( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தண்ணீரின் மேல் நடக்கலாம்


   வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்

   மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு.  இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.  இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.  ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார்.  இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர்.  அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா?  முடியும்.  ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.  காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள்.  இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.

  நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள்.  அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள்.  குருவி பறக்கலாம்.  முட்டை பறக்க முடியுமா?  முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும். 
   வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும்.  பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும்.  சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள்.  சிலர் பயப்படவும் செய்வார்கள்

  இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன.  சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது.  இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல.  நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.

  

உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.  இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

   நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள்.  அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும்.  இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும்.  காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும். 

  மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம்.  கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.  எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,


  நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா?  அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை.  ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும்.  வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும்.  பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

   இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன.  இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை.  குறுக்கு புத்தி இருந்தால் போதும்.  இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும்.  காற்றில் மிதக்க முடியும்.  கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும்.  ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள். 


  நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

  மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.

மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை.  ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம்.  சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்+ comments + 29 comments

Anonymous
04:17

super

Lawrence, Toronto
07:54

மிக நல்ல கட்டுரை, அய்யா.
நீங்கள்தான் உண்மையான பகுத்தறிவாதி.

arumaiyana thagavalgal

1. காசுக்காக இந்தியாவில் மதமற்றம் நிறைய நடக்குது அதை பத்தி உங்கள் கருத்தை சொல்லுங்களோன்.
2. அதை தடுக்க என்ன வழி

1. காசுக்காக இந்தியாவில் மதமற்றம் நிறைய நடக்குது அதை பத்தி உங்கள் கருத்தை சொல்லுங்களோன்.
2. அதை தடுக்க என்ன வழி

Anonymous
13:58

Very good article Sir

Fantastic...

it is a good artical

Good article

Good article ok ayyaa, athukku nalla padam nerraya irukkum pothu penmanigalai mayir koocherriyaaa ippadi gilpaansi padangal poduvathai thavirpathu Nandru.

Anonymous
18:13

very nice article guruji

shareef

Anonymous
23:07

அருமையான கட்டுரை. பல புரியாத புதிர்களுக்கு நீங்கள் தரும் விளக்கங்கள் தகுந்த பதில் அளிக்கின்றன. வளரட்டும் உங்கள் சிந்தனை.... தொடரட்டும் உங்கள் பொது சேவை. மிக்க நன்றி குருஜி

அருமையான பதிவு .நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

குருஜி ,

திமிர் பாசனம் என்பதன் ஆங்கில பெயர் என்ன?

I LIKE 2 TALK 2 U PLS MAY I KNOW U R MOB NO PLS

guruji excellent article

THIS TRUE

hAI SIR UNGA PADAIPPUGAL SUPER NALLA KADHAI SOLLURINGA.....VAZHGA VALAAMAGA.....MAHESNANTHAN.C

sir manthiram kaal mathi mukkaal nu sollunanga. nenga nalla kadhai sollureenga ethayavathu sollama ullatha sollunga......mahesnanthan.c

17.03.1965 1149am birth export business nan pannalama

Anonymous
11:03

guruje very useful information for all so superb.....

Anonymous
02:57

puththaga virpanaikkaga poi pesum palarai nan santhiththu undu neengalum athanul oruvaro.
atharvana vetham patri neengal arithullavai patri nan ariya vilaigiren. eenenil nan vethangalai mathippathillai nanbare. vethangal uruvakkap pattathu 6000 aandukku mun india vukku kaibar kanavai valiyaga vantha aariyargal endra valipokkargal.
avargalin vethangalai nan nambuvtharkilli naan aarayaamal solla villai nanbare.
atharvana vetham patri neengal arinthullavatrai pagirnthaal naan ungaluuk naan arinthavatrai koorugiren ippadikku ungal nanban...

- sivadeepblue@gmail.com

enaku ethir kalam epadi irukum

really a nice posting. But will you please post many things like this gurujee

hai sir afpadi ullier
dayalan
Kuwait

sir vannakkam
dayalan
Kuwait

k.dhanalaxmi
22:17

very nice we r like information

Anonymous
21:23

நன்றி

நன்றி ஐயயா


Next Post Next Post Home
 
Back to Top