( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...?

     ஜோதிடத்தைப்பற்றி பல தவறுதலான கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது ஜோதிடத்தில் அடிப்படை அறிவே கூட இல்லாதவர்கள் எதுகை மோனையாக சில பழமொழிகளை உருவாக்கி விடுகிறார்கள் அதில் முக்கியமானது ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம் என்பது மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அரசாள்வார்கள் என்றால் அந்தக் காலத்து ராஜாக்களில் இருந்து இந்தக் கால வாரியத் தலைவர்கள் வரை அனைவருமே மூல நட்சத்திரத்தில் மட்டுமே பிறந்திருக்க வேண்டும்.  எத்தனையோ பிச்சைக்காரர்களின் ஜாதங்களை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன்.  அவர்களில் பாதிப்பேர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே ஆவார்கள்.


  
  அதே போல ராணி மாதிரி வாழ்கின்ற பெண்களில் பலர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.  ஆகவே ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பதெல்லாம் சாஸ்திர ஆதாரமில்லாத, அனுபவ உண்மைகள் இல்லாத வெற்று நம்பிக்கைகள் ஆகும்.

     இதேபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மாமியார் இருக்கமாட்டார் என்றவொரு நம்பிக்கை இருந்து வருகிறது.  இன்றைய நிலையில் மருமகளிடம் ஆரோக்கியமாக தினசரி  சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியாக வாழ்கின்ற பல மாமியார்களின் மாட்டுப் பெண்கள் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்கள். 
    மேலும் பரணியில் பிறந்தவர் தாணியாள்வார் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வெகுவாக உள்ளது.  இத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் காக்கை உட்கார பனம் பழம விழுந்த கதையாக நடந்திருக்குமே தவிர ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாகவும், சாஸ்திர பூர்வமாகவும் அணுகி ஆராய்ந்த போது இத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்தவிதச் சான்றுகளும் இல்லையென்றே சொல்லவேண்டும்.  ஜோதிட ரீதியாக உள்ள பல மூடநம்பிக்கைகளில் இவைகளும் அடங்கயிருக்கிறதே தவிர அவைகளில் வேறெந்த உண்மையும் இல்லை.

+ comments + 4 comments

இந்து மதம் குறித்து பல நல்ல தகவல்களை தொடர்ந்து அளித்துவரும் உங்களுக்கு என் பணிவான நன்றி! என்னைப்போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது உங்கள் பதிவுகள். ஒரு செய்தி: நான் பதிவுலகில் அடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே நீங்கள் என் பதிவகமான madrasminnal.blogspot.com ஐ follow செய்ததற்கு நன்றி. தற்போது நான் அதை நிறுத்திவிட்டு புதிதாக இரு பதிவுகளை துவங்கி எழுதி வருகிறேன். madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருப்பின் அதை பார்த்து விட்டு உங்கள் கருத்தினை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....விடைபெறுகிறேன். மீண்டும் வாழ்த்துகள்!

Anonymous
13:49

ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர் மூலம் என்பது ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று மாறுபட்டதால், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களின் வரன்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறோம். இதன் உண்மை பின்வருமாறு. ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும், சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகங்களும் ஏற்படுகின்றன. இதையே ஆனி மூலம் அரசாளும் என்று சொல்கிறோம். (ஆனி மூலம் என்பது ஆண்மூலம் ஆகியது) மூலம் நக்ஷத்திரத்தின் 4 வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் சமாளித்து தனது எதிரிகளையும் நிர்மூலம் செய்து வெல்லக்கூடிய திறமை உள்ளவர்கள். இதுவே பின்மூலம் நிர்மூலம் எனப்படும். எனவே (பின் மூலம் என்பது பெண் மூலம் ஆகியது) சரி, ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானே மேற்படி விளக்கம், மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் யாருக்காவது ஆபத்து வருமா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.

மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு ஆபத்து என்பது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது. லக்னத்துக்கு 3 ம் வீடு மாமனார் வீடு. இங்கு கேது இருந்தாலோ மற்றும் 4 வது 9 வது வீடுகளில் கேது காணப்பட்டாலோ மாமனாருக்கு கெடுதல் நேரலாம். மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தால் மட்டும் எநத வித தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பரிகாரம்- கேதுவின் நக்ஷத்திரம் மூலம். திருமணமாகாத பெண்களும், ஆண்களும் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகரையும், திருப்பதி அருகெ காளஹஸ்த்தியில் இருக்கும் பாதாள விநாயகரையும், மயிலாடுதுறை அருகேயுள்ள கேதுவின் ஸ்தலமாகிய கீழ்பெரும்பள்ளத்திற்கும் சென்று பரிகாரம் செய்துவருவது நன்மை தரும். மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை உங்கள் ஜோதிடர் மூலமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி ஒரு பதிவை போடுங்களேன்.

அ.சந்தர் சிங்.


-- arjunchandarsingh@gmail.com.

Anonymous
11:06

இதுபோன்ற ஆன்மீக,ஜோதிடம் சார்ந்த இடுகைகளையே தங்களிடம் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம்.என்னுடைய ஆகமக்கடல் ப்ளாக்கில் உள்ள குருப்பெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா?என்ற இடுகையை படித்து தங்கள் கருத்துக்களை பதியவும்.http://aagamakadal.blogspot.com


Next Post Next Post Home
 
Back to Top