Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஊர் கூடி தேர் இழுப்போம்


  ன்பார்ந்த வாசகர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் என் தனிப்பட்ட வாழ்த்துதல்கள்!

  இதுவரை நமது உஜிலாதேவி தளத்தில் பல்வேறுப்பட்ட பதிவுகளை படித்திருப்பீர்கள் பலர் பயனுள்ளதாக இருக்கிறது என்று பாராட்டினாலும் சிலர் அபிப்ராய பேதப்பட்டதும் உண்டு

   25 வருட பொது வாழ்வில் பாராட்டுதலும் பழிசொல்லும் பழகிப் போய்விட்டதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை .

   இணைய தளத்தில் எழுத ஆரம்பித்த நாள் தொடங்கி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பல அன்பர்கள் உங்கள் வாழ்கை குறிப்பை படித்த போது தற்போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் உங்கள் இருப்பிடம் எப்படி இருக்கும்? அதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறோம் என்றும்

 அரகண்டநல்லூர் சிவன் கோவில்

   பல பதிவுகளில் வாசகர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பல நேரங்களில் பதிலே சொல்வதில்லை அதற்கு என்ன காரணம்? என்றும் கேட்கிறார்கள்

  அவர்களுக்கு தனித் தனியாக நான் பதில் சொல்லி விட்டாலும் கேட்க விரும்பி கேட்காமல் இருக்கும் மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எழுத தலைப்படுகிறேன்

   நான் 1980 முதல் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுருக்கு அறுகிலுள்ள அரகண்டநல்லூரில் வசிக்கிறேன்

   நான் வாழும் இடத்திற்கு பக்கத்தில் மாமன்னன் இராஜராஜ சோழன் மற்றும் மலையமான் திருமுடிக்காரியால் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான சிவன் கோயில் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய பாறையில் அமைந்துள்ளது 

 ஸ்ரீ நாராயண மிஷன் முகப்பு விநாயகர்

    இந்த ஊரை நகரம் என்றும் சொல்லி விட முடியாது கிராமம் என்றும் தள்ளிவிட முடியாது விவசாயம் தான் முக்கியமான தொழில் என்பதனால் பல ரைஸ்மில்கள் பெட்டிக்கடை மாதிரி அணிவகுப்பாய் இருக்கிறது

   இந்த ஊரை பொருத்தமட்டும் ஆடைகளையும் வீட்டையும் வைத்து மனிதனை எடை போட முடியாது 4 பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் கூட சைக்கிளில்தான் போவார்.

  அரகண்டநல்லூரிலிருந்து சரியாக 6 கி.மீ தொலைவில் காடகனூரில் நமது ஸ்ரீ நாராயணா மிஷன் உள்ளது இந்த இடத்தின் மொதப்பரப்பளவு 2 ஏக்கர் இதில் கட்டிடத்தின் பரப்பு 7 செண்ட் போக மீதமுள்ள பகுதி அனைத்தும் மா தென்னை வாழை பலா மரங்களே உள்ளது

  நீங்கள் உள்ளே நுழைந்த உடன் வாசலில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம் நீங்கள் வைஷ்ணவராயிற்றே சைவக்கடவுளை எப்படி வைக்கலாம் என்று என்னிடம் யாரும் கேட்பதில்லை

 குருஜியின் தியான குடில்

    காரணம் பெருமாளுக்கு கொடுக்கின்ற முக்கியத்தை சிவனுக்கும் கொடுப்பவன் நான் என்பது ஊருக்கே தெரியும்

  பிள்ளையாரை தரிசித்து நேரே மேற்கே பார்த்தால் வளக்கமாக மாலை நேரத்தில் நான் தியானம் செய்யும் குடில் தெரியும் இதன் முன்னால் உள்ள புல்வெளியில் மணி கணக்காக உட்கார்ந்திருப்பது எனக்கு பிடித்தமான செயல்

  இந்த இடத்தில் காக்கை கிளி மைனா எப்படி சாதாரணமாய் வந்து போகுமோ அப்படியே பாம்புகளும் வருகை தரும் ஆனால் இது வரை ஒரு பூனைக்குட்டிக் கூட பாம்புகளால் கடிக்கப்பட்டதில்லை 

 ஸ்ரீ நாராயண மிஷன் பிரதான கட்டிடம்
   பிரதான கட்டிடத்தில் முதல் இரண்டு அறைகளில் நூலகம் மற்றும் மருந்து தயாரிப்பு இடம் உள்ளது மூன்றாவது அறையில் இலவச சித்த மருத்துவச் சாலை இயங்குகின்றது இம்மருத்துவப் பிரிவை எனது தலைமைச் சீடர் டாக்டர் வி.வி. சந்தானம் கவனித்துக் கொள்கிறார்

  அடுத்ததாக பெரிய பிராத்தனைக் கூடம் உள்ளது இதில்முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

  பூஜைகள் மட்டுமின்றி பல கூட்டங்களும் இங்குதான் நடக்கும் இதற்கு பின்புறம் நான் விருந்தினர்களை சந்திக்கும் அறை இருக்கிறது இங்குதான் நான் படித்தல் எழுதுதல் எல்லாவற்றையும் வைத்துக் கொள்வது 

மருத்துவ கூடத்தில் தலைமைச் சீடர் டாக்டர் வி.வி. சந்தானம்

   என் வேலை அதிகாலையிலேயே துவங்கி விடும்.விவசாய வேலைகளை கண்காணித்தபின் பூஜையில் உட்காருவேன் காலை 11 மணிக்குப் பிறகுதான் உணவு முடித்து காடகனூர் செல்வேன்

  வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் விருந்தினரை 12 மணியிலிருந்து 2 மணிவரை பார்த்து பேசுவேன் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு நமது விவேகானந்தா சேவா சமிதி மூலமாக கிராமங்களில் நடத்தப்பட்டுவரும் கல்வி தானப்பள்ளிகளை பார்வையிட கிளம்பி விடுவேன்

  எப்படியும் தினசரி 2 பள்ளிகளை பார்த்து குழந்தைகளிடம் பேசா விட்டால் மனசு சங்கடப்படும் ஒவ்வொறு பள்ளிக்கும் குண்டும் குழியுமான சாலையில் காரில் போனால் கூட இடுப்பெலும்பு கழன்று விடும் 

பிராத்தனை கூடம்

   மாலை 6 மணிக்குத் திரும்பி வந்து எழுத உட்கார்ந்தால் 10 மணியாகி விடும் பிறகு எப்படி வாசகர்களின் கேள்விக்கு பதில் தினம் தினம் எழுத? என்றாவது பொழுது கிடைத்தால் உண்டு

   இன்னொறு முக்கியமான விஷயம் நமது பதிவில் ஒரு சின்ன தொழில் நுட்டபம் கூட எனக்குத் தெரியாது நான் எழுதியதை பதிவு செய்து கணினியில் காண்பித்தால் குறை நிறையை சொல்லத் தெரியும்

  மற்றப்படி கணினி வேலைகளை கவனிப்பது நமது ஆசிரமவாசி சதீஷ்குமார்தான் அவன்தான் மின்னஞ்சல்களை கவனிப்பது பதில் சொல்வது எல்லாமே 

 ஸ்ரீ நாராயணா மிஷன் கணிபொறியாளர் சதீஷ் குமார்
   இப்போது நான் பதில் சொல்லாத குற்றத்திற்காக மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்

   இன்னும் ஒரு முக்கிய தகவலை உங்களுக்கு சொல்ல வேண்டும் நமது நாராயணா மிஷன் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி உணவு உடை இருப்பிடம் மருத்துவம் எல்லாம் கொடுத்து பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்

தணிக்கலாம்பட்டு கிராம கல்விதான பள்ளியில் குருஜி 

   அதற்கு பொருட் செலவும் அதிகப்படும் ஆள்பலமும் தேவைப்படும் இவைகளுக்கு என்ன செய்யலாம் என்று உங்கள் மேலான ஆலோசனைகளை சொன்னால் நன்றாக இருக்கும் தயவு செய்து சொல்லவும்

 ஊர் கூடி தேர் இழுத்தால்தான் நன்றாக இருக்கும்


Contact Form

Name

Email *

Message *