாட்களுக்கு தினசரி நான்கு காபிகள் கொடுத்து இறுதியில் அவன் குடலை ஆய்வு செய்தார்.  நான்கு நாட்களுக்கு முன் நன்றாக இருந்த குடல் இப்போது எரிக்கும் அமிலத்தால் அதிகமாக சூழப்பட்டிருப்பதை கண்டார்.  இந்த அமிலம் நாளுக்கு நாள் அதிகரித்தால் நிச்சயம் குடல் புண்ணை உருவாக்குவதோடு மட்டுமல்ல குடலின் செயல்பாட்டையே நாளடைவில் மந்தபடுத்திவிடும் என்று அவர் சொல்கிறார்.

 குடலில் அமில சுரப்பால் ஏற்படும் ஜீரண புண்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.  ஒன்று சிறு குடலின் மேற்பகுதியில், இரண்டு இரப்பையில் இந்த இரண்டு இடங்களில் புண் ஏற்படுவதை வயிற்றில் மிக கடுமையான வலி ஏற்படும்.  சூறைகாற்று முதலில் அமைதியாகயிருந்து பிறகு பேரழிவை ஏற்படுத்துவது போல் ஆரம்பகட்ட வயிற்றுவலி தாங்கி கொள்ளும் அளவிற்கு சாதாரணமாக தான் இருக்கும்.  சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் வலியின் வேகம் அதிகரித்து தாக்கப்பட்ட மனிதன் மிக கொடுமையான தத்தளிப்பை அடைவான்.  பொதுவாக இந்த வலி காலை வேளைகளில் வராது.  மதிய ஆகாரத்திற்கு பிறகு தான் ஆரம்பிக்கும்.  நேரம் செல்ல செல்ல ஆட்டோபாசின் கரம் போல வலி மனிதனை நெறித்து இரவு உறக்கத்தையும் காணாமல் போகச் செய்து விடும்.

 அல்சரின் அறிகுறி இது மட்டுமல்ல.  நெஞ்சுகரிப்பு, ஏப்பம், வயிற்று வீக்கம், மலச்சிக்கல் வாய்துறு நாற்றம், பசி மந்தம், வாந்தி, வாயில் நீர் பெருகுதல் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.  நாம் அல்சர் என்ற மூலத்தை அறியாமல் அதன் அறிகுறிகளுக்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்தாலும் கூட எந்த பயனும் இராது.  சரியான பரிசோதனை, சரியான மருத்துவன், சரியான மருந்து அமைந்தாலும் கூட காபி குடிக்கும் பழக்கம் நிறுத்தப்படவில்லையென்றால் நோய் சிறுகதையாக முடியாமல் மெகா சீரியலாக வளர்ந்து கொண்டே போகும்.


   இப்படி நான் எழதியிருப்பதை படித்துவிட்டு ஒழுங்காக உணவு உண்ணாதவர்கள் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.  ஆகியோருக்கு மட்டும் தான் அல்சர் வருமென்று யாராவது நினைத்தால் அது மிகபெரிய தவறு.  இந்த பழக்கங்கள் இல்லாதவர்களுக்கு கூட அல்சர் வர வாய்ப்புள்ளது.  அது எப்படி?

  எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு.  அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.  சிகரெட் புகைவரும் இடத்தில் இருந்தாலே குமட்டி கொண்டுவரும் அவருக்கு காபி, டி மற்றும் வெற்றிலை பாக்கு என்று எந்த பழக்கமும் கிடையாது.  நல்ல வேலை செய்வார்.  சரியாக சாப்பிடுவார்.  நேரங்காலத்தில் உறங்கியும் விழிப்பார்.  அவருக்கு திடிரென அல்சர் வந்துவிட்டது.  பாவம் மனுஷன் ஆடிப்போய்விட்டார்.

 நான் அவரிடம் பேசி கொண்டிருந்த போது அல்சர் எல்லாம் கிடைக்கட்டுமய்யா அந்த நோயினால் மட்டும் தான் நீர் சோர்ந்து போய் இருக்கிறீரா?  அல்லது வேறு எதாவது பிரச்சனைகளும் இருக்கிறதா?  என்று கேட்டேன்.  காரணம் டாக்டர் யூம் என்பவர் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் கூட அல்சரை கொண்டு வரும் என்கிறார். 


 எப்படி என்றால் நமக்கு மிக நெருங்கிய நபர் யாராவது இறந்துவிட்டதாக செய்தியை நாம் கேட்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள்.  உடனே நமக்கு என்ன ஏற்படும் அடிவயிற்றில் ஏதோ ஒரு கிலி ஏற்படும்.  அல்லது வயிறு புரட்டும்.  இதே உணர்ச்சியானது தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்தால் வயிற்றுக்குள் ஜடராக்கினி என்ற எரிக்கும் அமிலம் அடிக்கடி உற்பத்தியாகி வயிற்றை புண்ணாக்கி விடும்.  அதனால் தான் அவரிடம் அந்த கேள்வியை கேட்டேன்.  உடனே அவரும் தனது தனிப்பட்ட பிரச்சனையை என்னிடம் சொன்னார்.  அது என்ன என்பது இங்கு அவசியமில்லை என்பதினால் வாசகர்களுக்கு சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.  மேலும் அல்சர் நோய் குறைய அல்லது பூரணமாக விலக அவருக்கு சொன்ன ஆலோசனையை உங்களுக்கு சொல்கிறேன்.

 எனது முதலாவது ஆலோசனை பகல் நேரத்தில் அதிக உழைப்புயிருந்தாலும் மதிய உணவிற்கு பிறகு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஓய்வாக படுத்து இருக்க வேண்டும்.  இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை கைவிட வேண்டும்.  சும்மா இருக்கும் போது மனதை கன்னாபின்னா என்று அலைய விடாமல் அமைதியாக வைக்க எதாவது கடவுள் பெயரை சொல்லி கொண்டிருக்கலாம்.  கடவுள் நம்பிக்கையில்லாத புண்ணியவான்கள் நல்ல பாடல்களையாவது கேட்கலாம்.

 எனது இரண்டாவது ஆலோசனை சதாசர்வ காலமும் செக்கு ஆட்டுவது போல் வாயில் எதையாவது போட்டு மெல்வதை கைவிடவேண்டும்.  நொறுக்கு தீணி பக்கம் அதிகமாக போகமால் இருப்பது மிகவும் சிறந்தது.  அல்சர் வந்தவர்கள் அதிகபடியான வேலையை வயிற்றுக்கு கொடுக்க கூடாது.  அது பாதகமான விளைவுகள் பலவற்றை ஏற்படுத்திவிடும்.

  எனது மூன்றாவது ஆலோசனை பால், தயிர், முட்டை போன்ற புரோட்டின் பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.  நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பசும்பாலில் தேன் விட்டு பருக வேண்டும்.  திட உணவை குறைத்து கொண்டு திரவ உணவை அதிகரிக்க வேண்டும்.  ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் சாறுகளை நிறைய பருகலாம்.

  எனது நான்காவது ஆலோசனை நாட்டு மருந்து கடைக்கு போய் வெள்ளை குங்கிலியம் என்ற மருந்து பொருளை 35 கிராம் வாங்கி வந்து இளநீரில் போட்டு சூடாக்கி மெல்லியதாக நெருப்பை எறியவிட்டு நீர்வற்றுகின்ற வரை எரித்து எடுத்து அதில் கிடைக்கும் குங்கிலியத்தை கருங்கல்லில் வைத்து அரைத்து பொடியாக்கி தினசரி ஒரு அரசியளவு காலை, மாலை இரண்டு வேளையிலும் பசும் வெண்ணெயில் குழைத்து சாப்பிட வேண்டும்.  கூடவே பசும்பாலும் பருகவேண்டும்.  இப்படி தொடர்ச்சியாக 30 நாள் சாப்பிட்டு வந்தாலே அல்சர் உங்களை பார்த்து மிரண்டு ஓடிவிடும்.

 எனது ஐந்தாவது ஆலோசனை நோய்தான்  போய்விட்டதே நெத்திலி மீன்வாங்கி சிவக்க சிவக்க மிளகாய் அரைத்து கண்களில் நீர்முட்ட வாய் ருசிக்க சாப்பிடலாம் என்று நாக்கை அவிழ்த்து விட்டால் பிரம்மனாலும் உங்களை அல்சரிலிருந்து காப்பாற்ற முடியாது.  குறைந்தபட்சம் ஒரு வருடமாவது மிளகு, மிளகாய், கடுகு, ஊறுகாய் போன்றவற்றை தள்ளி வைக்க வேண்டும்.  ஆயுசுக்கும் காபி கூடாது.  நான்தான் முதலிலேயே சொன்னேன் அது பிராமண சாராயம் என்று.  சாராயம் குடித்தவன் உருப்பட முடியுமா?+ comments + 15 comments

கைநிறைய சர்க்கரை போட்டு காபி குடித்தால் அதன் பெயர் காபி அல்ல...பாயாசம்!
பால் நிறைய குடித்தால் கூட கேன்சருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். எதையாவது சாப்பிட்டால் ஏதாவது வரும்தான் போல...!!

Anonymous
09:12

இந்தப் பதிவுக்கு நன்றி. சாராயத்தை நிறுத்தமுடியாவிட்டாலும் இந்த நிமிடத்திலிருந்து பெருமளவு குறைக்கவாவது பார்க்கிறேன்.

sankar-_chennai
09:30

தினமும் தங்களின் பதிவை படிக்கவருபவன் தங்களின் பதிவை படித்து கோண்டே காபி குடிப்பது எனது வழக்கம் இந்த பதிவை படித்த பிறகு காபி குடிக்கும் எண்ணம் போய் விட்டது ஐயா மிக்க நன்றி தங்களின் பதிவிற்கு

10:10

அருமையான, எல்லோருக்கும் தேவையான மருத்துவ தகவல்

Thanks for enlightening about caffeine!! If we not stop drinking we will be in the coffin!!!

அருமையான மருத்துவ தகவல்...

Everyone should avoid in taking coffee from this day onwards
Thanks to gurugi u ahv given a valuable tips

வேலை சூழல் காரணமாக சில நாட்கள் பிளாக் காபி குடிக்க நேரிட்டது அதன் பலன் அடுத்த சில நாட்களில் அல்சரால் மிகவும் வருந்தினேன்.


இதன் மூலம் பயனுள்ள மருத்துவ குறிப்பை தந்ததுக்கு நன்றி யோகி

பயனுள்ள பதிவு .எனக்குகாப்பி பிடிக்காது. இரு தடவை தேநீர் மட்டும்.
தங்கள் சேவைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக் களும்

தேவையான தகவல்கள் அள்ளித்தந்திருக்கிறீர்கள்.. நன்றி! வாழ்த்துக்கள்..!

எனக்கு இந்த நோய் உண்டு, மேலும் ஒரு அறிகுறி தொண்டையில் வலி வரும்.

காப்பி மட்டுமல்ல டீ-யும் கூடாது என்பதே நான் அறிந்தது. டீ நல்லது என்று சொல்பவர்களும் உண்டு. கொஞ்ச காலமாக டீ-யை தவிர்த்துவிட்டேன்.ஆனால், அந்தப் பழக்கம் இருந்த போது டீ குடிக்காமல் வாழ முடியாது என்றே நினைத்திருந்தேன். இப்பொழுது டீ குடிக்க வேண்டுமென்கிற எண்ணமில்லை. நன்றாக உள்ளேன்.

நீங்கள் குறிப்பிட்டது போல் பயம், கோபம் போன்றவைகள் வரும் பொழுது வயிற்றில் அமிலம் சுரப்பதை என்னால் உணர முடிகிறது.

மிக நல்ல பதிவு. நன்றி ஐயா.

Anonymous
12:32

அரசியளவு ???

Anonymous
19:47

//நோய்தான் போய்விட்டதே நெத்திலி மீன்வாங்கி சிவக்க சிவக்க மிளகாய் அரைத்து கண்களில் நீர்முட்ட வாய் ருசிக்க சாப்பிடலாம் என்று நாக்கை அவிழ்த்து விட்டால் பிரம்மனாலும் உங்களை அல்சரிலிருந்து காப்பாற்ற முடியாது//

very good artical thanks to..........

I tried stopping taking coffee. But I am getting severe headache and migraine due that. I drastically reduced to one in the morning. Is there any way I can avoid coffee completely without getting this headache. Thank you Swami


Next Post Next Post Home
 
Back to Top