( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!


  ந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?

  சுவாமிநாதன் என்ன விவரம் தெரியாதவராக இருக்கிறார் விவசாயத்தைப்பற்றி கவலைப்படும் நேரமா இது அடுக்கடுக்கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று முடிவெடுக்க வேண்டும்

  தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரிடம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்

   அதை விட்டுவிட்டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?

   அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும் தலைவர்களுக்குத் தானியம் கப்பலேரியாவது அடுப்பங்கரைக்கு வந்து விடும் அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?


+ comments + 4 comments

அதானே. எதஎதுக்கு எப்பப்போ கவலைப்படுவது என்கிர விவஸ்தையே இல்லாமப்போச்சே.

கவிக்காதலன்
12:49

உண்மை...

ஆனால் சுவாமிநாதன் கவலைபடுவதிலும் நியாயம் இல்லை. பசுமை புரட்சி காலத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்த வைத்து மண்ணை பாழாக்கிவிட்டார். அது விளைச்சல் குறைய காரணம்.

சுவாமிநாதன் அவர்களைக் குறை கூற முடியாது. அப்போது இருந்த நிலை உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செயல் படுத்த வைத்தது. விளைச்சல் குறையவில்லை; பயிர் செய்யும் பரப்பு அதே அளவோ,அல்லது குறைந்தோ இருந்தாலும் அளவு அதிகமாகவே ஆகயுள்ளது எனத் தோன்றுகிறது.
மானியம் என்று வந்து விட்டதால், அளவுக்கு அதிகமாக போடுவது, பொட்டாசியம் அல்லது பாஸ்பரம் வேண்டிய நிலையிலும் யூரியா போடுவது என்று குளறுபடிகள் ஒரு காரணம். நீர்ப்பாசனம் பெரிய அளவில் மேன்மை அடைந்ததாக தெரியவில்லை.: நர்மதா குறுக்கே அணையும், அதன் காரணமாக மத்திய பிரதேஷ், மற்றும் குஜராத்துக்கு நீர் பாசனம் தவிர. அரசுகள் தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை.
உலகமயமாக்கல் துவங்கிய பின், உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்றெல்லாம் பேசப்படுவது கூட இல்லை. அது பழைய பாஷன்.
மாநில அளவிலும் நீர் நிலைகளை பராமரித்தல் என்பன அறுபத்தேழுக்குப் பின் சரி இல்லை என என் நண்பன் கூறுகிறான். எனக்கு இது குறித்த விவரம் தெரியவில்லை.


Next Post Next Post Home
 
Back to Top