( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பார்க்கும் போதே மறைந்த சித்தர்


    காற்று இந்த இடத்தில் தான் இருக்க வேண்டுமென்று யாரும் கட்டளை போட முடியாது.  அதே போல சித்தர்களை இங்கு இருப்பார்கள், இங்கு இருக்கமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.  எங்கு வேண்டுமென்றாலும் இருப்பார்கள்.  எப்போதாவது ஒரு முறை தான் அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுவார்கள். 

  பல நேரங்களில் அவர்களை இவர் சித்தராகயிருப்பாரோ என்று சந்தேகப்பட முடியாத அளவிற்கு மிக கீழ்தரமான இடத்தில் கூட இருப்பார்கள்.  பைத்தியகாரர்கள் போலவும், பிச்சைகாரர்கள் போல மட்டுமல்ல திருடர்கள் போலவும் இருப்பார்கள்.  ஒரு முறை திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் அப்படி ஒருவரை சந்தித்தேன்.


     எனக்கு பக்கத்தில் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் முரட்டு ஆசாமி வந்து அமர்ந்தார்.  அவரிடமிருந்து வந்த சாராய நெடி குடலை புரட்டியது.  அந்த நாற்றம் வேறு போதாது என்று சுருட்டு புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தார்.  அவரை பார்ப்பதற்கே அருவெறுப்பாக இருந்தது.  பக்கத்தில் இருப்பவர்களின் சங்கடத்தை உணராத இங்கிதம் தெரியாத மனிதர்களை வேறு எப்படி பார்க்க முடியும்.

    என் கண்ணெதிரிலேயே வேறு ஒரு அட்டூழியம் செய்தார்.  ரயில் நிலையத்தில் ஆள் ஆரவமில்லாத நேரம் இது.  உடனடியான ரயில்வரத்து எதுவும் இல்லை.  ரயில்வே ஊழியர்களின் நடமாட்டம் கூட இல்லை.  மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில் அவரும் நானும் அடுத்த ரயிலுக்காக காத்து இருக்கும் ஒரு இளைஞரும் மட்டுமே இருந்தோம்.


   மற்றபடி நான்கு   காக்கைகள், தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன.  அந்த சாராய மனிதர் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தார்.  மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து பக்கத்தில் இருந்த இளைஞன் முன்னால் நீட்டி பணத்தை எடு என மிரட்டினார்.

    அப்படி ஒரு சம்பவம் என்னருகில் நிகழும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.  உடல் எல்லாம் வியர்த்து நாக்கு ஒட்டிக் கொண்டது.  பயத்தில் கத்த கூட முடியவில்லை.  அந்த இளைஞன் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருந்தது.  கைகள் நடுங்க சட்டைபையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டிய அவன் அவர் பணத்தை பார்க்கும் அவகாசத்தில் நோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து ஓடினான்.


   ரயில்வே நிலைய ஊழியர்களை அழைத்து வரதான் ஓடினான்.  ஆனால் அதற்குள் அந்த சாராய மனிதர் ஒரு விந்தை காரியம் செய்தார்.  பணத்தை தரையில் போட்டு யாரோ எதிரியை மிதிப்பது போல் மிதித்தார்.  எனக்கோ பயம் அதிகரித்து விட்டது.  இவன் குடிகாரன், திருடன் மட்டுமில்ல பைத்தியகாரனும் கூட தனது மூடு மாறி நம்மிடம் வந்து எதாவது வம்பு செய்தால் எப்படி சமாளிப்பது, கத்தி யாரையாவது கூப்பிட வேண்டியதுதான்

   என்று வாய் திறந்த போது வாயை மூடு உன்னை எதுவும் செய்ய மாட்டேன்.  என்று சொன்ன அவர் தண்டவாளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.  நம்பினால் நம்புங்கள் சற்று தொலைவு நடந்த அவர் என் கண்ணெதிரே காற்றில் கரைந்து மறைந்து போனார்.   


  அதற்குள் ரயில் ஊழியர்களுடன் வந்த அந்த இளைஞர் அவன் எங்கே என்று என்னிடம் கேட்டார்.  திகைப்பின் உச்சியிலிருந்த எனக்கு பேச்சு வரவில்லை.  அவர் போன திசையை சைகையால் காட்டினேன்.  அதற்குள்ளே கீழே மிதிப்பட்டு கிடந்த நூறு ரூபாய் நோட்டை கண்டெடுத்த ரயில்வே ஊழியர் அவன் பைத்தியகாரன் போல் இருக்கிறது.  ஓடிவிட்டான் விட்டுவிடுங்கள் என சொன்னார்.  இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று இன்று வரை விளங்கவில்லை என்றாலும் திருடர்களாகவும் சித்தர்கள் வருவார்கள் என்பது புரிந்தது. 


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 14 comments

வணக்கம் குருஜி. நீங்கள் நேற்று, மற்றும் இன்றைய பதிவு மிகவும் அருமை. உண்மையிலேயே நீங்கள் சித்தரை பற்றி எழுதியது மிகவும் அருமை. ஆனால் ஒரு சின்ன கேள்வி. எப்படி உங்களுக்கு அவரும் ஒரு சித்தர் தன என்று உங்களால் உணரமுடிந்தது?. அவர் கண்ணெதிரே காற்றில் மறைந்ததால் உணரமுடிந்ததா?. இல்லை ஆரம்பத்திலேயே உணர்ந்தீர்களா?. இன்னும் நிறைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கார்த்திக் நாராயணன்
18:11

வணக்கம். அருமையான பகிர்வு . இன்னும் சித்தர்கள் பற்றி அனுபவங்களை தர மாறு கேட்டுக்கொள்கிறேன்

Babu
19:35

enn , oru silar mattume ethai unargirargal!!

arumai

அந்த இளைஞன் ஏதோ தவறு செய்திருந்தானோ ?

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள் .சித்தர்களின் சொல்லுக்கும் ,செயலுக்கும் அர்த்தம் கண்டு பிடிக்க சாமானிய மனிதர்களால் ஆகாது .ஒரு வேலை அந்த இளைஞனின் ஏதாவது ஒரு கர்ம வினையை போக்க வேண்டி இது போல அவர் நாடகமாடியிருக்கலாம் .

Anonymous
11:17

ஹா ஹா ஹா நண்பரே இன்னுமா உங்களுக்கு புரியல ஏன் அப்டி நடந்துச்சுன்னு ??? பணத்துக்கு முக்கியத்துவம் குடுக்க கூடாந்துன்ற உங்களுக்கு புரிய வைக்க தான் அப்டி ஒரு சித்து

Anonymous
16:56

yappa ooorla nerayper paythiyama thaan irukaaan,,, adapavikala ennum ada nambeetuirkeenga.... aiyooo aiyoooo

veri interesting news. please arrange to post sithargal rajjiyam.

pls help me to get a job which mantra can i say to get a job

pls tell me any mantra to get a job

Anonymous
09:22

sari, KADAISIYIL KAN VILITHTHU PAATHTHAAL KETTA KANAVU ENRU ELUTHA MARANTHU VITTAYALAA ????????? UNKALAIPONTRA MOODARKALAALTHAAN SAMOOKAM NAARI POI KIDAKKIRATHU........ INDUTHAMILAN ENRAALE MOODANUKAL ENRU MATRAVARKAL KELI SEYYUM NILAI ITHAI PONTRA KATHAIKALUM ATHAI PARAPPUM MOODA MUTTAALKALUME

மரியாதைக்குரிய , "ஆன்மிக திலகம் " ஸ்ரீ. ராமானந்த குருஜி அவர்களின் வருகை, என்னைபோல எத்தனையோ உயிர்களின் வாழ்க்கை பயணத்தை சிறப்பாக தொடரமுடியும் என்பதற்கு , அச்சாரமாக அமைத்துள்ளது. அய்யா அவர்கள் மீண்டும் அமிர்ததாரா மந்திரங்களை மக்களுக்கு வழங்கும் அற்புத திரு நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். ஆயிரகணக்கான பக்தர்களின் பிரார்த்தனை மூலம் குருஜி அவர்கள் நலமுடன் திரும்பி ஆஷ்ரம பணிகளை தொய்வின்றி தொடங்கிட, அந்த ஆதி பரா சக்தி அருள் புரிய வேண்டும்
பல்லாண்டு,பல்லாண்டு, பல கோடி ஆண்டுகள் அவரின் பணி தொடர வாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றியுடன்
மகாலிங்கம். கே.கே.
கோபிசெட்டிபாளையம்.
9442488539
.11/03/2016 12.15

அருமை குருஜி


Next Post Next Post Home
 
Back to Top