( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்    மிழகத்தை நேசிக்கின்ற நல்ல மனங்கள் பல உள்ளன அந்த மனங்களின் உண்மையான ஏக்கங்கள் பல என்றாலும் மிக முக்கியமானது 1967 முதற்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருபெரும்  கட்சிகளே மாறி மாறி அரசாளுகின்றன

இதில் யாராவது ஒருவராவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வார்களா என்றால் எதுவும் இல்லை


இவர்களை தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்குமே? என்பதுதான் ஆனால் மாற்று ஏற்பாடாக நல்லவர்கள் யாரும் தமிழக அரசியல் வானில் தென்பட வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது


  காங்கிரஸ்காரர்கள் உறக்கத்தில் கூட சோனியா காந்தி எப்போது எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ நம் கட்சிப் பதவி எப்போது பறிபோகுமோ? என்ற பதபதைப்புத்தான் தொடர்கிறது

பொதுவுடமை கட்சிக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் இரவு பகலாக போராட்டங்கள் நடத்துவதில் தான் ஆர்வம் உள்ளதே தவிர  தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர  தீர்வுகள் காண முயற்சிப்போமே என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது

தங்களது ஆட்சி இருக்கின்ற மாநிலங்களில் கூட அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் நன்மை அடைகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்

பா.ஜ.க. போன்ற கட்சிக்களும் கூட தங்களுக்குள் கோஷ்டி சண்டையில்தான் தமிழ் நாட்டிலேக் கூட உள்ளனர் அவர்களை நம்புவதும் மண்குதிரையை நம்புவதும் ஒன்றுதான்


    மற்றபடி டாக்டர். ராமதாஸ் நடிகர் விஜயகாந்த் போன்றோர்களும் நல்லவர்களாகத் தெரிய வில்லை

சரி நிலமை இப்படியே போனால் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்? தமிழகத்தை குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் மன்னார்குடி சுரண்டலிருந்தும் காப்பாற்றப் போவது யார்?


   கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை இருந்தாலும் ஒரு யோசனை தோன்றுகிறது அது நடைபெறுமா நடைபெறாதா என்றெல்லாம் சொல்ல முடியாது நம்பவும் முடியாது

இருப்பினும் கருத்துக்களை விதைத்து வைத்தால் என்றாவது ஒரு நாள் முளைக்கலாம் அல்லவா!

நல்லதோ கெட்டதோ திரு.விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ் நாடு முழுவதிலும் திரு. ராமதாஸ் அவர்களுக்கு வடதமிழகத்திலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது

இந்த செல்வாக்கை ஓட்டுகளாக மாற்ற இருவரும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

வேண்டுமானால் தலைக்கு இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்வதென்று ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்

இந்த விஷயத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியினர் விஜயகாந்த்தை தாறுமாறாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் 

இது விஜயகாந்த்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது பட்ட காயத்தை மறந்து ராமதாசிடம் இறங்கி போவது சற்று சிரமம் தான்

ராமதாசுக்கும் இத்தகைய சங்கடம் உண்டு ஆனால் மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பதை இருவரும் உணர்ந்தால் சிக்கல் இல்லை


  மந்திரி சபையில் பங்கெடுத்துக் கொள்ள சொல்லி காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகளை இணைத்து இடதுசாரிகளையும் அரவணைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அரசியலில் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்

கழக மாயங்களை ஒழித்து விட்டால் நல்லாட்சியைப் பற்றி அடுத்து சிந்திக்கலாம் அது சரி இந்த யோசனை யார் காதில் விழப்போகிறது....?

+ comments + 34 comments

Anonymous
02:16

very wrong suggestion!

தமிழக அரசியலில் ராமதாஸ் ஒரு கோமாளி என்பதை நிரூபித்துவிட்டார். நடிகர் விசய காந்துக்கு அந்த சந்தர்பம் இன்னும் வரவில்லை அவ்வளவே. விசய்காந்திடமும் அதிகம் எதுவும் எதிர்பார்காதீர்கள். பெண்டாட்டி ,மச்சினர் மற்றும் ஒரு பெரிய கூட்டமே தயாராக உள்ளது. சந்தர்பம் கிடைத்தால் இவர்களும் ஆட்டையை போட தயங்க மாட்டார்கள். மேலும் விசய காந்த போன்ற நடிகர்கள் திரையில் தங்கள் கொண்ட பாத்திரத்தை நிஜம் என்று நம்பி அதனை மக்களிடம் காட்டி காரியம் ஆற்ற முனைவது அன்றி நாட்டை ஆளும் எந்த ஒரு தகுதியும் திறமையும் இந்த சினிமாகாரர்களிடம் இல்லை என்பதை சரித்திரம் காட்டியுள்ளதே !

ரபீக்
02:17

அரசியல் நடிகனும் ,நடிக்கும் அரசியல்வாதியும் கூட்டணி சேர்ந்தால் நாடு வெளங்கிடும்

உதயசுதா
02:18

விஜயகாந்த் சினிமா கோமாளி, ராமதாஸ் அரசியல் கோமாளி.
இரண்டு பேரும் சேர்ந்தா தமிழ் நாடு எங்கயோ போய்டும் போங்க.
குருஜி சும்மா காமெடி பண்ணாதிங்க. இரண்டு பேருமே திமுக
அதிமுகவுக்கு சளைச்சவங்க இல்லை.இப்பவே விஜயகாந்த் கட்சில இருக்கறவங்க பண்ற அலும்பு தாங்க முடியல.இன்னும் அவங்க ஆட்சி வந்துட்டா தமிழ்நாட்டை யாரலும் காப்பத்தவேமுடியாது

maniajith007
02:18

விஜயகாந்த் ராமதாஸ் தவிர வேற ஆளுகளே கிடைக்கலையா

POOJITHA
02:19

ராமதாஸ் இரவு கேப்டன் பகல் இரண்டும் இணைவதுகடினம்
ராமதாஸ் ஜாதியை பிரதானமாக பேசுவார் கேப்டன் அப்படி இல்லை மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று சிரிதவது நினைபார் ஆகவே கேப்டன் தனித்து நிற்பதுதான் நல்லது

கலை
02:19

ஏன் சீமான் இல்லையா...?

நீங்கள் சோதிடம் தெரிந்தவர்தானே அடுத்த முதல்வர் யாரென்று பளிச்சென கூறலாமே?

நான் கூறுகின்றேன் அடுத்த முதல்வர் ஆற்காடு வீராச்சாமி. எப்படியென்று ஆராயுங்கள்.

உதுமான் மைதீன்.
02:20

நம்பி ஏமாற தமிழனனுக்கு சொல்லியா தரனும். ( நானும் தான்., )

அப்புகுட்டி
02:21

உலகம் முடியும் வரை நடந்து கொண்டே இருக்கும் இதை யாராலும் மாற்ற முடியாது கவலையுடன் அப்புகுட்டி.

ராஜா
02:21

ராமதாஸ் இரவு கேப்டன் பகல் இரண்டும் இணைவதுகடினம்
ராமதாஸ் ஜாதியை பிரதானமாக பேசுவார் கேப்டன் அப்படி இல்லை மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று சிரிதவது நினைபார் ஆகவே கேப்டன் தனித்து நிற்பதுதான் நல்லது


வெளியில தமிலன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் தெலுங்கு பேசும் கேப்டனையா சொல்லுரிங்க ,

யாசவி
02:24

பாஸ் நல்ல ஐடியா பாஸ்.

இவர்களுடைய பழைய பெர்பார்மென்ஸை பார்த்துமா இப்படி ஐடியா?

இரு கழகமும் போகவேண்டும் என்று சொல்வது சரி. அதற்க்கான தீர்வு.....?

மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதைதான்.

எவ்வளவு திட்டினாலும் இவர்கள் கோபப்படமாட்டார்கள். இருவருக்குமே தெரியும் இதெல்லாம் தொழில் என்று.

ரொம்ப சீரியஸா யோசிச்சி இருப்பீங்க போல

யாசவி
02:24

இன்றைய நிலவரத்தில் மற்ற கட்சிகளுக்கு ஆட்சிக்கு வருவதற்கான திட்டமே இல்லை

Yes yes JJ dont know anything.But she knows well how to share the bedroom of MGR and capture the power of ADMK.SSSSSHHHHAAAAAMMMMEEEE

ஏன் வைகோவை லிஸ்ட்டிலேயே எடுத்துக் கொள்ளவில்லை? மற்றவர்களைவிட அவர் எவ்வளவோ பரவாயில்லையே.

sivakumar
02:26

thamilagam oru iru munai katthithan

kavanam thevai.

jai
02:26

Hi Mr kuru, first think u have you have understand to Tamil Nadu polities, i think next CM Selvi J Jayalaitha than, this correct way, Jayalitha Menes One and only army, please forgot DMK and vijayakanth, not stanting this real, ones com to ADMK than no change for Tamil nadu this my way and real please understand and than only give to your article ok, if any command send to my mail id jjkkamala@gmail.com

அய்யனார்சாமி
02:26

பா.ம.க., தே.மு.தி.க. வோடு இன்னும் சில கட்சிகளும் சேர்ந்து மாற்று அணியைத் தமிழகத்தில் உருவாக்கலாம். பா.ம.க.வுக்கு ஏற்கனவே அத்தகைய வாய்ப்பு வந்தது. ஆனால் அதை அக்கட்சி சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வரவும், ஈழத் தமிழர் அழிக்கப்பட்டதற்கும் அந்த தவறான நிலைப்பாடே காரணம். இனியும் இரு கழக ஆட்சிகளும் தொடர்ந்தால் நாமெல்லாம் அகதிகளாக வேற்றுநாட்டிற்கு செல்லவேண்டியதுதான். பா.ம.க. தலைமையில் தே.மு.தி.க. விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. போன்ற கட்சிகள் சேர்ந்து தனி அணியாக நிற்கலாம். அரசியல், தனிமனித விருப்பு வெறுப்பற்ற நிலையில் இதை அனுகினால் எதார்த்தம் புரியும். மேற்சொன்ன கட்சிகள் அனைத்திற்குமே குறிப்பிடத்தகுந்த ஓட்டு வங்கி உள்ளதென்பதை யாரும் உதாசீன படுத்திவிட முடியாது.

Saravan
02:27

I wish Mr. Vijaykanth would be a better CM of all CM in Tamil nadu if he is elected. But Tamilian won't allow a straight forward person to become CM. Tamilian always perfer some free gifts like colour TV ....... still we should all unite and choose a very good candidate for our state assembly. Then the state will flourish. Just seen an example of Mr. Modi .. we all should learn from Mr. Modi - Gurajat CM (please dont think a cheat Modi - Ex IPL Chairman)

gunashan
02:27

கேப்டன் விஜயகாந்த் வாழ்க......தலவர் வாழ்க.

arun_vzp
02:27

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி குருஜி.....ஆனால் ராமதாஸ் மக்கள் மத்தியில் மிகவும் கெட்ட பெயர் உள்ளது......அவர்கள் இரண்டு பேறும் இணைவதற்கு..சான்சே இல்லை.....அனால் விஜயகாந்த்ம் ஜெயலிலிதாவும் இணைந்தால் நல்லா இருக்கும்......என என்னுடைய கருத்து................

dhesinguraja.c
02:28

i like mr.vijayakanth show think next cm dmdk best of wish

SARA
02:28

ONE DAY DEFINETELY CAPTAIN WILL BECOME CHIEF MINISTER OF TAMIL NADU. THAT DAY IS SO FAR.

Thanjavur. U. Kathiravan
02:28

nalla pakal kanavu. atthaiku misshi mulaithal seethappa aagalam.

cs
02:29

intha naadum,

naattu makkalum

naasamai pogattum.

Anonymous
11:15

I THINK MR.SUBRANMANIYA SWAMY AND CHANTRA LEGA MUST SHARE THE CM POST IN TWO SHIFTS THAT IS FROM MORNING TO AFTERNOON AND AFTER EVENING.NIGHT DUTY MUST BE LOOKED AFTER BY GOVT REP FROM CENTRAL SORRY FOR THE BAD SHAPE OF OUR DEMOCRACY. I AM NOT A CAMEDIAN.IT IS SERIOUS

நிலா
22:46

கழக மாயங்களை ஒழித்து விட்டால் நல்லாட்சியைப் பற்றி அடுத்து சிந்திக்கலாம் அது சரி இந்த யோசனை யார் காதில் விழப்போகிறது

hahahahaha...

08:54

ராமதாசும், விஜயகாந்தும் குடும்ப அரசியலை முன்னெடுத்து செல்பவர்கள்தானே இதே ராமதாஸ் கடந்த காலங்களில் பதவிகளை பெருவதற்க்காக பல கோமாளித்தனங்களை காட்டியவர்தான். இருந்தாலும் மற்ற இருவருக்கும் இவர்கள் எவ்வளவோ பரவயில்லை

நல்ல மொழிநடையில் சொல்கிறிர்களே அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

குமார்
18:31

விஜயகாந்த் காங்கிரசிடம் பேசிய பேரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அரசியல் மட்டங்களில் பேசப்படும் விசயங்கள் வெளியே தெரியாததால் இப்படி சொல்கிறீர்கள். ஜாதிக்கட்சி தலைவர் ராமதாசை எப்படி நீங்கள் எப்படி முன்னிறுத்துகிறீர்கள்.. நீங்கள் சொன்ன இருவரில் யார் வந்தாலும் அது கருணாநிதி, ஜெயலலிதாவே பரவாயில்லை என்கிற அளவில்தான் இருக்கும்.. மாற்று என்று சொல்லிக்கொண்டு காளான்களையும், களைகளையும் முன்னிருத்தாதீர்கள்.

நீங்கள் சொல்வதுபோல் ஒரு தடவை வாய்ப்பு கொடுக்கலாம்

Hi.. I am reading your blogs but never comment.. this is my first comment.. I don't think so your suggestion is good... Both People don't have the constant mind set.. Mr.Ramadoss never stable in any party eventhough he won or loss.. He is trying to focus his cast priority only and he came with the rule, PMK never follow family political.. But you know now whats happening.. Then come to Mr.Vijayaganth, He is also trying to say we should stop the family political, But you see his wife is Ladies party head and his brother-in-Law is Youngsters Party head, his sons are small thats why they never get any position.. Do you want to Believe this People?? My opinion is "Known Devil is Better than Unknown Angel" ...

Dhana
23:49

குருஜி, எதாவது மந்திரம் செய்து என்னை முதல்வர் ஆக ஆக்கிவிடுங்கள். நான் நன்றாக ஆட்சி செய்கிறேன்.


Next Post Next Post Home
 
Back to Top