( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மீண்டும் மீண்டும் மோதுவேன்


மந்திர அனுபவங்கள் 1

  ந்த மந்திர தந்திர விஷயங்களில் ஆரம்ப காலத்தில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இன்னும் சொல்வதென்றால் கடவுள் பெயரில் கூட அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. முன்னோர்கள் நம்பினார்கள், பெரியவர்கள் சொல்கிறார்கள், அறிஞர்கள் எழுதிவைத்திருக்கிறார்க்ள் என்பதற்காக ஒரு விஷயத்தை ஏற்று கொள்வது என்பது அறிவுக்கு பொருந்தாது என அப்போது தோன்றும்.

 ஒரு நாள் திடிரென கடவுள் இல்லை என்பதை மட்டும் எதை வைத்து நாம் நம்புகிறோம். சில பெரியவர்களின் கருத்துக்களை கேட்டு தானே, அவர்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் நமது வாதத்திற்கு ஒத்து வருகிறது என்பதற்காக அவைகள் தான் சரியென்று எப்படி நாம் முடிவுக்கு வர இயலும் ? ஒரு வேளை கடவுள் இல்லையென்பது கூட தவறுதலான கணக்காக இருக்க வாய்ப்புள்ளதே எனதோன்றியது.


  இதனால் நானொரு முடிவுக்கு வந்தேன். கடவுள் என்ற பொருள் புலன்களுக்கு அப்பாற்பட்டது புலன்களால் அறிய
முடியாதது என்று தான் பல ஞானிகள் சொல்கிறார்கள். அதே நேரம் அவர்கள் கடவுளை ஆத்மபூர்வமாக உணரலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்படி உணர்ந்து கொள்ள சிலவழிகளையும் அவர்கள் காட்டியுள்ளனர்.

செருப்பு தைக்க வேண்டுமென்றால் அதற்கு பயிற்சி வேண்டும். செக்குமாடு ஓட்டுவதற்கு கூட பயிற்சி இல்லாமல் ஆகாது. ஆகவே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கட்டிலில் கால் நீட்டி கொண்டு உட்கார்ந்து பேசி கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. கடவுளை உணர பயிற்சி எடுக்க வேண்டும். அந்த பயிற்சியின் முடிவில் நமது சுய அனுபவம் எதை தருகிறதோ
அதை ஏற்றுகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு வீன் விவாதங்களில் பொழுதை கழிப்பது முட்டாள்தனம் என எனக்கு தோன்றியதால் சில பயிற்சிகளை எடுத்து கொள்ள தீர்மானித்தேன்.

 நான் தீர்மானித்தால் மட்டும் போதுமா? அதை சொல்லி தர ஆள் கிடைக்க வேண்டுமே! மாவட்ட கலெக்டரை பார்ப்பதற்கே ஏகப்பட்ட சிபாரிசுகளை தேடி அலைய வேண்டியுள்ளது. கடவுளை பார்ப்பதற்கான  வாய்ப்பு உடனே கிடைத்து விடுமா? சில மாதங்கள் மிக தீவிரமாக தேடினேன்.


 எனது தீவிரத்தை உணர்ந்த ஒரு நண்பர் ஒரு வேலையை முடிக்க அமைச்சரைத்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரின் உதவியாளர்களை கூட பார்க்கலாம். கடவுள் உண்மையா? பொய்யா? என்று அறிந்து கொள்வதற்கு முன்னால் கடவுளை சார்ந்து சொல்லப்படுகின்ற வேறு சில விஷயங்களை பரிசோதனை செய்து பார்த்தாலே கடவுள் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு வந்து விடலாம் என்றார்.

 எனக்கு அந்த யோசனை சரியாகப்பட்டது. கடவுள் மீது எந்தளவு மக்களுக்கு நம்பிக்கையும் பக்தியும் உண்டோ அதே அளவு மந்திரங்களின் மீது பக்தியும் பயமும் இருப்பதை நானறிவேன். எனது தந்தையாரின் நண்பர் பட்டுசாமி ஐய்யர் அடிக்கடி காயத்ரி மந்திரத்தின் உயர்வையும் பயனையும் என்னிடம் பேசுவார். நான் அப்போது எல்லாம் அதை
கண்டுகொண்டதே இல்லை. திடிரென ஒரு நாள் அவரிடம் நான் மந்திரங்கள் கற்று கொள்ள வேண்டும். அதற்கு உங்களால் எதாவது உதவி செய்ய இயலுமா? என்று கேட்டேன்.

  அதற்கு அவர் என்னை பேபி என்று அழைக்கப்படும் கீழையூர் யஞ்ச சுப்ரமணியன் என்ற வேத பண்டிதரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி எதற்காக நீ இதை கற்று கொள்ள விரும்புகிறாய் என்பது தான். நான் உண்மையான காரணத்தை அவரிடம் மறைக்காமல் அவரிடம் சொல்லிவிட்டேன். சொல்லிய பிறகு நாத்திகான இவனுக்கு பாடம் சொல்லி கொடுக்க கூடாது என்று மறுத்து விடுவாரோ என பயப்பட்டேன்.


  காரணம் எனக்கு சில நாத்திகர்கள் தங்களின் கருத்துக்கு மாற்று கருத்துடைய யாரையும் பக்கத்தில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். எதாவது காரணம் சொல்லி ஆளை புறக்கணித்து விடுவார்கள். பல நேரங்களில் அடுத்தவர்களின்
மனம் என்னபாடுபடும் என்பதை கூட உணராமல் வார்த்தைகளை கொட்டி வேதனைபடுத்துவார்கள். இதனை நான் பல முறை அறிந்திருக்கிறேன். இவரும் அப்படி நம்மை புறகணித்து விடுவாரோ என பயப்பட்டேன். ஆனால் இவர் நான் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக நான் கூறியதை கேட்டு சந்தோஷப்பட்டார். என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த வரை சொல்லி தருகிறேன். முயற்சித்து பார். கடவுள் நிச்சயம் உனக்கு நல்ல வழியை காட்டுவார் என்றார்.

 இரண்டு ஒரு நாட்களிலேயே அதர்வன வேதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மந்திர பகுதியை எனக்கு சொல்லி இதன்படி செய்து வா பலன் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இரண்டு மாதம் கழித்து என்னை பார் என அனுப்பி வைத்தார். கோத்தி பிண்டம் பிரம்ம ராட்சஸம் என்று தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது குரங்கிற்கு ஒரு புண் வந்துவிட்டால் சதா சர்வகாலமும் அந்த புண்ணை விரல்களால் கிண்டி கிண்டி பெரிதுபடுத்திவிடுமாம். ஏறக்குறைய நானும் அப்படித்தான் இருந்தேன். அவர் சொல்லி கொடுத்த நாளிலிருந்து எனக்கு வேறு சிந்தனையே கிடையாது.


  அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் வியாபாரம் என்பவைகளெல்லாம் இரண்டாம் பட்சமாக தெரிந்தது. சதாசர்வ
நேரமும் மந்திர பயிற்சியிலேயே மனம் ஓடியது. இதனôல் தந்தையாரிடம் திட்டும் பட்டேன். பல நேரங்களில் வியாபாரத்தில் நஷ்டமும்பட்டேன். ஆனாலும் மனம் சலிக்காமல் என் முயற்சியிலேயே கண்ணாக இருந்தேன். பயிற்சியை துவங்கி ஒன்றரை மாதம் இருக்கும். ஒருநாள் அதிகாலை மூன்றரை மணிக்கு பயிற்சியில் இருந்தபோது என் உடம்பிற்குள் ஒரு மின்சார அதிர்வு இறங்குவது போல் உணர்ந்தேன்.

  தலை பாரமாகிவிட்டது. கண்களை திறப்பதற்கே சிரமமாக இருந்தது. என் மண்டைக்க்குள் தட்டச்சு எந்திரத்தை யாரோ தட்டுவது போல் தட்தட என சத்தம் கேட்டது.உண்மையில் இந்த உணர்வுகளால் நான் பயந்துவிட்டேன் என்றே சொல்லலாம். முன்று நாட்கள் இந்த அனுபவத்தின் தாக்கம் என்னைவிட்டு அகலவில்லை. யாரோடும் பேச தோன்றவில்லை, பசி, தாகம் கூட வலிய அழைத்ததால் தான் வந்தது. என் சுய உணர்வு தடுமாறவில்லையே தவிர மற்றபடி வெளியில் பார்ப்பதற்கு ஒரு பித்து பிடித்தவன் போலவே இருந்தேன்.


  ஆனாலும் பயற்சியை நான் விடவில்லை. இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என உள்மனம் சொன்னதினால் பயிற்சியில் மேலும் தீவிரம் காட்டினேன். சரியாக ஐந்தாவது நாள் ஒளி பொருந்திய உருவத்தை நேருக்கு நேராக சந்தித்தேன். நிச்சயம் அது என் மன கற்பனையல்ல. அப்படியொரு உருவத்தை இதற்கு முன் நான் படங்களில் பார்த்ததுமில்லை, கற்பனை செய்ததுமில்லை. அதனால் அது நிச்சயம் மாய தோற்றமில்லை என்று உறுதிபட கூற இயலும். சில விநாடிகள் மட்டுமே தெரிந்த அந்த உருவம் இதுவரை கொதித்து கிடந்த என் மனதை சாந்தப்படுத்தியது. நிரந்தரமான ஒரு மகிழ்ச்சி பேரலை எனக்குள் உலாவுவதை நான் கண்டேன். அந்த அலையின் தாலாட்டுதலை இந்த நிமிடம் வரை உணருகிறேன்.

 இந்த அனுபவத்திற்கு பிறகு என் புத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.கடவுள், தெய்வம், மந்திரம், ஜெபம் என்று சொல்லி சென்றிருக்கும் நமது முன்னோர்க்ள நிச்சயம் முட்டாள் அல்ல,நம்மை கற்பனை வாதத்திற்குள் தள்ளும் மோசடி பேர்வழிகளும் அல்ல தாங்கள் நிச்சயமாக உணர்ந்ததை சத்தியமாக நமக்கு சொல்லி சென்றிருக்கும் மெய்வழிகாட்டிகளே என்ற உண்மை தெரிந்தது. ஞானம் பிறப்பதற்கான மெல்லிய ஒளிக்கீற்றும் கண்ணில்பட்டது.

பிறகுகென்ன சும்மா மென்றவன் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒன்றுமே இல்லாது இருந்த எனக்கு ஏதோ ஒரு வழி கிடைத்துவிட்டது போல அதில் மேலும் முன்னேறி செல்ல ஒரு வெறியே ஏற்பட்டது. மந்திர பிரயோகத்தில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வ நெருப்பு கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அதர்வன வேத மந்திரங்களை மட்டுமல்ல திருமூலர், கருவூரார், புலிபாணி சித்தர் போன்ற சித்த புருஷர்களின் மந்திர முறைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். 


    என்னால் நடக்க முடியாது.ஒருஇடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதாக இருந்தால் கூட இன்னொருவரின் துணை வேண்டும். இந்த நிலையில் பலவிதமான மந்திரங்களை கற்றுக் கொள்ள வேறு வேறுபட்ட குருமார்களை எப்படி என்னால் தேடி போக இயலும். இந்த எதார்த்த நிலையை உணர்ந்து மனம் சிறிது சஞ்சலப்பட்டாலும் கூட உன்னால் எப்படியும் முடியுமென எனக்குள் இருந்து ஒரு பறவை பாடிக்கொண்டே இருக்கும். எதேர்ச்சையாகவோ அல்லது கடவளின் அனுகிரகத்தாலையோ சில குருமார்கள் என்னை தேடியே வந்திருக்கிறார்கள். குருமார்கள் இல்லாத நேரத்தில் மிக பழையகால புத்தகங்களும், ஏட்டு சுவடிகளும் எனக்கு வழிகாட்டியிருக்கின்றன.

   சுமார் பத்து வருட காலம் மந்திரம் கற்க வேண்டும் என்ற வெறி அடங்கவே இல்லை. அதன் பிறகுதான் நான் கற்ற மந்திரத்தை மற்றவரகளுக்காக பிரயோகம் செய்து பார்த்தேன். அந்த பிரயோக பயிற்சியில் ஆரம்பகால கட்டத்தில் சில வெற்றிகளும், பல தோல்விகளும் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் தோல்விகளை பார்த்து என் மனம் துவண்டு போனதே கிடையாது. ஒரு தோல்வி வந்துவிட்டால் மீண்டும் மீண்டும் மோதுவேன்.அந்த மோதல் என்னை செழுமைபடுத்தியிருக்கிறதே தவிர காயப்படுத்தியதில்லை.
+ comments + 28 comments

வித்தியாசமான பதிாவன்று வாழ்த்துக்கள்...

VERY NICE POSTING SIR.I DO AGREE WITH U THAT MANTHIRAMS ARE LIKE
PASSWORDS .IF U R BLESSED U WILL GET TO KNOW ALL THE KEYS.
THOSE DAYS GURUS FOLLOWED INITIATION METHOD TO BLESS U WITH
MANTHIRAMS .U R A BLESSED PERSON.

MAY BAGHAVATHY BLESS U.
REGARDS
PARASURAMSV

Anonymous
11:28

மனம் கடவுளைக் காண்கின்ற புலன். ஆனால், ஐம்புலன்களை மூடிய பிறகு தான் அந்த மனமாகிய புலன் சிறிது சிறிதாகத் திற ஆரம்பிக்கிறது. அதற்கு பொறுமையும், நம்பிக்கையும், மனித வாழ்வு அர்த்தம் இல்லாத ஆடம்பரம் அல்ல என்ற பார்வையும் தேவை.

நல்ல கட்டுரை --- உங்கள் மற்ற கட்டுரைகளைப் போல்வே. வாழ்த்துக்கள்.

மந்திரங்களை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது , ஆனாலும் உங்களின் தேடல் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும் என்ற விடாமுயற்சி பிரமிக்க வைக்கிறது.

வித்தியாசமான நல்ல கட்டுரை

Anonymous
13:25

Nice Post! but nowadays I am feeling God is nowhere, if he is.., why he allow all of us doing bad and we accumulate KARMA for future.Karmas 'll affect/spoil our future/if there is next generation.From my childhood I pray God more, day by day it reduced and now I feel God is nowhere.may be Frustration.

Pl don't mind if anything wrong and forgive me.I just write what I am feel.

very nice sir
regards,
kovai sakthy

கீழையூர் யஞ்ச சுப்ரமணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்

அவரது சேவை தங்கள் மூலமாக தொடரட்டும்.

என்றும் அன்புடன்

வராகன்.

உங்கள் நல்ல அனுபவத்தை வெளிபடுத்தியமைக்கு மிக்க நன்றி பயனுள்ளதாக இருந்தது.

எனது கருத்து வாதிடவோ அல்லது மற்றவர்களை புண்படுத்தவோ அல்ல. மேலும் அறிந்து கொள்ள விரும்புவது தான் காரணம். அம்மாவிடம் குழந்தை கேள்வி மேல் கேள்வி கேட்பாள்.அது குழந்தையிடம் உள்ள ஆர்வமே தவிர, அம்மாவிடம் வாதிடுவதாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
நம் முன்னோர்கள் தெரிவித்த பல கருத்துக்களை நாம் மூட நம்பிக்கைகள் என்று ஏளனம் செய்திருக்கிறோம்.ஆனால் அதில் உள்ள உண்மைகளை சிந்தித்து பார்த்து அறிந்து கொள்ள முனைவதில்லை.என் பாட்டி, நம் வீட்டில் யாராவது தூர இடங்களுக்கு போகும் போது கொடுத்து விடும் உணவில் ஒரு சிறிய கரித் துண்டொன்றையும் வைத்து விடுவாள்(சமீபத்தில் ஒரு சினிமாவிலும் காட்டப்பட்டது). இந்தக் கரித்துண்டின் ரகசியம் பாட்டியை பொறுத்த அளவில் பேய்,பிசாசு,கெட்ட ஆவிகள் என்பது தான். ஆனால் இன்று நமக்கோ அதில் ஒரு விஞ்ஞான உண்மை இருப்பது தெரிகிறது.இது போல் பல நம்மால் மூட நம்பிக்கைகள் என்று கூறப்பட்டவை, கூறப்படுபவைகளில் அறிவியல் உண்மைகள் இருப்பது நமக்கு தெரியும்.
அது போலவே குண்டலினி யோகத்தில் இருக்கும் சில உண்மைகள் பற்றி ஒரு சில சம்ஸ்கிருத நுல்களில்(ஓரளவு சம்ஸ்கிருத அறிவு உண்டு) படித்தேன். ஆறு சக்கரத்தையும் நம் உடல் அமைப்பையும் பாருங்கள்.ஒரு முறை சாமியார் ஒருவர் கூறினார் , குண்டலினி சக்தியை மேலே கொண்டு வந்து சிவலிங்கத்தில் அடக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த சக்தியை மேலே கொண்டு வரும் போது உயிர் இழப்பு கூட ஏற்பட்டது. என்று அந்த சிவலிங்கத்தை பற்றி விபரித்தார்(உங்களுக்கும் தெரிந்தவர் தான்). ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்.
குண்டலினி பற்றிய ஒரு மனிதனின் படத்தை பாருங்கள். ஆறு சக்கரத்தையும்,அதற்குரிய நமது உடல் பாகங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். மூலாதாரம் - இன விருத்திக்கு காரணமான ஆண்,பெண் உறுப்புக்கள். இதை தொடர்ந்து சுவாதிச்தானம்,மணிபுரம்,அனாகதம்,விசுத்தி,ஆக்கினை,சுகஸ்ரார(தூரியம் ) இவற்றோடு நம் உடல் உறுப்புக்களான வயிறு,இருதயம்,நுரையீரல்,கழுத்துப்பகுதி(இங்கே மிக முக்கியமான தைரோயிட் சுரப்பி) பின் மூளை ஒப்பிட்டு அறிவியல் ரீதியில் எண்ணிப் பாருங்கள்.. நாம் காமத்தை கட்டுப்படுத்தா விட்டால் (சமீப காலங்களில் வந்து கொண்டிருக்கும் மத குருமார்களின் செய்திகள் நீங்கள் அறிந்ததே), உணவை கட்டுப்படுத்தா விட்டால்(கல்யாண சமையல் சாதம் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கிறோம்.பின் எத்தனை வியாதிகள்.உணவை கட்டுப்படுத்தி விட்டால் வியாதி இல்லை,வேதனை இல்லை,வெங்கட்ராமன் அவர்கள் தொப்பைக்கு மருந்தும் கூற மாட்டார்.),மூச்சுப் பயிற்சி இல்லா விட்டால்(எமது நுரையீரலின் ஒரு சிறு பகுதியையே நாம் பாவிக்கின்றோம்.முழுப் பகுதியை பாவித்தால் இரத்த சுத்திகரிப்பு சிறப்பாக இருக்கும்.இதற்கு வேண்டியது பிராணயாமம்.)மற்றைய பகுதிகளை நீங்களே சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.(சொல்லப் போனால் மிக நீண்டு விடும்.) இவற்றை எல்லாம் கட்டுப் படுத்தி நமது எண்ணங்களை,சிந்தனைகளை ஒரு நிலைப்படுத்தி மூளையிடம் விட்டு விட்டால் நாம் மிகப் பெரிய சாதனைகளை செய்ய முடியும்.இறைவனையும் அடைய முடியும்.நமது ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர அடக்கிவிட வேண்டும் என்பது பொருளல்ல.நம் உடல் உறுப்புகளால் சிதறி விடக் கூடியவற்றை கட்டுப்படுத்தி மனதை ஒருநிலைப் படுத்துவது தான் குண்டலினி யோகம் ஆகும்.
நம் முன்னோர்கள் பலவற்றுக்கு சரியான விளக்கத்தை தரவில்லை.ஆனாலும் அவர்கள் சொல்லியவற்றில் அறிவு பூர்வமான ,விஞ்ஞான பூர்வமான உண்மைகள் உள்ளன.அவை வெளிக் கொணரப்பட வேண்டும்.
மின்மினி பூச்சிகளை பிசாசுகள் துரத்தி வருவது என்ற அன்றைய கருத்து,உணவுடன் கரி வைப்பது போன்றவற்றில் உள்ள விஞ்ஞான உண்மைகள் வெளிக் கொணரப்பட்டது போல் நாம் சிந்தித்து உண்மையை வெளிக் கொணருவதன் மூலம் , நாம் அவற்றை அறிவியல் முறைக்கு பயன்படுத்தலாம்.அதற்கு ஒரு சான்று,இன்று அமேரிக்க,ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் autogenic என்ற self Hipnose வைத்திய முறை. இந்த முறை தியானத்தை அடிப்படையாக உருவாக்கப்பட்டது தான். ஆனாலும் இன்று மருத்துவ காப்புறுதியினரால் அங்கீகரிக்கப் பட்டு இரத்த அழுத்தம்,மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு மருத்துவர்கள் பயன் படுத்தி வருகிறார்கள். எனவே சிந்திப்போம்.தவறாக சிந்தித்தால் தவறாகவே பதிலும் வரும். சாதி,சில மதக் கொள்கைகளைப் போல் ரத்தத்தில் ஊறி விட்டவற்றை களைந்து எறிந்து விட்டு வெளியே வரலாமே. எண்ணித் துணிக கருமம்.

உங்கள் அனுபவத்தைச் சொன்னாலும் யோசிக்க வைக்கிறது பதிவு !

தேர்ந்து, தெரிந்து, தெளிந்ததை பற்றி ரொம்ப சந்தோஷப் படுகிறேன்.

Anonymous
01:40

very nice kuruji
innun ithu pol ungal anubavangalai padikka kaathirukkirom

thnx
anony

Anonymous
21:10

வணக்கம் ஆசீர்வாத குருவே நான் பல நாட்கள் மரணத்தின் விழும்புவரை சென்று மீண்டு வந்திருக்கிறேன் என்னை அறியாமல் என்னை ஏதோ ஒரு வடிவம் தூய உள்ளம் என்னை காப்பாற்றி கொண்டே வருகிறது. இதை என்னால் கண்ணால் கான முடியவில்லையே தவிர உணர முடிகிறது. அது நான் வணங்கும் கடவுளா அல்லது ஆண்மாவா கண்ணுக்கு புலப்படாத சக்தியா என்பதை பார்க்க முடியவில்லையே தவிர உணர முடிகிறது உங்கள் ஆசீர்வாதம் என்றும் மனித மானிடர்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

Anonymous
15:16

ஐயா பயனுள்ள மந்திரங்களை பதிவிடுக்கள்

i want that helpfull atharvanaveda mathradetails

i need that helpfull atharvanaveda manthra details please

இதை படிக்க எனக்கும் ஆர்வம் வருகிறது இன்னும் தெரிந்துகொள்ள.....

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நிரூபித்து இருக்குறீர்கள் . உங்களை போல் எனக்கும் கடவுளை காண ஆசையாக உள்ளது .தயவு செய்து அதற்கான வழி முறைகளை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்

ஐயா!

நமஸ்காரம். அடியேனும் மந்திர ஜெபம் செய்து தரிசனம் பெற்றிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே வெளிச்சம். மந்திர ஜெபத்தால் நான் மட்டும் பலனடைந்தது போல், இப்பொழுது மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தி வருகிறேன். என்னால் பலனடைந்தவர்கள் இன்று பலர் நல்ல நிலையில் உள்ளனர். பலருக்கு குடும்ப தகராறு, தொழில் தகராறு, வியாபார முன்னேற்றம், கல்வித்தடை........ போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு அளித்து வருகின்றேன்.

நன்றி.

Ennul niraya kelvigal.... Unmai ariya dhutikirathu manadhu.... ungalitam adhargana pathilgal irukuma.... muthalil nan en munthaya piravigalai therinthu kolla asai padukiren..... vidai kidaikkuma

அருமையான அனுபவம்

,
தங்கள் கருத்து பதிவிற்க்கு நன்றி,
நான் தங்களிடம் பயிற்ச்சி செய்ய விருப்பம்.
தங்களை சந்திக்க வேண்டும்,
தங்கள் ஆசியை எதிர்பார்க்கிறேன்,
www.murugesanwiner@gmail.com

வணக்கம் ஐய, எனக்கு மந்திரம் கற்றுத்தரவேண்டும்

வணக்கம் ஐய, எனக்கு மந்திரம் கற்றுத்தரவேண்டும்

வணக்கம் ஐய, எனக்கு மந்திரம் கற்றுத்தரவேண்டும்


Next Post Next Post Home
 
Back to Top