( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்   விகளோடு பேசி அவைகளிடமிருந்து பெற்ற தகவல்களை அந்த தகவல்கள் பெற பயன்படுத்தப்பட்ட மனித மீடியம்களின் சுயசிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்திகளைப் பெற்றதையும் கடந்த அத்தியாயங்களில் கண்டோம்.  அதை ஆழ்ந்து படிப்பவர்களுக்குத் தாமும் இத்தகைய முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற அவா எழுவது தவிர்க்க முடியாததாகும்.  ஆனால் நினைத்தவுடன் எல்லோராலும் ஆவிகளுடன் பேச முடியுமா?  அப்படியே பேசினாலும் சரியான ஆவிகள் வந்து துல்லியமான தகவல்களை தருமா?  எனக் கேள்விகள் எழுவது இயற்கையாகும். 


    ஏன் என்றால் இன்று சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலேயே ஆவிகளுடன் பேசும் பயிற்சியைப் பெற்று விட முடிகிறது.  ஆனால் அத்தகைய பயிற்சி பெற்ற பலர் தொடர்ச்சியாக ஆவிகளுடன் பேச முடிவதில்லை.  அப்படியே பேசினாலும் அழைக்கும் ஆவிக்குப் பதிலாக வேறு ஆவிகள் வந்து குழப்பமான தகவல்களைத் தருகிறது.  அல்லது சாராரணமாக இருக்கும் பயிற்சி யாளர்களின் அன்றாட வாழ்க்கையைத் தடை மிகுந்ததாக ஆக்கி விடுகிறது.  எனவே ஆவிகளுடன் பேசும் தகுதி அனைவருக்கும் உண்டு என்றாலும் அதற்கான பிரத்யேகமான உடலும் மனதும் அமைய வேண்டும்.  அப்படி அமைந்தால் மட்டுமே ஆவிகளுடன் பேசும் கலை வெற்றிகரமாக அமையும்.  அதற்குப் பயிற்சி எடுப்பதற்கு முன்பு சில மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் ஆர்வலர்கள் செய்ய வேண்டும்.

    ஆவிகளுடன் பேச விரும்புபவர்கள் முதலில் மனித உடலைப் பற்றி குறிப்பாக மூளையைப் பற்றிய ஞானத்தைப் பெற வேண்டும்.  அதன்பின் மனதைப் பற்றியும் அதை அடக்கி ஆளும் வழிமுறைகளைப் பற்றியும் அவைகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் நடைமுறை விஷயங்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து இருக்க வேண்டும்.  மூளை மற்றும் மனிதன் இயல்புகளைச் சற்று ஆராய்ச்சி செய்து அதன் பின்னர் ஆவிகளுடன் பேசும் முறையைத் தெரிந்து கொள்வோம்.


     மிகவும் சக்தி வாய்ந்த கம்பியூட்டரின் திறனை விட மனித மூளையின் திறன் அபாரமானது.  கம்பியூட்டர் படிப்படியாக வேலை செய்து விடையைக் கொடுக்கிறது.  ஆனால் மூளையில் உள்ள பல பில்லியன் கணக்கில் உள்ள நீயூரான்கள் ஒரே நேரத்தில் பிரச்சனையை அணுகி உடனே விடை கொடுத்து விடுகிறது. மனிதக் கண்டுபிடிப்புகள் அனைத்தின் வேகத்தைவிட மூளையின் வேகம் பல மடங்கானது.  மூளையின் வேகத்திற்கு இணையாக எந்த ஒரு உபகரணமும் கண்டு பிடிக்கப்படவில்லை.  மேலும் மூளை இன்று இருக்கும் மகாசிக்கலான தொழில் நுட்பங்களின் சிக்கல்களை விட 1000 மடங்கு சிக்கலான படைப்பாகும்.  சிந்தனையின் போக்கு இன்ப துன்ப உணர்வு, பசி, காதல் போன்ற சகலவித உணர்ச்சிகளும் ஒருவித மின்சார அலை போன்று மூளையில் எழுந்து மனிதனை அந்தந்த செயல்களில் ஈடுபடுத்த வைக்கிறது.

    இந்த மின்சார அலைகள் மூளைக்குள் உற்பத்தியாகும் விதத்தை நாம் அறிந்து கொண்டால் கணித சூத்திரங்களைப் போல் சில கணக்குகளை வைத்து மனிதர்களின் எண்ணங்களை உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ளலாம்.  பைத்தியம், குற்ற இயல்பு, மனச் சோர்வு முதலிய மனநோய்களை எல்லாம் ஒரு மின்சாரக் கருவியின் பட்டனை அழுத்துவதன் மூலமே குணப்படுத்தி விடலாம்.  தற்கால விஞ்ஞானிகளுக்கு மூளையின் செயல்பாடு புரியாத புதிராகவும் அதிசயத்திலும் அதிசயமாகவும் இருக்கிறது.  ஆனால் நமது முன்னோர்கள் மூளையின் செயல்பாட்டைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து துல்லியமான வரையரைகளை வைத்து இருக்கிறார்கள்.  அதை கண்மூடித்தனமான தற்கால விஞ்ஞானம் ஏற்பது இல்லை.  அப்படி ஏற்றால் அவர்களின் சூத்திரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டால் மனித குலம் பல நன்மைகளை உடனுக்குடன் அடையும் என்பதில் ஐயமில்லை.


     படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ளல், கண்டத்தை படமாக வரைதல், என்றோ இறந்துபோன மகனை நினைத்து இன்று அழுவது எல்லாம் மனதிலிருந்துதான் வருகிறது என்றும் மூளைக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பலர் கருதிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் மனம் என்பது மூளையின் ஒரு பகுதிதான்.  அந்த மனதைச் செம்மையாக்கினால் மூளையின் செயல்பாடாத பல பகுதிகள் செயல்பட்டு ஞானநிலையையும் அமானுஷ்ய சக்திகளையும் மனிதன் பெறலாம் என்று முற்கால யோக ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.  அதே நேரம் மூளையின் செயல்பாடு மூலாதாரத்தின் சக்தியால் தான் இயங்குகிறது என்றும் அந்த மூலாதார சக்தியே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாகவும் மனித மூளை உடல் உள் உறுப்புகளை வெளி உறுப்புகள் ஆகிய அனைத்துமே மூலாதாரத்தை மையமாக வைத்து செயல் நடக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

  மனிதனின் அரும்பெரும் சாதனைகள் எல்லாம் உடல் முழுவதும் உள்ளத்தில் அடக்கம் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.  உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியுமானால் உடலை விரும்பியவாறு இயக்குவிக்கலாம்.  இந்த இயக்கங்கள் எல்லாம் மூலாதாரத்தைத் தூண்டி எழச் செய்யும்.  பிராணசக்தியிலேயே அதாவது உயிர் ஆற்றலிலேயே சுற்றிச் சுழல்கிறது.  மூலாதாரத்திலிருந்து பிரம்ம கபாலம் என்று அழைக்கப்படும் மூளையின் மையப் பகுதிகள் நாடிகளே நடத்துகின்றன.  நாடிகள் என்பது மிகவும் நுட்பமானது ஆகும்.  புலன்களுக்குப் புலப்படாதவைகள் ஆகும்.  நரம்புகளைப் போல் நாடிகளைக் காண இயலாது.  மிக நுட்பமான நுண்ணோக்கிகள் மூலம் கூட நாடிகளைக் கண்டறிய முடியாது.  இப்படிப்பட்ட நாடிகளின் எண்ணிக்கை 72,000 என்று பூதசுத்தி சம்ஹிதையும் 3,00,000 என்று பிரபஞ்சசாரமும் 3,50,000 என்று சிவசம்ஹிதையும் கூறுகின்றன.


     எண்ணிக்கையைப் பற்றி பலவாறான கருத்துக்களை யோக நூல்கள் கூறினாலும் மனித உடலில் ஆயிரக்கணக்கான நாடிகள் குறுக்கும் நெடுக்கும் மின்னல் கீற்றுப் போல் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இவற்றில் இடகலை, பிங்கலை, க்ஷீசும்நா, சரஸ்வதி, லஷ்மி, மேதா, காந்தா, அலம்புசா, சங்கினி, குரு என்ற பத்து நாடிகள் மிக முக்கியமானது.  இந்தப் பத்து நாடிகளில் க்ஷீசும்நா நாடியும் மேதா நாடியும் மிக் முக்கியமான நாடி ஆகும்.  குண்டலினி சக்தி விழித்தவர்களுக்கும் அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கும் க்ஷசும்நா நாடி முழுமையாகச் செயல்படும் இந்த நாடி தாமரைத் தண்டின் நூல்போல் முதுகுத் தண்டின் அடிமுனையில் குண்டலினி பாம்பில் பொருத்தி நிற்கும்.  க்ஷீசும்நா நாடியுடன் சித்ரநாடி வஜ்ர நாடி என இரு துணைநாடிகளும் உள்ளன.  இதை

    சுழுமுனை சித்திரம் வழுவில் வச்சிரம்
    ஒன்றுக்கொன்று சென்றுள்ளாகி
    உரையே கோணத் தொருதலை செருகி
    இருதலை திரண்ட ஒருவேய் போலக்
    கோறை நிற்கும் வீணா தண்டின்
    ஊடே ஓடி நாடி மூன்றும்
    பிரம ரந்திரம் உருவி நிற்கும்…


என்று பிரசாத அகவலில் கூறப்பட்டு உள்ளது. 


   மேலும் இடைகலை நாடியும் பிங்கலை நாடியும் முதுகுத் தண்டின் வழியே இடது வலதாக அமைந்து உள்ளது.  ஸ்வாதிஷ்ட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்சை எனவும் ஐந்து ஆதாரங்களை இவ்விரு நாடிகளும் கத்திரிக்கோல் போன்ற வடிவில் ஒன்றை ஒன்று தொட்டுச் சென்று இடகலை இடது நாசியையும் பிங்கலை வலது நாசியையும் பற்றி உள்ளது.  இவ்விரு நாடிகளிலிருந்தும் வேறு இரண்டு இரண்டு நாடிகள் தோன்றி முறையே இடது கண்களையும் இடது செவியையும் வலது கண்ணையும் வலது செவியையும் பற்றுகிறது. இந்தத் துணை நாடிகளுக்கு காந்தா எனவும் அலம்புடை எனவும் பெயர் உள்ளது.  சுழுமுனையில் இருந்து ஒரு நாடி தோன்றி நாவின் அடியில் சென்று முடியும்.  இதற்கு சிகுவை நாடி என்று பெயர்.

    சுவாதிஷ்ட்டானத்தின் மேல் முக்கோண வடிவில் வலது இடது மூலைகளில் இரண்டு நாடிகள் புறப்பட்டு கருவாயை அதாவது பிறப்புறுப்பை சென்று அடையும்.  இந்த நாடியில் பெயர் சங்கிலி எனப்படும்.  சுழுமுனை முக்கோணத்தில் மேல் மூலையிலிருந்து குதத்தில் நாடி ஒன்று வந்து சேரும்.  இது குரு எனப்படும் இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய நாடிகளுக்கு எதிராக சரஸ்வதி லஷ்மி மேதா நாடிகள் ஓடுகிறது.  இந்த மூன்று நாடிகளும் இடகலையுடன் மிக நெருங்கிய சம்பந்தம் கொண்டு உள்ளது.  சுழுமுனையிலிருந்து கிளம்பும் சரஸ்வதி நாடி நேரடியாக மூளையைச் சென்று அடைகிறது.  இந்த சரஸ்வதி நாடிதான் மனிதனின் அறிவுத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் கட்டுப்படுத்துகிறது.  இதனால் தான் கல்விக் கடவுளாக சரஸ்வி தேவியை நமது முன்னோர்கள் உருவகப் படுத்தினார்கள்.


     பொதுவாக சரஸ்வதி நாடி சுழுமுனை நாடி மேதா நாடி ஆகியவைகள் யோகாப்பியாசத்தில் வெற்றி பெற்றவர்களுக்குத் துரிதமாகச் செயல்படும்.  மற்ற பிங்கலை, இடகலை நாடிகள் சராசரியான மனிதர்களுக்குச் செயல்படும்.  இந்த இடகலைப் பிங்கலையிலிருந்துதான்.  உத்வாச நித்வாசங்கள் அதாவது சூரிய சந்திரகலைகள் தோன்றுகின்றன.  சூரியகலை என்பது வலது புறத்தில் மூச்சு ஓடும்போதும் சந்திரகலை என்பது இடதுபுற மூச்சு ஓடும்போதும் ஏற்படுதிறது.  இதைத்தான் அர்த்தநாதீஸ்வரர் உருவத்தால் உருவகப்படுத்தப்படுகிறது.  இடது மூக்கில் மூச்சு ஓடும்போது உடல் குளிர்ச்சி அடைந்தும் அதாவது பெண் தன்மை அடைந்தும் வலது மூக்கில் மூச்சு ஓடும் போது சூடாகியும் அதாவது ஆண் தன்மை அடைந்தும் விடுகிறது.  இது ஆண், பெண் இருவருக்குமே பொதுவான மூச்சு ஓட்டம் ஆகும்.

    இந்த சூரிய சந்திரக்கலை மூச்சு ஓட்டங்களால் நமது உடம்பில் உள்ள குண்டலினி சக்தி உடலின் தட்பவெப்ப நிலையில் 98.4 டிகிரியாக ஒரே சீருடன் வைத்து உடலை இயங்கச் செய்கிறது.  இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிராணிகளின் உடல் வெப்பநிலைகள் வெவ்வேறு விதமாக அமைகிறது.  ஒவ்வொரு ஜீவன்களிலும் உறைந்து உள்ள குண்டலினி சக்தியானது அந்த அந்த உடலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைச் சீர்படுத்தி சமமாக இயங்கச் செய்கிறது.  அதாவது உயிர்களின் இயக்கத்தை குண்டலினி சக்தியே நடத்துகிறது.


    முறைப்படியான யோகாப்பியாசம் செய்து சுழுமுனை நாடியை இயங்கச் செய்யும் யோகிகளுக்கு சுவாசம் இருநாசிகளிலும் சமமாக ஓடும்.  யோகாப்பியாசத்தில் நின்று பன்னிரெண்டு ஆண்டுகள் இந்திரியத்தை வெளியேற்றாமல் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவாகளுக்கு மேதாநாடி இயங்க ஆரம்பிக்கும்.  இப்படி மேதாநாடி இயக்கத்தில் இருக்கும் நபர் முந்தைய பிறவியில் இனிவரும் பிறவி வினைப்படி அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை அறியக்கூடிய முக்கால ஞானமும் ஏற்படும். 

    இவர்களுக்கு ஜீவசக்தியானது ஓஜஸ் சக்தியாக மாறி தேஜஸ் ஆக வெளியப்படும்.  இடகலை பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லட்சுமி, மேதா ஆகிய ஆறு நாடிகளும் புருவ நடுவில் உள்ள ஆஞ்ஞா சக்கரத்தில் சந்திக்கின்றன. இந்த ஆறு நாடிகளும்தான் நமது உடலில் உள்ள 100க் கணக்கான நாடிகளையும் நரம்புகளையும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்கப்படுத்தி இயங்க வைக்கிறது.  எனவே தான் பதஞ்சலி யோக சூத்திரத்தில் புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானம் செய்யும் படி கூறப்பட்டு உள்ளது.  


   அப்படி நாம் தியான யோகத்தைப் பழகும் போது இயற்கையாகவே பிரம்மச்சரிய ஒழுக்கம் வந்தமையும் இத்தகைய பிரம்மச்சரிய நெறி உடனடியாக வரவில்லை என்றாலும் படிப்படியாக கண்டிப்பாக வந்தமையும்.  அப்படி படிப்படியாக வந்தமையும் காலகட்டத்திற்குள்ளேயே சில மந்திரப் பயிற்சிகளை நாம் எடுத்துக் கொண்டால் ஆவிகளுடன் மேலும் அமானுஷ்ய சக்தியைப் பெறலாம்.

  "யோகப் பயிற்சி என்ற ராஜபாட்டையில் இந்த அமானுஷ்ய சக்தி என்பது ஒரு சிறு துளி நிழலே ஆகும் என்பதை மனதில் வைக்கவேண்டும்."

    அமானுஷ்ய சக்திகளைப் பெற விரும்பும் ஒரு மனிதன் முதலில் மனிதவர்க்கத்தினுடைய குணநலன்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.  அப்போதுதான் அவன் தனது நிலை எந்த பாத்திரத்தில் உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டு தனது நிலையை மேம்படுத்த முயற்சி செய்யமுடியும்.  சாஸ்திரங்கள் மனித இயல்பை சத்வ, ரஜோ, தமோ என்று மூன்று விதமாகப் பிரிக்கிறது.  இம் முக்குணங்களைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.


     முக்குணங்களில் சத்வகுணம் நிர்மலமான தன்மை உடையது.  இது ஒளிமயமான வதனத்தையும் மனதையும் தரக்கூடியது.  ஞானமும் சன்மார்க்கத்தின் பால் ஈர்ப்பையும் இன்பதுன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் மனோ நிலையையும் தரக்கூடியது.  இந்த சத்வகுணம் ஞானிகளிடம் நிறைந்து இருக்கும்.  அவர்கள் நாட்டையும் காட்டையும் உறவையும் பகைமையையும் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் மண் ஒட்டையும் தங்கத்தையும் ஒரே நோக்கில் பார்க்கும் தீரம்படைத்தவர்கள் ஆவார்கள். அவர்கள் புலிக்குணம் கொண்ட மனிதர்களாலும் பூனைபோல் பதுங்கும் கோழைகளாலும் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை.  கற்புக்கரசியையும் விபச்சாரியையும் அன்னை பராசக்தியின் வடிவாகவே பார்ப்பார்கள். இது சத்வ குணமனிதர்களின் லட்சணம் ஆகும்.

    இனி ரஜோகுணத்தைப் பார்போம்.  ரஜோகுணம் ஆசை வடிவானது.  ஆவலையும் பற்றுதலையும் உயிர்களுக்குத் தரக்கூடியது.  மனிதர்களைத் தொழில் செய்யத் தூண்டுகிறது.  அந்தத் தொழிலின் வெற்றி தோல்விகளால் சிரிக்கவும் வைக்கிறது.  அழுவதற்கும் விடுகிறது.  மனைவி மக்களின் மீது பற்றுதலை ஏற்படுத்துகிறது.  அவர்களைப் பாதுகாக்க முடியாமல் பயந்து சாகாமலும் சாக வைக்கிறது.  எதிரியைக் கொல்லப் பார்க்கிறது.  கொல்ல வருபவனிடத்தில் இருந்து தப்பித்து ஓடவைக்கவும் செய்கிறது.  கடவுளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் தருகிறது.  கையிலிருக்கும் ஆசாபாசங்களைக் கைவிடவும் மறுக்கிறது.  அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையில் மனித ஜென்மங்களைப் பாடாய் படுத்துகிறது.  இதுதான் ராஜோ குணத்தின் லீலா விநோதம்.


     இனி தமோ குணத்தைப் பார்போம்.  மயக்கம், சோம்பல், தூக்கம் முதலியவற்றைத் தருவது தமோகுணம் ஆகும்.  உயிர்கள் அனைத்தையும் அறியாமையில் மயக்குவதும்.  அந்த மயக்கத்திலிருந்து மீளமுடியாமல் தவறுகளைச் செய்யத் தூண்டுவதும் முயற்சி இல்லாமலேயே வெற்றிகள் வேண்டுமென்று கனவு காணச் செய்வதும் மனிதனைச் சோம்பல் இருளிர்க்குள் தள்ளுவதும் தமோகுணத்தின் ராட்ச்சக் களியாட்டம் ஆகும்.

    இந்த மூன்று குணங்களும் தனித்தனியாக இருக்கும் மனிதர்களும் உண்டு.  அவ்வப்போது மூன்று குணங்களும் ஒரே மனிதனைத் தாக்குவதும் உண்டு.  இதில் உட்பிரிவுகளும் இருக்கிறது.  சத்வத்தில் தமோவும், தமோவில் ரஜோவும், ரஜோவில் சத்வமும் மாறிமாறி அமையும் மனிதர்களும் உண்டு.  இதில் நாம் யார் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.  அதற்கு நம்மை நாமே சுயமதிப்பீடு செய்து கொள்ளும் திறமை வேண்டும்.  நாம் கெட்ட இயல்புடைய தமோகுணம் உடையவர்களாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் முதலில் வேண்டும்.


     முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவப் புண்ணியங்களே இப்போது நமக்கு வாழ்க்கையாகவும் குணநலனாகவும் வந்து அமைந்து இருக்கிறது.  அது கேடு உடையதாக இருந்தால் அதை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.  அதற்கு நம் முயற்சி மட்டும் இருந்தால் போதாது.  கால நேரமும் ஒத்து வர வேண்டும்.  காலநேரமும் என்று நான் சொல்வது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அல்ல

   வைத்திய சாஸ்திரத்தின் அடிப்படையில் சொல்லுகிறேன்.  ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நாடியின் துடிப்பு நமக்கு அதிகமாக இருக்கும்.  உதாரணமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாத நாடி அதிகரித்து இருக்கும்.  செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பித்தநாடி அதிகரித்தும் ஞாயிறு, வியாழன் நாட்களில் கப நாடி அதிகரித்தல் இருக்கும். அதே போன்று ஒவ்வொரு நாளிலும் காலைப் பொழுதில் வாத நாடியும், நண்பகல் வேளையில் பித்த நாடியும், மாலையில் கப நாடியும் அதிகமாக வேலை செய்யும்.


    இதில் வாதநாடி வேலை செய்யும் போது ஆத்மீக எண்ணங்களும், பித்தநாடி அதிகரிக்கும் போது உடல் சோர்வும், கபநாடி மேலோங்கும் போது காம எண்ணங்களும் மனிதனுக்கு அதிகரிக்கின்றன.  ஆத்மீக எண்ணங்கள் உற்பத்தி செய்யும் நாடி நமது உடலில் ஓடும் நாளிலும் நேரத்திலும் தியானப் பயிற்சியை மேற்கொண்டோம் என்றால் கீழான தமோகுணத்தில் நாம் இருந்தாலும் அது நம் பிறவிப் பயனால் விதிப்படி அமைந்ததாக இருந்தாலும் மாறி நம்மை சத்வகுணம் என்ற இமயச்சாரலில் கொண்டு சேர்க்கும்.  மேலும் ஷாகினி, காகினி, ராகினி, லாகினி, டாகினி, ஹாகினி, யாகினி ஆகிய சப்த கன்னிகள் ஆறு ஆதாரங்களில் சப்தகுணம் மேலோங்கத் துணை செய்வார்கள்.

    கடினமான யோகப் பயிற்சிகளை இன்றைய காலகட்டத்தில் மேற்கொள்வத என்பது சற்று சிரமமான காரியம் ஆகும.  ஆனால் அன்றாடம் செய்யக் கூடிய சுலபமான மூச்சுப் பயிற்சி போன்றவைகளை மேற்கொண்டால் யோகிகளின் அளவிற்கு முன்னேற முடியாவிட்டாலும் முதல்படியையாவது தொட இயலும்.  அத்தகைய சிறிய பயிற்சி முறைகளைக் கீழே தருகிறோம்.  இதைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் ஆபத்து இல்லாமல் நிபுணத்துவம் உள்ளதாகவும் மீடியம் நிலையை அடைய இயலும்.

  முதல் கட்டமாக அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து 3.00 மணி 5 நிமிடத்திற்குள் புருவ மத்தியில் தீபம் எரிவது போன்ற பாவனா தியானத்தைப் பழக வேண்டும்.  அதன்பின் மூச்சுப் பயிற்சியோடு காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.  காயத்ரி மந்தரம் மூச்சுப் பயிற்சியுடன் ஜெபிக்கும் விதம் சற்று சிரமமானது.  சிரமத்தைப் பாராது இப்போது சொல்கிறபடி பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பஞ்சபாத்திரத்தில் உத்ரணியில் இருந்து மூன்று முறை தீர்த்தம் எடுத்து சாப்பிட்டபின் கண்களையும் இடது நாசியையும் மூடி மனதிற்குள் ஓம் ஓம் ஓம் என மூன்று முறை ஜெபிக்க வேண்டும்.  இதில் ஒவ்வொரு முறை பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசத்தை உள் இழுக்க வேண்டும்.

   உள் இழுத்த சுவாசத்தை கும்பகம் செய்து ஓம்பூ – ஓம்பூவ – ஓம்ஸ்வ – ஓம்மஹ – ஓம்ஜன – ஓம்தவ – ஓம்ஸத்யம் – தத்ஸவித்வரேன்யம் – பார்கோ தேவஸ்ய - தீமஹி - தியோன - பிரசோயாத் – ஒம் ஆபோஜ் யோதி - ரயோங் கிருதம் – ப்ரக்ம – பூர்பூவ- ஸ்வரோம் என்று மனதிற்குள் முழுமையாகச் சொல்லி முடிக்கம் வரையில் மூச்சை நிறுத்த வேண்டும்.  


   பின்பு வலது நாசியை மூடி உள்ளிருக்கும் காற்றை இடது நாசி வழியாக வெளியிட வேண்டும்.  அதன் பின்னர் வலது நாசியை மூடி முன்பு சொன்னபடி காற்றை உள் இழுத்து மேலே சொன்ன சூட்சம காயத்ரியை முழுமையாக மனதிற்குள் சொன்னவுடன் பழையபடி இடது நாசியை மூடி வலது நாசியில் காற்றை வெளியிட வேண்டும். 

  இப்படி தொடர்ச்சியாக ஒன்பது முறை செய்ய வேண்டும்.  இதுவே வேதகால சந்தியாவந்தனம் ஆகும்.  இதை செய்யும்போது கண்டிப்பாகக் கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை இருக்க வேண்டும்.  கிழக்கு நோக்கி அமர்ந்து சூரியனை வரவேற்பது போல் இந்தப் பயிற்சியை வெட்ட வெளியிலோ மொட்டை மாடியிலோ செய்வது சாலச்சிறந்தாகும்.

இதைச் செய்து முடித்தபின் 10 நிமிடம் உடலைத் தளர்த்தி இலகுவான முறையில் அமரவும்.  அதன்பின் பத்மாசனத்தில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி விழிகள் இரண்டையும் மூக்கின் நுனியைப் பார்ப்பதாக வைத்து ஆழமாக மூச்சை உள் இழுக்க வேண்டும்.  அப்படி உள் இழுக்கும் போது ஹோ என்ற ஒலியை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.  


  பின்னர் நிதானமாக முழுமையான காற்றையும் வெளியிட வேண்டும்.  நிதானமாக காற்று மூக்கு வழியாக வெளிவருமபோது ஹம் என்ற ஒலியை எழுப்ப வேண்டும்.  இப்படிச் செய்வதற்கு ஹோ ஹம் செய்தல் என்ற பெயர்.  இப்படி 27 முறை செய்ய வேண்டும்.  இதைச் செய்து முடித்த பின் மந்திர சித்தியும் அமானுஷ்ய சித்தியும் தரும் மந்திரத்தை அதாவது ஓம் யத் ரத் ஸத் வஷீட் ஸ்வாஹா என்ற பீஜத்தை 1008 முறை மனதிற்குள் உரு ஏற்ற வேண்டும்.

 இப்படி தொடர்ச்சியாக 2 மண்டலங்கள் செய்து வரவேண்டும்.  இப்படிச் செய்யும் போது மட்டும்தான் முடிறப்படியான மீடியமாக ஒருவன் உருவாக முடியும்.  இப்படி உருவான பின்னர் ஆவிகளை அழைத்துப் பேசுவதை நடைமுறைப் படுத்த வேண்டும்.  அப்போதுதான் தீய ஆவிகள் அருகில் வராமல் நாம் அழைத்த புண்ணிய ஆவிகள் மட்டுமே வந்து பேசும்.

இந்த முறைகளைப் பின்பற்றாது நேரடியாகவே ஆவிகளை அழைக்க முற்பட்டால் பல விபரீத விளைவுகளைச் சந்திக்க நேடும்.  எனக்குத் தெரிந்த 70 வயது முதியவர் ஒருவர் எந்தவித அமானுஷ்ய தகுதிகளைப் பெறாமல் நேரடியாக ஆவிகளை அவர் மூலமாக வந்து பேசின.  ஒரு சில நாட்களில் அவர் உடலில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்பட்டன.  புத்தி தடுமாற்றம், கைகள் நடுங்குதல்  ஆகியவைகள் ஏற்பட்டு முழுமையான நோயாளியாகவே ஆகிவிட்டார்.  அவர் அழைத்துப் பேசிய ஆவிகளில் ஒன்று அவர் உடம்பிலேயே தங்கி விட்டதானால் அத்தகைய விபரீத நிலை ஏற்பட்டது.  பின்னர் வெகு சிரமப்பட்டு அவரிடமிருந்த ஆவியை வெளியேற்ற வேண்டியதாயிற்று.  எனவே இத்தகைய பயிற்சி இல்லாது ஆவிகளை அழைக்க முயற்சிக்கக் கூடாது.


  ஆவிகளுடன் பேசும் உடல் தகுதியை மேலே குறிப்பிட்டபடி பெற்று கொள்வது அவசியமாகும்.  இன்று வரை உலக ஆவி ஆராய்ச்சியாளர்கள் ஒய்ஜா போர்டு முறை ஆட்டோரைட்டிங் மயக்க நிலை  பேச்சு ஆகிய மூன்று வகைகளையே பொருவாரியாக கடைபிடிக்கிறார்கள்.  இதில் ஒய்ஜா போர்டு முறை என்பது மிகச் சுலபமான ஒரு வழியாகும்.  ஆனாலும் இதன் மூலம் தெளிவான விரிவான பதிலைப் பெற முடியாது.  மேலும் இதில் பலதரப்பட்ட ஆவிகள் ஒரே நேரத்தில் உள்ளுக்குள் வந்து குழப்பங்களை விளைவிப்பது உண்டு.  பயிற்சி பெற்ற மீடியாக இருந்தால் அவரை அந்த ஆவிகள் எதுவும் செய்வது இல்லை.  ஆனால் உடன் இருக்கும் மற்றவர்களை அந்த ஆவிகள் பாதிப்படையைச் செய்வது வாடிக்கையான விஷயமாகும்.

 ஆட்டோ ரைட்டிங் எனும் தானாக எழுதும் முறை மிகவும் பாதுகாப்பானது.  இந்த ஆட்டோரைட்டிங் முறையில் ஆவிகளை  அழைத்துப் பேசும் மீடியத்திற்குப் பயிற்சி கொடுத்த குரு உபதேசித்த மூல மந்திரத்தை குறைந்த பட்சம் 27 முறை உச்சாடனம் செய்து ஆவிகளை அழைப்பது சாலச் சிறந்தது ஆகும். இதனால் மாற்று ஆவிகள் உள்ளே வந்தாலும் அல்லது தீய ஆவிகளுடன் பேச நேரிட்டாலும் எந்தவிதமான அபாயமும் யாருக்கும் ஏற்படுவது இல்லை.  எனவே ஆரம்பகால பயிற்சியாளர்கள் ஆட்டோரைட்டிங் முறையைப் பின்பற்றுவது மிகச் சிறப்பானதாக இருக்கும்.


   மூன்றாவதாக உள்ள மயக்கநிலை எனும் பேச்சு பக்குவப்பட்ட அனுபவசாலிகளான மீடியம்கள் மட்டும் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்.  பயிற்சியும் அனுபவமும் குறைந்தவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால் எவ்வளவுதான் மனோதிடமும் மந்திரபலமும் இருந்தாலும் உடல் ரீதியான பக்க விளைவுகளைத் தவிர்க்க இயலாது.  காரணம் மயக்கநிலையில் பேசும் ஆவிகள் மீடியத்தின் உடலிலிருந்து தேவையான சத்துகளை உறிஞ்சிவிடும். இதனால் நாளடைவில் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  மயக்கநிலை பேச்சுக்கு வர ஆசைப்படும் மீடியம்கள் தக்க குருவின் மூலம் முறைப்படியான தீட்சை பெற்று செய்வது பொருத்தமாக இருக்கும்.

   இத்தகைய மயக்க நிலைப் பேச்சில் நன்கு தேர்ச்சி அடைந்த மீடியம்கள் யாரை வேண்டுமானாலும் அவர் எந்த நிலையிலிருந்தாலும் அவருக்குத் தனது சக்தியில் ஒரு பகுதியைக் கொடுத்து மற்றவர்களின் உடம்பில் ஆவிகளை வரவழைத்து பேச வைக்கலாம்.  அப்படிப் பேச வைக்கும்போது சர்வ நிச்சயமாக நல்ல ஆவிகள் என்று பலமுறை பரிசோதனை செய்யப்பட்ட ஆவிகளை மட்டுமே மற்றவர்கள் உடலில் வரச்செய்ய வேண்டும்.  தாறுமாறான ஆவிகளை அந்நிய மனிதர்களின் உடலில் வரச்செய்தால் அவாகளுக்கு அது பெரும் சோதனையாகவும் மீடியத்திற்கு பெரும் பாவாமாகவும் முடிந்து விடக்கூடும். ------> இனி உஜிலாதேவி பதிவுகளை செல்பேசியிலும் வாசிக்கலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது Google Play‎ Store -க்கு சென்று Ujiladevi என்று டைப் செய்து நமது Apps உங்கள் தொலைபேசியில் Download  செய்து கொள்ளுங்கள் அல்லது  

நேரடியாக Download செய்ய கிழே கிளிக் செய்யவும் -----------------------------------------
+ comments + 70 comments

//யோகப் பயிற்சி என்ற ராஜபாட்டையில் இந்த அமானுஷ்ய சக்தி என்பது ஒரு சிறு துளி நிழலே ஆகும் என்பதை மனதில் வைக்கவேண்டும்.//

இதை நீங்க மனதில் வைக்காம பதிவு போட்டுட்டாப்ல இருக்கு

ச்சொம்மா ஒரு உரிமையில கிண்டல் பண்ணிட்டன். இதை பெரிய எழுத்துல போட்டுருங்க.

நம்ம சனம் எத்தனை உசந்த விஷயத்துல கூட நீசத்துக்குத்தான் முதலிடம் கொடுத்து மைண்ட்ல வாங்கிக்குவாய்ங்க

//மிகவும் சக்தி வாய்ந்த கம்பியூட்டரின் திறனை விட மனித மூளையின் திறன் அபாரமானது. //

அருமையான கருத்துக்கள் ஆவியின் ஆவியை ஆணி வேரா அக்கு வேரா பிரிச்சு மேஞ்சிட்டியே.

எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை நட்புக்காக ஓட்டு போடறேன்

வ வே சந்தானம்
11:06

மிக நல்ல பதிவு

நிதர்சனன்
11:13

பயனுள்ள பதிவு. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா... Wish You Happy New Year நன்றி

பூஜிதா
14:13

படிதேன் மனித உடலில் இதனை அம்ஸங்களா வியந்து போனேன்

நன்றி

Anonymous
16:08

ஆவிகளை அழைத்து நாட்டின் பிரச்சனைகளை ஏன் தீர்க்கக்கூடாது?
குறைந்தபட்சம் நாட்டின் நன்மைகளைக் கருதி உளவாளிகளாக ஏன் பயன்படுத்தக்கூடாது? அதற்கு உங்களைப்போன்றவர்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது? இந்த விமர்சனத்தை ஏன் நீங்கள் மறைக்காமல் பிரசுரிக்கக்கூடாது? எனது பெயர் பாபு.

நம்புவர்களைக் கொச்சைப்படுத்த விருப்பமில்லை.
ஆனால் இவைகள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்.நன்றி !

Jamuna Rani Tanimalai
19:55

VERI NICE

எமது நின்மதிக்காக ஒருவரை கொல்லணும்... முடியுமா.. அந்த நம்பிக்கையில் வாக்குப் போடுகிறேன்...

maniajith007
22:55

ஆவிகளுடன் பேசுவது என்பது இப்போது நாம் இருக்கும் நிலயில் அவசியமான விஷயம் என தோன்றவில்லை அற்புதமான விஷயங்கள் உடய கட்டுரை மனதாயும் உடலயும் ஆவிகளை அலைத்து பேசுவது சித்துக்களை செய்வது போன்ற விஷயங்களுக்கு உபயோக படுத்தாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் உபயோகமான வழியில் பயன்படுத்தலாம் இந்த கட்டுரைக்கும் அகோரி (அநேகமாக )சாமியார்களுக்கும் என்ன தொடர்பு அவர்களின் படம் எதற்க்கு இரண்டாவது தகுந்த குரு மூலமின்றி மூச்சு பயிற்ச்சி ஆதவாது மூச்சை இழுத்து உள்ளடக்கி வெளி விடுவது (2:8:4)என்ற அளவில் செய்வது சமயத்தில் ஆபத்தில் முடியும் குருஜி நீங்கள் இளைஞர்களை நேர்வழிபடுத்தும் கட்டுரைகளை தொடருங்கள் மனம் பற்றி எழுதலாமே இது போன்ற கட்டுரைகள் நமது மாதத்தின் மீது ஒரு விதமான தவறான பார்வை பார்க்க வைக்காதா

Anonymous
23:05

அவைகளோடு பேச எனக்கும் ஆசையா இருக்கு ........பயிற்சி பெறாமல் எப்படி பெசுவதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்
itssuresh1989@gmail.com

எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்

அவைகளோடு பேச எனக்கும் ஆசையா இருக்கு ........பயிற்சி பெறாமல் எப்படி பெசுவதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்
manikandanonly@gmail.com

அவைகளோடு பேச எனக்கும் ஆசையா இருக்கு ........பயிற்சி பெறாமல் எப்படி பெசுவதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்
manikandanonly@gmail.com

@சித்தூர்.எஸ்.முருகேசன்

இதற்கு முன் ஒரு கட்டுரையில் அமானுஷ்ய சக்திகள் பத்து முதல் பதினிந்து நிமடங்கள் மட்டும்தான் ஒரு உடலில் தங்க முடியுமென்று நமது வேதங்கள் கூறுவதாக குருஜி கூறினார்கள். அனால் இப்பொழுது ஆவிகள் ஒருவரின் உடலில் அப்படியே தங்கிவிட்டதாக கூறுகிறார்கள். ஏன் எந்த முரண்பாடு?

வேதங்களில் உன்மையா? பொய்யா ?

அல்லது குருஜி சொன்னது உன்மையா ? பொய்யா?

Yes Vinoth...I m also having the same question in mind while studying the 70 years old grandpa story?

ஆவிகளுடன் பேசுவது எப்படி? எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது.. பலமுறை முயற்சித்துவிடேன்.. முடியவில்லை..
பயிற்சி பெறாமல் எப்படி பேசுவது??

reejo.ece@gmail.com

ஆவிகளுடன் பேசுவது எப்படி? எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது..

நான் என் தாத்தா, பாட்டி மற்றும் எனது மாமாவின் ஆவியுடன் பேச முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. யாரேனும் எனக்கு உதவ முடியுமா???
...தயவுசெய்து...

நான் என் தாத்தா, பாட்டி மற்றும் எனது மாமாவின் ஆவியுடன் பேச முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. யாரேனும் எனக்கு உதவ முடியுமா???
...தயவுசெய்து...
நான் ஒரு "நாத்திகவாதி"

Anonymous
13:34

don't ask question. first see ur self.

16:50

I have to speak with my anna Madhu. Please help me sir.

Regards,
Vasu

20:10

யாருக்காவது ஆவியுடன் பேசிய அனுபவம் அல்லது அதற்கான வழிமுறைகள் தெரிந்திருப்ருப்பின் கீழே தெரியப்படுத்துங்கள்.

I HAVE TO SPEAK WITH MY DAD.HELP ME

i like it..
sayanthan from srilanka

hi im suresh kumar i tried to speak yja boared methed smoe aavi are come i realised but thay speak not earing me s i improve my skills to speak aavi but i donot mothed to improve to speak ple say way to speak

Anonymous
22:55

Nallathu nadakkum

na anga anna kuda paesanum. please help sir.i love my brother.

God is great

vinoth
11:26

Very nice

aaviyudan pesa avala ka irukirathu please ..naraiya murai try panni athuten please yarachum sollunga.. irdtrust@gmail.com.aavikalidam yarukavathu pesa therinthal theriya patuthungal ..08867779909

அறுைம

Arumai....

enn peyar ki.mu.elanchezhiyan , naan add agency yum film intersttiluum irunthu varukirean , tharpothu naan pey patri oru film edukka muyarchithu varukirean , aadhalal ennakku ungaludaiya aalosanai thevai - 9597481407

பயிற்சி இல்லாமல் ஆவிகளுடன் பேச விருப்பம் தெரிவித்து அதிக கருத்துக்கள் வந்துள்ளன... உத்தரமாக பசிக்கிறது என்றால் வெறும் பாத்திரத்தில் கை விட்டால் உணவு வந்து விடாது... அதற்கு பல படி நிலைகள் உள்ளது போலவே அனைத்து விடயத்திற்கும் பயிற்சியும், முயற்சியும் அவசியம்... முறையற்ற ஆர்வங்கள் நமக்கே இடையூறாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.. எனவே ஆர்வம் கலந்த முயற்சி கட்டாயம் ஆவியுடன் பேச வழி வகுக்கும்.. இது எனது கருத்து... (ஆனொன்ய்மௌச்-எனது பெயர் பாபு) என குறிப்பிட்டு வந்துள்ள ஒருவரது கருத்து,யோசனை மிக அருமையானது.. அனால் அதற்கு அவரே முயற்சியில் ஈடு பட வேண்டுமே ஒழிய வழி காட்டி குடுத்து உதவும் இவர்களையே முன் வந்து செய்ய சொல்லுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.. இது போன்று துணிந்து கருத்துக்களை வெளியிடுவோரும் கருத்துக்களை வெளியடததற்கு கரணம் பாபு வை போன்று வினவேழுப்பும் நபர்களும் ஒரு கரணம் என்பது என் கருத்து.. அனல் பாபுவின் யோசனை மிக அற்புதமானது.. பாபுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாபு தாங்களே முயற்சியில் ஈடு படலாம்.. பொது நலன், நாட்டு பற்று எனக்கும் உண்டு.. உங்களுக்கு நானும் துணையாக உதவுகிறேன்.... என் பெயர் வைஷ்ணவி.. 87540-60165

பயிற்சி இல்லாமல் ஆவிகளுடன் பேச விருப்பம் தெரிவித்து அதிக கருத்துக்கள் வந்துள்ளன... உத்தரமாக பசிக்கிறது என்றால் வெறும் பாத்திரத்தில் கை விட்டால் உணவு வந்து விடாது... அதற்கு பல படி நிலைகள் உள்ளது போலவே அனைத்து விடயத்திற்கும் பயிற்சியும், முயற்சியும் அவசியம்... முறையற்ற ஆர்வங்கள் நமக்கே இடையூறாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.. எனவே ஆர்வம் கலந்த முயற்சி கட்டாயம் ஆவியுடன் பேச வழி வகுக்கும்.. இது எனது கருத்து... (ஆனொன்ய்மௌச்-எனது பெயர் பாபு) என குறிப்பிட்டு வந்துள்ள ஒருவரது கருத்து,யோசனை மிக அருமையானது.. அனால் அதற்கு அவரே முயற்சியில் ஈடு பட வேண்டுமே ஒழிய வழி காட்டி குடுத்து உதவும் இவர்களையே முன் வந்து செய்ய சொல்லுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.. இது போன்று துணிந்து கருத்துக்களை வெளியிடுவோரும் கருத்துக்களை வெளியடததற்கு கரணம் பாபு வை போன்று வினவேழுப்பும் நபர்களும் ஒரு கரணம் என்பது என் கருத்து.. அனல் பாபுவின் யோசனை மிக அற்புதமானது.. பாபுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாபு தாங்களே முயற்சியில் ஈடு படலாம்.. பொது நலன், நாட்டு பற்று எனக்கும் உண்டு.. உங்களுக்கு நானும் துணையாக உதவுகிறேன்.... என் பெயர் வைஷ்ணவி.. 87540-60165

நான் ஆவிகள் உடான் பேச வேண்டும் என்ன செய்வது

நான் ஆவிகள் உடன் பேசாவேண்டும் என்ன செய்வது

அருமையான விளக்கம். ஐயா, நான் மலேசியாவைச் சேர்ந்தவன். நான் இந்த பயிற்சியை பெற விரும்புகிறேன். என்னால் கால்களை மடக்கி தரையில் அமர இயலாது. ஆகவே உங்களின் ஆலோசனை?

நான் மலேசியாவைச் சார்ந்தவன். நான் உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன். என்னால் கால்களை மடக்கி தரையில் அமர இயலாது. இப்படி இருக்க எப்படி இப்பயிற்சியில் ஈடுபட முடியும்? தயவு செய்து விளக்கவும். நன்றி.

அருமையான விளக்கம். ஐயா, நான் மலேசியாவைச் சேர்ந்தவன். நான் இந்த பயிற்சியை பெற விரும்புகிறேன். என்னால் கால்களை மடக்கி தரையில் அமர இயலாது. ஆகவே உங்களின் ஆலோசனை?

என்னால் ஆவிகளை பல வேளைகளில் உணர்ந்திருக்கிறேன், எனதருகில் இருந்த விலங்குகளின் திடீர் மிரட்சியை பார்த்திருக்கிறேன், ஆனால் தெளிவாக பார்க்கவோ, பேசவோ இயலவில்லை, அதே வேளையில் இது ஒரு மன வியாதியோ என்றோ எண்ணமும் உள்ளது, விளக்கம் தரலாமா ?

Anonymous
10:12

ashwin இது மன வியாதி கிடையவே கிடையாது... மிருகங்களின் மிரட்சி நிஜமானதே.. நாய், பசு, யானை கண்களுக்கு தெளிவாக புலப்படும்... அவைகளாகவே நினைத்தால் ஒழிய நாம் நினைக்கும் பொது பேசவோ பார்கவோ முடியாது..... அவை நம் அருகில் நின்றாலும் புலப்படாது.... முயற்சிக்க வேண்டாம்.. முறையற்ற பயிற்சியற்ற ஆர்வங்கள் ஆபத்தை விளைவிக்க அதிக வாய்ப்பு உள்ளது அஷ்வின்...

sumathi
17:58

viyappana vizhayangal aana eanaku nambikai illa very intrust

Ok u can speak. Go arasampattu in tamilnatu

m irukku anakku

Posalam

M irukku

Pesamutium. Enakku anupavam irukku

M mudium.

M neenka pesalam Nan pesirukken

Pesalam

R.Stalin
22:18

கண்டிப்பாக பேச முடியும். நான் 3 வருடகளாக தொடா்பில் உள்ளேன். ஆதி சிவன் மீது நம்பிக்கை வைத்து தொடா்ந்து முயற்சி செய்யுங்கள்.
சிவமயம்...

quija board is best one

naanum telepathy moolamaaga enadhu valikaatti aaviyidam paesa muyarchi seigiraen,sila naerangalil nandraaga purigiradhu sila naerangalail manakkulappamaai varugiradhu ayyaa,naan thangalidam marudheekshai peralaamaa?

குருவுக்கு வணக்கங்கள் ,அய்யா நான் எனது வழிகாட்டி அய்யாவிடம் டெலிபதி முறையில் பேச முயற்சி செய்து வருகிறேன் ,அவர் மூலமாக எனக்கு தியானம் கைகூடியது ,இப்பொழுது பரகாயபயணம் கூட சித்ஹியானது .அனால் அவர் டெலிபதியில் பேசுவது சரியாக புரியவில்லை ,நான் தங்களிடம் மறுதீகஷை பெறலாமா .மீண்டும் அதே வழிகாட்டி ஆவிதான் எனக்கு வழிகாட்டியை வர விரும்புகிறேன் அய்யா. நன்றிகள் .

Vetil amanushyam iruppathai arinthukolla mudiyuma eppadi

Amanushyathal noigal varuma

Anonymous
14:26

nice but ghost very complicated analysis them......

I will contact u sir...

@TAMIL NEWS
செத்துப்போ....ஆவிஉலகில் நிறைய ஆவிகளோடு பேசலாம்.

Semma

sivan
23:57

I can do that. No sound surround. Photo of death soul. See eyes of the photo and call the name whom you to speak. In fue minute sound of shaped ear ringing will heard.control eye closed stage you can see the soul. Should not be emotion at that time. Have some water nearer it will help to com the soul. They talk with you. After finishing you should say go to your place. Best of luck

I want to talk with my husband pls help

மோகன்
06:46

இதெல்லாம் உண்மையா???


Next Post Next Post Home
 
Back to Top