( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?


     ந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது.   அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.
 
 
 பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்

  முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில் புழுதிக்காற்றில் முகத்தை மூடிக்கொண்டு பாலைவன வாசிகளாட்டம் நடக்கும் அவஸ்தை குறையும்

  அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்

  மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்சி லாரி வாடகை கூடிப்போச்சி அதனால பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூட்டவேண்டியதாப் போச்சின்னு வியாபாரிங்க புரூடா விட முடியாது

   இப்படி எத்தனையோ சவுரியம் இருக்குதுதான் நினைச்சி பார்த்தாலே ஜிவ்வுன்னு சிலிர்ப்பா தோனுதுதான்

  ஆனா கார் ஓட்ட தண்ணீக்கு எங்கே போறது?

  மழை நல்லா கொட்டினாலும் ஏரிக் குளமெல்லாம் பிளாட் போடப்பட்டதால காணாம போச்சி

  வாய்க்கால் எல்லாவற்றையும் ஆக்கிரமிச்சி வீடு கட்டியாச்சி

  குட்டையக் கூட விட்டு வைக்காம வேட்டையாடியாச்சி

   ஆற்றில மணலை எல்லாம் வாரி காய வைச்சாச்சி

  உண்மையான நிலமை குடிக்க குளிக்க கொப்பளிக்க குத்தவச்சா கழுவக்கூட தண்ணி இல்லை

  இந்த நிலையில கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?
 
 
 
 
+ comments + 10 comments

nice post

http://tcelebrities.blogspot.com/

tthendral
14:19

கொளத்தில ஆத்தில கெடக்கிற தண்ணிய வச்சு இந்த கார ஓட்டமுடியாதாமில்லே! அதனால தண்ணி பங்க்கில லிட்டர் அம்பது ருவா கொடுத்து புல் பண்ண வேண்டியிருக்கும் சாமி

சீப் ரேட்ல நானோ கார்மட்டும்தான் தருவாங்க. கூடவே தன்னீயையுமா
தருவாங்க?:)

18:36

ஐயா அது தான் கடலில் இருக்கே... கடல் தண்ணி உபயோகபடுத்தலாம்

தண்ணீரில் ஒடுர காருனா?, பெட்ரொலுக்கு பதில் தண்ணியை ஊத்தி ஒட்டுகிற காரா?. இல்லை ஆறு, குளம், கடல், கூவம் போன்ற நீர் நிலைகளின் மேல் ஒட்டுகிற காரா?...

ரொம்ப யோசிக்கணும் குருஜி,

ரோஸ்
19:24

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

@Lakshmi

அதான.. தண்ணியையுமா தருவாங்க ?

16:19

இப்பவே குடிநீர் கேன் ரூ.20,30 கொடுத்து வாங்குறோம். இதுவும் வந்துட்டா 200, 300 ஆகிடும்.

Anonymous
16:56

இப்படி ஒரு கார் வந்துட்டா, அப்புற குடிதண்ணீர் குழாயெல்லாம் கவுன்சிலர்கள் கையில் தான் இருக்கும். தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்திற்கு ஒரு ட்ரம் குடிநீர் இலவசமாக கொடுப்போம் என்று அரசியல்வாதிகள் அறிவிப்பார்கள். - ஸ்டெல்லா ஜான்சன்

Anonymous
17:06

இப்படி ஒரு கார் வந்துட்டா, அப்புற குடிதண்ணீர் குழாயெல்லாம் கவுன்சிலர்கள் கையில் தான் இருக்கும். தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்திற்கு ஒரு ட்ரம் குடிநீர் இலவசமாக கொடுப்போம் என்று அரசியல்வாதிகள் அறிவிப்பார்கள். - ஸ்டெல்லா ஜான்சன்


Next Post Next Post Home
 
Back to Top